Sunday 17 December 2017

கலக்கல் காக்டெயில் 181

ஆர். கே. நகர்

ஆர் கே நகர் என்ற இடம் தேசத்தலைவர்களோ, அறிஞர்களோ இல்லை குறைந்த  பட்சம் கதாநாயகர்கள் இல்லை கதாநாயகிகள் அவதரித்த இடமோ இல்லையென்றாலும் கிட்டத்தட்ட ஒரு புண்ணிய ஷேத்ரம் அளவிற்கு பிரபலமாகிவிட்டது. தமிழத்தின் ஆளுமை!!!!! என்று புனையப்பட்ட கொள்ளைகூட்ட தலைமை தேர்தலில் நின்று வென்ற இடம் மர்மமான முறையில் காலியாகி தபா தபா தேர்தல் சூடு ஏற்றிவிடப்பட்டு அனையவிட்டுக்கொண்டிருக்கும் இடமாகிவிட்டது.  போனமுறை தொப்பியும் பிணமும் வலம்வந்து காசு இறைத்து களேபரமாகி இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது, பிறகு இரட்டை இலையை பெற இருபக்கமும் இழுத்ததால் இலை இரண்டாகி குக்கரும், சருகுமாகி போட்டிபோட்டு கொண்டிருக்கிறது. தொகுதி மக்கள் மிகவும் பாக்கியசாலிகள். போனமுறை நான்காயிரம் இப்பொழுது அகவிலைப்படி ஏற்றம் பெற்று குக்கரும்  ஆறாயிரம் ரொக்கமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தல் இப்பொழுதும் "வரும்.....................ஆனா வராது".................என்ற செய்தியை எதிர்நோக்கி பாடிகாட் முனீஸ்வரனுக்கு படையல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆர் கே நகர் வாக்காள பெருமக்கள்.

ஹீரோ டாக்கீஸ்

ஹீரோ டாக்கீஸ் புண்ணியத்தில் இப்பொழுதெல்லாம் வாரம் இரண்டு மூன்று படங்கள் ஓய்வு நேரத்தில் பார்க்கமுடிகிறது. மாதம் ஏழு அமெரிக்க டாலர்கள் செலுத்தினால் தரமான தரத்தில் தமிழ் படங்களை பார்க்கமுடிகிறது. அதிலும் சில மாஸ் பொடிமாஸ் என்று வடைசுடும் நடிகர்களின் அரத பழசு மசாலா உல்டா படங்களை தவிர்த்து சில அறிய படங்களை நமது விருப்பம் போல் பார்க்கலாம்.

பழைய படம் பார்க்கவேண்டுமா...............கருப்பு வெள்ளை படங்களிளுருந்து எழுபது எண்பதுகளில் வந்த சில அரிய பொக்கிஷங்கள் உள்ளன.........அந்த வகையில் கலிபோர்னிய தலைநகர் வந்து ஒரு அதிகாலை பொழுது உறக்கம்வராமல் வாடை குளிரில் நடை பயிற்சியும் போகாமல் அதிகாலையில் பார்த்த படம் "முள்ளும் மலரும்" இருபதாவது முறை பார்த்தாலும்  அலுக்காத படம்............சும்மா சொல்லக்கூடாது மகேந்திரன் ரஜினியை வைத்து ஒவ்வொரு காட்சியும் செதுக்கியிருக்கிறார். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் வியக்க வைக்கும்.

ரசித்த கவிதை

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு!

முறுக்கு மீசை வில்லன்களால் 
தூக்கிவரப்பட்ட 
நாயகிகளாய்த் தவிக்கிறது வாழ்வு.
கற்பு பற்றிய பயமெல்லாம் இல்லை
மெய்ப்பொருள் தேடும் வாழ்வில் 
பொய்ப்பொருள் பதற்றம் எதற்கு?

ஜன்னல்களை உடைத்துக்கொண்டோ
உத்தரத்தைப் பெயர்த்துக்கொண்டோ
பூமியைப் பிளந்துகொண்டோ வரப்போகும்  
ஹீரோக்களுக்காகக் காத்திருக்கும்போதுதான் ஒன்று புரிகிறது
நேரம் செல்லச் செல்ல 
இந்த ஹீரோக்களுக்கான விக்கை சரிசெய்வதற்குள்
வில்லன்களையே நாம் ரசித்துவிடுவோம்போல!

நன்றி. ரா. பிரசன்னா........

சினிமா கார்னர்


ஹீரோ டாக்கீஸில் சமீபத்தில் கண்ட  "காதல் கசுக்குதையா" பட நாயகி, பேர் வெண்பாவாம். ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு, ஆனால் என்ன தமிழ் சினிமாவில் இது போன்ற நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போவார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment