Tuesday 28 February 2017

ஹைட்ரோகார்பன்-பெரியகுடும்பம்

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நெஞ்சமே.......

டேய் ஹாஃப் பாயில் மண்டையா என்னடா பாட்டு பாடின்னு வர, அடேய் கும்மாச்சி தலையா இந்த மாதிரி பாட்டெல்லாம் எங்கேந்துடா பிடிக்கிற...

அதுக்கெல்லாம் ஞானம் வேணுமுன்னே....

டேய் கரிசட்டி தலையா நக்கலு.... வந்த வேலை என்ன அத்த சொல்லு. எனக்கு வேல இருக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டுக்கு இன்னிக்குதான் வேல வந்திருக்குது...இதுக்கு பத்து ரூபா வாடக வரப்போவுது.

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே....

உனக்குமாடா....

அண்ணே இந்த ஹைட்ரோகார்பன்....ஹைட்ரோகார்பன்...அப்படிங்கறாங்களே அப்படின்னா என்ன அண்ணே..........

அப்படி கேளுடா............அதுக்குதான் இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா வோணும்....டேய் அது ஒரு பெரிய குடும்பம்டா....நீ உக்காந்துன்னு இருக்கியே இத்து போன பிளாஸ்டிக் அதுல கூட இருக்குதுடா...

அட்ப்போங்கன்னே சும்மா சொல்லுறீங்க...

டேய் அதுல மெய்னா.....ரெண்டு ஜாதி இருக்கு....அலிஃபேட்டிக்கு....ஆரோமடிக்குனு...அதுக்கப்புறம் அதோடா கொழுந்தியா, கூத்தியா குடும்பமுன்னு இப்படி ஏகப்பட்டது இருக்குடா...வடசட்டி தலையா....

அண்ணே அண்ணே சொல்லுங்கண்ணே...அண்ணிகிட்ட சொல்லமாட்டேன்..

டேய் இப்போ நான் என் கதையா சொல்லுறேன்...அண்ணி நொந்நின்னு....

சரிங்கண்ணே....சொல்லுங்கண்ணே

டேய்  குடும்பமுன்னு ஒரு ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்தா சொல்லுறோம்...இங்க கார்பனும்...ஹைட்ரஜனும்டா...பாய்லர் தலையா....

அடப் போங்க அண்ணே

டேய் இதுல மெய்னா இருக்காங்க பாரு மீதேன், ஈதேன், ப்ரோபேன், ப்யுட்டேன்,பென்ட்டேன், ஹெக்சேன், ஹெப்ட்டேன், ஆக்டேன்,  நானேன், டேகேன்...இவனுங்க எல்லாம் அண்ணன் தம்பிங்க...எல்லாம் சிங்கள் பாண்டு...இவனுங்க எல்லாம் ஊருல ஆல்கேன் குடும்பமுன்னு சொல்லுவாங்க

 எண்ணே கொளுத்துக்காரனுன்களா...பாண்டு வச்சிகிறாங்க.

டேய் பாலி ப்ரோபிளின் தலையா...அதாவது அவனுங்க எல்லாம் எண்ணிய மாதிரி ஒரு பொண்டாட்டி காரனுங்க...இவனுங்க பங்காளிங்க இருக்கானுங்க அவனுங்க ரெண்டு பாண்டு...அதாவது ரெண்டு பொண்டாட்டி காரனுங்க, இவனுங்கள ஆள்கீன்ஸ் குடும்பமுன்னு சொல்லுவாங்க...

அப்படிங்களா அண்ணே..அவனுங்க பேரு என்ன அண்ணே

இன்ன அப்படிங்களா..அப்படி கேளுடா. ...அவனுங்க இருக்கானுங்க எதிலின், ப்ரோபீன், ப்யூடின்........அதே ரேஞ்சுக்கு இருக்கானுங்க...

அப்பா மூணு பொண்டாட்டி வச்சிக்கிறது....நம்ம தலீவரு கணக்கா..

டேய் பென்சீன் வாயா...இன்ன என்ன மாட்டிவுடுறையா..மவனே சிசிஎல் போர...வாயில ஊத்திடுவேன்.

இல்லிங்கண்ணே நம்ம பஞ்சாய்த்து தலைவர சொன்னேன்....


டேய் அவனுங்க மூணு பாண்டு காரனுங்க....அவனுங்கள ஆல்கைன்ஸ் குடும்பமுன்னு சொல்லுவாங்க...ஒவ்வொருத்தனும் மூணு பொண்டாட்டி வச்சிருப்பானுங்க...இவனுங்கள ஊருக்குள்ள ஆள்கைன்ஸ் குடும்பமுன்னு ஊருல சொல்லுவானுங்க...

அப்ப அந்த ஆரோமடிக் குடும்பமுன்னே....

அவனுங்க இணைவி, துணைவி, எடுப்பு..தொடுப்புன்னு நிறைய வச்சிக்கிட்டு சுத்தி சுத்தி வருவானுங்க....சைக்ளிக் குடும்பமுன்னு சொல்லுவானுக...

அண்ணே அது என்ன அண்ணே அரோமாடிக்.

அடேய் பிட்டுமின் தலையா...............ஆரோமேடிக்...ன்ன கப்பு.....இந்த குடும்பக்காரனுங்க எல்லா உன்னிய மாதிரி ....கப்பு வாயனுங்க.

இவனுங்களுக்கு பொறந்த வாரிசு நெறைய இருக்கு................ஐசொமேர்....பாலிமர் ன்னு வச வச ன்னு பெத்து உட்டுருக்கானுங்க....

அவனுக பேரு என்னன்னே ...............

அவனுங்க இருக்கானுங்க பாலிஎதிலின், பாலிப்றோபிளின், ஸ்டைரீன், ஸ்டில்பீன்....பாலி ஸ்தைரீன்...ஏகப்பட்ட பேரு இருக்கானுங்க...

இன்னங்கன்னே வெள்ளகார பேரா இருக்குது.............

ஆமாண்டா டொலுவீன்....வாயா.....

ஆமாம் இவரு பெரிய ஜி.டி.நாய்டு....கண்டு பிடிச்சிட்டாரு........டேய் அவனுங்க வெள்ளக்காரி......சைனாகாரின்னு ...........ஒன்னோட ஒன்னு கலந்துட்டுவங்கடா..............

அப்புறம் அண்ணே..........

இன்ன அப்புறம்....விழுப்புரமுன்னுட்டு.................இந்த மேண்டில கை வைக்கிறதுக்கு முன்னே கெளம்பு....

அண்ணே நீங்க பெரிய ஆளு அண்ணே..............

டேய் நான் யாருடா..............ஹவார்டு, ஸ்டான்போர்டு, யுனிவர்சிட்டில...ப்ரோபெசரா...இருக்க வேண்டியவண்டா...ஏன் நேரம் உன் மாதிரி நாப்தலின் மண்டையன்கிட்ட கெமிஸ்ட்ரி பேசிட்டு...........பெட்ரோமேக்ஸ் தொடச்சிகிட்டு இருக்கேன்...

அண்ணே இந்த மீத்தேன....அல்கேன் வச்சிகிராறு..........அந்த ஸ்டில்பீனா யாரு அண்ணே வச்சி இருக்காங்க.............

டேய் களோரஃபாம் வாயா............ஒரு ப்ரோபெஸர பாத்து கேட்கிற கேள்வியாடா இது..................

Follow kummachi on Twitter

Post Comment

Monday 27 February 2017

ஹைட்ரோகார்பன் திட்டம்-நெடுவாசல்

மீபத்திய செய்திகளில் நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பது ஹைட்ரோகார்பன் திட்டம்,  நெடுவாசல் என்ற இரண்டு வார்த்தைகளை. இந்த திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு நடுவண் அரசு தமிழ் நாட்டில் கொண்டு வரும் திட்டங்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. மாறாக தமிழ் நாட்டை ஒட்டு மொத்தமாக அழிக்கப் போகிறது.

நெடுவாசலில் பூமிக்கடியில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோகார்பன்) வளம் உள்ளது என்று சில வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. தற்பொழுது அந்த இயற்கை எரிவாயுவை வெளிக்கொணரும் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. அதற்கு தமிழக அரசும் ஒப்புதல் கொடுத்துவிட்டது. யார் கொடுத்தார்கள் என்று ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் ஒருவரை ஒருவர் கை காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு தெரியும் இருவருமே காரணம் என்பது.

இந்த திட்டத்தின் சாதக பாதங்கங்களை அலசிப்பார்த்தால் இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகளை விட இழப்புகள் அதிகம் என்பதை பாமர மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த குழம்பியக் குட்டையில் அரசியல் மீன் பிடிக்க சில அல்லக்கைகள் கூட்டம் கூட்டி மைக் பிடித்து ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன, அது மீதேன் தான்பா அதுக்கு இன்னொரு பேர் இருக்கு என்று பாட்ஷா வசனம் பேசிக்கொண்டு ஜல்லியடிக்கிறார்கள். சீமானோ இந்த வாயுவை எடுக்க (அவரது கூற்றின் படி காற்று) ஆழ்துளை கிணறுகள் தோண்டும் முறை அதனால் பூகம்ப வாய்ப்பு என்று அடித்து விட்டுக்கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் அவர்கள் பங்கிற்கு "யாரோ பானபுத்திரறாம், பத்திரரும் இல்ல புத்திரரும் இல்ல" என்று ஹைட்ரோக்கர்பனை வைத்து "செய்து"கொண்டிருக்கிறார்கள்.
இது தான் மீதேன் கிணறு என்றும் இதை அணைக்க இதை தோண்டிய நாடு  இன்னும் முயன்று கொண்டிருக்கிறது என்று!!!! அடேய் அடேய் சும்மா அடிச்சு விடாத!!!!!

ஹைட்ரோகார்பன் பற்றிய ஆராய்ச்சியை பத்தாம் வகுப்பு மாணவர்களின் வேதியல் தேர்விற்கு விட்டுவிடுவோம். நெடுவாசல் மக்கள் நன்றாகவே தெரிந்துகொண்டுதான் இப்பொழுது போராடுகிறார்கள் என்பது உண்மை.

கர்நாடக வளர காவிரி யு டர்ன் அடித்தது
ஆந்திரா கொழிக்க பாலாறு வரண்டது
கேரளா செழிக்க முல்லைபெரியாறு முடங்கிவிட்டது
கோக்ககோலா ஓட தாமிரபரணி நின்றது
இலங்கை இன்புற மீனவர்கள் துன்புறுகின்றனர்.
இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

போராடுபவர்களுக்கு முடிந்தால் நாம் உதவுவோம், அதுவரை இந்தப் பிரச்சினையில் குளிர்காய நினைக்கும் ஒட்டு பொறுக்கிகளே ஒதுக்கி வைப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 21 February 2017

கலக்கல் காக்டெயில் 178

மிஸ் யூ தலைவா....

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் கண்டிப்பாக ஒரு சிறந்த அரசியல் தலைவரின் அறிக்கைகளையும், போராட்ட வியூகங்களையும் இழந்திருக்கிறது. என்னதான் செயல்தலைவர் ஒரு சில முடிவுகளை எடுத்து அரசியல் ஆர்பாட்டங்கள் நடத்தினாலும் தலீவரின் ஒரு அறிக்கை செய்யும் மாயத்தை செய்யமுடியவில்லை.

எவ்வளவோ அரசியல் எதிரிகளை பார்த்துவிட்டார். இவரது அறிக்கைகளின் தன்மை எதிரிகளை சும்மா இருக்க விடாது, ஒன்று பதிலறிக்கை வெளியிடவேண்டும் அல்லது அவர் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்திவிட்டு ஜல்லியடித்தாக வேண்டும்.  இதற்கு சிறந்த உதாரணம் மறைந்த இரண்டு முதலமைச்சர்களுமே. இருவருமே இவரது எதிர்கட்சி செயல்பாட்டுக்கு தெரிந்தோ தெரியாமலோ மதிப்பளித்தனர்.

தலைமைசெயலகத்திலிருந்து தகவல்கள் முதலமைச்சருக்குப் போகுமுன்பே எதிர்கட்சி தலைவரான இவரது வீடு தேடி வந்துவிடும். அதை வைத்துக்கொண்டு இன்னும் பல புள்ளிவிவரங்களையும் வைத்து வார்த்தை ஜாலத்தில் அறிக்கை வாயிலாக எதிரணிக்கு குடைச்சல் கொடுப்பார்.

இன்று அவர் செயல்படும் நிலையிருந்தால்.....

ஊழல் பெருச்சாளிகளின் சாம்ராஜ்யம் முடிந்தது
வளையில் பெருச்சாளிகள்
கவலையில் மக்கள் ..............
உடன்பிறப்பே
உண்மத்தம்கொண்டோர்
கூவத்தூரில்
கூடியிருக்க
களம் பல கண்ட நாம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அறமே தவமெனக் கொண்டு
ஆட்சி அமைப்போம்...

என்று அடித்துவிட்டிருப்பார்.

மிஸ் யூ தலைவா.................


றைந்திருக்கும் எதிரி 

முதன் முதலாக தமிழக மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒரு வருட காலத்திலேயே எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். வழக்கமாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இந்த முடிவை எடுப்பார்கள். அதற்கு காரணம் தற்பொழுது நடந்த உட்கட்சி பூசல்களும் கட்சியையும் ஆட்சியையும் ஒரு மாஃபியா கும்பல் கபளீகரம் செய்வதை தடுக்க முடியாத கையாலாகத்தனம்.

ஏழு கோடி மக்கள் விரும்பாத ஒரு முதலமைச்சரை வெறும் 122 பேர் முடிவில் வைக்கும் நமது அரசியல் சாசனத்திற்கு இப்பொழுது தேவை ஒரு சீராய்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முடிவை எதிர்கொள்வது, ஏற்கக்கூடியதல்ல.

இனி நமது போராட்டம் இந்த காசு போட்டு ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள் மேல் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் மீது திரும்ப வேண்டியது அவசியம்.

சித்த கவிதை

நீதியை தேடி 

நித்திரையில் வரும் கனவோ!
நிழலாய்த்தொடரும் உறவோ!
கடையில் இருக்கும் பொருளோ!
காகிதத்தில் எழுதும் கதையோ!

நீதியும் தராசும் நிதியின் பக்கம் -
நிழலாய்ப்போனதில் 
மெய்யும் இன்று 
பொய்யாய்ப்போனதே!

வாய்தா வாங்கியே வழக்கும் நீளுது!
வறுமை அன்றோ வரட்சியில் வாடுது !
கேட்டுப்பையில் காசும் நிறைந்தது !
கோர்ட்டில் ஃபைலோ கேசாய் குமியுது!

நீதியைத்தேடி ஒரு கூட்டம் !
நித்திரை தொலைத்து ஒரு கூட்டம்!
தானாய்  சேருது ஒரு கூட்டம்!
இணையதளத்தால் கூடுது ஒரு கூட்டம் !
வீதியைய் நிறைத்தது ஒரு கூட்டம்! 
விளங்கவும் மறக்குது ஒரு கூட்டம் !

நாட்டை பிடித்த கேடா!
நயவஞ்சகத்தின் நாடா!
எதிர்க்க துணிந்தோம்;
எதிரியும் இல்லை!

நன்றி: H. ஹாஜா மொஹினுதீன் 

மிழ் சினிமா 



2017 ம் வருடத்தில் இதுவரை 21  படங்கள் வெளிவந்துள்ளன. சரி அதனால் என்ன? என்றுதான் கேட்கிறீர்கள். ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம் (வாயால் வடைசுடும் வியாபர தகவல்கள் நீங்கலாக).

2016  டிசம்பரில் வெளிவந்த "துருவங்கள் பதினாறு" நல்ல படம் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள் இன்னும் பார்க்கவில்லை.

தெலுங்கு திரைப்பட உலகில் இந்த வருடம் 8 திரைப்படங்கள் வந்ததில் நான்கு அமோக வெற்றியாம், தயாரிப்பாளர்கள் இப்பொழுது அங்கு ரீ மேக் உரிமைக்கு அடித்துக்கொண்டிருப்பார்கள். 

Follow kummachi on Twitter

Post Comment

Monday 20 February 2017

எடப்பாடி பயோடேட்டா

இயற்பெயர்-----------------இடைப்பாடி பழனிசாமி
இடைப்பட்ட பெயர்------எடப்பாடி, எடுபிடி, டெ..பாடி இன்னும் சில
தற்போதைய வேலை---நாற்காலியை சூடாக வைத்திருப்பது
நிரந்தர வேலை------------பெஞ்சு தட்டுவது
பலம்-----------------------------தனக்கே தெரியாதது
பலவீனம்----------------------மக்களுக்கு தெரிந்தது
சமீபத்திய சாதனை-----கூவத்தூர் கும்மாளம்
நிரந்தர சாதனை----------முதலமைச்சர்!!! எவ்வளவு நாளோ???
மறக்காதது-------------------சின்னம்மா சபதம்
மறந்தது------------------------பெரியம்மா மரணம்
சமீபத்திய எரிச்சல்-------சபாநாயகர் கணக்கு
நிரந்தர எரிச்சல்------------தொகுதி மக்கள்
சமீபத்திய நண்பர்--------தினகரன்
நிரந்தர நண்பர்-------------கட்சியில் இல்லை
சமீபத்திய எதிரி------------ஓபிஎஸ்
நிரந்தர எதிரி----------------சமீபத்திய நண்பர்
பிடித்த பல்லவி-------------யார் தருவார் இந்த அரியாசனம்....
பிடிக்காத பல்லவி--------இது எங்க ஏரியா உள்ள வராதே...

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 16 February 2017

தாமதிக்கப்பட்ட நீதியும் தரங்கெட்ட அரசியலும்

சொத்துக்குவிப்பு வழக்கின் உச்ச(சா) நீதிமன்ற தீர்ப்பு விசாரணை எல்லாம் என்றோ முடிவடைந்த நிலையில் நேற்றைய முன் தினம் வெளியானது. மறைந்த முதலமைச்சர் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதே இந்த தீர்ப்பு தேதி குறிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. அதன் காரணம் ஒன்றும் நாம் அறியாததல்ல.

இந்த வழக்கின் போக்கை முதலிருந்தே கவனித்தவர்களுக்கு தெரியும் இதன் தீர்ப்பு எப்படி இருக்குமென்று. இடையிடையே வழக்கை எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அந்த அளவிற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து விளையாடினார்கள் என்பதை நாடறியும்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு நகலை படித்தவர்களுக்கு தெரியும் இந்த வழக்கு இனி எங்கு சென்றாலும் குன்ஹா தீர்ப்பை மாற்றுவது கடினம் என்று, ஏனெனில் இந்த வழக்கில் ஆதாரங்கள் மிகவும் நேர்த்தியாக சமர்பிக்கப்பட்டு இருந்தது. குன்ஹா தீர்ப்பை விலாவரியாக எழுதி (கிட்டத்தட்ட ஆயிரத்தி நூறு பக்கங்கள்) வருமானத்திற்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புட்டு புட்டு வைத்திருந்தார். இடையே வந்த குமாரசாமி ஒரு புதிய கணக்கை உண்டாக்கி வருமானத்திற்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்யாசம் ஒரு எட்டு விழுக்காடுதான் "தப்பிச்சுக்கோ" என்று தீர்ப்பு எழதினார். இந்த தீர்ப்பு நகலைப் படித்தவர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர்.

ஆனால் கர்நாடக அரசு இதை விடுவதாக இல்லை உச்ச்நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்து தங்களது பணியை செவ்வனே செய்தது. இந்த வழக்கு உச்ச்சநீதிமன்றத்திற்கு வந்த பொது இது ஒரு "OPEN AND SHUT CASE" என்று சட்ட வல்லுனர்களுக்கு தெரிந்திருக்கும். ஏன் என்றால் உயர்நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கணக்கு குளறுபடிகள்.

ஆனால் தீர்ப்பு சில அரசியல் காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறியதை நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் உடல் நிலை காரணமாக  கிட்டத்தட்ட செயல்படாத நிலையில் இருந்தார். இதனால் அரசாங்கம் ஸ்தம்பித்தது. அவரது நேரடி பார்வை இல்லாததால் அல்லக்கைகள் ஆட்டையைப் போட ஆரம்பித்தனர். கூடவே இருந்த கூட்டமோ தங்களது ஆட்டத்தை முடுக்கிவிட்டது. பிறகு முதலமைச்சர் நோய்வாய்ப்பட அப்போலோ வாசலில் அமைச்சர்கள் நின்று காவடி எடுத்து அதிகாரிகளின் கையில் ஆட்சி போக பின்னர் நடந்த குளறுபடிகளும் அதன் தொடர்ச்சியாக நடந்த வருமானவரித்துறை நடத்திய அதிரடி நடவடிக்கைகளும் தமிழகத்தின் கேவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கியது.

முதலமைச்சரின் மர்ம சாவு, பின்னர் மாஃபியாக்களின் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஆடிய ஆட்டங்கள் தற்பொழுது தமிழகத்தின் இன்றைய நிலை ஒரு கேலிக்கூத்து.

கட்சியின்
நிரந்தரப் பொதுசெயலாளர் செத்துப்போயிட்டார்.
தற்காலிக பொதுசெயலாளர் ஜெயிலுக்கு போயிட்டார்
துனைப் பொதுச்செயலாளர் இப்போதான் கட்சியில் சேர்ந்துள்ளார்
முதலைச்சர் கட்சியிலேயே இல்லை
எம்.எல். ஏக்கள் எங்க இருக்காங்கன்னு தெரியல
எம்'பி'க்கள் எதுக்கு இருக்காங்கன்னு தெரியல
காவல்துறை எந்தப்பக்கமுன்னு அவங்களுக்கே தெரியல
ஆளுநருக்கு ஒன்னும் புரியல...............

இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக நான்கு பெரும் குற்றவாளிகள் என்றும் மினிம்மா கூட்டம் இந்த ஆதாயத்திற்காகவே மறைந்த முதலமைச்சருடன் தங்கி இருந்தனர் என்று நாமறிந்த உண்மையை ஊரறிய சொல்லியிருக்கிறது.

குற்றவாளியின் புகைப்படங்கள் அரசாங்க அலுவலகங்களிலோ இல்லை சட்டசபையிலோ இருக்கக்கூடாது அகற்றப்படவேண்டும் என்று சட்டம் சொல்லுகிறது.

பிறந்த குழந்தைமுதல் இறந்த பிணம் இன்ன பிற அரசு நிவாரணப்பொருட்கள் என்று எல்லா இடத்திலும் ஸ்டிக்கர் ஒட்டியவர்களின் கதி அந்த முகத்தை எங்குமே யாரும் பார்க்கக்கூடாது என்று விதி வழிவிட்டுவிட்டது.

அதிகாரத்தில் இருந்த பொழுது அனைவரையும் காலடியில் விழவைத்த கொடுமை இப்பொழுது கால்களோடு புதைப்பட்டதா  இல்லையா என்ற சர்ச்சையை இழுத்து விட்டிருக்கிறது.

கூடவே இருந்த குழிபறித்து ஆட்டடையை போட்ட கூட்டம் களி தின்ன சென்றுவிட்டது.

ஆடி அடங்கும் வாழ்கை, ஆறடி நிலம்தான் சொந்தம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் யாரும் ஆட்டத்தை நிறுத்தப்போவதில்லை.........

இதுவும் கடந்து போகும்.....

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 7 February 2017

அப்போல்லோவின் அல்வா.....புத்தம் புதிய படம்

நேற்று மன்னார்குடி மாபியா  தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்

அப்போல்லோவின் அல்வா  (Truth Prevails)

திரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்
அறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள்  ரிச்சர்ட்  பெலே,
 சுதா சேஷையன், பாலாஜி, பாபு
ஒளிப்பதிவு-----------------------------------------எல்லா டி,வி. சேனல்களும்
ஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவி
இசை---------------------------------------------------மன்னார்குடி கோஷ்டி

இந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா?  படத்தை பார்ப்போம்...

முதலில் திரை கதை வசனம்  எழுதியதில் ஒரே குழப்பம், இயக்குனர் பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார்.  கதை என்னதான் மறைந்த ஓரு மனிதரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை நீக்குவதை நோக்கி எழுதப்பட்டாலும் ட்ரைலரில் இடம் பெற்ற இட்லி கேட்டு வாங்கி சாப்பிடும் காட்சியையும், பந்தடித்து விளையாடிய காட்சியையும் படத்தில் கடுகளவு கூட காண்பிக்கவில்லை,

ரிச்சர்ட் பெலேவின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை, அவர் என்னதான் இயக்குனரின் நடிகராக இருந்தாலும் பட இடங்களில் தேவையான உடல் மொழியை தரவில்லை. வசன உச்சரிப்பில் அசத்தியிருக்கிறார். இருந்தாலும் வெளிநாட்டு நடிகர் என்பதால் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற இயக்குனரின் நம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் காட்சிகளில் தர வேண்டிய முகபாவங்கள் மற்ற நடிகர்களிடம் மிஸ்ஸிங். சுதா சேஷையன் எம்பாமிங் செய்யப்பட்டதை விளக்கியது ஏற்றுகொள்ள முடிந்தாலும், அவரை அழைக்கப்பட்ட நேரமும், செய்த நேரமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பது இயக்குனர் சறுக்கிய இடம். மேலும் அதற்குண்டான அவசியத்தை விளக்காதது கதையில் விழுந்த மெகா சைஸ் ஓட்டை.

படத்தில் நகைச்சுவையை அங்கங்கே அள்ளி தெளித்திருப்பது ஓரளவுக்கு நன்றாக இருந்தது. முக்கியமாக விசிடிங் கார்டு பற்றிய கேள்விக்கு பெலே அளித்த பதில் வயிறு குலுங்க சிரிக்கவைத்தது. வாங்கியவரை தெரியாது ஏதோ ஜோசியர் போல் இருக்கிறது என்று சொல்லும் பொழுது தியேட்டரில் ஒரே ஆரவாரம்.

ஆளுநர் பார்த்தார், பார்க்கவில்லை என்று ஒவ்வொரு கேரக்டரும் மாற்றி மாற்றி சொல்லுவது கதையை மேலும் குழப்புகிறது. எடிட்டர் கோட்டை விட்ட இடம் போல....

பின்னணி இசை நன்றாக இருந்தது. முழ படத்திலும் பின்னணியில் ஏமாறாதே ஏமாற்றாதே என்ற பாடலின் ரீ மிக்சிங்கை வைத்து நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள். பாடல்கள் சுமார் ரகம்.

"சின்னம்மா இப்படி பண்றீங்களேம்மா", "சின்னம்மா என்றழைக்காத டயர் நக்கிகள் இல்லையே" பாடல்கள் மீண்டும் கேட்கத்தூண்டும்.

மொத்தத்தில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்றால்......இல்லை

விகடன் ரேட்டிங் 0/100

மொத்தத்தில்அப்போல்லோவின் அல்வா-------தயிரில் ஊறிய குலாப் ஜாமூன் 

Follow kummachi on Twitter

Post Comment

Monday 6 February 2017

சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

மினிம்மா நேற்று எல்லா ஆளுங்கட்சி சட்டசபை உறுப்பினர்களையும் கட்சி அலுவலகம் வரவைத்து வேலையை கச்சிதமாக முடித்துவிட்டார்கள். ஒ.பி.எஸ் ராஜினாமா செய்துவிட்டார். இவரது சமீபத்திய செயல்களை வைத்து மக்கள் இவர் மிச்சர் மாமா இல்லை என்று ஓரளவுக்கு நம்பத்தொடங்கினார்கள். ஆனால் அவர் இப்பொழுது லாலாகடையில் ஒன்றரை கிலோ மிச்சர் வாங்கி ஓரமாக உட்கார்ந்துவிட்டார். நீங்க இவ்வளவுதானா பன்னீர்!!!!,. முதலமைச்சரின் அதிகாரம் என்னவென்றே தெரியாமல் இப்படி டொக்காகி போன ஒருவரை தமிழகம் பெற்றதற்கு பெருமைப்படும்.

 வலைதளங்களில் மினிம்மாவிற்கு எதிராக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படி தாண்டி வேலைக்காரி முதலமைச்சரா? என்று வரம்பு மீறுவதில் அவர்களின் வெறுப்பு தெரிகிறது. இந்திய அரசியல் சாசனாப்படி யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். கூத்தாடிகள் ஆகும்பொழுது வேலைக்காரி ஆனால் என்ன?

ஆனால் மக்களது கோபம் அதனால் இல்லை. அவர்கள் பொங்குவது முன்னாள் முதலமைச்சருடன் 33 வருடங்கள் உடனிருந்தார்  என்பது ஒரு தகுதியாகுமா? என்பதே வாதம்.  மேலும் முன்னாள் முதலமைச்சர் சந்தித்த வழக்குகள் அனுபவித்த சிறைவாசம் எல்லாமே மன்னார்குடி மாஃபியாவால் தான் என்று ஒரு பரவலான கருத்து உண்டு. ஜெவின் தீவிர விசுவாசிகள் தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் சொல்கின்றன.

இது வரை மக்களையே சந்திக்காத, கட்சியிலும் எந்த பதவியிலும் இல்லாமல் திடீரென்று ஒருவர் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைதான் தொண்டர்களின் கருத்தும் ஏன் பொதுவாக மக்களின் கருத்தும் கூட. சின்னம்மா முதலைமச்ச்சர் ஆகி ஆறு மாதத்திற்குள் தேர்தலின் நின்று சட்டசபை உறுப்பினர் ஆகவேண்டும். அப்பொழுது மக்கள் பதில் சொல்வார்கள் எனபது விதண்டாவாதம். அவர் தேர்தலில் வெல்ல ஒன்றும் உழைக்க வேண்டியதில்லை........காசு, பணம், துட்டு பார்த்துக்கொள்ளும்.

சமூக வலைதளங்களில் நமது நெட்டிசன்கள் இபோழுது ரொம்ப பிசி...பிசியோ பிசி....

அவர்கள் போடும் நையாண்டிகளில் சில...

இப்பொழுது தி.மு.க இளனிய உருவா ஆரம்பிச்சா  சீக்கிரம் கடை போட்டுடலாம்..........

அப்போல்லோ வரை கொண்டு போகாமல் பன்னீர் செல்வத்தை பத்திரமாக இறக்கி விட்டதற்கு நன்றி..

ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லை ஒருத்தனுக்கூட பிடிக்கலைன்னா...

பன்னீர்செல்வத்திற்கு கொண்டு போன ஸ்பெஷல் பால கவுண்டமனியாட்டம் நடுவழில நடராசன் பிடுங்கி குடிச்சிட்டாப்ல..

ராதை மாண்டாலும் கோதை ஆண்டாலும் நமக்கொரு குவளை இல்லை...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு..உச்சாநீதிமன்றம்.

மணியா நாட்டாம யாரு நம்ம குமராசமியா?

சசிகலா முதல்வராக பதவியேற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பார்....மாப்ள இவர்தான் ஆனா இவர் போட்டிருக்க சட்டை அவருதில்லை மொமென்ட்..

சசிகலா முதல்வராவதற்கு திருமாவளவன் வரவேற்பு--செய்தி # நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா இல்லை சிவலிங்கமுன்னு தெரியுமா?


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 1 February 2017

வைகோ பயோடேட்டா

இயற்பெயர்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வையாபுரி கோபால்சாமி

நிலைத்த பெயர்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வை.கோ

மறந்த தொழில்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வக்கீல்

தற்போதைய  தொழில்⇒⇒⇒⇒⇒⇒⇒புரோக்கர்

சமீபத்திய சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ 1500 கோடி

நிரந்தர சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ம.ந.கூ கட்சிகளை ஏமாற்றியது

நண்பர்கள்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒கட்சியில் இல்லை

எதிரிகள்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ஊடகங்கள்

சமீபத்திய எரிச்சல்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒காவேரி ஹாஸ்பிடல் வரவேற்பு

நிரந்தர எரிச்சல்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒தளபதி

தற்போதைய முகவரி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒C/O மினிம்மா, போயஸ் தோட்டம்

நிரந்தர முகவரி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒கலிங்கப்பட்டி

மறந்தது⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒பொடா சிறைவாசம்

மறக்காதது⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒தமிழ் ஈழம்

பிடித்த பல்லவி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒எத்தனை கோடி!!! இன்பம் வைத்தாய்


Follow kummachi on Twitter

Post Comment