Tuesday 28 February 2017

ஹைட்ரோகார்பன்-பெரியகுடும்பம்

நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நெஞ்சமே.......

டேய் ஹாஃப் பாயில் மண்டையா என்னடா பாட்டு பாடின்னு வர, அடேய் கும்மாச்சி தலையா இந்த மாதிரி பாட்டெல்லாம் எங்கேந்துடா பிடிக்கிற...

அதுக்கெல்லாம் ஞானம் வேணுமுன்னே....

டேய் கரிசட்டி தலையா நக்கலு.... வந்த வேலை என்ன அத்த சொல்லு. எனக்கு வேல இருக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டுக்கு இன்னிக்குதான் வேல வந்திருக்குது...இதுக்கு பத்து ரூபா வாடக வரப்போவுது.

அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே....

உனக்குமாடா....

அண்ணே இந்த ஹைட்ரோகார்பன்....ஹைட்ரோகார்பன்...அப்படிங்கறாங்களே அப்படின்னா என்ன அண்ணே..........

அப்படி கேளுடா............அதுக்குதான் இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா வோணும்....டேய் அது ஒரு பெரிய குடும்பம்டா....நீ உக்காந்துன்னு இருக்கியே இத்து போன பிளாஸ்டிக் அதுல கூட இருக்குதுடா...

அட்ப்போங்கன்னே சும்மா சொல்லுறீங்க...

டேய் அதுல மெய்னா.....ரெண்டு ஜாதி இருக்கு....அலிஃபேட்டிக்கு....ஆரோமடிக்குனு...அதுக்கப்புறம் அதோடா கொழுந்தியா, கூத்தியா குடும்பமுன்னு இப்படி ஏகப்பட்டது இருக்குடா...வடசட்டி தலையா....

அண்ணே அண்ணே சொல்லுங்கண்ணே...அண்ணிகிட்ட சொல்லமாட்டேன்..

டேய் இப்போ நான் என் கதையா சொல்லுறேன்...அண்ணி நொந்நின்னு....

சரிங்கண்ணே....சொல்லுங்கண்ணே

டேய்  குடும்பமுன்னு ஒரு ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்தா சொல்லுறோம்...இங்க கார்பனும்...ஹைட்ரஜனும்டா...பாய்லர் தலையா....

அடப் போங்க அண்ணே

டேய் இதுல மெய்னா இருக்காங்க பாரு மீதேன், ஈதேன், ப்ரோபேன், ப்யுட்டேன்,பென்ட்டேன், ஹெக்சேன், ஹெப்ட்டேன், ஆக்டேன்,  நானேன், டேகேன்...இவனுங்க எல்லாம் அண்ணன் தம்பிங்க...எல்லாம் சிங்கள் பாண்டு...இவனுங்க எல்லாம் ஊருல ஆல்கேன் குடும்பமுன்னு சொல்லுவாங்க

 எண்ணே கொளுத்துக்காரனுன்களா...பாண்டு வச்சிகிறாங்க.

டேய் பாலி ப்ரோபிளின் தலையா...அதாவது அவனுங்க எல்லாம் எண்ணிய மாதிரி ஒரு பொண்டாட்டி காரனுங்க...இவனுங்க பங்காளிங்க இருக்கானுங்க அவனுங்க ரெண்டு பாண்டு...அதாவது ரெண்டு பொண்டாட்டி காரனுங்க, இவனுங்கள ஆள்கீன்ஸ் குடும்பமுன்னு சொல்லுவாங்க...

அப்படிங்களா அண்ணே..அவனுங்க பேரு என்ன அண்ணே

இன்ன அப்படிங்களா..அப்படி கேளுடா. ...அவனுங்க இருக்கானுங்க எதிலின், ப்ரோபீன், ப்யூடின்........அதே ரேஞ்சுக்கு இருக்கானுங்க...

அப்பா மூணு பொண்டாட்டி வச்சிக்கிறது....நம்ம தலீவரு கணக்கா..

டேய் பென்சீன் வாயா...இன்ன என்ன மாட்டிவுடுறையா..மவனே சிசிஎல் போர...வாயில ஊத்திடுவேன்.

இல்லிங்கண்ணே நம்ம பஞ்சாய்த்து தலைவர சொன்னேன்....


டேய் அவனுங்க மூணு பாண்டு காரனுங்க....அவனுங்கள ஆல்கைன்ஸ் குடும்பமுன்னு சொல்லுவாங்க...ஒவ்வொருத்தனும் மூணு பொண்டாட்டி வச்சிருப்பானுங்க...இவனுங்கள ஊருக்குள்ள ஆள்கைன்ஸ் குடும்பமுன்னு ஊருல சொல்லுவானுங்க...

அப்ப அந்த ஆரோமடிக் குடும்பமுன்னே....

அவனுங்க இணைவி, துணைவி, எடுப்பு..தொடுப்புன்னு நிறைய வச்சிக்கிட்டு சுத்தி சுத்தி வருவானுங்க....சைக்ளிக் குடும்பமுன்னு சொல்லுவானுக...

அண்ணே அது என்ன அண்ணே அரோமாடிக்.

அடேய் பிட்டுமின் தலையா...............ஆரோமேடிக்...ன்ன கப்பு.....இந்த குடும்பக்காரனுங்க எல்லா உன்னிய மாதிரி ....கப்பு வாயனுங்க.

இவனுங்களுக்கு பொறந்த வாரிசு நெறைய இருக்கு................ஐசொமேர்....பாலிமர் ன்னு வச வச ன்னு பெத்து உட்டுருக்கானுங்க....

அவனுக பேரு என்னன்னே ...............

அவனுங்க இருக்கானுங்க பாலிஎதிலின், பாலிப்றோபிளின், ஸ்டைரீன், ஸ்டில்பீன்....பாலி ஸ்தைரீன்...ஏகப்பட்ட பேரு இருக்கானுங்க...

இன்னங்கன்னே வெள்ளகார பேரா இருக்குது.............

ஆமாண்டா டொலுவீன்....வாயா.....

ஆமாம் இவரு பெரிய ஜி.டி.நாய்டு....கண்டு பிடிச்சிட்டாரு........டேய் அவனுங்க வெள்ளக்காரி......சைனாகாரின்னு ...........ஒன்னோட ஒன்னு கலந்துட்டுவங்கடா..............

அப்புறம் அண்ணே..........

இன்ன அப்புறம்....விழுப்புரமுன்னுட்டு.................இந்த மேண்டில கை வைக்கிறதுக்கு முன்னே கெளம்பு....

அண்ணே நீங்க பெரிய ஆளு அண்ணே..............

டேய் நான் யாருடா..............ஹவார்டு, ஸ்டான்போர்டு, யுனிவர்சிட்டில...ப்ரோபெசரா...இருக்க வேண்டியவண்டா...ஏன் நேரம் உன் மாதிரி நாப்தலின் மண்டையன்கிட்ட கெமிஸ்ட்ரி பேசிட்டு...........பெட்ரோமேக்ஸ் தொடச்சிகிட்டு இருக்கேன்...

அண்ணே இந்த மீத்தேன....அல்கேன் வச்சிகிராறு..........அந்த ஸ்டில்பீனா யாரு அண்ணே வச்சி இருக்காங்க.............

டேய் களோரஃபாம் வாயா............ஒரு ப்ரோபெஸர பாத்து கேட்கிற கேள்வியாடா இது..................

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா...

மிகவும் ரசித்தேன்...

கும்மாச்சி said...

நன்றி தனபாலன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.