Friday 27 June 2014

டீ வித் முனியம்மா ------------பார்ட் 12

இன்னா முனியம்மா காலிலேயே மெர்சலாயிட்ட........

டேய் போடா லோகு, பேஜார் பண்ணாத, கடையாண்ட ஒரு பேமானி வந்து சௌரசு கடிச்சிகினானமே.........ங்குறான்.........ஒன்நியம் புரில........பேமானி இன்னா நன்சுகினு கிறான்............நான் அப்டியாபட்ட ஆளில்ல.

அதானா மேட்டரு அது ஒன்னியும் இல்ல, இந்த புட்பாலு ஆடுரானுன்களே அதுல ஒரு ஆளு எதிராளி கயுத்தாமட்டையிலே கடிச்சிகினுகிறான்.......நீதான் அல்லா நூசும் படிக்கிறியே.........அதுகண்டி கேட்டுகிறான்........வுடு.......மெர்சலாவாத.......

அதான மேட்டரு நம்மாண்ட வந்து இன்னடா பேசுறான்னு ஒரு லுக்கு வுட்டேன்.........பேமானி முயி ரெண்டும் மொரச்சிகினு ஓடிட்டான்.........இந்த புட்பாலு, பத்தி நமக்கு இன்னா தெரியும்..........நமக்கு ஆவின் பாலு தெரியும்.....அமலா பாலு தெரியும்........

சரி வுடு முனிம்மா நாட்டுல இன்னா நடுப்பு அத்த சொல்லு.........

இன்னா பாய் .......மோடி வந்துகினாறு இனி நமக்கு அல்லாம் விடிவுதான் அப்படினானுங்கோ..........இப்போ அல்லா வெலயும் எறின்னு கீது.....ரயிலு டிக்கெட்டு வெலய ஏத்திகினாறு............

அதெல்லாம் அரசியலிலுல வயக்கம்தான், நான் வந்து அத்தே புடுங்குறேன், இத்தே புடுங்குறேனுவானுங்க அப்பால ஒரு -------ரும் புடுங்கமாட்டானுங்க.........

ஆமாம் லிங்கம் சாரு.......டேய் மீச அல்லாருக்கும் டீ குடுறா..........சொம்மா பப்பரபேன்னு-------குந்திகினுகீற.....

இன்னா முனியம்மா அம்மா உணவகமுன்னாங்க, தண்ணீன்னாக, உப்புன்னாக, அப்பால இப்போ மருந்து வுட்டுகிறாங்க..........

அமாம் நாடாரு.........அடுத்தது டீ வருதான்...........மீச வேற வேலைய பாத்துகினு தலைச்சேரி பக்கம் போவுனும்........

இன்னா முனிமா கலிஞறு மேட்டரு இன்னா....

அவரு கச்சில கீற அல்லா ஆளுங்களையும் தூக்கினுகிராறு..........களை எடுக்கிறாராமா......பாய். பாய் இன்னா இன்னும் ஒரு மாசம் கடையாண்ட பாக்கமுடியாது..........நோம்பு வருதில்ல......

ஆமாம் முனிம்மா.

பாய் இப்போ இந்த அரசியல்வாதிங்க அல்லாம் நோம்பு கஞ்சி ஊத்தறேன்னு வருவானுங்க...........பள்ளிவாசல் பக்கம் வுடாத........

அதானேபாய் இப்போ ஒருக்கா வருவானுங்க அப்பால ஒட்டு பிச்சை எடுக்க வாருவாணுக....

முனிம்மா இன்னா தைலாபுரம் தலீவரு மின்வெட்டு, இருண்ட தமியகம் சொல்லிகினு கொரலு வுட்டுகினுகீராறு...........

அவரு கரீட்டாதான் கேக்குறாரு.......ஒன்னாந்தேதிக்கப்பால மின்வெட்டே இருக்காதுன்னு அம்மா சொல்லிச்சு...........அன்னிக்கிதான் பொயுதன்னிக்கும் பீச புடிங்கிட்டானுங்க...........

இன்னும் அஞ்சு வருஷம் போனாலும் பவரு இப்படியேதான் போயி போயி வந்துகினு இருக்கும்..........அந்தாளு நத்தம் அம்மாக்கு சொம்படிக்க தொ இப்ப வருது...........அப்ப வருதுனு..........டபாய்ச்சிகினுகீராறு.

கேப்டனு எங்க போய்க்கிராறு.............கொரலே காணோம்....

அவரு மலேசியா போய்க்கிராறு..........

இன்னா போதை ஒய்ப்பு தினம்குறாங்கோ கடிய தொறந்து வச்சுகிரானுங்கோ.

அதெல்லாம் டாஸ்மாக்குக்கு கெடையாது முனிம்மா........

சினிமா நூசு இன்னா முனிம்மா........

பயம்,  ஒரு பாப்பாஅஞ்சலியோ சுண்டேலியோ அது  ஆந்திரா பக்கம் போயி சான்சு கேக்க மப்படிச்சு மட்டையாயிடுச்சாம்.........அதாண்டா நூசு.......

 
சரி நான் கடியாண்ட போவனும்.........இன்னிக்கி வெள்ளி கெய்ம கூட்டம் அல்லும்........

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 25 June 2014

இன்னாடி இது ஹஸ்பண்டு நம்பர் டூ வா!!!!!!!!!!!!

ரசித்த கீச்சுகள்..............

பைக்கோட Back Seat ல மட்டும் தூசி படிஞ்சிருக்கிறத பாக்குறப்பத்தான் சிங்கம் சிங்கிளா வாழுதுன்றது லைட்டா வலிக்குது. .......அவ்வ்வ்-----------பாஸு பாஸு

அருண்ஜெட்லி-யை பார்த்தா சிதம்பரத்தின் மறுபதிப்பு மாதிரிதான் தெரியுது. பேச்சு அதேமாதிரி ஆளும் பாக்க அதேமாதிரிதான் இருக்கார்.........V. ஸ்ரீதர் FB-ல கல்யாண பத்திரிக்கைய அப்லோட் பண்ணி எல்லோரும் வந்துடுங்கன்னு ஒருத்தன் அழைச்சிருக்கான்.நான் 100 ரூவா போட்டோவ கமெண்ட்ல போஸ்ட் பண்ணிட்டேன்---------வினோத்குமார்மைல் கணக்கில் நடந்தால்தான் கிடைக்கும் குடிக்கிற தண்ணி ஆனால் தடுக்கி விழுந்தாலே கிடைக்குது மிதக்கற தண்ணி!---------ஜப்பான் ரகு

வருகின்ற ஆடி மாதத்தில் அம்மா கூழ் ஊற்றப்படுமா என்பதே எனது இன்றைய கவலை-----APPA


குளிக்கிறதுக்கு முன்ன ட்ரஸ்ஸ அயர்ன் பண்ணா ஆபிஸ் போறோம்ன்னு அர்த்தம். குளித்த பின் அயர்ன் பண்ணா வெட்டியா ஊர் சுத்த போறோம்ன்னு அர்த்தம்.----------ராஸ்கோலு 


என் ஆன்ட்ராய்டு ஓட்டவாளிக்கு சார்ஜ் போடனும். மயிலாடுதுறையில் மகான் யாராச்சும் இருக்கிங்களா? பட்டமங்கலத்தெருவில் இருக்கேன்---வால்பையன் 


மொக்கையா எழுதுனாலும் பெண் என்பதால் பாராட்டி அவர்களை மொக்கையாகவே எழுத வைத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் உண்மையில் திறமைசாலிகள்தான்---------புதியவன் 


கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி தங்கம்.....கொடுத்தவனே பறித்துக் கொண்டானே..#குமுதம் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வாபஸ்---------மதில் MALE பூனை 


என்னடி இது உன் செல்போனுல ஹஸ்பெண்ட்-2னு ஒரு போன் நம்பரை சேவ் பண்ணிவெச்சிருக்கே மானத்தை வாங்காதடி இது என்கணவரோட ரெண்டாவது சிம்கார்டோட,நம்பர்டி-----------காக்கித கப்பல்

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 24 June 2014

கலக்கல் காக்டெயில் 148

உலகக்கோப்பை 

வேலைப்பளு காரணமாக பதிவு எழுதுவதில் சற்று சுணக்கம். மேலும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியதிலிருந்து வெகு காலத்திற்குப் பிறகு முதன் முறையாக தொடர்ந்து இரண்டுமணி நேரம் தொலைக்காட்சிப் பெட்டியுடன் ஐக்கியம். முதன் முறையாக உலககோப்பை கால்பந்து போட்டி ஒரு கூட்டத்துடனும் ஆரவாரத்துடனும் பார்த்தது துபாயில் ஒரு நட்சத்திர ஓட்டலில், உலகமே மரடோனா, மரடோனா என்று கூவிக்கொண்டிருந்த நேரம். அதற்கு முன் கால்பந்து பற்றி கேட்டால் "ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன்" அளவிற்கு நியானம்.

தற்பொழுது கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் கொடுத்து கால்பந்து போட்டி பார்க்க ஆர்வம் வந்துள்ளது. நேற்றைய தினம் நெதர்லாந்து வீரர் ராபினின் ஆட்டத்தைப் பார்த்ததற்கே மூவாயிரம் ரூபாய் ஜெரித்துவிட்டது.

ஜூலை 13ம் தேதி வரை ரிமோட் கண்ட்ரோல் வீட்டு அம்மணி கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளுவதுதான் இனி பெரிய பாடு.

டேஷ் போர்டுக்கு சூனியம் வைத்து விட்டார்கள்

எனது ப்ளாக் டேஷ் போர்டில்  ரீடிங் லிஸ்டில் ஒரு பதிவுதான் காண்பிக்கிறது. இது என்னடா நமக்கு வந்த சோதனை என்று இருக்கிற எல்லா பட்டன்களை  சொடுக்கிப்பார்த்தும் பழையபடி "பப்பரபா" என்று இளிக்கிறது. இந்தப் பிரச்சினை நமக்குதான் போலும் யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் என்று நேற்றுவரை நினைத்திருந்தேன்.

இன்றுதான் அவர்கள் உண்மை தளத்தில் "ராமலக்ஷ்மிக்கு வந்தப் பிரச்சினை" உங்களுக்கும் நேரலாம் என்ற பதிவைப் படித்ததில் எல்லோருக்கும் இந்தப் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. தானாக சரியாகிவிடுமாம்.

பார்ப்போம்.

கண்ணதாசன்  

கண்ணதாசனின் பிறந்ததினம் இன்று. கவிதையின் எளிமையை நமக்கு உணர்த்தியதில் கண்ணதாசனின் பங்கு அளப்பரியது. பல புறநானூற்று கால காதல் இலக்கியங்களில் பதவுரைகளும்,  பொழிப்புரைகளும்  இல்லாமல்

 "தாமரை பூவினில் வண்டு வந்து
 தேனருந்த மலர் மூடிக்கொள்ள
 உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
 என் உள்ளத்தில் நீ நின்று ஆடுகிறாய்"

என்று எளிய வரிகளில் புரிய வைத்தவர்.

அவருடைய கவிதை நயம் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ரசித்த கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

- கண்ணதாசன்


ஜொள்ளுFollow kummachi on Twitter

Post Comment

Wednesday 18 June 2014

புத்தம் சரணம் கச்சாமி ரத்தம் வரணும் அடிச்சாமி

 கடந்த இரண்டு நாட்களாக இலங்கை தலைநகரமாகிய கொழும்புவில் தமிழ் முஸ்லிம் வசிக்கும் பகுதிகளில் வீடுகளும், அவர்களது கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்துக் கொளுத்தப்பட்டும் இருக்கின்றன. இந்தக்கலவரத்தில் சில தமிழ் இஸ்லாமியர்கள் இறந்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த கொலைவெறி தாக்குதலுக்கு காரணமானவர்கள் "பொது பலசேனா"என்றமைப்பு. இதன் பிரதான உறுப்பினர்கள் புத்தபிட்சுகள். இஸ்லாமியர்களின் ஹலால் பொருட்கள் சான்றிதழ் பிரச்சினை ஒரு காரணம் என்றும் இல்லை சமீபத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் எழுந்த தகராறில் ஒரு புத்தபிட்சு தாக்கப்பட்டதே காரணம் என்று செய்திகள் கூறுகின்றன.


காரணம் எதுவாகினும் அப்பாவி மக்களின் வீடுகள் தாக்கப்பட்டிருகின்றன. எண்ணற்ற குடும்பங்கள் இப்பொழுது நடுத்தெருவில் நிற்கின்றன. பொது மக்களுக்கு பாதுக்காப்பு தரவேண்டிய அரசோ கண்டும் காணாமல் இருக்கிறது.

 எல்லா மதங்களும் அமைதியையும், மனித நேயத்தையும், அன்பையும்தான் போதிக்கின்றன. அதுவும் புத்தமதத்தில் சற்று அதிகமாகவே இது அறிவுறுத்தப்படுகிறது.

இந்தக் கருத்தை பரப்பவேண்டிய புத்த பிட்சுகளே இந்த வன்முறையில் இறங்குவது கொடுமை.

புத்தம் சாரணம் கச்சாமி
ரத்தம் வரணும் அடிச்சாமி 


என்று மந்திரத்தை மாற்றி ஓதுகின்றனர் புத்தபிட்சுகள்.

நல்லா வருவீங்கடா..................

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 17 June 2014

அம்மா க்வாட்டர் வருது...........

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா தண்ணீரும் பின்னர் அம்மா உப்பும் வந்தபடியால் இனி அடுத்து என்ன அம்மா பெயரில் வெளியிடலாம் என்று அம்மாவின் அல்லக்கை அமைச்சர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு திட்டமுமாக சிந்தித்து அதிகாரிகளை பெண்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம் அந்தவகையில் சில...........வந்தாலும் வரலாம்........

அம்மா புளி: ஏழை எளிய மக்களின்  நலத்தை கொண்டு தமிழக மக்களை தன் மக்கள் போல் காக்கும் தாயுள்ளம் கொண்ட புரட்சி தலைவி அம்மா அவர்களின் பொன்னான ஆட்சியிலே மலிவு விலை புளி "அம்மா புளி" என்ற பெயரில் அரசு நியாவிலை கடைகளில் கிடைக்கும். இதனால் எண்ணற்ற ஏழைகள் சாம்பார் வைத்து உண்ண முடியும்.

அம்மா பருப்பு: தமிழகம் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி சாம்பார் வைக்க பருப்பு "அம்மா பருப்பு" என்ற பெயரில் எல்லா அரசு நியாய விலைக்கடைகளிலும்   மலிவு விலையில் விற்பனை செய்யப்படும்.

அம்மா பெருங்காயம்: சாம்பார் மணக்க பெருங்காயம் "அம்மா பெருங்காயம்" என்ற பெயரில் அரசாங்க நியாய விலைக்கடைகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும்.

அம்மா கோழி: ஏழைகளின் நிலைமையை நினைத்து வருந்தும் அம்மா அவர்களின் நல்லாட்சியிலே குழம்பு ருசிக்க இனி கோழி இறைச்சியும் "அம்மா கோழி" என பெயரிடப்பட்டு நியாய விலைக்கடைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அம்மா மசாலா: கோழி கொடுத்தால் ஏழைகள் மசாலா  இல்லாமல் நொந்து போவார்களே என்று கருணை உள்ளம் கொண்டு அம்மாவின் இதயத்திலிருந்து பிறந்த இந்த  திட்டம் "அம்மா மசாலா" என்ற பெயரில் மசாலா பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படும்.

அம்மா டீ: ஏழை எளியவர்கள் மகிழ்ச்சியுற அம்மா டீ இனி மலிவு விலையில் வழங்கப்படும்.

அம்மா க்வாட்டர்: ஆர்வ மிகுதியால் ஒரு அமைச்சர் "அம்மா க்வாட்டர்" மலிவு விலையில் குடிமகன்களுக்கு வழங்கலாம் என்று அம்மாவிடம் சொல்லப்போக இந்த அமாவாசையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளது.


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 12 June 2014

கலக்கல் காக்டெயில் -147

அம்மா உப்பு

அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்ற வரிசையில் அடுத்ததாக அம்மா "உப்பு". அம்மா ஆட்சிக்கு வந்து அம்மா உணவகம் தொடங்கி அதில் மலிவுவிலையில் இட்லி, பொங்கல், தயிர்சாதம் ,சாம்பார்சாதம், பின்னர் சப்பாத்தி என்று விநியோகித்தார்கள்.பின்னர் மலிவு விலை என்ற பெயரில்குடிநீர் விநியோகம் தொடங்கி தண்ணீர் வியாபாரிகளுக்கு வழி செய்தார்கள்.

இப்பொழுது யார் கம்பெனி உப்போ "அம்மா உப்பு" என்ற பெயரில் சந்தைக்கு வருகிறது. இதன் பின்னணி அம்மா மட்டும் அறிந்த ரகசியம்.

இன்னும் இப்படியே போனால் அம்மா புளி, அம்மா பருப்பு, அம்மா ஊறுகாய், அம்மா மாவு, அம்மா காபி, அம்மா டீ என்று ரவுண்டு கட்டி அடிக்க வாய்ப்புண்டு..

எல்லா பொருளும் மலிவு விலையில் கொடுக்கும் அம்மா சரக்கும், மின்சாரமும் ஏன்  தரத்தயங்குகிறார்கள்?.

தமிழ்நாட்டை தலைமேல் வைத்து தாங்கும் தாயே குடிமகன்களில் கோரிக்கைக்கு செவி சாயுங்கள். அவர்கள் அரசுக்கு செலுத்தும் கப்பம் மட்டும் இல்லையென்றால் உங்களது அம்மா திட்டமெல்லாம் "சும்மா" வாகிவிடும்.

ஆதலால் நாட்டின் குடிமகன்களுக்கு தாயுள்ளம் கொண்டு மலிவுவிலையில் அம்மா க்வாட்டரும், அம்மா லெக்  பீசும், அம்மா மீன் வருவலும் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவன்:சரக்கடித்து சந்தில் விழுந்துகிடக்கும் "டாஸ்மாக் கபாலிகள் சங்கம்".

அபதாரம் 

ஆதாரம் தெரியும் , சேதாரம் தெரியும், ஏன் தலைவரோட மூன்றாம் தாரம் கூட தெரியும், அது என்ன அபதாரம்?

மத்திய கிழக்கு நாடுகளில் "ரேடியோ ஹலோ" ஏப்.எம் மிகவும் பிரபலம். இருபத்தி நான்கு மணி நேரமும்  தமிழிசை ஒளிபரப்பி எங்களது தமிழ் தொடர்பை அடிக்கடி உறுதி செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதன் தொகுப்பாளினிகளில் ரேவா, குமுதா அவர்களின் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும். குமுதா அவர்களின் குரலில் தமிழ் தனி நடை போட்டு வரும். அலுவலகம் செல்ல காரில் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆகும், அந்த நேரங்களில் தமிழ் இசைதான் வழித்துணை.

இன்றைக்கு காலையில் அலுவலகம் கிளம்பியவுடன் ஏதோ ஒரு பக்கி ஆர் ஜே மொக்கை போட  ஆரம்பித்தான், பாட்டுகளுக்கு நடுவே நாட்டு நடப்பு செய்திகளையும் கொடுத்துக்கொண்டிருந்தான், அவ்வாறு சொல்லும் பொழுது நமது நாட்டில் கங்கையை தூய்மைபடுத்தும் திட்டமாக கங்கையை அசுத்தப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனையும் பத்தாயிரம் ருபாய் "அபதாராம்" என்று அறிவித்துக்கொண்டிருந்தான்.

நான் அலுவலகம் வந்தும் சேரும் வரை கிட்டத்தட்ட ஐந்து முறையாவது அபத்தாரத்தை சொல்லியிருப்பான்.

தமிழ் தெரிந்து அறிவிப்பாளரா வாங்கப்பு.....................இல்லை என்றால் எங்காவது ஆங்கில எஃப்.எம் இல் சேர்ந்து தமிழ் தொண்டாற்றுங்க.

ரசித்த கவிதை 

கண்ணாமூச்சி விளையாட்டு

எனது ஊரின்
பழங்காலச் சித்திரம் ஒன்று
என்னிடத்தில் இருக்கிறது
மெருகு குறையாமல்

குட்டி வாடகை சைக்கிளில்
ஊரைச் சுற்றி பழகியபோது
கிடைத்தது.

இன்றைய ஊரின் சித்திரத்தையும்
என் சித்திரத்தையும்
ஒப்பிட்டுப் பார்க்கவே பிடிக்கவில்லை
சீ...........ச்சீய்..........
மலையில் தியானத்தோடு
சந்தையின் இரைச்சலா?

வேண்டுமானால்
நாங்கள் இருவர்  விளையாடிய
கண்ணாமூச்சி விளையாட்டில்
கடைசி வரைக்கும் என்னால்
கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விட்ட
வரதராஜனிடமும்
இதே போல் ஒரு படம்
நெஞ்சுக்குள் இருக்கும்
அதனுடன் ஒப்பிட்டு அழகு பார்க்கலாம்
அவன் எங்கேதான் ஒளிந்திருக்கிறானோ.
--------------------------------------------------------------ச.முத்துவேல் 


ஜொள்ளு 

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 11 June 2014

மண்டோதரியை தள்ளி சென்றாரா ராமன்?

எங்கள் நாட்டிற்கு ஐயாயிரம் வருட பாரம்பரியம் உண்டு. எங்களது சரித்திரம் ராவணனுக்கும் முற்பட்டது என்று சலம்ப ஆரம்பித்தான் அந்த சிங்களன். அவன் கூட  அவனுக்கு சொம்படிக்க மூன்று நண்பர்களும் ஒரு சப்பை பிகரும் வேறு கூட அமர்ந்திருந்தனர். அவன் பெயர் நிஹால் என்றான்.

இது போனவாரம் நடந்தது.ஒரு மாநாட்டிற்காக கொழும்பு சென்றிருந்தேன். மாநாடு முடிந்து இரவு ஒரு உள்ளூர் விடுதியில் உள்நாட்டு கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக நடன நிகழ்ச்சிகளும் பின்னர் விருந்தும் பரிமாறப்பட்டது. எல்லோரும் உண்ட பின் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து கலாச்சார பரிமாற்ற ஏற்பாடாக இந்த அரட்டை தொடங்கியது.

மற்ற மேசைகளில் எல்லா நாட்டினரும் கலந்துகட்டி இருக்க என்னுடைய மேசையில் மட்டும் இந்த சிங்களக்கூட்டம். அன்றைய நிகழ்வான அவர்களது மக்களவை பேச்சில் தொடங்கியது விவாதம், விவாதம் என்றால் விவாதம் இல்லை அவர்களே பேசினார்கள். அவர்களது அமைச்சர் ஒருவர் ராஜபக்ஷேவின் இந்திய விஜயத்தின் பொழுது மோடி அவரிடம் சொன்ன பதிமூன்றாவது சட்ட திருத்தத்தை அமுல் படுத்துவது என்ற கோரிக்கைக்கு பதிமூன்றாவதா................ங்கொய்யால என்ற ரேஞ்சில் பேசியதையும் அதற்கு ராஜபக்ஷேவின் பதிலையும் பற்றி விவாதித்தார்கள். இதை எல்லாம் நான் கேட்டுக்கொண்டிருந்தேன் (கவனிக்கவும் கேட்டுக்கொண்டிருந்தேன்).

இப்பொழுது என்னை அவர்களது பேச்சில் கலந்துகொள்ளும் விதமாக முதல் கேள்வியை நிஹால் கேட்டான். ராமாயணத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்றான்.

அதற்கு நான் அது ஒரு காவியம் உண்மையாக நடந்ததா என்பதை பற்றிய ஆராயும் அறிவு எனக்கு இல்லை, அதை பற்றி விவாதிக்கவும் விரும்ப வில்லை என்றேன் அவனது உள்நோக்கத்தை யூகித்தவனாக.
 
அதற்கு அவன் அந்தக் காவியத்தை எழுதிய வால்மீகி ஒரு டுபாக்கூர் என்றான். அதற்கு அவன் கூட இருந்த அந்த சப்பை பிகர் விழுந்து விழுந்து சிரித்தது. 

வால்மீகி தப்பாக எழுதிஇருக்கிறான்!!, அதில் ராவணனைப் பற்றி தவறாக சொல்லியிருக்கிறான். ராமனின் மனைவியை ராவணன் அபகரிக்கவில்லை. மேலும் அவளை அசோகவனத்தில் சிறை வைக்கவும் இல்லை. உண்மையில் மண்டோதரியைதான் ராமன் லவுட்டி சென்றுவிட்டதாக எங்கள் புராணங்கள் கூறுகின்றன என்றான்.(சப்பையின் சிரிப்பு கொஞ்சம் அதிகமாகியது)  இப்பொழுது பேச்சு முழுக்க சிங்களத்துக்கு மாறி அவர்களே பேசிக்கொண்டு என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்களின் நோக்கமும் கிண்டலும் நன்றாகவே புரிந்தது, இருந்தாலும் நான் வந்த வேலையை பார்த்து திரும்பலாம், இவர்களுடன் என்ன பேச்சு என்று அமர்ந்திருந்தேன்.

ஒரு வழியாக கலாச்சார பரிமாற்றம் முடிந்தது.

கிளம்புமுன் நிஹால் கூட்டத்தில் இருந்த மகிலாவோ எவனோ வந்து தான் ஒரு டாக்ஸி ஒட்டி என்றும் என்னை அடுத்தநாள் நுவரெலியா என்ற இடத்திற்கு அழைத்துப்போவதாக சொன்னான்.

அப்பொழுது நிஹால் குறுக்கிட்டு சாரை "சீதா ஏலியா" அழைத்து செல் என்றான்.

நான் புரியாமல் என் புருவத்தை உயர்த்த, நிஹாலே அதற்கு விளக்கமளித்தான்.

சீதா ஏலியா என்ற இடம்தான் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் என்றும் அருகில் உள்ள ஆற்றில் தினமும் அவள் மஞ்சள் தேய்த்து குளித்ததாகவும், அதற்கு சான்றாக அங்குள்ள பாறையில் மஞ்சள் தேய்த்த இடம் இன்னும் மஞ்சளாகவே இருப்பதாக கூறினான். திரும்ப வரும்பொழுது அவன்கட்டாயம் "ரிவர் ரேஃப்டிங்"செய்யுங்கள் நல்ல அனுபவமாக இருக்கும் என்றும் அதை அவன் மச்சான் தான் நடத்துவதாகவும் கூறினான்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 9 June 2014

டீ வித் முனியம்மா------பார்ட் 11

டேய் மீச இன்னாடா யாரும் கடையாண்ட வர்ல, ஊசிப்போன மசால்வடைய கொயப்பி வடகறின்னு  குத்துகினியா.

ஹே முனிம்மா சேச்சி எந்தா கள்ளம் பறயுன்னு................நானு அங்கன ஆளில்லா.

அடேய் மீச என் கண்ணு மெர்சல் ஆவாதே, சொம்மா டமாஸ்  டா, சரி ஒரு டீ போடு.

தோடா மீச அல்லா பார்டிங்களும் வருது பாரு, ஆறு டீ போடு..........டேய் தண்ணி நெறய ஊத்தாத............முல்லபெரியாருல தண்ணி வுடுங்கடான்னா, குடிக்கிற டீயில ஊத்தறீங்க........இன்னா செய்யுறது உங்கள.

இன்னா முனியம்மா இன்னிக்கி இம்மாம் முன்னால வந்து குந்திகினு கீற பூ வியாவாரம் இல்லையா. கோயில மூடிகினான்களா?

இன்னா லிங்கம் சாரு, அப்படி சொல்ற, கோயில இன்னா டாஸ்மாக் கடியா, எலிக்ஸனுக்கு, காந்தி ஜெயந்தினு மூடி வக்கோ. கடிய நம்ம ஆயா பாத்துக்குது.

செல்வம் நீ இன்னாடா பம்முற, எளிக்சணுல உங்க கட்சி புட்டுகிச்சுனு பேஜாராயி டாஸ்மாக்கான்டையே ரவுண்டு கட்டி அடிச்சிகினியா? அஞ்சல கடையாண்ட  வந்து அயுதுகினு இருந்துச்சு.

இன்னா முனியம்மா போன தபா செல்வம் அந்த கட்சி கெலிச்சபோதும்  கடையாண்ட ஃபுல் மப்புல இருந்து அஞ்சலயாண்ட வாங்கி கட்டிகினான்.

டேய் லோகு அவன கலாய்ச்சுனுகிறதே  உனுக்கு பொயப்பா போச்சி.

இன்னா முனியம்மா இந்த மாசத்துல இருந்து கரண்டு கட்டாவாதாம் அம்மா சொல்லிகீது.

அம்மா என்னிக்கி சொல்லிச்சோ அன்னிக்கு முயு நேரமும் எங்க ஏரியாவுல புடுங்கிட்டானுங்க பாய், ஆனா அம்மா எப்போ சொல்லிச்சோ சொம்மா காத்து காட்டு காட்டுன்னு காட்டுதான் இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு பிரச்சின இருக்காது, எங்க பூக்கடையாண்ட வர ஒரு அம்மாவோட புருசண் பேசிக்கினு இர்ந்துச்சு.

முனியம்மா இன்னா மோடி ஆட்சி எப்படிகீது?

லிங்கம் சாரே இப்போதானே சீட்டுல குந்திகினு கீறாரு, ஆனா இந்த அமைச்சர் பசங்களுக்கு நல்லா சொல்லிகீறாரு.........மாமன், மச்சான், மருமவனுங்க எல்லாம் ஆபீசுல வேலைக்கு வக்ககூடதுன்னு................

ஆமாம் முனிம்மா நம்ம வாஜ்பாய் அரசுல நம்ம அமைச்சருங்க ரண்டு பேரு மாமன் மச்சானோட அடிச்ச கொள்ளையில நல்லா வகையா சிக்கின்னானுங்களே.

அதே தான் நாடார்.....அந்த பெருசுகூட பேஜார் ஆயி, அவனுக பைலு எல்லாம் என் மூலமாதான் போவனுன்னு கண்டிசன் போட்டாரு.

முனியம்மா மோடி ராஜபக்ஷேவாண்ட கண்டிசனா சொல்லிட்டாருன்னு உதாரு விட்டானுங்க, அந்தாளு போயி இன்னது பதிமூனா, சட்டமா, போடாங்கொய்யாலன்னு அங்க போயி கொரலு விடுறான்.

அதில்லடா செல்வம் அந்த சிங்களனுங்க இப்போ நம்ம நாட்டையே ஒரு காமெடி பீசா பாக்குறானுங்க. அல்லாம் சீன காரனுங்க  உசுப்பி வுட்டு  வேடிக்க பாக்குறானுங்க.

ஏன்முனிம்மா இந்த அம்மாவும் சின்ன அம்மாவும் கோர்ட்டுக்கு போவாம இன்னா டகிலு பாச்சா வேல காமிக்குறாங்க, ஆனா கோர்ட்டு ஒன்நியம் செய்ய மாட்டேங்குது...

அவியிங்க செய்யலாம் பாய், ஆனா நாம கண்டி கோர்ட்டுக்கு போவலைன்னு வையி, போலிச வுட்டு நம்மள நாய் கணுக்கா இஸ்துகினு போவானுங்க.

அதான் அவனவன் அரசியாவாதி ஆவனுன்னு துடிக்கிரானுங்க.............

அஹான் நாடார், நம்ம செல்வம்கூட சினிமாவுல சேர்ந்து பெரிய அரசியல்வாதியா ஆவனுன்னு பாக்குறான், அதான் பயககடைய அஞ்சலையாண்ட வுட்டுட்டு சரக்கடிச்சு கம்பு சுத்துறான்...........டேய் செல்வம் நீ கண்டி சி.எம் ஆன நான்தான் உன் உ.பி.ச இன்னா புரியுதாடா..........

அடப்போ முனிம்மா சொம்மா புளிப்பூத்தாத........

நம்ம மேட்டரு ஏதாவது இருந்தா போடு இல்லின்னா நான் அபீட் ஆவுறேன்.

இருடா செல்வம் மேட்டர் இல்லின்ன சரக்கு போனியாவது........

இன்னாடா செல்வம்.......ஹேப்பியா?

Follow kummachi on Twitter

Post Comment