Wednesday 11 June 2014

மண்டோதரியை தள்ளி சென்றாரா ராமன்?

எங்கள் நாட்டிற்கு ஐயாயிரம் வருட பாரம்பரியம் உண்டு. எங்களது சரித்திரம் ராவணனுக்கும் முற்பட்டது என்று சலம்ப ஆரம்பித்தான் அந்த சிங்களன். அவன் கூட  அவனுக்கு சொம்படிக்க மூன்று நண்பர்களும் ஒரு சப்பை பிகரும் வேறு கூட அமர்ந்திருந்தனர். அவன் பெயர் நிஹால் என்றான்.

இது போனவாரம் நடந்தது.ஒரு மாநாட்டிற்காக கொழும்பு சென்றிருந்தேன். மாநாடு முடிந்து இரவு ஒரு உள்ளூர் விடுதியில் உள்நாட்டு கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக நடன நிகழ்ச்சிகளும் பின்னர் விருந்தும் பரிமாறப்பட்டது. எல்லோரும் உண்ட பின் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து கலாச்சார பரிமாற்ற ஏற்பாடாக இந்த அரட்டை தொடங்கியது.

மற்ற மேசைகளில் எல்லா நாட்டினரும் கலந்துகட்டி இருக்க என்னுடைய மேசையில் மட்டும் இந்த சிங்களக்கூட்டம். அன்றைய நிகழ்வான அவர்களது மக்களவை பேச்சில் தொடங்கியது விவாதம், விவாதம் என்றால் விவாதம் இல்லை அவர்களே பேசினார்கள். அவர்களது அமைச்சர் ஒருவர் ராஜபக்ஷேவின் இந்திய விஜயத்தின் பொழுது மோடி அவரிடம் சொன்ன பதிமூன்றாவது சட்ட திருத்தத்தை அமுல் படுத்துவது என்ற கோரிக்கைக்கு பதிமூன்றாவதா................ங்கொய்யால என்ற ரேஞ்சில் பேசியதையும் அதற்கு ராஜபக்ஷேவின் பதிலையும் பற்றி விவாதித்தார்கள். இதை எல்லாம் நான் கேட்டுக்கொண்டிருந்தேன் (கவனிக்கவும் கேட்டுக்கொண்டிருந்தேன்).

இப்பொழுது என்னை அவர்களது பேச்சில் கலந்துகொள்ளும் விதமாக முதல் கேள்வியை நிஹால் கேட்டான். ராமாயணத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்றான்.

அதற்கு நான் அது ஒரு காவியம் உண்மையாக நடந்ததா என்பதை பற்றிய ஆராயும் அறிவு எனக்கு இல்லை, அதை பற்றி விவாதிக்கவும் விரும்ப வில்லை என்றேன் அவனது உள்நோக்கத்தை யூகித்தவனாக.
 
அதற்கு அவன் அந்தக் காவியத்தை எழுதிய வால்மீகி ஒரு டுபாக்கூர் என்றான். அதற்கு அவன் கூட இருந்த அந்த சப்பை பிகர் விழுந்து விழுந்து சிரித்தது. 

வால்மீகி தப்பாக எழுதிஇருக்கிறான்!!, அதில் ராவணனைப் பற்றி தவறாக சொல்லியிருக்கிறான். ராமனின் மனைவியை ராவணன் அபகரிக்கவில்லை. மேலும் அவளை அசோகவனத்தில் சிறை வைக்கவும் இல்லை. உண்மையில் மண்டோதரியைதான் ராமன் லவுட்டி சென்றுவிட்டதாக எங்கள் புராணங்கள் கூறுகின்றன என்றான்.(சப்பையின் சிரிப்பு கொஞ்சம் அதிகமாகியது)  இப்பொழுது பேச்சு முழுக்க சிங்களத்துக்கு மாறி அவர்களே பேசிக்கொண்டு என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்களின் நோக்கமும் கிண்டலும் நன்றாகவே புரிந்தது, இருந்தாலும் நான் வந்த வேலையை பார்த்து திரும்பலாம், இவர்களுடன் என்ன பேச்சு என்று அமர்ந்திருந்தேன்.

ஒரு வழியாக கலாச்சார பரிமாற்றம் முடிந்தது.

கிளம்புமுன் நிஹால் கூட்டத்தில் இருந்த மகிலாவோ எவனோ வந்து தான் ஒரு டாக்ஸி ஒட்டி என்றும் என்னை அடுத்தநாள் நுவரெலியா என்ற இடத்திற்கு அழைத்துப்போவதாக சொன்னான்.

அப்பொழுது நிஹால் குறுக்கிட்டு சாரை "சீதா ஏலியா" அழைத்து செல் என்றான்.

நான் புரியாமல் என் புருவத்தை உயர்த்த, நிஹாலே அதற்கு விளக்கமளித்தான்.

சீதா ஏலியா என்ற இடம்தான் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் என்றும் அருகில் உள்ள ஆற்றில் தினமும் அவள் மஞ்சள் தேய்த்து குளித்ததாகவும், அதற்கு சான்றாக அங்குள்ள பாறையில் மஞ்சள் தேய்த்த இடம் இன்னும் மஞ்சளாகவே இருப்பதாக கூறினான். திரும்ப வரும்பொழுது அவன்கட்டாயம் "ரிவர் ரேஃப்டிங்"செய்யுங்கள் நல்ல அனுபவமாக இருக்கும் என்றும் அதை அவன் மச்சான் தான் நடத்துவதாகவும் கூறினான்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கும்மாச்சி said...

எஸ்.ரா வருகைக்கு நன்றி.

Unknown said...

நல்ல வேளையாக நாங்கள் ஸ்ரீலங்கா போகும் போது
எங்களை அழைத்துச் சென்றவர் ஒரு தமிழ் முஸ்லிம். தங்கமான விதம். கணவனும் மனைவியுமாக எங்களுடனே கோவில்கள் உள்ளேயும் பய பக்தியோடு வந்தார்கள்.

அருணா செல்வம் said...

அவர் சொன்னதற்கும்... சீதா ஏலியாவிற்கு கூட்டிச் சென்றதும்...
எப்படி முரணான பேச்சு...

சகித்துக்கொண்டீர்கள் கும்மாச்சி அண்ணா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.