Wednesday 18 June 2014

புத்தம் சரணம் கச்சாமி ரத்தம் வரணும் அடிச்சாமி

 கடந்த இரண்டு நாட்களாக இலங்கை தலைநகரமாகிய கொழும்புவில் தமிழ் முஸ்லிம் வசிக்கும் பகுதிகளில் வீடுகளும், அவர்களது கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்துக் கொளுத்தப்பட்டும் இருக்கின்றன. இந்தக்கலவரத்தில் சில தமிழ் இஸ்லாமியர்கள் இறந்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த கொலைவெறி தாக்குதலுக்கு காரணமானவர்கள் "பொது பலசேனா"என்றமைப்பு. இதன் பிரதான உறுப்பினர்கள் புத்தபிட்சுகள். இஸ்லாமியர்களின் ஹலால் பொருட்கள் சான்றிதழ் பிரச்சினை ஒரு காரணம் என்றும் இல்லை சமீபத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் எழுந்த தகராறில் ஒரு புத்தபிட்சு தாக்கப்பட்டதே காரணம் என்று செய்திகள் கூறுகின்றன.


காரணம் எதுவாகினும் அப்பாவி மக்களின் வீடுகள் தாக்கப்பட்டிருகின்றன. எண்ணற்ற குடும்பங்கள் இப்பொழுது நடுத்தெருவில் நிற்கின்றன. பொது மக்களுக்கு பாதுக்காப்பு தரவேண்டிய அரசோ கண்டும் காணாமல் இருக்கிறது.

 எல்லா மதங்களும் அமைதியையும், மனித நேயத்தையும், அன்பையும்தான் போதிக்கின்றன. அதுவும் புத்தமதத்தில் சற்று அதிகமாகவே இது அறிவுறுத்தப்படுகிறது.

இந்தக் கருத்தை பரப்பவேண்டிய புத்த பிட்சுகளே இந்த வன்முறையில் இறங்குவது கொடுமை.

புத்தம் சாரணம் கச்சாமி
ரத்தம் வரணும் அடிச்சாமி 


என்று மந்திரத்தை மாற்றி ஓதுகின்றனர் புத்தபிட்சுகள்.

நல்லா வருவீங்கடா..................

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

Unknown said...

தமிழ் போரின் போது பல இலங்கை தமிழ் முஸ்லிம்கள் தாங்கள் தமிழ் முஸ்லிம் என சொல்ல வெட்கப் பட்டார்கள். சிங்களத்தவனுக்கு தமிழன் பிரச்னை முடிந்தப் பின் இவர்கள் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டான். ஒற்றுமையே என்றும் நம்மை காப்பாற்றும் என்பதை நமது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கும்மாச்சி said...

அசோக்ராஜ் வருகைக்கு நன்றி.

r.v.saravanan said...

அன்பும் மனித நேயமும் உலகில் குறைந்து வருகிறது

கும்மாச்சி said...

சரவணன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

இவர்கள் புத்த பிட்சுகள் இல்லை! புத்த பிட்ச்சுக்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி

Anonymous said...

Islam'um, buddhism'um (sri Lanka, Myanmar) terrorism panrathula salaithavargal illai.

திண்டுக்கல் தனபாலன் said...

புத்த பிசாசுகள்...?

அருணா செல்வம் said...

புத்தரைத் தவிர அவர் வழி வரும் யாரும் புத்தர் இல்லை!

மனிதர்களுக்கு எதிரி மனிதன் தானே கும்மாச்சி அண்ணா?

வேகநரி said...

அப்பாவி மக்கள் பாதிக்கபடுவதை எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.
//இந்தக்கலவரத்தில் சில -தமிழ் இஸ்லாமியர்கள் -இறந்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.//
இந்த செய்திகள் திட்டமிட்டே -தமிழ் இஸ்லாமியர்கள்- என்று தமிழகத்தில் திணிக்கபடுகின்றன. இலங்கையில் உள்ள இஸ்லாமிய மதத்தவர்கள் தங்களை இலங்கை முசுலிம்கள் என்றே தங்களை தெரியபடுத்த விரும்புகின்றனர். அது அவர்களின் உரிமை.
மத அடிப்படையிலான ஹலால் சான்றளிக்கும் செயல்கள், இலங்கை சில வருடங்களில் இஸ்லாமிய நாடாகும் என்ற மத பயமுறுத்தல்களும் வெறுப்பு,கலவரங்களுக்கு காரணமாகியதாக அறிய முடிகிறது.

Unknown said...

அன்று எமது மொழி பேசி எம்கூட இருந்து எள்ளி நகையாடியோர்!
இன்று அவர்களின் பரிதாபநிலை கண்டு அழுவதா............!
அல்லது ஈனப்பிறவிகளென்று சிரிப்பதா.........!

Aba said...

குஜராத்ல நீங்க அடிச்சதைவிட ரொம்பக் குறைவாத்தான் இங்க அடிச்சிருக்காங்க. ஒரு அமைதியான மதத்தை அவங்களே அவமானப்படுத்தும்போது நீங்களும் அந்த மதம் முழுவதுமே அப்படித்தான்னு இனவெறியோட எழுதறது நல்லா இல்லை. இங்க இலங்கைல யாருக்கிடையிலும் ஒற்றுமை இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள் மலைநாட்டு தமிழக வம்சாவளித் தமிழர்களை 'தோட்டக்காட்டான்' என்றுதான் அழைக்கின்றனர். ஈழத்தமிழர்கள் முஸ்லிம்களையும் ('சோனி' என்று அவமானப்படுத்தி) மதிப்பதில்லை. யால்ப்பனத்துக்குள் ஆயிரம் சாதிகள் (வெள்ளான், பறையன், நளவன்... சொல்லவே அசிங்கமாக இருக்கிறது) நாங்களே இப்படி கேவலமாக வறட்டு இனக் கௌரவத்தோடு இருக்கும்போது இன ஒற்றுமையை அடுத்தவனிடம் எதிர்பார்க்க முடியுமா?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.