Tuesday, 14 August 2018

கலக்கல் காக்டெயில்-188

சந்து (ட்விட்டர்)

நீங்கள் சந்து வாழ் மனிதரா, நகைச்சுவை உள்ளம் உள்ளவரா? நாயே பேயே என்று திட்டினாலும் மற்றும் சாதிரீதியாக உம்மை வசை பாடினாலும் உணர்ச்சி வசப்படாதவரா? அப்ப சந்தில் வரும் கீச்சுகளை படித்தால் உங்கள் கவலை மறந்து சிரிக்கலாம். அதுவம் சமீபத்திய ட்விட்டரில் வரும் அரசியல் சார்ந்த கீச்சுகள் நகைக்க வைக்கின்றன...........சில அல்சர் ரகம்.

சீமான் கலைஞரிடம் கொண்ட பழக்கத்தை "அவர் சட்டை பையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதிவிட்டு வைக்கும் அளவு பழக்கம் இருந்தது என்று சொல்லப் போக..........ஒரு கீச்சர்........

சீமான் சொல்வது போல............."எனக்கும் தலைவருக்கும் பிரபாகரனுக்கும் உள்ள பழக்கம் எப்படி என்றால் அவர் கழுத்தில் வைத்திருக்கும் சயனைட் குப்பியை எடுத்து இரண்டு சப்பு சப்பிவிட்டு வைக்கும் அளவுக்கு நெருக்கம்  இருந்தது".

அடுத்தது கலைஞர் கல்லறையிலிருந்து மகன் ஸ்டாலினுக்கு எழுதும் மடல்.

மகனே இந்த வைரமுத்து எதையோ கிறுக்கி எடுத்து வந்து கவிதை என்று பாடி தலையை சொறிவான்.

பத்து ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டாம்.......அப்பா அதைத்தான் கொடுப்பேன்.

பின் குறிப்பு: அதையும் அருகிலிருப்பவரிடம் இருந்து எடுத்து கொடுத்தால் நலம்.

போடு தகிட தகிட...

இது தர்ம யுத்தம் காலம் போல.....இன்று மெரீனாவில் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கியது என்பதுதான் இன்றைய ஊடகங்களின் ஸ்கூப்.......

அஞ்சா நெஞ்சன் இன்று கலைஞர் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. தன்னுடைய ஆதங்கங்களை கலைஞரிடம் சொன்னதாகவும், மேலும் தி.மு.கவின் தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாகவும் கூறி இன்று  நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் குண்டை வைத்து விட்டார்.

ஏற்கனவே ஒரு தலை மறைந்தவுடன் ஒரு கட்சி சின்னா பின்னப்படுத்தப்பட்டது. இப்பொழுது இன்னும் ஒரு பெருந்தலை மறைந்தவுடன் அடுத்த வேலை ஆரம்பம்.

யாரந்த சூத்திரதாரி? காலம் பதில் சொல்லும்.

போடு தகிட தகிட...........ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ? பதவி ஆசை எனும் தொட்டிலிலே..........ஆடாதாரோ?

ரசித்த கவிதை 

இவன் ஒரு வம்பன் ,
இரண்டு நாய் தெருவிலே
இன்புற்றிருந்தால் பிடிக்காது
பொல்லை கொண்டு அடித்தோ.. 
கல்லை தூக்கி எறிந்தோ.. 
கண்ணில் படும் போதெல்லாம்
கலைத்துவிடுவான் காத தூரம்..!

வாயில்லா ஜீவன் அது
வம்பனை காணும்போது
வாலை சுருட்டிக்கொண்டே ஓடிவிடும்,
வாய் மட்டும் இருந்திருந்தால்
"பாடையில போவானே" எண்டு
வஞ்சிக்கும் இவனை கண்டு.., 

நாட்கள் நகர்ந்த ஒருநாள்
வம்பன் வரும் வழியில்
வாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்
வசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்
வம்பனுக்கு ஒரு சந்தேகம்
வாலும் ஆடவில்லை - அதன்
வாயும் அசையவில்லை
வருத்தத்தில் செத்திருக்குமோ..! 

முடிவு செய்துகொள்ள , அதன்
மூக்கு மேல விரலை வச்சான்
மூச்சு வருதா ..?

அவன் எதிர்பார்க்கவில்லை; 
அடுத்த நொடியிலே
"அவ்" என்று ஒரு கடி..,
அத்தனை நாள் ஆத்திரமும்
மொத்தமாய் சேர்த்து வச்சு.!

பாவம் வம்பன் ,
மூக்கு மேல வச்ச விரலில்
மூணு பல் ஆழமாய் - இப்போ
ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
அஞ்சு ஊசி போட்டாச்சாம்
அடுத்து வரும் நாட்களில்
மிச்சம் இருபத்தி ஆறு..!


நன்றி: மதுரை மைந்தன்

சினிமா

கஜினிகாந்த்...................

ஆர்யா.............சாய்ஷா...

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 13 August 2018

பொது அறிவு?

வாழ்க்கைக்கிற்கு பொது அறிவு மிக அவசியம். எல் .கே.ஜி தொடங்கி ஆணி பிடுங்கப்  போகும் வரை நம் வாழ்விற்கு பொது அறிவு தேவை. ஆதலால் நீங்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிந்திருப்பது அவசியம், இது ஒரு மாதிரி!!!!... வினாத்தாள் தான்.

அமெரிக்காவை கண்டு பிடித்தது யார்?
நீராவி எஞ்சினை கண்டுபிடித்தது யார்?
உழவர் சந்தை கொண்டு வந்தது யார்?
கணினியை கண்டு பிடித்தது யார்?
இணையத்தை நமக்கு கொடுத்தது யார்?
அண்ணா அறிவாலயம் கட்டியது யார்?
சமச்சீர் கல்வி கொண்டு வந்தது யார்?
தொல்காப்பியருக்கு தமிழ் ஆசான் யார்?
திருவள்ளுவருக்கு சிலை வைத்தது யார்?
அரசியல் சாணக்கியர் யார்?
தாஜ்மகாலை கட்டியது யார்?
கத்திப்பாரா பாலத்தை வடிவமைத்தது யார்?
செம்மொழி மாநாடு நடத்தியது யார்?
தமிழ் ஈழம் கண்ட தலைவர் யார்?
பகுத்தறிவுத் தந்தை யார்?
ஃபியூஸை பிடுங்கியது யார்?
புல்டோசர் விட்டது யார்?
தொலைபேசியைக்  கண்டுபிடித்தது யார்?
சீனப் பெருஞ்சுவர் கட்டியது யார்?
சமூகநீதி காத்தவர் யார்?
ஊழலின் தந்தை யார்?
சிலப்பதிகாரம் செய்தது யார்?
மனைவி,துணைவி, இறைவி என்று இலக்கணம் வகுத்தவர் யார்?
தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் யார்?
கட்டுமரத்தைக் கடலில் விட்டது யார்?
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்?
இறந்தும் போராடியத்  தலைவர் யார்?
நிலவிற்கு ராக்கெட் விட்டது யாரு?
அணு!!!!வை கண்டு பிடித்தது யார்?
ஐ.நா வைக் கட்டமைத்தது யார்?
சரித்திர நாயகன் யார்?
திராவிட தலைமகன் யார்?


இன்னும் போல ஆயிரம் கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விடை தெரியவில்லை என்றால், நீங்கள் ஒன்று உலக்கைக்கு பிடிக்காத "நூலை" வைத்திருக்க வேண்டும், இல்லை அந்த கூட்டத்தின் அடிவருடியாக இருக்க வேண்டும்.

மேற்கொண்ட கேள்விகளுக்கு விடை ஒன்றே தான்............உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் கீழ் கண்டவர்களை அணுகினால் பொது அறிவு பெற்று வாழ்க்கையில் சீரும் சிறப்பும் பெறுவீர்கள்.

பிரியாணி கடையில் பாக்ஸிங் செய்து பிரியாணி பிடுங்கும் கூட்டத்தில் யாரை வேண்டுமானாலு அணுகலாம்.
இணையத்தில் உ.பி.  போராளிகளை அணுகலாம். இவர்களை இனம் கண்டுகொள்வது எளிது. (எனது முந்தைய பதிவில் இந்த அறியத் தகவல் உள்ளது).
மேலும் சமீபத்தில் மெரீனா சென்றால் நீங்கள் கேட்கவே வேண்டாம் தன்னாலேயே விடை கிடைக்கும். ஆனால் இந்த சலுகை இன்னும் சில நாட்கள் மட்டுமே. முந்துங்கள்.
Follow kummachi on Twitter

Post Comment

Saturday, 11 August 2018

சமூக வலைத்தளங்களில் "உ.பீ "ஸ்

நீங்கள் வலைத்தளங்களில் வரும் செய்திகளையும் நிகழ்வுகளையும் கவனிப்பவர்கள் என்றால் சமீபத்தில் உ.பீஸ்களின் உண்மை முகங்களை தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான பதிவுகள் அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டிருக்கும் நடிகரை கிண்டலடித்து வரும் பதிவுகளாக இருக்கும். மேலும் அவரது வரவை கண்டு நடுங்கி அஞ்சுவதை பறையடித்து காட்டும்.


மற்றுமொரு கூட்டம் மறைந்த தலைவர்தான் தமிழை வளர்த்தார் அவரது மறைவுக்குப் பின் தமிழ் இனி விரைவில் சாகும் என்ற ரேஞ்சில் ஒரேயடியாக ஜல்லியடிப்பார்கள். அப்போ இந்த கம்பர், வள்ளுவர், அவ்வையார் என்ற சங்ககால புலவர்கள், மற்றும் தேவநேயப்பாவாணர், பாரதி, பாரதிதாசன், போன்ற இந்த கால தமிழ் தொண்டு ஆ ற்றியவர்கள்  எல்லாம் என்ன தமிழை வளர்க்காமல் வெட்டினார்களா? என்ற கேள்விகளை நீங்கள் கேட்டால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரும். "பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைத்த வஞ்சகர்கள்" என்ற எதுகை மோனை வகையறாவை சிலாகிக்கும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட  அறிவுஜீவிகள்.

மற்றுமொரு பிரிவினர். இவர்கள் நடுநிலைவாதிகள் என்ற போர்வையில் வருவார்கள். தங்களது கட்சியின் ஆட்கள் மீது உள்ள வழக்குகளை போலி வழக்கு என்று முதலில் ஆரம்பிப்பார்கள். பின்னர் நீதிமன்றத்தில் சென்று "நீதி வென்றது" என்று பினாத்துவார்கள், தோற்று குற்றவாளி என்று நிரூபணமானால் நீதியரசர்களின் ஜாதியை ஆராய்ந்து பீராய்ந்து தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதே எதிர்க்கட்சி ஆட்களின் வழக்குகளோ அல்லது அவர்கள் எதிர்க்கும் ஜாதிகளின் வழக்குகளை பற்றி செய்தி வரும்பொழுதே இணையத்திலேயே வழக்கை நடத்தி "திருடன், கொலைகாரன்" என்று தீர்ப்பு எழுதி தண்டனையும் தந்து விடுவார்கள்.

மற்றுமொரு வகை,பெரியார் பகுத்தறிவு, அண்ணா கொள்கைகள் என்று சமூக நீதி காக்க வரும் கோமான்கள். இந்த வகை ரொம்ப ரசிக்கத்தக்கவை. பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று வாய்கிழிய, மன்னிக்கவும்  வலைத்தளம் கிழிய பதிவிட்டு பெருமாள் கோவில் மணி அடித்தவுடன் "உண்டகட்டிக்கி" முதலில் கை  நீட்டுவார்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களில் பகுத்தறிவை வாசலியேயே நிற்க வைத்து எச்சிலை பொறுக்க விடுவார்கள். இதில் பெரும்பாலான வகை "நூல் பொறுக்கிகள்" என்று புலம்பி இணையத்தில் பதிவிட்டு சுய இன்பம் அடையும் நச்சுக்கூட்டம். இவர்கள் பெரியார் கொள்கைகளு ம் தெரியாது, அண்ணாவின் கொள்கைகளும் தெரியாது. "தொம்பிகளுக்கு" சவால் விடும் வெற்றுக்கூட்டம்.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் டாஸ்மாக்கு, குவாட்டர், பிரியாணிக்கு பாக்ஸிங், தலைவர்களுக்கு அடிவருடி தெருவில் நிற்பது, அப்பாவிகளை உயிரோடு எரிப்பது, அடிதடி மேலும் முக்கியமாக அருமை தமிழில் உள்ள அத்துணை கெட்டவார்த்தைகளையும் புதுப்புது பொலிவோடு இணையத்தில் பரப்பி பேரானந்தம் அடையும் பெரியோர்கள் சான்றோர்கள்.

நீங்க இப்படியே இருங்க, அப்பொழுதுதான் உங்க தலைவர்கள் உங்களை உபயோகித்து அவர்களது வியாபாரத்தை பெருக்கமுடியும்.Follow kummachi on Twitter

Post Comment

Friday, 10 August 2018

மறைந்த சூரியன்

கலைஞரின் மரணம் தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒரு பேரிழப்பு என்றால் அது மிகையாகாது. கடந்த என்பது வருடங்களாக பொது சேவையிலும், கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் அரசியலிலும் கோலோச்சியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை தேர்ந்தடுக்கப்பட்டவர், சட்டசபை தேர்தல்களில்  தோல்வியையே சந்திக்காதவர் என்ற பெருமைக்குரியவர். தமிழக அரசியலில் கலைஞரின் பங்கு அளப்பரியது, அது பதவியிலிருந்தாலும் சரி இல்லையென்றாலும் அவரின் இருப்பு தமிழகத்தில் எப்பொழுதும் உணரப்பட்டிருந்தது. ஒரு பெரிய கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு அவ்வளவு எளிதல்ல, எல்லாவற்றையும் அவர் திறமையாக செய்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.

கடந்த சில வருடங்களில் தமிழகம் இரண்டு பெரிய ஆளுமையை இழந்திருக்கிறது. இனி தமிழக அரசியல் இந்த இரண்டு தலைவர்கள் இல்லாமல் எந்த பாதையில் செல்லும் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கலைஞரின் மரணத்திற்குப் பின் தி.மு.க வின் செயல்பாடு எப்படி இருக்கும்?, கட்சியின் நிலைமை என்னவாகும்? என்பதெல்லாம் காலத்தின் கையில் உள்ளது. அவரின் உண்மையான தொண்டர்கள் அதை செவ்வனே செய்வார்கள் என்று நம்புவோம்.

அவரின் மரணத்திற்கு பின் சமூக ஊடகங்களில் நடந்த செயல்கள் சத்தியமாக அவருக்கு புகழ் சேர்க்காது. அவரது உடல் அடக்கம் செய்யவேண்டிய இடத்தை நிர்ணயிப்பதில் நடந்த குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதை வைத்து செய்யப்பட்ட கேலிகளும், ஜாதி விரோதங்களும் தமிழர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. ஆனால் இங்கு யார் தமிழன் என்பதிலே ஒரு பெரிய குழப்பமே இருக்கும் பொழுது ஒற்றுமையை எதிர்பார்ப்பது அறிவீனம்.

கலைஞர் தனது மரணத்தில் தமிழ் சமுதாயத்திற்கு எத்தனையோ செய்திகளையும் சிந்தனைகளையும் உணர்த்திவிட்டு போயிருக்கிறார். ஆனால் நமது சமுதாயம் அதை சிலாகிப்பார்கள் பின்பற்ற மாட்டார்கள்.


Follow kummachi on Twitter

Post Comment