Saturday 25 August 2018

கலக்கல் காக்டெயில் -189

பிச்சைக்கு பாடும் பாட்டு 

நினைவேந்தலுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இப்பொழுது அந்தக் கட்சியின் தலைவர் வரவு சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது. வழக்கம்போல இணையத்தில் உ.பீசுகளும் எதிரணிகளும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். அடுத்த தேர்தல் கூட்டுக்கு இது அச்சாரமா? என்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இப்பொழுது காங்கிரஸ் இருக்கும் நிலைமையில் எந்த கூட்டணியும் சாத்தியமே, கூட்டணி விவரம் போகப் போகத்தான் தெரியும். இதற்காக பெரிய அடிதடி தேவையில்லைதான். அரசியலில் எதுவும் நடக்கும். இதையெல்லாம் பார்க்கும் பொழுது..........ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் ராதா "தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்" என்று பாடிக்கொண்டு  ஒரு வீட்டில் பிச்சைக்கு நிற்பார். அப்போது அந்த வீட்டுக்காரர் ஏன் அந்த கோவிந்தன் உன் வினையை தீர்க்கவில்லை என்று கேட்பார்.

ராதா நக்கலாக ஒரு பார்வை பார்த்து........அடேங்கப்பா டேய் அது பிச்சைக்கு பாடுற பாட்டுடாப்பா.........என்று சொல்லி செல்வார்.

அதேபோலத்தான் இந்த நிகழ்வுகளும் ..............ஓட்டு பிச்சைக்காக...........

முக்கொம்புக்கு டெங்குவாம்...........

முக்கொம்பு தடுப்பணையில் ஒன்பது மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாக போய்க்கொண்டிருக்கிறது. அதை பார்வையிட்ட நமது முதல்வர் நிருபர்களிடம் நமக்கு எல்லாம் காய்ச்சல் வருவதில்லையா? அது போல அணைக்கும் வந்து உடைந்து விட்டது என்று இணைய போராளிகள்  திரித்துக்கூறும் வகையில் ஒரு வாக்கியத்தை சொல்லப்போக இப்பொழுது எல்லோரும் அவரை வைத்து செய்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைச்சர்களை நாமெல்லாம் லூசு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் உளறலைப்பற்றி அவர்களே கவலைப் படுவதில்லை. அவர்கள் கருமமே கண்ணாயிருக்கிறார்கள்......எப்படியோ கல்லா கட்டினால் சரி என்பதுதான் அவர்களது குறிக்கோள்.

டிஸ்கி: பொதுப்பணித்துறை கான்டிராக்ட் எல்லாம் அவரது பினாமிகள் பேரிலதானாமே.

கனவுகண்டேன் நான் கனவுகண்டேன் 

கேரளா வெள்ளத்தில் மூழ்கிய பொழுது உலகமே அவர்களுக்கு உதவிக்கொண்டிருக்க "பினாய்ராஜ்" அமீரகம் 700 கோடி கொடுக்க முன்வந்துள்ளது என்று கூறி ப்ளக்ஸ் எல்லாம் அடித்து ஓட்டினார்கள். போதாக்குறைக்கு
பா. ஜ .க மோடி
எங்கே எழுநூறு கோடி
கேரளா பக்கம் வாடி
என்று கவி பாட
இப்பொழுது அமீரகம் எழுநூறா? நாங்க எங்கே சொன்னோம்.........என்று விழிக்க......பினாய் முழி பிதுங்கிக்கொண்டு கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் எழுநூறு கோடி வர கனவு கண்டேன் என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

ரசித்த கவிதை 

ஒரு குழந்தையின் டைரி

வீட்டில் பதார்த்தங்கள் செய்தால்
நண்பர்களுக்கென்றும்
பள்ளியில் மதிய உணவு முட்டையை
தம்பிக்கென்றும்
எடுத்து வைத்துக்கொள்ளும் குழந்தை,
வழியில் வாளிப்பான பிரம்பு கிடைத்தால் மட்டும்
"இது ஆசிரியருக்கென" எடுத்து பத்திரப்படுத்துகிறது.

நன்றி: சாமி கிரிஷ்

சினிமா

சமீபத்திய சென்சேஷன் இன்கெம்......இன்கெம்...இன்கெம்..... காவாலேதான்..

கீதகோவிந்தம் ராஷ்மிகா....அடுத்த  கவர்ச்சிப்புயல் வரும்வரை தெலுகு ரசிகர்களுக்கு இன்கெம்....இன்கெம்....தான்.....


Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

Unknown said...

இரசித்த கவிதை யின் சாமி கிரிஷ் ...வளர்க சாமி...(என் சக ஆசிரிய நண்பர்)

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.