Friday 24 August 2018

அண்ணே முதலீடு, நிவாரணம் என்ன வித்யாசம் அண்ணே?

அண்ணே இந்த முதலீடுன்னா இன்னா நிவாரணமுன்னா என்ன அண்ணே?

ஏன்டா கரிச்சட்டி தலையா? ஏன்டா எங்கிட்ட வந்து அந்தக் கேள்வியை கேக்குறே?

ஐய்ய சும்மா சொல்லுங்க அண்ணே, இந்த மத்திய அரசு புல்லட் ட்ரைனுக்கு காசு வாங்குது, ஆனா கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு காசு வாங்க மாட்டேங்குது அதானே கேட்டேன்

டேய் ஆம்லெட் வாயா, நீ கார்ல போ சொல்ல இந்த சிஃக்னல்ல காரு தொடைக்கிற துணி, ப்ரஷு, பொம்மையெல்லாம் காட்டி விப்பாங்க, அதே காசு கொடுத்து வாங்கினா அது அவன் பொழைப்புக்கு முதலீடு, அதையே பொருளை வாங்காம இந்த பத்து ரூபா வாசிச்சுக்கோன்னு கொடுத்தா அது பிச்சடா கோமுட்டி தலையா.

சரிங்கண்ணே இந்த துபாய் காரன் எழுநூறு கோடி கொடுக்குறாங்களே அதே ஏன் வாங்க மாட்டேங்குறாங்க.

ஏண்டா டேய் என்ன வம்புல மாட்டுறியா? அது சரிடா இது மாதிரி மேட்டரெல்லாம் எங்கேடா பிடிக்கிற?

அது வந்தண்ணே இந்த பேஸ்புக், ட்விட்டர் இதுலே எல்லாம் போடறாங்கண்ணே.

ஏண்டா டபுள் பேரிங் மண்டையா? நீயே தூக்கு சட்டியை  தூக்கிட்டு எந்த கோவிலுல  எத்தனை மணிக்கு உண்டக்கட்டி போடறாங்கன்னு இம்ப்ரமேசன் சப்பளை செய்யுற பேமானி, நீ இதெல்லாம் படிக்குற?  அது சரிடா அதெல்லாம் படிச்சு நீ இன்னாடா பண்ணப்போற?

இல்லிங்கண்ணே சும்மா ஒரு பொது அறிவுக்குத்தான் அண்ணே.

ஆமா அப்படியே இவருக்கு எல்லா அறிவும் ரொம்பி வழியுது பொது அறிவை தேடிவந்துட்டாரு? ஏன்டா ஏன் உயிரை வாங்குற?

இல்லண்ணே சொல்லுங்கண்ணே?

ஏன்டா பேரிக்கா மண்டையா.......அவங்க கொடுக்கிறேன்னு சொன்னதா எங்களுக்கு ஒன்னும் தகவல் இல்லேன்னு லூலூ ஓனரும், அம்பாசிடரும் சொல்லிட்டாங்களே அது உன் நொள்ள கண்ணுக்கு தெரியலையாக்கும்.

இதுல எது உண்மைங்கண்ணே?

டேய் ஹாஃப் பாயில் தலையா உனக்கு எதுக்குடா அந்த வம்பு? டேய் இந்த ஃபேஸ் புக்கு வாயனுங்க, ட்விட்டர் வாயனுக இவனுங்களுக்கு உன் மண்டையில இருக்கிற முடியளவுக்குக் கூட  உள்ளே ஒன்னும் கெடையாது. அடுத்த படிச்சிட்டு எங்கிட்ட வந்து லொள்ளு பண்ற.

ஏன்டா கடைக்கு வந்தமா நாலு சைக்கிள் வீலுக்கு பெண்டு எடுத்தமா? பெட்ரோமாக்ஸ் வாடகைக்கு விட்டமான்னு இருக்கனும். சும்மா வந்து ஃபேஸ்   புக்கு, ட்விட்டருன்னு லந்து பண்ணுற. அது சரி உன்னிய வச்சு நான் எங்க பெட்ரோமேக்ஸ் லைட்ட வாடகைக்கு உடுறது, போடா போய் அந்த பெயிண்டு மணடயனோட  போய் இளநி ஆட்டைய போடு.

போங்கண்ணே நான் இப்போ ரொம்ப திருந்திட்டேண்ணே.

அட இது பாருடா? யாரு சொன்னா?

நாந்தான் சொன்னேன்.

டேய்.......டேய் அந்த பேஸ்புக்கு,  ட்விட்டர் பக்கம் போயிடாதடா அப்புறம் அவனுங்க உன்னிய திட்டறுத்துக்கு எனக்கு புதுசா சஙகீசு, உ.பீஸு, ரரங்க, தொம்பீஸ், டம்ளர் பாய்ஸ், மாங்காஸ்,பஜனை பார்ட்டின்னு புதுசு புதுசா வார்த்தைங்க கொடுப்பானுங்க.

ஐயோ இன்னா சொல்றீங்கண்ணே?

டேய் அதுக்குதாண்டா உனுக்கு அட்வைஸ் பண்ண என்ன மாதிரி ஆள் இந்த ஆல் அழகு ராஜா வேணுங்கறது. டேய் வாழைப்பழ வாயா.....அதுக்குதான்டா இங்கிலீஷுல சொல்லுவாங்க.

IGNORANCE IS BLISS...ன்னு.  அது சரி அது உனக்கு எங்க புரியப்போகுது.....டேய் இதெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கோணுமுடா...கோமுட்டி தலையா.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... ஹா...

வேகநரி said...

இப்போ பலர் வெளிநாட்டு நிவாரண நிதியுதவி பற்றி கேள்விகள் கேட்கிறார்களாம்!
வெளிநாட்டு நிவாரண நிதியுதவியை வேண்டாம் என்கின்ற மத்திய அரசு வெளிநாட்டு முதலீடும் வேண்டாம் என்று சொல்லுமா?
வெளிநாட்டு நிவாரண நிதியுதவியை வேண்டாம் என்கின்ற மத்திய அரசு இந்தியர்கள் வெளிநாட்டில் வேலைசெய்து சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லுமா?

Rajendra said...

@வேகநரி
நீங்க கூடவா இப்படி பகுத்தறிவு இல்லாம பேசுறீங்க
.
இடர்கால நிதிஉதவி வேண்டாம் என்று கொள்கையை கொண்டு வந்தது உங்கள் அபிமான மன்மோகன் அரசுதான்
அப்போ திமுக கூடடணி
.
இடர்கால நிதிஉதவி என்பது ஒரு வகை பணக்கார பிச்சை
முதலீடு என்பது என்ன என்பது தங்களுக்கு தெரியாதா ?
வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தன் குடும்பத்துக்கு அனுப்புவதையெல்லாம் ஒப்பிடுகிண்றீர்களே உங்கள் தலைக்குள் என்னதான் இருக்கின்றது ?

வேகநரி said...

//உங்கள் தலைக்குள் என்னதான் இருக்கின்றது ?//
என் தலைக்குள் என்ன இருக்கிறது என்பது இருக்கட்டும் வெளிநாட்டு முதலீட்டுடனும், வெளிநாட்டில் வேலைசெய்து சம்பாதிக்கும் பணத்துடனும், வெளிநாடு இலவசமாக போடும் பணத்தை ஒப்பிட்டு பலர் கோள்விகள் எல்லாம் கேட்கிறார்களே என்று நான் சொன்னதை உங்க தலைக்குள் இருப்பதை வைத்து உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே!

Rajendra said...

@வேகநரி
எவனோ பேசுவதையெல்லாம் எதுக்கு இங்கே வா...தி எடுக்குறீங்க
இந்த பதிவை ஒட்டி பேசுங்க
.
அதுக்கு முதல்
உங்க அபிமான காங்கி, டிமுக கும்பல் கொண்டு வந்த அந்த வெளிநாட்டு உதவி பெற கூடாது என்ற கொள்கை பற்றி பேசுங்க

வேகநரி said...

அநாமதேயம் எடுக்கும் வாந்தியை எல்லாம் கருத்துக்கள் என்று கும்மாச்சி வெளியிடுவாரோ?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.