Friday 10 August 2018

மறைந்த சூரியன்

கலைஞரின் மரணம் தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒரு பேரிழப்பு என்றால் அது மிகையாகாது. கடந்த என்பது வருடங்களாக பொது சேவையிலும், கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் அரசியலிலும் கோலோச்சியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை தேர்ந்தடுக்கப்பட்டவர், சட்டசபை தேர்தல்களில்  தோல்வியையே சந்திக்காதவர் என்ற பெருமைக்குரியவர். தமிழக அரசியலில் கலைஞரின் பங்கு அளப்பரியது, அது பதவியிலிருந்தாலும் சரி இல்லையென்றாலும் அவரின் இருப்பு தமிழகத்தில் எப்பொழுதும் உணரப்பட்டிருந்தது. ஒரு பெரிய கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு அவ்வளவு எளிதல்ல, எல்லாவற்றையும் அவர் திறமையாக செய்தார். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.

கடந்த சில வருடங்களில் தமிழகம் இரண்டு பெரிய ஆளுமையை இழந்திருக்கிறது. இனி தமிழக அரசியல் இந்த இரண்டு தலைவர்கள் இல்லாமல் எந்த பாதையில் செல்லும் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கலைஞரின் மரணத்திற்குப் பின் தி.மு.க வின் செயல்பாடு எப்படி இருக்கும்?, கட்சியின் நிலைமை என்னவாகும்? என்பதெல்லாம் காலத்தின் கையில் உள்ளது. அவரின் உண்மையான தொண்டர்கள் அதை செவ்வனே செய்வார்கள் என்று நம்புவோம்.

அவரின் மரணத்திற்கு பின் சமூக ஊடகங்களில் நடந்த செயல்கள் சத்தியமாக அவருக்கு புகழ் சேர்க்காது. அவரது உடல் அடக்கம் செய்யவேண்டிய இடத்தை நிர்ணயிப்பதில் நடந்த குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதை வைத்து செய்யப்பட்ட கேலிகளும், ஜாதி விரோதங்களும் தமிழர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. ஆனால் இங்கு யார் தமிழன் என்பதிலே ஒரு பெரிய குழப்பமே இருக்கும் பொழுது ஒற்றுமையை எதிர்பார்ப்பது அறிவீனம்.

கலைஞர் தனது மரணத்தில் தமிழ் சமுதாயத்திற்கு எத்தனையோ செய்திகளையும் சிந்தனைகளையும் உணர்த்திவிட்டு போயிருக்கிறார். ஆனால் நமது சமுதாயம் அதை சிலாகிப்பார்கள் பின்பற்ற மாட்டார்கள்.


Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

Anonymous said...

Last line superb...

வேகநரி said...

நல்லதொரு பதிவு.

Anonymous said...

You made a number of nice points there. I did a search on the topic and found the majority of people
will go along with with your blog.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.