Monday 20 August 2018

அவரு பெரிய மனுஷன்!!!!

தலைவர் இறந்துவிட்டார். கல்யாண சாவுதான். பிள்ளைகள், பெண்கள்,  பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேத்திகள் மாமன் மச்சான் மருமவன்கள் என்று எல்லோர் பேரிலும் சொத்து சேர்க்க வைத்து தனக்கு என்று ஒன்றும் இல்லாது ஆறடி நிலத்திற்கு நாயடி பேயடி பட்டு மண்ணுடன் மண்ணாக ஐக்கியமாகிவிட்டார்.

அவருடைய வாழ்க்கை வரலாறு அவரது கட்சி சார்ந்த தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவரது பழைய பேட்டி ஒன்று நினைவிற்கு வந்தது.

பத்து இருபது வருடங்களுக்கு முன் அவர் பலகாலம் வனவாசத்திற்கு பின் கோட்டையில் (கோ)கொடியை நாட்டினார். அப்பொழுது பிரபல வார பத்திரிகை ஒன்று அவரின் அன்றாட நிகழ்வுகளை அவரிடமிருந்து பேட்டியாக பெற்று பதிவிட்டு இருந்தார்கள்.

அவர் முதல் நாள் இரவு துணைவியார் வீட்டில் படுக்க செல்வாராம், காலையில் எழுந்தவுடன் கட்சி அலுவலகத்தில் ஒரு மணி நேரம் நடை பயிற்சி. பின்னர் மனைவியின் வீட்டில் இட்லி மீன் கொழம்பு சகிதம் நாஸ்தா. பிறகு கோட்டைக்கு சென்று கோப்புகளை பார்வையிடுவார். மதியம் துணைவியார் வீட்டில் அறுசுவை மதிய உணவு. மறுபடியும் கோட்டையில் குப்பை கொட்டுவது. இரவு உணவிற்கு மனைவி கையால் அறுசுவை. அடுத்த நாள் காலையில் துணைவியார் வீட்டில் நாஸ்தா என்று ஒரு அட்டவணை போட்டு ஓயாமல் உழைத்து கூவம் நதிக்கரையில் ஓய்வெடுக்கும் அளவிற்கு வாழ்ந்திருக்கிறார்.

ஏனோ இந்த பேட்டி நினைவிற்கு வர மனைவியிடம் இதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

அவர் பெரிய மனுஷன், ஒரே பெண்ணை தொந்தரவு செய்யாமல் எப்படி அட்டவணை போட்டு வாழ்ந்திருக்கிறார். யோவ் நீயும் இருக்கியே, எப்ப பாரு ஒரே ஆளையே ரப்ச்சர் பண்ணிக்கினு...........நம்மகிட்ட ஒரு ரிவர்ஸ் ஸ்விங்...

அடியே அடியே இப்ப சொல்லுவையே!!! இதையே ஒரு முப்பது வருடம் முன்பு சொல்லியிருந்தால்..............நானும் துணைவி, இறைவி, எடுப்பு, தொடுப்பு என்று வேலைக்கு  ஒரு வீட்டில் உண்டு கொழுத்திருப்பேன்.

இந்த தங்கமனிகளை அந்த பிரம்மனே வந்தாலும்.............ஹூஹூம் வேலைக்கு ஆவாது.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

வருண் said...

Seems like you had been hurt by late MK pretty badly. Your last 6 articles are just about him- with lots of NONSENSE. YOUR HATRED seems worse than his dead body. As SO MUCH BULLSHIT coming out of you, it stinks so bad and it might kill you unless you find a way to get over with it.

ராஜி said...

இப்பயும் ஒன்னும் கெட்டு போகலை. இணைவி துணைவியை தேடிக்கலாம்

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா....

Bhanumathy Venkateswaran said...

நாசூக்காக கலாய்த்திருக்கிறீர்கள். நன்று.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.