Monday 31 March 2014

நான் ஒளரல ஓரளலங்கண்ணா...சொல்றாங்க

ராஜபக்சேவிற்கு தைர்யம் இருந்தால் எங்கள் அம்மாமுன்னே வந்து நிற்க சொல்லுங்க...........அதே மாதிரி மோடிக்கும் சொல்றேன், எங்கம்மாதான் பிரதமர் அதுல எதாவது வில்லங்கத்துக்கு வந்தே மந்திரிகளையே எந்திரின்னு சொல்ற எங்கம்மா உன்னையும் கட்சியை விட்டு நீக்கிடுவார்கள் ஜாக்கிரதை...................அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் சிங்கமுத்து.

அன்பான மீனவ நண்பர்களே, நீங்க படகுல போய் மீன் பிடிக்கிறதுனாலேதானே சிலோன் ஆர்மிக்காரன் உங்களை அடிக்கிறான் அதுக்கும் எங்கம்மா ஒரு திட்டம் வச்சிருக்காங்க. படகுக்கு பதிலா உங்களுக்கு ஹெலிகாப்டர் தரப்போறாங்க.  எங்கள் அம்மா வெற்றி பெற்றால் மீனவர்கள் இனி ஹெலிகாப்டரில் சென்று மீன் பிடிக்கலாம்.....அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை  விந்தியா.

நான் இன்னும் தி.மு.க. காரன்தான்.........இந்த தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்து நான்காவது இடத்திற்கு தள்ள என்னுடைய தொண்டர்கள் எல்லோரும் உழைக்கவேண்டும்.....................மு.க.அழகிரி.

நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். அது அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் அல்லது மகனாக இருந்தாலும் கழகம் மன்னிக்காது. எனக்கு கொள்கைதான் முக்கியம் குழந்தை குட்டிகள் அல்ல................சிந்தாதிரிப்பேட்டை கூட்டத்தில் கலைஞர்.

ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த ஆடு, மாடுகள் குட்டிகள் போடும். அதனால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா? ரிப்பேர் தான் ஆகும்...........தேர்தல் பிரச்சாரத்தில் ராமராஜன் 
காங்கிரஸ் ஆதரவு என்று கருணாநிதி முன்பே சொல்லியிருந்தால் தேர்தல் களம் மாறியிருக்கும்.................ப. சிதம்பரம்.

ஜெயலலிதா அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை பாட வேண்டாம்: ப.சிதம்பரம் #எலக்சன்ல நிற்க பயந்துட்டு போற உங்களப் பத்தி அவங்க பாடலை..பயப்படாதீக.----------ட்விட்டரில்  படித்தது.

இன்னும் மூன்று மாதத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிடும், எங்களுக்கு ஒட்டு போட்டால் இந்தியா ஒளிரும், தமிழகம் மிளிரும் செய்வீர்களா? செய்வீர்களா?--------------ஜெயலலிதா.
தமிழகத்தில் காங்கிரஸ் காலூன்ற ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது..........தமிழககாங்கிரஸ் தல......ஞானதேசிகன்.
நம்ம கேப்டனையே மிஞ்சுடுவாய்ங்கப்போல.........
Follow kummachi on Twitter

Post Comment

Saturday 29 March 2014

என் ஓட்டு பத்தாயிரம் ரூபாய்..............

ஒரு ஓட்டுக்கு ஒவ்வொரு கட்சியும் மூவாயிரம் ரூபாய் வரை கொடுப்பதாக செய்திகள் வருகின்றன.

அண்ணன் பெயரை வைத்துள்ள கட்சிதான் அதிகமாம். கூடவே காலையில் பால் பாகெட் தொடங்கி புளியோதரை, பொங்கல், பிரியாணி க்வாட்டர் முதலியவை கொசுறாம்.

அந்த குடும்ப கட்சியும் சளைத்தவர்கள் இல்லையாம், தொகுதி அறிந்த பிச்சை போடுகிறார்களாம்.

போகும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆள் சேர்ப்பவர்கள் எல்லாம் தனியாக கவனிக்கப்படுகிறார்களாம்.

ஓட்டுக்கு பிச்சை எடுத்தக் காலம் போக இப்பொழுது பிச்சை போடும் காலமாகிவிட்டது.

நாம் ஒவ்வொருவருக்கும் ஜனநாயகக் கடமை உள்ளது. நாட்டின்  தலைவிதியை திருத்தி எழுதப் போகிற மிக முக்கிய தேர்தல் இது.

மேலும் தமிழகம் முதல் முறையாக ஐந்து முனை போட்டியை சந்திக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் தமிழகத்தின் பிரதிநிதிகள் தமிழக நலனுக்காக போராடுவார்கள் என்ற நினைப்பும் இருக்கிறது.

என்னுடைய ஓட்டை நான் மூவாயிரம்  ரூபாய்க்கு  விற்கமாட்டேன்.

ஒரு ரூபாய் சம்பளக்காரருக்கு 1996ல் சொத்துகுவிப்பு வழக்கு தொடங்கப்பட்ட பொது சொத்தின் மதிப்பு 66 கோடியாம். இப்பொழுது 6000 கோடியாம்.

கட்டிய கோவணம் மற்றும் மஞ்சள் பையுடன் வந்தவரின் குடும்ப சொத்து கணக்கில் அடங்காதவை, அதுவும் கிட்டத்தட்ட அதே மதிப்பிற்கு வரும் போல் இருக்கிறது.


என் ஓட்டு அவ்வளவு மலிந்தது அல்ல.

மேலும் நமக்கு உள்ள ஜனநாயகக் கடமை குறுக்கே வந்து கோரமுகம் காட்டுகிறது.

இதனால் நான் முடிவா சொல்றேன் என் வாக்கை வெறும் மூவாயிரம் ரூபாய்க்கு விற்று என் மானத்தை இழக்கமாட்டேன்...........

க்வாட்டர் முப்பது ரூபாய் விற்ற காலம் போய்  இப்போ கேட்டா 90 ரூபாய் சொல்றான்........

கட்டுபடி ஆகமாட்டேங்குது.................

முடிவா சொல்றேன் பத்தாயிரம் கொடுக்கிறதா இருந்தால் இந்தப்பக்கம் வாங்க இல்லை என்றால் அப்படியே காணாமல் போயிடுங்க சொல்லிப்புட்டேன்..........


ஆனால் நாங்க நல்லவனுங்க.................இது வரை தேர்தலில் நிற்காமல் முதன் முறையாக நிற்கும்  "நோட்டா" பயலுக்கு கொஞ்சம் சலுகை உண்டு.

அவருக்கு 40% ரிபேட் கொடுக்கிறேன்............அவருக்கு ஆறாயிரம் ரூபாய்தான்.........

இல்லை என்றால் முடிவா சொல்லிட்டேன்..............பத்தாயிரம்தான்..........


Follow kummachi on Twitter

Post Comment

Friday 28 March 2014

தொண்டு செய்யும் தொண்டா..........கவுஜ

தலைமைக்கு சொம்படிப்பாய்
தலைவனு(வி)க்கு தீக்குளிப்பாய்
கார் கதவை திறந்து வைப்பாய்
காலினிலே விழுந்திடுவாய்
கண்ணசைவில் கத்தி எடுப்பாய்
காசுக்கு கழுத்தறுப்பாய்
சைக்கிள் செயின் சுற்றிடுவாய்
சிறையினிலே அடைபடுவாய்
சுவரொட்டி வைத்திடுவாய்
வீடதனை துறந்திடுவாய்
பெண்டாட்டியை மறந்திடுவாய்
குழந்தைகளை குமுறிடுவாய்
பெற்றவர்களை பிழிந்தெடுப்பாய்
உற்றவர்களை துறந்திடுவாய்
ஓட்டுக்கு கூவிடுவாய்
வெயிலிலே காய்ந்திடுவாய்
க்வாட்டருக்கு கால் பிடிப்பாய்
தோரணங்கள் கட்டிடுவாய்
தொண்டனென்று பேரேடுப்பாய்
தவறாமல் சீட் கேட்பாய்
கிடைக்காமல் புலம்பிடுவாய்
தலைவனின் சந்ததிக்கு
தலைமேல் குடை பிடிப்பாய்
தொண்டு செய்ய பிறவி எடுத்தாய்
தொண்டனாகவே இறந்திடுவாய்


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 27 March 2014

டீ வித் முனியம்மா---------பார்ட் 3

யோவ் மீச அல்லாருக்கும் டீ போடு, எனிக்கி ரெண்டு மசால்வட குடு...

இன்னா முனியம்மாஅல்லாருக்கும் டீவாங்கித்தார, இன்னா விசயம் எலிக்சன் பார்டி துட்டு குடுத்தானுன்களா..........

இன்னா செல்வம் இன்னா உடம்பு எப்டி கீது, பூ மொயம் போடோ சொல்லவே இயுத்து பிச்சு அறுக்கற ஆளு நானில்ல, கட்சிக்காரன் துட்டையா தொடப்போறேன்.

அல்லா நாளும் பாய்தான் டீ வங்கித்தராறு, அத்தோ ஓசியில குடிச்ச உனுக்கு ஒரு நாளைக்கி வாங்கித்தர தெரியுதாடா கய்த, எண்ணிய கேக்குறான் பாரு.......

சரி மன்ச்சிக்க, இன்னா அல்லா தொகுதியிலும் துட்டு பூந்து வெள்ளாடுதாமே. எதுனா நூசு போட்டுக்கிறான்.

இந்த மொற அஞ்சு கட்சிங்கோ அடிசிக்கிறதால செமையா துட்ட அள்ளிவுடுறாங்களாம்.

பொம்பளைங்க வூட்ல வாச தெளிக்க சொல்ல கவுருல வச்சி கொடுக்குறாங்களாம். மூணு பெரிய நோட்டு கூட கீதாம். அது கண்டி இல்ல காலிலேயே பால் பாக்கிட்டு கொடுக்குறாங்களாம், பிரியாணியாம், புளிசோறாம், பொங்குலு  அந்த கர்மம் க்வாட்டறு கூட குடுக்குறானுங்க பேமானிங்க.............

ஐய பொம்பளையான்டையா?----------செல்வம்

போலீசு இன்னா பண்ணுதாம்...........

அவனுங்க சந்துல சிந்து பாடுரானுங்கோ.தோ ரெண்டு இனிஸ்பெக்டருங்கோ முப்பத்தஞ்சு லட்சம் புட்சு, 27 லச்சத்த மேலதிகாரிக்கு சொல்லிட்டு 8 லச்சத்த லவுட்டிகிரானுங்க............அப்பால பார்ட்டி ஆளுங்க சொல்லப்போக இப்போ ரெண்டு இனிஸ்பெக்டருங்களும் கம்பி என்னினுகீரானுங்க.

முனியம்மா அயகிரி மேட்டரு இன்னா?-----------பாணலிங்கம்

ஐய அந்தாளு கொடச்சல் தாளாம கலீனறு கச்சிய வுட்டு அம்பேலாக்கிட்டாறு.

கண்ணு புள்ச்சுது, காது கடிச்சுது சொல்லி கூட்டிக்குவாருன்னு அல்லாம் பாத்துகினு இருந்தாங்க---------கரீம் பாய்.

பாய் அவுரு எம்மாம் நேரந்தா கம்முன்னு இருப்பாரு, இந்தாளு வை.கோ வ  பாக்குறாரு, கேசு போடுவேங்குராறு, கலீஞரு மெர்சல் ஆயிட்டாரு. அத்தான் அவுற அபீட் ஆக்கிட்டாரு.நன்னி மறந்தவன்அண்ணாத்தைய இருந்தாலும் உடமாட்டேங்குராறு.

அம்மா மேட்டரு கீதா----------செல்வம்

அம்மா சொத்த அவுத்து வுட்டுகிராறு அரசு வக்கீலு, சொம்மா பறந்து பறந்து வளைச்சுகிறாங்க, இம்மாம் சொத்த வச்சிகினு என்ன செய்வாங்களோ?

சரி முனியம்மா அந்த பிளேனு மேட்டரு என்னா?---------நாடாரு

அது மை போட்டு உன் கண் மையா?என் கண்ணு மையான்னேல்லாம் போட்டு பாத்துகிரானுங்க, ஒன்நியம் கெடக்கில. அந்த டைவரு பொஞ்சாதியோட சண்ட போட்டுகினு கூத்தியா வச்சிகிறான், பிளேன ஓட்ட சொல்ல கூத்தியா கொடச்சாலு குடுத்துகீது.............அந்த காண்டுல பிளேன கொண்டாந்து கடலுல சொருவிட்டான்........போல.

சரி முனியம்மா சினிமா நூசு போட்டுக்கிறான்..............

மவனே உனுக்கு தலுக்கு படம் பாக்கணும் அதானே...........இந்தா பாத்துக்க.........ஒரு நாளு உனுக்குகீது அஞ்சலையாண்ட.....சொம்மா டப்பா டேன்சு ஆடிடும்...... 
 

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 26 March 2014

கலக்கல் காக்டெயில்-140

அழகிரி நீக்கம் 

தி.மு.க கட்சித்தலைமை இன்று அஞ்சாநெஞ்சன் அழகிரியை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கியிருக்கிறது. முதலில் தாற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி எல்லா எதிர்கட்சி தலைவர்களையும் சந்தித்து தி.மு.க வின் தோல்விக்கு அச்சாரம் போட்டுக்கொண்டிருந்தார். கட்சி தலைமை இதற்குமேல் பொறுமையாக இருக்க முடியாது என்று ஒரு முடிவு எடுத்துவிட்டது.

தளபதிக்கு இருந்த ஒரே எதிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதை பத்து வருடம் முன்பே செய்திருந்தால் கட்சியின் மானம் இவ்வளவு தூரம் கப்பலேறியிருக்காது. ஸ்டாலினுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இப்பொழுது ஒன்று கூடியிருக்கிறார்கள், இனி இந்த தேர்தலில் இதன் தாக்கம் தெரியும்.

 அம்மா சொத்து............ஐயோ அம்மம்மா...........

பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கில்  அரசு வழக்கறிஞர் பவானி சிங் அம்மாவின் சொத்துக்களை பட்டியலிட்டு கோர்ட்டிடம் சமர்ப்பித்திருக்கிறார்.....அதன் படி.

வாலாஜாபாத் ------------------------600 ஏக்கர்
சிறுதாவூர்-------------------------------25  ஏக்கர்
நீலாங்கரை ---------------------------2     ஏக்கர்
கொடநாடு -----------------------------800 ஏக்கர்
காஞ்சிபுரம் ----------------------------200 ஏக்கர்
கன்னியாகுமரி ----------------------1900 ஏக்கர்
திருவைகுண்டம் --------------------200 ஏக்கர்
மற்றும் ஐதராபாத் திராட்சைத்தோட்டம்.................

அம்மா ஆட்சியில் 19991-1996 ஹெலிகாப்டரில் பறந்து பறந்து வாங்கிய சொத்துக்களாம்.............

மக்களுக்கு தெரியும் இரண்டு கட்சிகளுமே  சுரண்டுகிறார்கள் என்று இருந்தாலும் அவர்கள் பெருந்தன்மையானவர்கள், மாறி மாறி குத்தி இரண்டு பேருக்குமே வாய்ப்பளிப்பார்கள்.

க்வார்ட்டரும் கோழிக்கறியும் கிடைத்தால் நீங்க எங்க சொத்து வாங்கினால் எங்களுக்கு என்ன?

ரசித்த கவிதை

வாய் பிளந்து தூங்குங்கள் 

பேசுகிறார்கள்
பேசுகிறார்கள்
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பேரம் இன்னும் படியவில்லை

பேரம் எப்போது படியும்?
பேச்சு எப்போது முடியும்?
தெரியாது அவர்களுக்கே!

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

யாருக்கு எத்தனை
சீட் பிரித்தால்
மக்களை காப்பாற்றமுடியும் என்று
கணக்குப் போடுகிறார்கள்

எனக்கு இத்தனை
சீட் இல்லை என்றால்
இந்த மக்களை
எப்படி காப்பாற்றுவேன் என்று
கலக்கத்தில் வேறு இருக்கிறார்கள்

பின்பு, சகலமும் மறந்து
சீட் பிரிப்பதில்
அக்கறையோடு இருக்கிறார்கள்

சொர்க்கலோகம்
பக்கத்தில் இருக்கிறது
மனிதர்களே
வாய் பிளந்து தூங்குங்கள்!------------------கனவுதாசன்

கீச்சு கீச்சுன்னு கீச்சுறாய்ங்க 

ஹலோ தேர்தல் ஆணையமா,எல்லா பயல்ட்டையும் காசு வாங்கியாச்சு,இந்த நோட்டா பய மட்டும்தான் பாக்கி!எவ்ளோ தருவான்னு கேட்டு சொல்லுங்க!----------உடன்பிறப்பே

நான் திமுககாரன்,அறிவாலயம் எங்கள் சொத்து -அழகிரி.#அப்பா போகும்போது அறிவாலயம் யாருக்குன்னு உயில் எழுதி வெச்சுட்டு போவாரு.அப்போ பாத்துக்கலாம்------------சுபாஷ்ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 25 March 2014

ஏன் பிறந்தாய் மகனே...............கலைஞரின் சோக கீதம்

கலைஞரின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ற சோககீதம், பாகப்பிரிவினை படப்பாடல் "ஏன் பிறந்தாய் மகனே"மெட்டில் பாடிக்கொ(ல்ல)ள்ளவும்.

ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு தொல்லை என்று
எதிர் கட்சிகள் பல  இருக்க
இங்கு வந்து ஏன் சேர்ந்தாய்
அஞ்சா நெஞ்சனே....

வாரிசுகள் இல்லாத
கட்சி தொண்டர்கள்
கூட்டத்தில் இத்தனைக்காலம்
நானேதான் தலைவனடா
மத்தியிலும் பதவி இல்லை
மாநிலத்தில் புடுங்க வில்லை
என்றென்றும் எனக்கே
ஆப்புகள் அடா...........

ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............

கனிமொழி களிதின்ன
கட்சியிலே சேர்ந்தவளாம்.
மத்தியிலே அமைச்சராகி
மானமிழந்து நின்றவனே
கட்சியில் கட்டுப்பாடு இல்லை
கட்சியும் என் கையிலில்லை  
முப்பது மாவட்டமும்
ஸ்டாலினின்  கையிலடா........

ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு தொல்லை என்று
எதிர் கட்சிகள் பல இருக்க
இங்கு வந்து ஏன் சேர்ந்தாய்
செல்ல மகனே................

ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............


Follow kummachi on Twitter

Post Comment

Monday 24 March 2014

டீ வித் முனியம்மா-----------பார்ட் 2

இன்னா மீச எங்கே  அல்லாரும் வரல............

இன்னா முனியம்மா நேரத்தே நீ வன்னு..........

அட இன்னா மீச வன்னு பன்னுன்னு.......தமியி நாட்டுல இம்மாம் நாளாகீற இன்னியும் தமியி வரல உனுக்கு.......

டேய் பயம் இன்னடா லேட்டு .......

இன்ணா முனியம்மா நீ மொதலா வந்துட்டு சும்மா குரல் உட்டுகினு கீற.......

தொ பாய், பாணலிங்கம், நாடாறு  அல்லாரும் வந்துகினு கீறாங்க..........

முனியம்மா சட்டு புட்டுன்னு இன்னா நூசு படி............

இன்னா நூசு வயக்கமா வர எலிக்சன் நூசுதான்.............இன்னா பாயி, நாடாறு, லிங்கன்னே இன்னா லேட்டா வரீங்க........எங்க லோகுப்பயல காணோம்.....சரக்கு வுட்டு மட்டை ஆயிட்டானா?

சரி இன்னிய நூஸ லுக்கு வுடலாம்.........

அயகிரி இன்னா வை.கோவை சந்திச்சுகிராறு...........எப்படியும் அவுரு நைனா கச்சிய ஒரு வழி செய்யாம வுடமாட்டாராங்காட்டியும்.......இன்னா அம்மாவுக்குதான் கெலிப்பு..........

அம்மா இன்னா பறந்து பறந்து போகுது, சூப்பு குடிக்குது, மக்களை நல்லா உசுப்புது, செய்வீங்களா செய்வீங்களா? இன்னு கேக்குதே இன்னா செய்ய சொல்லுது..........ஒன்னியும்புரில..........

முனிம்மா இன்னா நக்மா படம் போட்டுக்கிறான் இன்னா நூஸு அத்தப்படி......

டேய் பயம் பொம்பள படத்த போட்டா உனுக்கு அது நூஸா..........மவன அஞ்சலையாண்ட கீது பாரு உனுக்கு........

நக்மா பிரச்சாரத்துக்கு போவ சொல்ல எவனோ கை வச்சிகிறான்...........அஹான் அது எப்பவும் தொரந்துகினு பப்பரப்பென்னு தான் போவும்............இவனுக அல்லாருக்கும் வாத்தியாரு பயக்கட பாண்டிதான் போல......

அது யாரு பயக்கட பாண்டி புதுசா கட போட்டுகிறானா நமக்கு எதிர--------செல்வம்.

டேய் போடா டோமரு அவருதாண்ட மொதலா கைபோட்டது..........துரைமுருகனுக்கு முன்னால.........இது தெரியாம நூசு கேக்க வந்துட்ட............

நம்ம கேப்டனு ஏன்னா சொல்றாரு...........

அவரு இந்த முற வேப்பாளறு பேரெல்லாம் சொல்லாமலே பிரச்சாரம் செஞ்சுகின்னு கீறாரு..........சும்மா புல் மப்புல தொ நிக்கிறான் பாரு இவனுக்கு ஒட்டு போடுங்க மக்கழே.........அப்படின்னு சொல்லிகிறாரு, பேர சொன்னா பாஸ்கரு பாண்டின்னு குயப்பம், தலீல தட்டனும்...........அதான் புச்சா ட்ரிக் வச்சிக்ராறு............

ஆமா நம்ம அம்மா பிரதமருன்னு சொல்றாங்களே அவுக இன்ன எளிக்சணுல நிக்குறாங்களா?

அடப்போ பாயி.............அம்மா, மமுதா, ஆனை சின்னத்த வச்சிகினு அதே மாதிரியே இறுப்பாங்களே மாயாவதி அவுக கூடத்தான் பிரதமருன்னு சொல்லிகினு எளிக்சணுல நிக்காமையே கீறாங்க..........இதெல்லாம் ஒரு கேள்வியா?

சரி வுடு நமக்கு வேல கீது..........

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 18 March 2014

கலக்கல் காக்டெயில்-139

கெளம்பிட்டாங்கையா 

தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரு வழியாக இருக்கிற நாற்பதையும் கூறு போட்டு குழப்பி கூட்டணி அமைத்து பிரசாரத்துக்கு கிளம்பிவிட்டார்கள். சத்தியமூர்த்தி பவன் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது. எல்லா பெரிய தலைகளும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க, தலைமை பலி ஆடை தேடிக்கொண்டிருக்கிறது.

காங்கிரசிற்கு இப்படி ஒரு கேவலமான நிலைமை இது வரை வந்ததில்லை. போன ஆட்சியில் இத்தாலி சனியனின் வழிகாட்டலில் செய்த அட்டகாசங்களுக்கு இப்பொழுது அறுவடை செய்கிறார்கள். இதுவரை பிரதமர் பதவியில் அதிக ஆண்டுகாலம் இருந்த ஒரு பெருமையை தவிர மண்ணு மோகன் சிங் ஒன்றும் சாதிக்கவில்லை. சிவகங்கை சீமான் போட்டியிடாமல் நழுவப்பார்க்கிறார்.

சத்தியமூர்த்தி பவன் பக்கம் போகவே மக்களுக்கு பயமாயிருக்கிறது.

பா.ஜ.க ஒரு உதவாக்கரை கூட்டணி அமைத்து முழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது.  தி.மு.க பேருக்கு ஒரு கூட்டணி வைத்து சில சீட்டுகளை கைப்பற்றக்கூடிய சாத்தியமிருக்கிறது.

மொத்ததத்தில் அம்மாவுக்கு கொண்டாட்டம் தான்.

விமானத்தைக் காணோம்.........

வடிவேலு கிணற்றைப் போல இந்த மலேசிய விமானம் மாயமாய் மறைந்திருக்கிறது. மலேசிய அரசு விரக்தியில் ஜோசியம், சூனியம், மை வைத்துப்பார்த்தும் இது வரை ஒன்றும் பயனில்லை. இப்பொழுது இந்தியப் பெருங்கடலில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சைனா ஒரு பக்கம் மலாகா ஜலசந்தியில் தேடிக்கொண்டிருக்கிறது.

விமானத்தின் ட்ரான்ஸ்பாண்டர் திட்டமிட்டே துண்டிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

விமானத்திலிருந்து "ஹான்ட்ஷேக்" சிக்னல் சாட்டிலைட் மூலமாக வந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா சொல்கிறது.

விமானம் எங்கோ பத்திரமாக இருக்கிறது, எங்கு என்றுதான் தெரியவில்லை?

ரசித்த கவிதை

கடவுச்சீட்டு

எதிர்கால தூக்கங்களையும்,
சந்தோசங்களை, தொலைத்து
உறவுகளின் சுமை களைய
கடவுச்சீட்டும் பெற்றேன்...

தங்கையின் திருமணமும், தந்தை
கடனும், பொருளாதாரமுமே
என்னை அயல் தேசத்துக்கு
அனுப்பி வைத்தது...

ஏதோ தைரியத்தில் கடல்
தாண்டியும் வந்தேன்
கண்கள் நிறைய வாழ்க்கை
கனவுகளை சுமந்தபடி...

என்னுடன் படித்த பாடசாலை
நண்பர்கள், உறவுகள்
அனைத்தையும் ஒரு விமான
பயணத்திலே இழந்தேன்...

தாயின் அழைப்புகள், ஸ்பரிசங்களில்
எழுந்த நாட்கள் தொலைந்து
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் தொடங்கிவிட்டது...

இதயம் தாண்டி பழகிய உறவுகள்,
நண்பர்களின் நினைவுகள் எல்லாம்
ஒரு கடலை தாண்டிய கண்ணீரிலே
கரைந்து மறைந்து விடுகிறது...

விடுமுறை தினங்களில் வீதியோரம்
விளையாடி மகிழ்ந்த நினைவையும்
நண்பர்களையும் நினைக்கும் போதே
கண்ணீர் விழிகளை நனைக்கின்றது...

நெருங்கிய உறவினதும், நண்பரினதும்
திருமணத்துக்கான அழைப்பிதலுக்காக
ஒரே ஒரு தொலைபேசி ஊடான
வாழ்த்துடனே முடிவடைகிறது உறவு...

தொலைபேசி அழைப்புகளிலும்
கடிதங்களிலும் வருகின்ற
உறவினதும், நண்பனினதும்
மரண செய்திகளுக்கு...

கண்ணீர் துளிகள் மட்டுமே
ஆறுதல் தருகின்றது...
எவ்வளவு தான் சம்பாதித்தும்
நாங்கள் அயல் தேசத்து ஏழைகளே...--------------எம்.எ. அஷ்ரப் ஹான்

ஜொள்ளு Follow kummachi on Twitter

Post Comment

Saturday 15 March 2014

டீ வித் முனியம்மா-------பார்ட் 1

கொண்டித்தோப்பில் அந்த நான்கு சாலையும் சந்திக்குமிடம், மேக்கால செல்வம் பயக்கடை, நாடார் மளிகைக்கடை தாண்டி ஓரமா கீதே அதான் நம்ம அப்புகுட்டன் நாயரின் டீக்கடை, அதன் வாசலில் பெஞ்ச் போட்டு இருக்கே அதில் அமர்ந்திருப்பவர்கள்.................
கரீம் பாய் எதிர் கடையில் மட்டன் ஸ்டால் வச்சிகிராறு..
அப்பால பாணலிங்கம் பேப்பர் கட  ஓனரு கிறாரு..
பொட்டிக்கடை  லோகுவும் நாயை இட்டாந்து  குந்திகினாரு.
மளிகைக்கடை நாடார் இன்னும் வரல.
செல்வம் பயக்கடையை வுட்டு பெஞ்சில குந்திகிராறு. வியாவரத்தை தேன்மொயி பாத்துகிணுது.......

கரீம்பாய்: யோவ் மீச (நாயரின் செல்லப் பெயர்) எங்க  முனியம்மாவைக் காணோம்.

வரசமயமாயீ............நாயர்

முனியம்மா கையில் பேப்பருடன்..............யோவ் மீச ஸ்டாங்கா ஒரு டீ,.........கடை பையனிடம் டேய் கொமாரு............சேர் போடுடா..........

செல்வம்: இன்னா மினிம்மா இன்னா நூசு........

ஐயே  இருடா.........டீ வர்ட்டும்.
பாய் டீ சொல்லல, செல்வம் இந்நாட வயக்கம் போல சைனா டீயா...........

முனியம்மா பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பிக்கிறாள்........

கேப்டன் பிரச்சாரத்தில் குதித்தார்..........தே மு.தி. க. வின் தலிவரு இன்று திருவள்ளூரில் பிரச்சாரத்தை தொடங்கினார்........முன்னதாக அவரை தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.......

ஐயே மீட்டிங்குல இன்னா பேசினாரு அத்த போட்டுகிறானா?

இரு நாடாரே இன்னா அவசரம், படிக்கிறன் கேளு....மக்கழே எங்களுக்கு ஒரு சான்சு கொடுங்க.......அந்தம்மா தமிழக மிளிருதுங்குறாங்க..........எங்க மிரளுது எங்க வூட்டுலேயே கரண்டு இல்ல........அஹாங்.........தோடா

போலிசு சரியில்ல..........லஞ்சம் வாங்குறான்........நான் முன்ன பின்னதான் பேசுவேன் நீங்கதான் மக்கழே எல்லாத்தையும் ஓட்ட வச்சுக்கணும்.

இன்னா இவரு காலையிலேயே மப்பு ஆயிட்டாரா? இவரு என்னிக்கி சரியா பேசிகிராறு.........இவரு இன்னா தொகுதி பங்கீடு இன்னும் முடிக்காம கெளம்பிட்டாரு.....மருத்துவரு கட்சி ஆளுங்க தொகுதிப்பக்கம் மப்புலகூட போமாட்டாரு போல..அப்புறம் இன்னா கூட்டணி------கூமட்டனின்னுகினு............

அத்த விடு வேற இன்னா போட்டுக்கிறான்...கரீம் பாய்

அயகிரி போயி ரஜினிய பாத்துகிராறாறு......
இன்னாவாம்...............
புது கட்சி ஆரம்பிக்கறாப்பலையா?
தெரில்லயே...................
ஆனா அப்பா கட்சிக்கி எதிரா உள்குத்து குத்துவாறு..........

ஐயே அப்பாலிக்கா சினிமா நூசு இன்னா போட்டுக்கிறான்...........பாணலிங்கம்

நமீதா பிரச்சாரத்துல குதிக்குதாம்.

ஐயே தோ பார்டா..............ஏண்டா செல்வம் நீ ஏண்டா வாயப் பொளக்குற...அஞ்சலயாண்ட சொல்லவா?

மினிம்மா மலேசியாகாரன் பிளேனு கெடச்சிதா?

அயே அத்த இன்னும் தேடின்னுகிரானுங்க, நம்ம மெரீனா பீச்சாண்ட கூட தேடி பாத்துகிரானுங்க இன்னும் கெடக்கிலயாம்...........எங்கியோ பிளேன தாராந்துகிரானுங்க............

அப்பாலிக்கா இன்னா நூசு, வேற ஏதோ வேலைக்கி போற பொம்பளயாண்ட எவனோ நாலு பசங்க வேலைய காமிச்சு கொன்னுகிரானுங்க...........மவனே இவனுக கண்டி என்கிட்ட மாட்டுனா........மவனே அறுத்து குடுத்துருவேன்..............தோ இப்பதான் நா வரசொல்ல ஒரு பேமானி ஈன்னு பல்லகாட்டிகினு சைடால வந்தான்..........
புடிச்சேன் பாரு ஒரு பிடி...............மவனே கைய கவட்டைல உட்டுகினு நோன்டிகினே போயிட்டான்...........

அத்த விடு முனியம்மா வேறென்னா நூசு............

யோவ் விடுயா வேல கீது கோயிலு தொறக்கிற நேரம், பூக்கடயாண்ட முனியம்மா இல்லையேன்னு அல்லாம் மெர்சல் ஆயிடும். அப்பால அடுத்த  தபா டீ குடிக்க சொல்ல படிக்கிறேன்.........இன்னா வர்ட்டா...........யோவ் மீச டீ கணக்குல எய்திக்கோ..........

Follow kummachi on Twitter

Post Comment

Friday 14 March 2014

செய்திகளும் லொள்ளுகளும்

செய்தி: கருணாநிதியும் தீவிர பிரச்சாரத்தில் குதிக்கிறார்.
லொள்ளு: ஒருத்தருக்கு எழுந்து நிக்கவே வக்கில்லையாம், இதுல எங்க குதிக்கிறது.

செய்தி: 2ஜி ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு கருணாநிதி தேர்தலில் சீட் கொடுத்தது ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி.
லொள்ளு: அம்மா சொத்துக்குவிப்பு வழக்குல விசாரிக்க பெங்களுரு உங்களை அழைக்கிறது.

செய்தி: தேர்தலில் போட்டியிட வில்லை கே.வி.தங்கபாலுஅறிவிப்பு.
லொள்ளு:தொங்காண்ணா வீட்டம்மாவை நிக்க வைக்கப் போறீங்கதானே.

செய்தி: துரைமுருகன், பழனிமாணிக்கம், சுப தங்கவேலனுக்கு சீட் கொடுக்கமுடியவில்லையே# கருணாநிதி வேதனை.
லொள்ளு: இதயத்தில் கொடுத்திருங்க தலைவரே.

செய்தி: விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும் மேடையில் ஏறமாட்டேன்: ராமதாஸ் அறிவிப்பு.
லொள்ளு: தரையில குந்திக்கினு பிரச்சாரம் செய்யுங்க.

செய்தி: தேர்தலில் எங்களின் பங்கு இருக்கும், பிரதமரை சந்தித்த பின் மு.க. அழகிரி.
லொள்ளு: உள்குத்ததானே சொல்றாரு  ...............

செய்தி: நடிகை நக்மா மீரட் தொகுதியில் போட்டி.
லொள்ளு: சரத்குமார்  பிரச்சாரத்துக்கு போவாரா?

செய்தி: மூன்று கட்சியில் என்னை  கூப்பிடுகிறார்கள்# நடிகை நமீதா 
லொள்ளு: மூன்று கட்சியிலும் சேர்ந்திடுங்க கட்சிகள் அபரிமிதமா வளர்ந்துடும்.

செய்தி: அழகிரியை காங்கிரசில் சேர்க்கத்தயார்# ஈ.வி.கே. எஸ் இளங்கோவன்.
லொள்ளு: எந்த கோஷ்டியில அத முதலில் சொல்லுங்க.

செய்தி: தே.மு.தி.க வுடனான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்# பொன் ராதாகிருஷ்ணன் 
லொள்ளு: எத்தனை ரவுண்டு முடிந்தது, கெட்டவார்த்தை எல்லாம் கத்துக்கிட்டீங்களா?


அண்ணாச்சி பேசுறதுதான் ஒண்ணும் புரிய மாட்டேங்கி... நடந்துக்கிறதும் ம் ஹூம்... ஒண்ணும் தெரியமாட்டேங்கி... எத்தினி வாட்டி நிதானமா நிதானமா நிதானமா உக்காந்து யோசிச்சாலும் ஒண்ணும் புரியபடமாட்டேங்கி... சரி .. அண்ணாச்சி கைய வெச்சி ரேகை பாத்தாவது எந்தப் பயலாவது சோசியம் சொல்லுதானான்னு பாத்து... அதிலாவது எதுனா தெரியுதான்னு பாப்போம்....----------------நன்றி : தினமணி

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 13 March 2014

தெரு

நகரம் விரிவாதற்கு முன்பு, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்தது அந்த தெரு. கான்க்ரீட்டோ மெட்டலோ (தார் ரோடு) வைக்காத மண் தெருதான்.

தெருவின் மேற்கு கோடிவரைதான் நகர எல்லை. தெருவின் மேற்கு எல்லையில் போகும் குறுக்கு சாலை கிராம பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்டது. தெருவிற்கு முழுப்பெயர் உண்டு. நாளடைவில் அரசியல் காரணங்களிலும் ஒழியாத ஜாதி ஒழிப்பிலும் "தெரு"வின் முன் பகுதி காணாமல் போய்விட்டது.ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற மொட்டை தெருக்கள் இப்பொழுது குறைந்தது இரண்டாவது இருக்கும். செட்டி தெரு, முதலி தெரு, அய்யர் தெரு, சாரி தெருவெல்லாம் தார் பூசப்பட்டு வெறும் தெருக்களாக மாறிய காலம். எங்களது இளமை காலம். தெருவில் மொத்தமே பதினைந்து வீடுகள்தான் இருக்கும்.

எதிர் வீட்டில் நண்பன் ஹம்சாத் அலி, அவன் வீட்டு பக்கத்து காலி மனைதாண்டி வடிவேலு முதலியாரின் மகன் ராஜவேலு, எங்கள் பக்கத்து வீட்டில் செபஸ்டியன் மற்றும் ரவி, கிச்சா, ஸ்ரீதர்,  ஸ்ரீநிவாசன் என்கிற சீனா என்று நண்பர்கள் பட்டாளம். இதில் பெரும்பாலானோர் வாடகை வீட்டில்தான் இருந்தோம். பட்டணத்தில் எல்லோரும் அவரவர் வசதிக்கேற்ப வெவ்வேறு பள்ளிகளில் படித்தாலும் மாலை சபேச ஐயர் வீட்டுஅருகில் இருக்கும் காலி மனைதான் எங்களது விளையாட்டு மைதானம். சிலசமயம் எதிர் வீட்டு சுவற்றில் கரிகோட்டால் ஸ்டம்ப் வரைந்து கிரிக்கெட் விளையாடுவோம்.  பள்ளிநேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தெருவில் உள்ள அத்தனை சிறுவர் சிறுமியர்களும் நடுத்தெருவில்தான் விளையாடிக் கொண்டிருப்போம்.

விடுமுறையில் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் யார் வீட்டிலாவது கூடி கேரம், செஸ் போன்ற விளையாட்டுகள் மாலை வெயில் தணியும்வரை ஓடும் எங்களது அக்கா தங்கைகள் மறுபுறம் அவரகளது விளையாட்டை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். எங்களது நண்பர்கள் எல்லோரது வீட்டிலும் எல்லோருக்கும் முழு சுதந்திரம் உண்டு. தெருவில் நாங்கள் ஏதாவது சில்மிஷம் பண்ணாலும் உடனுக்குடன் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு முதுகில் டின் கட்டப்படும். இருந்தாலும் அது ஒரு கனாக்காலம்.

பின்னர் அவரவர் டில்லி, அமெரிக்கா, துபாய் கொட்டாம்பட்டி என்று சிதறுண்டோம். எங்கள் நண்பர் கூட்டத்தில் இன்னும் ஒரு சிலர் அங்கேயே குழந்தை குட்டி என்று செட்டிலாகிவிட்டார்கள். ரவி கொஞ்சம் அவசரப்பட்டு மிகவும் உயர்ந்த இடத்திற்கு சென்று விட்டான். 

காலசுழற்சியில் அங்கொருவர் இங்கொருவர் என்று சந்தித்துக்கொண்டால் ஒவ்வொருவரின் நலன்களை பரிமாறிக்கொண்டோம். சமீபத்தில் ஹம்சாத் அலி தன மகளின் நிக்காஹ் விழாவிற்கு அழைத்திருந்தான். நான் எனது விடுமுறையை அதற்காக மாற்றி டில்லி வழியாக சென்னை செல்வது என்று முடிவாகி குடும்பத்துடன் டில்லி சென்றோம்.

நண்பர்கள் கூட்டத்தில் எஞ்சியவர்களில் ஓரிருவர் தவிர பெரும்பாலானோர் வந்திருந்தனர். அன்று எங்களது சிறுவயது நினைவுகளை அசை போட்டோம். நிக்காஹ் முடிந்தவுடன் ஹம்சாத் சென்னை வருவதாக சொன்னான். இன்னும் சிலரும் சென்னை வருவதாக முடிவாகியது.

நான் சென்னை வந்தவுடன் இரண்டு நாட்கள் கழித்து எல்லோரும் எனது வீட்டில் கூடினோம். ஹம்சாத் நாளை நாம் நம்ம "தெரு" விற்கு போய் எப்படி இருக்கிறது என்று பார்த்து வரலாமா?, இன்னும் அங்கு யார் யார் இருக்கிறார்கள்? என்று பார்ப்போம் என்றான்.  ஸ்ரீதர் இன்னும் அங்குதான் இருப்பதால் அவன் வீட்டிற்கு செல்வோம் என்று முடிவாகியது.

அடுத்த நாள் மாலை ஒரு நான்கு மணி அளவில் அங்கு சென்றோம், தெருவே அடையாளம் காண முடியவில்லை. இடைவிடாத பேருந்துகள், லாரிகள் போக்குவரத்தும் அதிகமாகி எங்களது தெருஅதம் இளமையை  இழந்திருந்தது. செபாஸ்டியன் குடியிருந்த வீடு இப்பொழுது பெரிய கல்யாணமண்டபமாக மாறியிருந்தது. அருகில் இருந்த காலி மனை இரண்டு மூன்று கடைகள் இருந்தன.தெருமுனையில் கார்பரேஷன் கிரௌண்டில் இருந்த உடற்பயிற்சி செய்யும் புஷ் அப், புல் அப் பார்கள் ஏணி எல்லாம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் கார்பரேஷன் அலுவலகம் இருந்தது.

எங்களது பழைய தெரு இப்பொழுது சாலையாக மாறியிருந்தது. இருந்தாலும் அடுக்குமாடி குடிருப்புகளுக்கு பஞ்சமில்லை. ஸ்ரீதர் வீட்டை அடையாளம் காண சற்று நேரமெடுத்தது. அவன் வீடு இடித்து கட்டப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்பாக மாறியிருந்தது. அதில் ஒரு பிளாட்டில் ஸ்ரீதரை கண்டு பிடித்தோம். அவன் வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு எல்லோரும் இறங்கி தெருவில் காலாற நடந்தோம்.

ஸ்ரீதர்தான் பழைய வீடுகளின் முகப்புகள் மாறியதை சொல்லிக்கொண்டு வந்தான்.

இந்த மாறுதல் ஒன்றும் எங்களை வியப்பில் ஆழ்த்தவில்லை. இதெல்லாம் காலப்போக்கில் மாறுவது இயற்கை எனபதில் எங்களுக்கு எந்த  மாற்றுக் கருத்தில்லை.

நாங்கள் அந்தத் தெருவில் கிட்டத்தட்ட நான்குமணிநேரம் இருந்தோம். தெருவில் சிறுவர், சிறுமியர்கள் கூட்டமோ விளையாட்டோ தென்படவில்லை.


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 12 March 2014

தேர்தல் அறிக்கை-கவிதை

வருது வருது  தேர்தல் வருது
வாக்குறுதிகள் பவனி வருது
பொய்களெல்லாம் சாயம் பூசி
பொங்கியெழுந்து ஓடி வருது

அறிக்கை என்ற பெயரிலே
அறிவை மயக்கும்பழைய கள்ளே
சந்தை எங்கும் கடை பரப்பி-புதிய
மொந்தையில் புரண்டு வருது

கைவிட்டுப் போன கச்சத்தீவு
கைகட்டி திரும்ப வருது
மறந்து போன மின்சாரம்
மறுபடியும் பிறந்து வருது

வருமான வரிவிலக்கு எல்லாம்
வரிந்து கட்டி திரும்ப வருது
காய்ந்து போன கால்வாய் எல்லாம்
கரைபுரண்டு திரும்பி வருது

நாட்டில் ஓடும் நதிகள் எல்லாம்
வீட்டினுள்ளே இணைந்து வருது
கேட்டும் கிடைக்கா  காவிரி
கேட்காமலே பொங்கி வருது

விலைபோகா பொருட்கள் எல்லாம்
"விலையில்லா" பெயரில் வருது
கதியற்ற மக்களுக்கோ
விதி என்ற பெயரில் வருது

வருது வருது  தேர்தல் வருது
வாக்குறுதிகள் பவனி வருது
பொய்களெல்லாம் சாயம் பூசி
பொங்கியெழுந்து ஓடி வருது.


 

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 11 March 2014

கலக்கல் காக்டெயில்-138

நேரடி மோதல் 

கூட்டணி கூத்துகள் தொடங்கி நாடாளுமன்ற தேர்தலுக்கு  வியூகம் அமைக்க எல்லா கட்சிகளும் கடையை திறந்து வைத்து கூவிக்கொண்டிருக்கின்றன. அம்மா முதலிலேயே கதவை அடைத்து எல்லோருக்கும் "பேபே" காட்டிவிட்டார்கள். உலோகம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியல் குலுக்கியவர்கள் என்று நக்கலடித்த பின்னும் காம்ரேடுகள் காட்டிய விசுவாசத்திற்கு நல்ல அல்வா கொடுத்தார்கள்.

ஐயாவோ கடையை திறந்து வைத்தும் கொள்வார் இல்லாததால் எல்லா இடத்திற்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

கேப்டன் எல்லா இடத்திலும் சென்று லொகேஷன் பார்த்து கடைசியில் தேசிய கட்சியில் ஐக்கியமாகி அதிக இடங்களை பெற பேரம் பேசுகிறார். மருத்துவர் ஐயா போன்றோர் முதலிலேயே சென்று துண்டு போட்டு வைத்திருந்தாலும் எம்.ஜி.ஆர் பட தரைவரிசை ஆட்கள் டிக்கட் கவுண்டரில் முண்டியடித்து கடைசி நிமிடத்தில் டிக்கட் வாங்குவது போல் வந்த கேப்டனின் திறமையைக் கண்டு கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். வை. கோ எப்பவும்போல் கொடுத்ததை வாங்க காத்திருக்கிறார்.

அனேக இடங்களில் அம்மா கட்சியும் ஐயா கட்சியும் நேரடியாக மோதுகின்றன.எத்தனை அடிதடிகளும் வெட்டு குத்துகளும் அரங்கேறப்போகுதோ?

எது எப்படியோ? மக்கள் எண்ணம் தெரியவரும் பொழுது காட்சிகள் மாறும், பெட்டிகள் கைமாறும், குதிரை பேரங்கள் அம்பலமேறும்.

என்னா ஒரு வில்லித்தனம்

பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதிகட்ட விசாரணை மறுபடியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் இரண்டாவது முறையும் ஆஜராகவில்லை. ஏற்கனவே இந்த வழக்கு கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட வாய்தாக்கள் வாங்கி இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது மேலும் ஜவ்வு வேலை.

இந்த அழகில் எம்.பி க்கள், எம்.எல் ஏக்கள் மீதுள்ள வழக்குகள் ஒரு வருடத்திற்குள் முடித்துவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

அபரிதமான வளர்ச்சி

எல்லோராலும்  ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்ட குஜராத்தின் அபரிதமான வளர்ச்சி நமீதாதானாம்----------ட்விட்டரில் படித்தது.

என்னமா யோசிக்கறாங்கப்பா?

ரசித்த கவிதை 

விட்டுவிடுங்கள் எம்மை 

உங்கள் அரசியல் ஆதாயங்களுக்கு
மகுடம் சூட்டும் விருதுகளுக்கு
எத்தனை நாள் பலியாக்குவீர்
பூடகமாய், சூசகமாய் எம்மை .......!

உங்கள் சொகுசு வாழ்க்கைக்கு
எங்கள் கண்ணீர் தானா
பசியாற கிடைத்தது உங்களுக்கு..!

கேட்காமலே கட்டுரை அனுப்புகின்றீர்
தனிப்பட்ட விடுகைகளில்- பின்
வசை பாடுபவனுடன் கூட்டுச் சேர்ந்து
முதுகில் குத்துகின்றீர் பலமாய் .......!

ஏனிந்த இரட்டை வேடம் உமக்கு.....
அளவற்ற உம் பேராசையினால்
கூட்டம் சேர்த்து, ஒத்தூதி எதற்காக
வேடம் போட்டு குதறுகின்றீர் .............!

போதும் உங்கள் உறவும், நட்பும்
இனி வேண்டாம் எதுவும்............
என் பாதையில் பயணிக்கின்றேன்
`பார்வைகளை` மட்டும் சுமந்து ....!

நாட்டின் சட்டம் சொல்கிறது
குற்றங்களுக்கு உடந்தை போபவர்களும்
அதன் பார்வையில் குற்றவாளிகளாம்.....
எழுதாத சட்டத்தில் இங்கு
எரியும் தீயில் எண்ணெய் விடுபவரே ஏராளம்..!

விட்டு விடுங்கள் எம்மை
உங்கள் அரசியல் நாற்காலிகளுக்கு
`பஞ்சாக்கி` இதம் காணும்
ஈழத்தையும், ஈழத்தவள் என்னையும் ....!!!!------------------தோழி துர்கா


ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

Monday 10 March 2014

நாற்பது நாற்பது.................கவுஜ


தேர்தல் வருது தேர்தல் வருது
நாடாளுமன்றத் தேர்தல் வருது

அம்மாவுக்கு நாற்பது
ஐயாவுக்கு முப்பது
கேப்டனுக்கு இருபது
மருத்துவருக்கு பத்து
வைகோவுக்கு ஐந்து
தாமரைக்கு நாலு
அரிவாளுக்கு இரண்டு
கூட்டணிக்கு ஒன்று
கூடாத அணிக்கும் ஒன்று

தொண்டருக்கு கட்டிங் 
குண்டருக்கும் கட்டிங் 
கேப்டனுக்கு கட்டிங்
கேனையனுக்கும் கட்டிங்

வாக்காளருக்கு ஆயிரம்
குடிமகனுக்கு க்வாட்டர்


வாக்குறுதிகள் வண்ணம் பூசி
வலம் வரும் நம் நாட்டில்  
கொள்கைகள் கொடிகட்டி
கோட்டை நடுவே பறந்திட

தேர்தல் முடிந்த பின்
கூட்டணிகள் மாறும்
நாற்பதுவும் விலைபேசி
நாடாளுமன்றம் ஏறும்
வாக்களித்த மக்களுக்கு
வாய்க்கரிசி போடும்.Follow kummachi on Twitter

Post Comment

Thursday 6 March 2014

நா(ய்)யம்மா சரணாலயம்

வலை கீச்சுதே............

ட்விட்டரில் படித்ததில் ரசித்தது.

செவ்வாய் கிரகத்துல எல்லாம் கட்டவுட் வைச்ச, அனைத்து கிரகநாயகனுக்கு ஆஸ்கார் கிடைக்கலையா?-----------------மண்டகசாயம்

சென்னையில் தெருநாய்களுக்கு சரணாலயம் -மேயர்-சரணாலயத்துக்கு பெயர் என்ன? "அம்மா நாய் சரணாலயமா?------------உடன்பிறப்பே.

அவங்கள நிறுத்தசொல்லுங்க,தட்தமிழ்ல வர நியூசை காப்பி பேஸ்ட் பண்ணி ட்விட் போடுறானே அவனை நிறுத்த சொல்லுங்க------------அதிஷாஸ்தான்

ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் தரலாம்னு ராஜா சார் பாட்ட கேட்போம். ஆனா 2வது நிமிடமே தூங்கிடுவோம், அதான் அவருக்கு தரமுடியல# ஆஸ்கார் கமிட்டி----------------------ஆல்தோட்டபூபதி.

வாழ்நாள் சாதனையாளார் விருதை நடிப்பு திலகம் எங்க தலீவர் கருணாவுக்கு கொடுக்காததை வன்மையாக கண்டிக்கிறோம் #உளியின்  ஓசை நற்பணிமன்றம்-----------நாடோடி

உத்தமவில்லன் டீசர் அருமை கமல்சார் மாஸ், தருமாறு தயிர் சோறு #ட்விட் லைக் அஜீத் ஃபேன்ஸ்---------------------------வாழவந்தான்

நான்: டேய் நேத்து அடிச்ச சரக்கு இப்ப வயிறெல்லாம் எரியுதுடா.
நண்பன்: சரிவா கூலிங்கா ஒரு பீர் வாங்கித்தரேன் குடி சரியாகிடும்.#நண்பேன்டா---------------------புருடா

ஆஸ்கார் என்பது "தலைவா"வுக்கு பொருந்தாத விஷயம் வேணும்னா ஆஸ்காருக்கு "தலைவா" அவார்டு கொடுங்க அது பொருத்தமா இருக்கும்.-----------அறுந்தவாலு

50வருஷமா மொத சீன்ல கவுசல்யா சுப்ரபாதமும் கடைசி சீன்ல போலிசும் கூட்டியாந்துவிட்டுட்டு ஆஸ்கார் பத்தியாடா பேசுறீங்க டாமிட் ------------கர்ணா

சுறாவுக்கே ஆஸ்கார் கிடைக்காத போது ஜில்லாவுக்கு வேண்டுமெனக் கேட்பது முட்டாள்தனம்------------------விஜய்
Follow kummachi on Twitter

Post Comment