Friday 28 March 2014

தொண்டு செய்யும் தொண்டா..........கவுஜ

தலைமைக்கு சொம்படிப்பாய்
தலைவனு(வி)க்கு தீக்குளிப்பாய்
கார் கதவை திறந்து வைப்பாய்
காலினிலே விழுந்திடுவாய்
கண்ணசைவில் கத்தி எடுப்பாய்
காசுக்கு கழுத்தறுப்பாய்
சைக்கிள் செயின் சுற்றிடுவாய்
சிறையினிலே அடைபடுவாய்
சுவரொட்டி வைத்திடுவாய்
வீடதனை துறந்திடுவாய்
பெண்டாட்டியை மறந்திடுவாய்
குழந்தைகளை குமுறிடுவாய்
பெற்றவர்களை பிழிந்தெடுப்பாய்
உற்றவர்களை துறந்திடுவாய்
ஓட்டுக்கு கூவிடுவாய்
வெயிலிலே காய்ந்திடுவாய்
க்வாட்டருக்கு கால் பிடிப்பாய்
தோரணங்கள் கட்டிடுவாய்
தொண்டனென்று பேரேடுப்பாய்
தவறாமல் சீட் கேட்பாய்
கிடைக்காமல் புலம்பிடுவாய்
தலைவனின் சந்ததிக்கு
தலைமேல் குடை பிடிப்பாய்
தொண்டு செய்ய பிறவி எடுத்தாய்
தொண்டனாகவே இறந்திடுவாய்


Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகவும் முடித்துள்ளீர்கள்...

உண்மைகள்...

கும்மாச்சி said...

தனபாலன் பாராட்டிற்கு நன்றி.

panasai said...

கலக்கல்... எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க...

panasai said...

கலக்கல்... எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க...

கும்மாச்சி said...

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

அம்பாளடியாள் said...

ஆஹா ..கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இவர்கள் இப்படித் தான்
இருப்பார்கள் என்று மிக அழகாகவும் ஆழமாகவும் சிந்தித்து
வடித்த நற் கவிதைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
சகோதரா .த .ம.3

கும்மாச்சி said...

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சகோதரி.

”தளிர் சுரேஷ்” said...

தொண்டனின் இலக்கணம் அருமை! வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

இயைபுடன் கூடிய கருத்தான கவிதை.

சூப்பர் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

நன்றி அருணா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.