Tuesday 18 March 2014

கலக்கல் காக்டெயில்-139

கெளம்பிட்டாங்கையா 

தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரு வழியாக இருக்கிற நாற்பதையும் கூறு போட்டு குழப்பி கூட்டணி அமைத்து பிரசாரத்துக்கு கிளம்பிவிட்டார்கள். சத்தியமூர்த்தி பவன் ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறது. எல்லா பெரிய தலைகளும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க, தலைமை பலி ஆடை தேடிக்கொண்டிருக்கிறது.

காங்கிரசிற்கு இப்படி ஒரு கேவலமான நிலைமை இது வரை வந்ததில்லை. போன ஆட்சியில் இத்தாலி சனியனின் வழிகாட்டலில் செய்த அட்டகாசங்களுக்கு இப்பொழுது அறுவடை செய்கிறார்கள். இதுவரை பிரதமர் பதவியில் அதிக ஆண்டுகாலம் இருந்த ஒரு பெருமையை தவிர மண்ணு மோகன் சிங் ஒன்றும் சாதிக்கவில்லை. சிவகங்கை சீமான் போட்டியிடாமல் நழுவப்பார்க்கிறார்.

சத்தியமூர்த்தி பவன் பக்கம் போகவே மக்களுக்கு பயமாயிருக்கிறது.

பா.ஜ.க ஒரு உதவாக்கரை கூட்டணி அமைத்து முழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது.  தி.மு.க பேருக்கு ஒரு கூட்டணி வைத்து சில சீட்டுகளை கைப்பற்றக்கூடிய சாத்தியமிருக்கிறது.

மொத்ததத்தில் அம்மாவுக்கு கொண்டாட்டம் தான்.

விமானத்தைக் காணோம்.........

வடிவேலு கிணற்றைப் போல இந்த மலேசிய விமானம் மாயமாய் மறைந்திருக்கிறது. மலேசிய அரசு விரக்தியில் ஜோசியம், சூனியம், மை வைத்துப்பார்த்தும் இது வரை ஒன்றும் பயனில்லை. இப்பொழுது இந்தியப் பெருங்கடலில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். சைனா ஒரு பக்கம் மலாகா ஜலசந்தியில் தேடிக்கொண்டிருக்கிறது.

விமானத்தின் ட்ரான்ஸ்பாண்டர் திட்டமிட்டே துண்டிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

விமானத்திலிருந்து "ஹான்ட்ஷேக்" சிக்னல் சாட்டிலைட் மூலமாக வந்து கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா சொல்கிறது.

விமானம் எங்கோ பத்திரமாக இருக்கிறது, எங்கு என்றுதான் தெரியவில்லை?

ரசித்த கவிதை

கடவுச்சீட்டு

எதிர்கால தூக்கங்களையும்,
சந்தோசங்களை, தொலைத்து
உறவுகளின் சுமை களைய
கடவுச்சீட்டும் பெற்றேன்...

தங்கையின் திருமணமும், தந்தை
கடனும், பொருளாதாரமுமே
என்னை அயல் தேசத்துக்கு
அனுப்பி வைத்தது...

ஏதோ தைரியத்தில் கடல்
தாண்டியும் வந்தேன்
கண்கள் நிறைய வாழ்க்கை
கனவுகளை சுமந்தபடி...

என்னுடன் படித்த பாடசாலை
நண்பர்கள், உறவுகள்
அனைத்தையும் ஒரு விமான
பயணத்திலே இழந்தேன்...

தாயின் அழைப்புகள், ஸ்பரிசங்களில்
எழுந்த நாட்கள் தொலைந்து
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் தொடங்கிவிட்டது...

இதயம் தாண்டி பழகிய உறவுகள்,
நண்பர்களின் நினைவுகள் எல்லாம்
ஒரு கடலை தாண்டிய கண்ணீரிலே
கரைந்து மறைந்து விடுகிறது...

விடுமுறை தினங்களில் வீதியோரம்
விளையாடி மகிழ்ந்த நினைவையும்
நண்பர்களையும் நினைக்கும் போதே
கண்ணீர் விழிகளை நனைக்கின்றது...

நெருங்கிய உறவினதும், நண்பரினதும்
திருமணத்துக்கான அழைப்பிதலுக்காக
ஒரே ஒரு தொலைபேசி ஊடான
வாழ்த்துடனே முடிவடைகிறது உறவு...

தொலைபேசி அழைப்புகளிலும்
கடிதங்களிலும் வருகின்ற
உறவினதும், நண்பனினதும்
மரண செய்திகளுக்கு...

கண்ணீர் துளிகள் மட்டுமே
ஆறுதல் தருகின்றது...
எவ்வளவு தான் சம்பாதித்தும்
நாங்கள் அயல் தேசத்து ஏழைகளே...--------------எம்.எ. அஷ்ரப் ஹான்

ஜொள்ளு 







Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கலங்க வைக்கும் கவிதை வரிகள்...

”தளிர் சுரேஷ்” said...

நவீன டெக்னாலஜிகள் வந்தும் இன்னும் விமானத்தினை கண்டுபிடிக்க முடியாதிருப்பது வருத்தம்தான்! சிறப்பான கவிதை! நன்றி!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

உண்மையை உணர்த்தும் கவிதையைக் கண்டு உள்ளமும் சுருண்டு போனது
சகோதரா .வெளி நாட்டில் வாழும் அகதிகள் எங்கள் நிலைமையைக் கண்டு நாமே
வருந்தும் காலமிது .பகிர்வுக்கு மிக்க நன்றி .

அருணா செல்வம் said...

கவிதை அருமையாக உள்ளது.
அயல் தேசத்து ஏழைகள்.... உண்மைதான்!

சேலையைக் கூட கவர்ச்சியாக கட்டலாம் என்பதற்கு
ஓர் உதாரணத்தை இந்த படம் மூலம் அறிந்தேன் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

\\விமானம் எங்கோ பத்திரமாக இருக்கிறது, எங்கு என்றுதான் தெரியவில்லை?\\ தோளைத் தொடர்பு இவ்வளவு வளர்ந்து, அறிவியல் இத்தனை முன்னேற்றம் கண்டு, எத்தனை சேட்டிலைட் இருந்து என்னத்துக்கு பிரயோஜனம்??!!!

கும்மாச்சி said...

ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

மாதேவி said...

"எவ்வளவு தான் சம்பாதித்தும்
நாங்கள் அயல் தேசத்து ஏழைகளே"
வெளிநாட்டு வாழ்க்கைநிலையை எடுத்துச் சொல்கின்றது..

ஜீவன் சுப்பு said...

அஷ்ரப் ஹான் கவிதை class

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.