Wednesday 26 March 2014

கலக்கல் காக்டெயில்-140

அழகிரி நீக்கம் 

தி.மு.க கட்சித்தலைமை இன்று அஞ்சாநெஞ்சன் அழகிரியை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கியிருக்கிறது. முதலில் தாற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி எல்லா எதிர்கட்சி தலைவர்களையும் சந்தித்து தி.மு.க வின் தோல்விக்கு அச்சாரம் போட்டுக்கொண்டிருந்தார். கட்சி தலைமை இதற்குமேல் பொறுமையாக இருக்க முடியாது என்று ஒரு முடிவு எடுத்துவிட்டது.

தளபதிக்கு இருந்த ஒரே எதிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதை பத்து வருடம் முன்பே செய்திருந்தால் கட்சியின் மானம் இவ்வளவு தூரம் கப்பலேறியிருக்காது. ஸ்டாலினுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இப்பொழுது ஒன்று கூடியிருக்கிறார்கள், இனி இந்த தேர்தலில் இதன் தாக்கம் தெரியும்.

 அம்மா சொத்து............ஐயோ அம்மம்மா...........

பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கில்  அரசு வழக்கறிஞர் பவானி சிங் அம்மாவின் சொத்துக்களை பட்டியலிட்டு கோர்ட்டிடம் சமர்ப்பித்திருக்கிறார்.....அதன் படி.

வாலாஜாபாத் ------------------------600 ஏக்கர்
சிறுதாவூர்-------------------------------25  ஏக்கர்
நீலாங்கரை ---------------------------2     ஏக்கர்
கொடநாடு -----------------------------800 ஏக்கர்
காஞ்சிபுரம் ----------------------------200 ஏக்கர்
கன்னியாகுமரி ----------------------1900 ஏக்கர்
திருவைகுண்டம் --------------------200 ஏக்கர்
மற்றும் ஐதராபாத் திராட்சைத்தோட்டம்.................

அம்மா ஆட்சியில் 19991-1996 ஹெலிகாப்டரில் பறந்து பறந்து வாங்கிய சொத்துக்களாம்.............

மக்களுக்கு தெரியும் இரண்டு கட்சிகளுமே  சுரண்டுகிறார்கள் என்று இருந்தாலும் அவர்கள் பெருந்தன்மையானவர்கள், மாறி மாறி குத்தி இரண்டு பேருக்குமே வாய்ப்பளிப்பார்கள்.

க்வார்ட்டரும் கோழிக்கறியும் கிடைத்தால் நீங்க எங்க சொத்து வாங்கினால் எங்களுக்கு என்ன?

ரசித்த கவிதை

வாய் பிளந்து தூங்குங்கள் 

பேசுகிறார்கள்
பேசுகிறார்கள்
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
பேரம் இன்னும் படியவில்லை

பேரம் எப்போது படியும்?
பேச்சு எப்போது முடியும்?
தெரியாது அவர்களுக்கே!

அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

யாருக்கு எத்தனை
சீட் பிரித்தால்
மக்களை காப்பாற்றமுடியும் என்று
கணக்குப் போடுகிறார்கள்

எனக்கு இத்தனை
சீட் இல்லை என்றால்
இந்த மக்களை
எப்படி காப்பாற்றுவேன் என்று
கலக்கத்தில் வேறு இருக்கிறார்கள்

பின்பு, சகலமும் மறந்து
சீட் பிரிப்பதில்
அக்கறையோடு இருக்கிறார்கள்

சொர்க்கலோகம்
பக்கத்தில் இருக்கிறது
மனிதர்களே
வாய் பிளந்து தூங்குங்கள்!------------------கனவுதாசன்

கீச்சு கீச்சுன்னு கீச்சுறாய்ங்க 

ஹலோ தேர்தல் ஆணையமா,எல்லா பயல்ட்டையும் காசு வாங்கியாச்சு,இந்த நோட்டா பய மட்டும்தான் பாக்கி!எவ்ளோ தருவான்னு கேட்டு சொல்லுங்க!----------உடன்பிறப்பே

நான் திமுககாரன்,அறிவாலயம் எங்கள் சொத்து -அழகிரி.#அப்பா போகும்போது அறிவாலயம் யாருக்குன்னு உயில் எழுதி வெச்சுட்டு போவாரு.அப்போ பாத்துக்கலாம்------------சுபாஷ்



ஜொள்ளு





Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யம்மாடி... ஆமாம், பட்டியல் சரிதானா...? இன்னும் அதிகம் இருக்க வேண்டுமே என்று சொல்ல வந்தேன்...

// க்வார்ட்டரும் கோழிக்கறியும் // இதற்கேற்ப கவிதையோ...?

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

அதானே அந்த நோட்டா பயல் மாட்டினா என் பங்கு காசையும் மறக்காம வாங்குங்க சகோ!

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

ஆத்தாவோட சொத்து பாத்தா தலை சுத்துதே!!

Advocate P.R.Jayarajan said...

Valakkam pol kalakkal...

Advocate P.R.Jayarajan said...

Valakkam pol kalakkal. .. valthugal. .

கும்மாச்சி said...

ஜெயராம் ராம் சார் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அம்மாவின் சொத்துக்களை பார்த்தால் மலைப்பாக இருக்கிறது! கவிதையும் டிவிட்டும் கலக்கல்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

இவ்வளவு “சொத்தை” வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள் கும்மாச்சி அண்ணா...?

கும்மாச்சி said...

அது அந்தம்மாக்குதான் வெளிச்சம்......வருகைக்கு நன்றி அருணா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.