Saturday 29 March 2014

என் ஓட்டு பத்தாயிரம் ரூபாய்..............

ஒரு ஓட்டுக்கு ஒவ்வொரு கட்சியும் மூவாயிரம் ரூபாய் வரை கொடுப்பதாக செய்திகள் வருகின்றன.

அண்ணன் பெயரை வைத்துள்ள கட்சிதான் அதிகமாம். கூடவே காலையில் பால் பாகெட் தொடங்கி புளியோதரை, பொங்கல், பிரியாணி க்வாட்டர் முதலியவை கொசுறாம்.

அந்த குடும்ப கட்சியும் சளைத்தவர்கள் இல்லையாம், தொகுதி அறிந்த பிச்சை போடுகிறார்களாம்.

போகும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆள் சேர்ப்பவர்கள் எல்லாம் தனியாக கவனிக்கப்படுகிறார்களாம்.

ஓட்டுக்கு பிச்சை எடுத்தக் காலம் போக இப்பொழுது பிச்சை போடும் காலமாகிவிட்டது.

நாம் ஒவ்வொருவருக்கும் ஜனநாயகக் கடமை உள்ளது. நாட்டின்  தலைவிதியை திருத்தி எழுதப் போகிற மிக முக்கிய தேர்தல் இது.

மேலும் தமிழகம் முதல் முறையாக ஐந்து முனை போட்டியை சந்திக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் தமிழகத்தின் பிரதிநிதிகள் தமிழக நலனுக்காக போராடுவார்கள் என்ற நினைப்பும் இருக்கிறது.

என்னுடைய ஓட்டை நான் மூவாயிரம்  ரூபாய்க்கு  விற்கமாட்டேன்.

ஒரு ரூபாய் சம்பளக்காரருக்கு 1996ல் சொத்துகுவிப்பு வழக்கு தொடங்கப்பட்ட பொது சொத்தின் மதிப்பு 66 கோடியாம். இப்பொழுது 6000 கோடியாம்.

கட்டிய கோவணம் மற்றும் மஞ்சள் பையுடன் வந்தவரின் குடும்ப சொத்து கணக்கில் அடங்காதவை, அதுவும் கிட்டத்தட்ட அதே மதிப்பிற்கு வரும் போல் இருக்கிறது.


என் ஓட்டு அவ்வளவு மலிந்தது அல்ல.

மேலும் நமக்கு உள்ள ஜனநாயகக் கடமை குறுக்கே வந்து கோரமுகம் காட்டுகிறது.

இதனால் நான் முடிவா சொல்றேன் என் வாக்கை வெறும் மூவாயிரம் ரூபாய்க்கு விற்று என் மானத்தை இழக்கமாட்டேன்...........

க்வாட்டர் முப்பது ரூபாய் விற்ற காலம் போய்  இப்போ கேட்டா 90 ரூபாய் சொல்றான்........

கட்டுபடி ஆகமாட்டேங்குது.................

முடிவா சொல்றேன் பத்தாயிரம் கொடுக்கிறதா இருந்தால் இந்தப்பக்கம் வாங்க இல்லை என்றால் அப்படியே காணாமல் போயிடுங்க சொல்லிப்புட்டேன்..........


ஆனால் நாங்க நல்லவனுங்க.................இது வரை தேர்தலில் நிற்காமல் முதன் முறையாக நிற்கும்  "நோட்டா" பயலுக்கு கொஞ்சம் சலுகை உண்டு.

அவருக்கு 40% ரிபேட் கொடுக்கிறேன்............அவருக்கு ஆறாயிரம் ரூபாய்தான்.........

இல்லை என்றால் முடிவா சொல்லிட்டேன்..............பத்தாயிரம்தான்..........


Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

அம்பாளடியாள் said...

தங்களின் ஆதங்கம் புரிகிறது சகோதரா வெறும் ஐந்துக்கும் பத்திற்கும்
ஆசைப்பட்டு நியாயமாக நாம் தேர்ந்தெடுக்க வேண்டியவர்களை விட்டு
விட்டு பின் வாழ்நாள் முழுவதும் கஸ்ரப்படுவான் ஏன் ? ...அமளி துமளியாக
நடக்கும் அரசியல் நாடகத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
என்பதை உணர்த்திய சிறந்த பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
சகோதரா .

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோதரி......

கும்மாச்சி said...

நன்றி சகோதரி..............

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப பேர் கறார் பேர்வழியா மாறிட்டாங்க போல... ஹா.... ஹா....

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

எங்க ஊரில் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து சிலரால் புறக்கணிப்பை விட்டுவிட்டனர்! என் வோட்டு நோட்டாவுக்கு என்று முடிவு செய்து விட்டேன்!

”தளிர் சுரேஷ்” said...

எங்க ஊரில் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து சிலரால் புறக்கணிப்பை விட்டுவிட்டனர்! என் வோட்டு நோட்டாவுக்கு என்று முடிவு செய்து விட்டேன்!

கும்மாச்சி said...

சுரேஷ் நல்ல முடிவு.

விமல் ராஜ் said...

உரிய நேரத்தில், நல்லதொரு பதிவு...

ஹ்ம்ம்.. நீங்க (நாம் எல்லோரும் தான் ) ஒரு ஓட்டை பத்தாயிரத்திற்கு விற்றாலும், தேர்தலில் வென்றவர்கள் இன்னும் பல நூறு.. ...இல்லை..இல்லை ..ஆயிரம் கோடிகள் சம்பாதிக்க தான் போகின்றனர்....

வாழ்க ஜனநாயகம் !

கும்மாச்சி said...

விமல்ராஜ் வருகைக்கு நன்றி.

Anonymous said...

Now "A" offered Rs.1000/= per vote in our area.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.