Thursday 27 March 2014

டீ வித் முனியம்மா---------பார்ட் 3

யோவ் மீச அல்லாருக்கும் டீ போடு, எனிக்கி ரெண்டு மசால்வட குடு...

இன்னா முனியம்மாஅல்லாருக்கும் டீவாங்கித்தார, இன்னா விசயம் எலிக்சன் பார்டி துட்டு குடுத்தானுன்களா..........

இன்னா செல்வம் இன்னா உடம்பு எப்டி கீது, பூ மொயம் போடோ சொல்லவே இயுத்து பிச்சு அறுக்கற ஆளு நானில்ல, கட்சிக்காரன் துட்டையா தொடப்போறேன்.

அல்லா நாளும் பாய்தான் டீ வங்கித்தராறு, அத்தோ ஓசியில குடிச்ச உனுக்கு ஒரு நாளைக்கி வாங்கித்தர தெரியுதாடா கய்த, எண்ணிய கேக்குறான் பாரு.......

சரி மன்ச்சிக்க, இன்னா அல்லா தொகுதியிலும் துட்டு பூந்து வெள்ளாடுதாமே. எதுனா நூசு போட்டுக்கிறான்.

இந்த மொற அஞ்சு கட்சிங்கோ அடிசிக்கிறதால செமையா துட்ட அள்ளிவுடுறாங்களாம்.

பொம்பளைங்க வூட்ல வாச தெளிக்க சொல்ல கவுருல வச்சி கொடுக்குறாங்களாம். மூணு பெரிய நோட்டு கூட கீதாம். அது கண்டி இல்ல காலிலேயே பால் பாக்கிட்டு கொடுக்குறாங்களாம், பிரியாணியாம், புளிசோறாம், பொங்குலு  அந்த கர்மம் க்வாட்டறு கூட குடுக்குறானுங்க பேமானிங்க.............

ஐய பொம்பளையான்டையா?----------செல்வம்

போலீசு இன்னா பண்ணுதாம்...........

அவனுங்க சந்துல சிந்து பாடுரானுங்கோ.தோ ரெண்டு இனிஸ்பெக்டருங்கோ முப்பத்தஞ்சு லட்சம் புட்சு, 27 லச்சத்த மேலதிகாரிக்கு சொல்லிட்டு 8 லச்சத்த லவுட்டிகிரானுங்க............அப்பால பார்ட்டி ஆளுங்க சொல்லப்போக இப்போ ரெண்டு இனிஸ்பெக்டருங்களும் கம்பி என்னினுகீரானுங்க.

முனியம்மா அயகிரி மேட்டரு இன்னா?-----------பாணலிங்கம்

ஐய அந்தாளு கொடச்சல் தாளாம கலீனறு கச்சிய வுட்டு அம்பேலாக்கிட்டாறு.

கண்ணு புள்ச்சுது, காது கடிச்சுது சொல்லி கூட்டிக்குவாருன்னு அல்லாம் பாத்துகினு இருந்தாங்க---------கரீம் பாய்.

பாய் அவுரு எம்மாம் நேரந்தா கம்முன்னு இருப்பாரு, இந்தாளு வை.கோ வ  பாக்குறாரு, கேசு போடுவேங்குராறு, கலீஞரு மெர்சல் ஆயிட்டாரு. அத்தான் அவுற அபீட் ஆக்கிட்டாரு.நன்னி மறந்தவன்அண்ணாத்தைய இருந்தாலும் உடமாட்டேங்குராறு.

அம்மா மேட்டரு கீதா----------செல்வம்

அம்மா சொத்த அவுத்து வுட்டுகிராறு அரசு வக்கீலு, சொம்மா பறந்து பறந்து வளைச்சுகிறாங்க, இம்மாம் சொத்த வச்சிகினு என்ன செய்வாங்களோ?

சரி முனியம்மா அந்த பிளேனு மேட்டரு என்னா?---------நாடாரு

அது மை போட்டு உன் கண் மையா?என் கண்ணு மையான்னேல்லாம் போட்டு பாத்துகிரானுங்க, ஒன்நியம் கெடக்கில. அந்த டைவரு பொஞ்சாதியோட சண்ட போட்டுகினு கூத்தியா வச்சிகிறான், பிளேன ஓட்ட சொல்ல கூத்தியா கொடச்சாலு குடுத்துகீது.............அந்த காண்டுல பிளேன கொண்டாந்து கடலுல சொருவிட்டான்........போல.

சரி முனியம்மா சினிமா நூசு போட்டுக்கிறான்..............

மவனே உனுக்கு தலுக்கு படம் பாக்கணும் அதானே...........இந்தா பாத்துக்க.........ஒரு நாளு உனுக்குகீது அஞ்சலையாண்ட.....சொம்மா டப்பா டேன்சு ஆடிடும்...... 








 

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளைச்சல் தான் இல்லை... துட்டு விளைச்சல் செமத்தியா விளையாடுது...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

எல்லார்கிட்டயும் காசு வாங்கிடலாம். இந்த நோட்டா பயலை பிடிக்க சொன்னேனே! பிடிச்சீங்களா!?

கும்மாச்சி said...

ஐயோ அவரைத்தான் வலை போட்டு தேடிட்டு இருக்கேன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.