Wednesday 12 March 2014

தேர்தல் அறிக்கை-கவிதை

வருது வருது  தேர்தல் வருது
வாக்குறுதிகள் பவனி வருது
பொய்களெல்லாம் சாயம் பூசி
பொங்கியெழுந்து ஓடி வருது

அறிக்கை என்ற பெயரிலே
அறிவை மயக்கும்பழைய கள்ளே
சந்தை எங்கும் கடை பரப்பி-புதிய
மொந்தையில் புரண்டு வருது

கைவிட்டுப் போன கச்சத்தீவு
கைகட்டி திரும்ப வருது
மறந்து போன மின்சாரம்
மறுபடியும் பிறந்து வருது

வருமான வரிவிலக்கு எல்லாம்
வரிந்து கட்டி திரும்ப வருது
காய்ந்து போன கால்வாய் எல்லாம்
கரைபுரண்டு திரும்பி வருது

நாட்டில் ஓடும் நதிகள் எல்லாம்
வீட்டினுள்ளே இணைந்து வருது
கேட்டும் கிடைக்கா  காவிரி
கேட்காமலே பொங்கி வருது

விலைபோகா பொருட்கள் எல்லாம்
"விலையில்லா" பெயரில் வருது
கதியற்ற மக்களுக்கோ
விதி என்ற பெயரில் வருது

வருது வருது  தேர்தல் வருது
வாக்குறுதிகள் பவனி வருது
பொய்களெல்லாம் சாயம் பூசி
பொங்கியெழுந்து ஓடி வருது.


 

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை உண்மைகள்...!

வரும் ஆனா வராது...!

Thulasidharan V Thillaiakathu said...

தேர்தல் அறிக்கைக்கு கூட கவிதையா! அசத்தல் போங்கள்!

த.ம.+

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

கானல் நீராய் காட்சி முடிந்ததும் மாறிப்போகும்! கவிதை சிறப்பு! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

மாய மான்கள் துள்ளி வருவதும் தேருதல் ஓட்டை
அள்ளிச் செல்வதும் அரசியலில் சாதாரணமாகிப் போச்சு !
ஒட்டுமொத்த உணர்வுகளையும் குழைத்து மெட்டுப் போட்டுப்
பாடும் அளவிற்கு வார்த்தைகள் அருவியாகக் கொட்டியிருப்பதைக்
கண்டு மனம் மகிழ்கிறது சகோதரா அருமை ! வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதைகள் மேலும் மேலும் தொடரட்டும் .

Unknown said...

சாக்கடைப் பன்றிகளுக்குக் கொண்டாட்டம்...
சாமானியனுக்கோ திண்டாட்டம்... :-(

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

அருணா செல்வம் said...

அட... இந்தக் கவிதையை நான் எப்படி படிக்காமல் போனேன்.....?

அருமையாக இருக்கிறது கும்மாச்சி அண்ணா.
உண்மையை அப்படியே புட்டு புட்டு வச்சிட்டிங்க போங்க.

கும்மாச்சி said...

அம்பாளடியாள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

கும்மாச்சி said...

முட்டாநைனா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.