Tuesday 30 July 2013

கலக்கல் காக்டெயில் - 118 (600 வது பதிவு)

மூ(பீ)த்த பதிவர்

பதிவுலம் வந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐநூற்றி தொண்ணூற்றி ஒன்பது பதிவுகள் போட்டாகிவிட்டது. இன்னும் பிரபல ச்சீ........ ப்ராப்ள பதிவராக முடியவில்லை. அதற்குரிய வரைமுறைகள் இன்னும் பிடி படவில்லை. ப்ராப்ள பதிவராவது பற்றி எத்துணையோ பதிவர்கள் யோசனைகள் சொன்னாலும் அந்த இடம் மட்டும் (ஆமாம் பெரிய சூப்பர் ஸ்டாரு!) இன்னும் தகைய மாட்டேன் என்கிறது. ஆனால் வலைச்சரத்தில் வரும் ஆசிரியர்கள் ஒன்றிரண்டு பேர் என்னை மூத்த பதிவராக்கிவிட்டார்கள். அது வரை இந்த பீத்த பதிவருக்கு மகிழ்ச்சியே.

எது எப்படி இருந்தாலும் இந்த மொக்கை தொடர்ந்து கொண்டுதானிருக்கும். இதோ அறுநூறாவது பதிவு.

கருத்து கணிப்பு 

எதிர்வரும் பாராளு மன்றத் தேர்தலுக்கு கட்டியம் கூற கருத்து கணிப்புகள் வர ஆரம்பித்து விட்டன. தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எப்படியும் போனமுறை கிடைத்ததை விட அதிகம் கிடைக்கும் என்றே எல்லா கணிப்புகளும் கூறுகின்றன.

எந்த கட்சிக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை வைத்துதான் மத்தியில் உள்ள கட்சிகளுடன் பேரம் பேச வசதியாக இருக்கும். காங்கிரசும், பி.ஜே.பி. யும் எப்படியும் தமிழக கட்சிகள் பேரத்திற்கு பணிந்துவிடும், அதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையில் இருக்கின்றன.

கால ஓட்டத்தில் தமிழகம் கண்ட ஒரே பெருமை இது தான்.

ஒத்தரூவா ஃபுல் மீல்ஸ்

முப்பத்திமூனு ரூபா இருந்தா போதும் நகரத்தில் ஒருவன் உயிர் வாழ போதுமானது என்று இந்திய பொருளாதார நிலைமையை விளக்கப்போக அவனவன் ஒரு ரூபாயே போதும் என்று காகிரசுக்கு சொம்படிக்க ஆரம்பித்துவிட்டனர். 

மணிமாறன் தன்னுடைய வலைப்பூவில் இதைப் பற்றி எழுதிய நகைச்சுவையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 

முல்லை பெரியாறு 

தமிழக அரசு வழக்கறிஞர்கள் விசாரணையில் சொதப்பினாலும் தீர்ப்பு தற்பொழுது தமிழகத்திற்கு சாதகமாகவே வந்திருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்தவேண்டும், மற்றும் மேலும் புதிய அணைகட்டும் கேரளா சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது உச்சநீதி மன்றம்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த விஷயம் இளைப்பாறும்.

கவிதை 

ரசித்தது

கதவு
முகவரி
தொலைக்காது
முகங்களை தொலைத்த ஒரு முன்னோடி
அவசர யுகத்தின்
பிடியில்
ஆளுக்கொரு திசையில்
திரும்ப வர மறந்திருக்க
ஒட்டு வாங்கிய விஸ்வாசம்
அன்னோன்யம் பகிர்ந்தவனாய்
அரசியல்வாதி
பிள்ளைகள் பேரன்களின்
நடை பயின்ற தடம் அழியாமல்
நன்றி வேண்டாது
காவல் காத்தபடி
பாட்டன் வாழ்ந்த வீட்டின் கதவு…!----------------தமிழரசி

கிறுக்கியது 

காவியக்காதல் (மீள்பதிவு)

கமலீ நான் உன்னைக்
காதலிக்கிறேன் என்று,
கழுத்தை நோக்கி சொன்னதால்
காலணியைக் கழற்றி எறிகிறாய்
கண்களைப் பார்த்து சொன்ன
கயவனுடன் காதல் என்கிறாய்
பார்க்குமிடம் எங்கும் நீக்கமற
நீ இருக்கிறாய் என்றால்
கயவனைக் கழற்றிவிடவா போகிறாய்
அடுத்த முறை காதலை சொல்லும் பொழுது
நழுவும் துப்பட்டாவை பிடித்து நிறுத்து
உண்மைக் காதல் புரியும்.

நகைச்சுவை 

தொண்டன் 1:நம்ம தலைவருக்கு மொத்தம் எத்தனை மனைவிகள்?
தொண்டன் 2 : சட்டப்படி ஒன்னு , "செட்டப்" படி ஏழு

கீச்சு கீச்சு 

நரேந்திர மோடியின் அரசியல் நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது - ராகுல் # சும்மா போறியா இல்ல வாய்ல கத்திய விட்டு சுத்தவா ?--------கருத்து தாசன்

கவர்மெண்ட்டு விக்கிது அதனால குடிக்கிறேன்,மக்கள் குடிக்கிறானுக அதுனால கவர்மெண்ட்டு விக்கிது! திரும்பத் திரும்ப பேசற நீ...

ஜொள்ளு Follow kummachi on Twitter

Post Comment

Monday 29 July 2013

கொஞ்சம் சிரிங்க பாஸ்


இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்.

டவுட்டு

ரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க.
வீட்ல போய் பெண்ணைப் பார்த்தா மாப்ளென்னு கும்பிடுறானுங்க. என்ன உலகமடா இது?....

நன்றி கெட்ட உலகமடா

எனக்கு மூணு வயசு இருக்கும்பொழுது எல்லாப்பெண்களும் என்கிட்டே கிஸ் கேட்டாங்க நானும் வஞ்சனையில்லாமக் கொடுத்தேன்.
இப்பத் திருப்பிக்கேட்டா கொடுக்கமாட்டேன்னு அடிக்க வராங்க ........நன்றி கெட்ட உலகமடா...

பாஸ் நீங்க ரொம்ப பாவம் பாஸ்............நல்லா வருவீங்க..........
டேய் நீங்களெல்லாம் ரொம்ப நல்லா வருவீங்க.......


ஆடி மாசம்னா.............அப்படித்தான்
டாச்மாக்கிற்கும் சைடுடிஷிற்கும் தனி கட்டணம்

இன்னா.து கடவுளுக்கே தலைவா.........வா 
டேய் அடங்குங்கடா...............

என்ன வாழ்க்கைடா இது?
அட போங்கப்பா..........
/
/
/
மவனே...........என்ன ஆசிட் வாங்க வைக்காதே...........


Follow kummachi on Twitter

Post Comment

Sunday 28 July 2013

26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் காரணம் என்ன?

டெல்லி: தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி.க்கள் கடந்த 26ம் தேதி டெல்லியில் பதவியேற்றுக் கொண்ட நிலையில் திமுக எம்.பி. கனிமொழி மட்டும் பதவி ஏற்றுக் கொள்ளாததன் காரணம் தெரிய வந்துள்ளது. 
 
தமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவின் இளவரசன், மைத்ரேயன், திமுகவை சேர்ந்த கனிமொழி, திருச்சி என். சிவா, காங்கிரசை சேர்ந்த ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், இந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏழு பேர் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த அர்ஜுனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோரும், திமுகவை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆறு எம்.பி.க்களும் ஜூலை 26 ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 
 
அதன்படி டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், லட்சுமணன், டி.ரத்தினவேல் மற்றும் டி.ராஜா ஆகிய 5 பேர் கடந்த 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு டெல்லி மேல்-சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால் அன்று கனிமொழி மட்டும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
 
 இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் ஒன்று பரவி வருகின்றது. அது என்னவென்றால் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி சென்டிமென்ட் மிகவும் முக்கியம். நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் என சென்டிமென்ட் டச் அதிகம் இருக்கும். 
 
தற்போது ஆடி போர்க்கலம் நடைபெறுகின்றது. அதாவது ஆடி மாதம் என்றாலே தமிழகத்தில் பலரும் நல்ல விஷயங்களை ஒத்திவைக்கின்றனர். மேலும், ஆடி முதல் தேதியில் இருந்து 18ம் தேதி வரை போர்க்கலம் என கூறப்படுகின்றது. இந்த 18 நாட்களில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதை பெரும்பாலான நபர்கள் தவிர்த்துவிடுவார்கள். அந்த நடைமுறையில் தான் கனிமொழி தனது பதவியேற்பு விழாவை தள்ளிவைத்து விட்டார். 
 
கடந்த காலங்களில் நல்ல நேரம், காலம் பார்க்காமல் செயல்பட்டாதல் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் மறறும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கிக் கொண்டதாக ஜோதிடர்கள் சிலர் கருத்து கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் தான் கனிமொழி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்து விட்டதாக கூறப்படுகின்றது. திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள். மேலும், ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது. கனிமொழி வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பதவியேற்றுக்கொள்வார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பகுத்தறிவு, பகுத்தறிவு..........................

Follow kummachi on Twitter

Post Comment

Friday 26 July 2013

தமிழனின் ஒரு "குவார்ட்டர்' வாங்கும்திறன்

வலை கீச்சுதே ...............

சுவீடன்ல ட்ரெய்ன் கவுந்துடிச்சு, ஜப்பானால் கவுத்துட்டாய்ங்க,  ஒரு வேலை உமா ஷங்கர் கனவு காண்றாரோ # ஆண்டவரே ரட்சியுங்கள்..........ராஜ ராஜன் 

மதுபான விற்பனை கணக்கின் படி ஒவ்வொரு தமிழனும் நாள்தோறும் சராசரியாக ஒரு "க்வார்ட்டர்" வாங்கும் திறன் பெற்றுள்ளனர் # வறுமைக்கோடு ஜோக்----------ஈரோடு கதிர் 

எனக்கு ஹெல்மெட்!, உனக்கு துப்பட்டா !! பத்திரமாய் டூ வீலரில் பயணிக்கிறது நம் காதல்----------------இளந்தென்றல் நான் அண்ணா எம்புள்ள எம்ஜியாரு..!# அப்பிடியே மம்மி பேரும் சொல்லிடுங்கன்னா..பசி

ராமதாஸ்லாம் கோவா வந்தார்னா காதல் படம் முருகன் மாதிரி ரோட்ல சுத்த ஆரம்பிச்சிடுவார் #மதுவிலக்கு----விவிசி

அமைச்சர்களை மாத்தின மாதிரி தலைநகரத்தை கொடநாடுக்கு மாத்திட்டாங்க போல #எல்லோரும் கொடநாடுல இன்வஸ்ட் பன்னுங்க---பொர்கிராஜா

புதிய இந்தியாவை உருவாக்க ராகுல் அழைப்பு #இந்த இந்தியாவ இத்தாலிக்கு விக்கப் போறியா?===========தில்லுதொர

மிகவும் நேசித்த ஒருவரை வெறுக்க நேரிடும்போது தான் காரணமேயில்லாத காரணங்களை அடுக்குகிறது மனம்.-வேதாளம் 


Atm100 ரூபாய் எடுக்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வருது குளத்து நிறைய தண்ணி கிடந்தாலும் நாய் நக்கித்தான் குடிக்கனுங்கிறது---------லூசுப்பையன்

பழைய காதலிக்கு போன் போட்டவனுக்கும் படிச்சுட்டு போய் பிசினெஸ் பண்ண லோன் கேட்டவனுக்கும் மரியாதை கிடைச்சதா சரித்திரமே கிடையாது-----------கை புள்ள 

எல்லாம் இருந்தும் என்ன பயன்? விஜய் ஃபேன் எனத் தெரிந்தால் எதிரில் இருப்பவருக்கு எழும் நமுட்டுச் சிரிப்பைத் தடுக்கவா முடிகிறது!-----சி.சரவணகார்த்திகேயன் 

பொண்ணுங்க சைட் அடிக்கிற விதம் கடிகாரத்தோட சின்ன முள் நகருற மாதிரி, அதுபாட்டுக்கு நடக்கும் ஆனா நம்ம கண்ணுக்கு தெரியாது!----------வசந்த் திடீர்ன்னு சேனல் மாத்தும் போது சீரியல்ல ரம்யா கிருஷ்ணன் ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்கு. அப்புறம் ஏன் இயற்கை சீற்றங்களெல்லாம் ஏற்படாது??---------அசால்ட் 

இந்தியாவிலேயே மோசடி நிறுவங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்களில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது-ரிசர்வ் வங்கி #தமிழேண்டா..!--------------மைந்தன் சிவா

புதிய வறுமைக்கோடு அறிவிப்பு ஏழைகளை ஏமாற்றும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # பெரிய ஏழையே சொல்றார்-------------ஆறுமுகம்

ஜெயலலிதா பாடிய முதல் பாடலை எழுதிய வாலி மரணத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாதவருக்கு பெயர் 'அம்மா' என நம்பினால் நீயும் தமிழனே!----------------செ.இரா

 

Follow kummachi on Twitter

Post Comment

சென்னின் (அமர்த்தியா) எண்ணங்களும் மலிவான அரசியலும்.............

அமர்தியா சென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 1998 ம் ஆண்டு பெற்றவர். அவரை கௌரவிக்கும் விதமாக அப்பொழுதிருந்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 1999ம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத் ரத்னா" அவருக்கு சிபாரிசு செய்து, பெற்றுத்தந்தது.

இந்தியாவில் அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கான குடுமிப்பிடி சண்டைகளும், கோஷ்டி அடிதடிகள், கொள்கை விற்கும் கூட்டணிகள் என்று புதிய தெருக்கூத்துகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான கூத்துகளில் சும்மா இருப்போரை சீண்டிப் பார்ப்பது, நிபுணர்கள், அறிவாளிகள், முதலியோரை அரசியல் கட்சி அல்லக்கைகள் அவ்வப்பொழுது "அன்றாயரை" உருவி ஓடவிடுவது போன்ற காரியங்கள் நடக்கும். அந்த விதமாக இப்பொழுது செய்திகளை ஆக்கிரமித்து கொண்டிருப்பதுதான் அமர்தியா சென் விவகாரம்.

சென் மோடி பிரதமராக வருவதை தான் விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. உடனே பா.ஜ.க எம்.பி சாந்தன் மித்ரா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சென்னிற்கு அளித்த "பாரத் ரத்னா" விருதை திரும்ப பெறுவோம் என்று கூற காங்கிரஸ் இதை அரசியல் செய்ய ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறது.

போதாத குறைக்கு நம்ம சூனா சாமி வேறு சென் இந்தியரே அல்ல, என்று துறைநிமித்த காண்டில் அவர் பங்கிற்கு குரல் விடுகிறார்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது தியாகராய நகர் பணங்கல் பார்க் அருகே ஒரு தேர்தல் கூட்டம் நியாபகம் வருகிறது. அன்று எம்.ஜி.ஆரும், ஆர் வெங்கட்ராமன் அவர்களும் பேசுவதாக இருந்தது. அதற்கு முன் அ.தி.மு.க அல்லக்கைகள் பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒன்று நாலு முழம் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு கம்யூனிஸ்டுகளை காய்ச்சுவதற்காக கொர்பசெவிற்கு சவால் விட்டுக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த நண்பன் தக்காளி இவனே நாலு முழம் வேட்டிக்கு வக்கில்லாதவன் இது இங்கிருந்து கொர்பசெவிற்கு சவால் விடுது என்றான்.

இந்திய அரசியல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் சுவரோட்டிகளோடு சரி.Follow kummachi on Twitter

Post Comment

Thursday 25 July 2013

முல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்

முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளத்தின் புதிய அணை கட்டும் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கியது. தொடக்கத்திலேயே தமிழக அரசு வழக்கறிஞர்களை காய்ச்ச ஆரம்பித்தது. முல்லை பெரியாறு ஆற்றின் பங்கீடு குறித்த ஒப்பந்தத்தின் நகல்கள் யாவும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கவில்லை என்று முதல் ஆப்பு வைக்கப்பட்டது.

மேலும்1886 ம்ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இந்திய அரசுக்கும்தானே ஒப்பந்தம் இதில் தமிழக அரசு எப்படி உரிமை கோர முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர்கள் உரிய பதிலை தரவில்லை. (தமிழ்நாடு,  கொடநாடு எங்கே இருக்குன்னு கண்பீஸ் ஆயிருப்பாங்களோ? தமிழ்நாடு இந்தியால தானேபா கீது).

பின்னர் இதற்கு பதிலாக 1935ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகம் உரிமை கோர முடியும் என்று வாதிக்கப்பட்டது. ஆனால் கேரளா தரப்பிலோ அணை மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை உடைந்து போகக்கூடிய சாத்தியம் உண்டு, ஆதலால் மற்றுமொரு தடுப்பணை கட்டவேண்டிய நிர்ப்பந்தம் கேரளா அரசிற்கு இருக்கிறது என்று வாதிடப்பட்டது. மேலும் இதே காரணத்திற்க்காக முல்லை பெரியாறு அணையின் உயரத்தை நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்த ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ( நூற்றி நாற்பத்தியிரண்டு அடியாக உயர்த்தினால் தான் புவியீர்ப்பு விசையிலும் நீரின் அழுத்தத்திலும் பாதாள கால்வாய் வழியாக நமக்கு உரிய நீர் பாயும்).

இரண்டாவது நாள் விசாரணையின் போதும் தமிழக அரசு நினைத்தால் தமிழக அரசுக்கு முல்லை பெரியாரில் உரிமையுண்டு என்ற ஆவணங்களை தாக்கல் செய்ய முடியும் ஆனால் ஏன் தமிழக அரசு அப்படி செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 1886-ம் ஆண்டு இந்திய அரசுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டாலும் 1935ஆம் ஆண்டு சட்டப்படி இந்த உரிமையானது சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தானாகவே வந்துவிடும் என்று சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு சட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 1858, 1915,1935 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு என்பதற்கான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது அரசாங்க வழக்கறிஞர்களின் திறமையில் சந்தேகம் வருகிறது. அரசியல்வாதிகள் தங்களின் சொந்த வழக்குகளுக்கு நல்ல திறமையான வழக்கறிஞர்களை தங்கள் சார்பில் வாதாட நியமித்துக்கொள்கின்றனர்.

ஆனால் பொது பிரச்சினைகளுக்கு டுபாக்கூர் தேங்காய் மூடிகள்தான்கிடைப்பார்கள் போலும். 
 
எங்கும் எதிலும் அரசியல்.................போங்கப்பு...............ஹூம்...........மிடில

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 23 July 2013

கலக்கல் காக்டெயில்-117

காவிரி பாட்டிக்கு பாராட்டு

கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாக செய்தி வந்துள்ளது.

ரத்தத்தின் ரத்தங்கள் பாட்டிக்கு புகழ்மாலை போஸ்டர்கள் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

காவிரித்தாயே, பாரதத்தின் எதிர்காலமே என்று இனி பத்தடிக்கு ஒரு போஸ்டரை தமிழகத்தில் காணலாம்.

கர்நாடகாவில் நல்ல மழை பெய்துவருவதால் காவிரி நதியில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிவிட்டன, ஆதலால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் பிரச்சினையே அணையின் நீர்மட்டம் குறையும் போதுதான் நமக்கு திறந்துவிட மறுக்கப்படுகிறது.

ஒரு வழியாக மேட்டூர் ஆணை குறைந்த பட்ச உயரமான எழுபது அடியை எட்டி உள்ளது. இந்த வருடம் ஒரு போகத்திற்கு பிரச்சினை இருக்காது என்று நம்புவோம்.

இது வருடா வருடம் நடக்கும் கூத்து.

 தாத்தா அறிக்கைகள்

சிறிது நாட்களாகவே தாத்தா அறிக்கைகள் விட்டு மெல்ல அலைக்கற்றை, குடும்ப விவகாரங்கள் போன்ற செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது.

கட்சத்தீவும் கச்சடா கேள்விகளும், என்று பாட்டியும் தாத்தாவும் அறிக்கைப்போர்கள் நடத்தி ஊடகங்களுக்கு தீனி போட்டார்கள். தற்பொழுது என்.எல்.சி பங்குகள் விவகாரத்தில் காகிதப்போர்.

ஆகமொத்தம் இருகட்சிகளும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள்.

இனி கூட்டணி, என்று மக்களுக்கு அல்வாசேவை தொடங்கிவிடும்.

சட்டக்கமிஷனின் முடிவு - அப்படிப்போடு

ஆட்சிக் காலம் முடியும் நிலையில் உள்ள மத்திய, மாநில அரசுகள், தங்களது ஆட்சியின் கடந்த கால சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து சட்டக் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இது ஆள்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியிலோ, மாநிலத்திலோ ஆள்பவர்கள் ஆட்சி முடிவடையும் தருவாயில் தங்களின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விளம்பரம் செய்வார்கள். நாடு ஒளிர்கிறது என்றும், தங்களுடைய ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்றும் தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்வார்கள். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் வீணாவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது சட்டக்கமிஷன். சட்டக்கமிஷனின் இந்த திடீர் முடிவு காரணமாக காங்கிரஸ் கட்சிதான்அதிகம் அதிர்ச்சியடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது ஆட்சியின் சாதனைகளை சுமார் 630 கோடி ரூபாய் மதிப்பில் விளம்பரப்படுத்த திட்டமிட்டிருந்தது.

அப்படிப்போடு!!!!!!!!!!!!

ரசித்த கவிதை 

படைப்பாளியும் கடவுளும் 


வார்த்தைகள்
படைப்புகளாக மலர்ந்து
படைப்பாளியை பின் தள்ளியது.
வேண்டுதல்கள்
வரங்களாக இறங்கி
கடவுளை பின் தள்ளியது.
ஆயினும் -
தன்னை பின் நிறுத்திய
வார்த்தைகளுக்காகவும்
வேண்டுதல்களுக்காகவும்
யுகங்கள் தோறும்
காத்திருக்கின்றான்…..
படைப்பாளியும்
கடவுளும்!
---------------------------சரபோஜி

ஜொள்ளு

 

Follow kummachi on Twitter

Post Comment

Monday 22 July 2013

தமிழக பாஜக பவர் ஸ்டார் மாதிரி......வலை கீச்சுதே-------ரசித்த கீச்சுகள்

மதுரய சுத்துன கழுத வேறெங்கியும் போகாதாம்! சொலவடைசொல்லுவாங்க! #ட்வீட்டரை சுத்துனாலும் அப்பிடித்தான்!!-----வேடன்

சிங்கம் 3 எடுக்க சொல்லி ரசிகர்கள் தொல்லை #பல பஞ்சாயத்துக்கள் விரும்பியே பால்டாயில் குடிக்கிறாங்க------------தில்லுதொர

பால் பொங்கறப்ப, சாம்பார் கொதிக்கிறப்போ, தோசை கருகறப்போ நிறுத்த ஒரு ரிமோட் கண்டுபிடிக்காம செவ்வாய் கிரகத்துல என்னய்யா ஆராய்ச்சி?----ஆல்தோட்டபூபதி 

தந்தி சேவை நிறுத்தம் #அப்படியே பத்தாவது இங்க்லீஷ் செகன்ட் பேப்பர்ல தந்தி அடிக்க சொல்லி கேள்வி கேட்பீங்களே அதையும் நிறுத்துங்க----ஜூனியர் ஒல்ட்மாங்க்

முதியோர் இல்லத்தையும் அனாத இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள்.பாட்டி தாத்தாவும் பேரக் குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும்.---------விதை

சாக்கடை, சேறு,பன்னாடை, பரதேசி,மொள்ளைமாரி,முடிச்சி அவுக்கி,எல்லா கன்றாவிகளும் சேர்ந்து பந்த் நடத்துது இது எங்கே போய் முடியுமோபசி

தமிழக பாஜக பவர் ஸ்டார் மாதிரி...தானொரு காமெடி பீஸ்னு தெரியாமலே வாழ்ந்திட்டிருக்காங்க #தமிழகம்தழுவிய‌பந்த்------------------------திரு 

பயந்தவன் சொல்வான் "அந்த பொண்ணோட அண்ணன் போலீஸ்டா " துணிந்தவன் சொல்வான் "என் மச்சான் போலீஸ்டா#ரசிச்சது--------------அட்டகத்தி 

ஆடி பொறந்தாச்சா? வெள்ளிக்கிழமை, அமாவாசை எல்லாம் ஜாக்கிரதையா இருங்கப்பா! அம்மன், கூழ், ஸ்பீக்கர், பூசணிக்காய்!------------கலக்கல் கபாலி

கூடங்குளத்தில் இன்னும் இருபது நாளில் மின் உற்பத்தி -நாராயணசாமி #சீரான வளர்ச்சில இருக்குன்னு இப்பவாவது நம்புங்கய்யா..------மார்க் நல்லவன்

நான் ஏற்கனவே சொன்னா மாதிரி நான் எதையுமே ரெண்டாவது வாட்டி சொல்ல மாட்டேன்.. #மேனேஜர் ராக்ஸ்-------------வம்புக்கு

ஊரில் வேலை வெட்டி இல்லாதவர்களுக்காகவே, வாரநாட்களில் சன்டீவியில் படம் போடுகிறார்கள்! #அவதானிப்ஸ்!---வந்தியத்தேவன்

Follow kummachi on Twitter

Post Comment