Friday 26 July 2013

சென்னின் (அமர்த்தியா) எண்ணங்களும் மலிவான அரசியலும்.............

அமர்தியா சென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 1998 ம் ஆண்டு பெற்றவர். அவரை கௌரவிக்கும் விதமாக அப்பொழுதிருந்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 1999ம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத் ரத்னா" அவருக்கு சிபாரிசு செய்து, பெற்றுத்தந்தது.

இந்தியாவில் அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கான குடுமிப்பிடி சண்டைகளும், கோஷ்டி அடிதடிகள், கொள்கை விற்கும் கூட்டணிகள் என்று புதிய தெருக்கூத்துகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான கூத்துகளில் சும்மா இருப்போரை சீண்டிப் பார்ப்பது, நிபுணர்கள், அறிவாளிகள், முதலியோரை அரசியல் கட்சி அல்லக்கைகள் அவ்வப்பொழுது "அன்றாயரை" உருவி ஓடவிடுவது போன்ற காரியங்கள் நடக்கும். அந்த விதமாக இப்பொழுது செய்திகளை ஆக்கிரமித்து கொண்டிருப்பதுதான் அமர்தியா சென் விவகாரம்.

சென் மோடி பிரதமராக வருவதை தான் விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. உடனே பா.ஜ.க எம்.பி சாந்தன் மித்ரா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சென்னிற்கு அளித்த "பாரத் ரத்னா" விருதை திரும்ப பெறுவோம் என்று கூற காங்கிரஸ் இதை அரசியல் செய்ய ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறது.

போதாத குறைக்கு நம்ம சூனா சாமி வேறு சென் இந்தியரே அல்ல, என்று துறைநிமித்த காண்டில் அவர் பங்கிற்கு குரல் விடுகிறார்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது தியாகராய நகர் பணங்கல் பார்க் அருகே ஒரு தேர்தல் கூட்டம் நியாபகம் வருகிறது. அன்று எம்.ஜி.ஆரும், ஆர் வெங்கட்ராமன் அவர்களும் பேசுவதாக இருந்தது. அதற்கு முன் அ.தி.மு.க அல்லக்கைகள் பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒன்று நாலு முழம் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு கம்யூனிஸ்டுகளை காய்ச்சுவதற்காக கொர்பசெவிற்கு சவால் விட்டுக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த நண்பன் தக்காளி இவனே நாலு முழம் வேட்டிக்கு வக்கில்லாதவன் இது இங்கிருந்து கொர்பசெவிற்கு சவால் விடுது என்றான்.

இந்திய அரசியல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் சுவரோட்டிகளோடு சரி.



Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதெல்லாம் எப்போதோ பணால்...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

எஸ்.ரா.நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அரசியல் நாகரிகம் அறியாதவர்கள்! இவர்களை வைத்துக் கொண்டு நாம் எப்படி கரையேரப் போகிறோம்?!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்

ஜீவன் சுப்பு said...

சுவரொட்டிகள் ல கூட இன்னைக்கு நாகரீகம் இல்லங்க பாஸ் ...

//அமர்தியா சென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 1998 ம் ஆண்டு பெற்றவர். அவரை கௌரவிக்கும் விதமாக அப்பொழுதிருந்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 1999ம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத் ரத்னா" அவருக்கு சிபாரிசு செய்து, பெற்றுத்தந்தது.//

நம்மளோட மதிப்பு எப்பவுமே வெளிநாட்டுக்காரனுக்குத்தான் மொதல்ல தெரியுது ...

கும்மாச்சி said...

ஜீவன் சுப்பு வருகைக்கு நன்றி.

Anonymous said...

விடுங்க பாஸ் இவங்கெல்லாம் திருந்தவே மாட்டாங்க

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தினேஷ்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.