Monday 1 July 2013

கலக்கல் காக்டெயில்-115

ராஜ்யசபா கூத்து..........

ஒரு வழியாக தே.மு.தி.க. வும் தி.மு.க. வுக்குமான ஆறாவது சீட் குடுமிப்பிடி சண்டையில் அனுபவம் வென்றது. கேப்டன் அவரது கட்சியில் உள்ள எம்.எல். ஏக்களின் விசுவாசத்திற்கு வைத்த டெஸ்டாக இது இருக்கலாம். இருந்தாலும் கலைஞரின் அனுபவம், சாணக்கியத்தனம்!!!! மற்றும் கழுவும் மீனில் நழுவும் மீனாக மாறும் குள்ளநரித்தனம் முன்பு கேப்டனின் வியூகம் எடுபடாமல் போனது. மேலும் ன் மகளின் பாதுக்காப்பிற்கு எம்.பி. பதவி அவசியம், அதற்கு அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.

இந்த பிரச்சினையில் அவரது கட்சியிலிருந்து "கட்சியின்அபிமன்யூ" என்று வர்ணிக்கப்பட்டவர் எதிரி முகாமிற்கு இடம் மாறியிருக்கிறார். இதெல்லாம் அரசியலில் சகஜம்தான், இருந்தாலும் கட்சியில் இது போன்றவர்கள் கழன்று போவது நல்லதல்ல.
 
உத்ராகன்ட் கொள்ளை

உத்தராகண்டில்  வெள்ளத்தில் தவித்த மக்களிடம் சாமியார்களோ அல்லது போலி சாமியார்களோ கொள்ளையடித்ததை செய்திகள சொல்லுகின்றன, அனால் அதே செய்திகள் நிறைய மக்களின் உயிர்களை காப்பாற்றி கரை சேர்த்த ராணுவ வீரர்களின் செயலை காட்டாமல் காப்பாற்றி கொண்டு வரப்பட்டவர்களுக்கு உணவும் தண்ணியும் தந்த அம்மாவை புகழ்கின்றன.

இது அல்லவோ பெரிய திருட்டு.

ரசித்த கவிதை 

திரிபுக் காட்சியின் சூத்திரதாரிகள்

அக்கறையாய்
எந்த அந்தரகத்தினுள்ளும்
எளிதாய் நுழையலாம்
சுண்டி எறிந்த
கண்ணீர்த்துளிகள்
உகுத்தவர் அறியாது
சேமித்து
சபையில் ஏளனம்
செய்யலாம்
ஒரு கிழிசலின்
வழிப் புலனாகும்
அனைத்திலும்
வக்கிரம் பதியலாம்
ஊசிமுனை
அழுத்தம் தந்து
சூழலெங்கும்
நஞ்சு பாய்ச்சலாம்
நட்புக் காதலாகவும்
காதல் மற்றொன்றாகவும்
திரிந்து போக
துணை போகலாம்
எல்லாம் செய்யலாம்
இயல்பாய் திரியலாம்
நமக்காய் எல்லாம்
செவ்வனே ஆகும்வரை

நன்றி-------------------------------சசிகலா பாபு    


ஜொள்ளு







Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை...

வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Unknown said...

படம் அருமை

Advocate P.R.Jayarajan said...

சசிகலா பாபு மற்றும் அனுஷ்காவிற்கு கும்மாச்சி வழியாக நன்றி...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.