Sunday 29 May 2011

கலக்கல் காக்டெயில்-31

நெஞ்சை கலங்கடித்த குரல்...........


சிங்கப்பூர் செல்வதற்கு முன் ரஜினி பேசியதாக ஒரு ஆடியோ கோப்பு அவரது இளைய மகளால் வெளியிடப்பட்டதாக இணையங்களில் வெளி வந்து கொண்டிருக்கிறது. கண்ணுகளா............... என்று ஆரம்பிக்கும் அந்த ரஜினியின் குரலில் கம்பீரம் இல்லை. வலியிலும், வேதனையிலும் உள்ள குரல் கேட்டவர்களை கலங்க அடிக்கிறது. காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் அவர் மேல் இத்தனை அன்பு காட்டுகிறீர்களே என்று நெகிழ்கிறது. கடவுள் கிருபை, குரு கிருபை உண்டு என்று சொல்லி கட்டாயம் தலை நிமிர்த்தி வருவேன் கண்ணுகளா........... என்கிறார்.

அந்தக் குரலை கேட்டவுடன் நெஞ்சை ஏதோ செய்கிறது.

எத்தனையோ உள்ளங்களை கட்டிப் போட்ட ரஜினி நலமுடன் திரும்ப ஆண்டவனை வேண்டுகிறோம்.

கட்டாய ஹெல்மெட் (தலை கவசம்)

சென்னையில் நேற்று முதல் இரு சக்கர வாகனங்களை செலுத்துவோர் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டுமென்றும், இல்லையேல் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும், அதற்காக தனி படை அமைக்கப் படும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. ஆஹா திருந்திட்டாங்கப்பு என்று நினைக்கும் முன்பே ஏன் பக்கத்து வீட்டுப் பையன் தன் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று வந்து கொண்டிருந்தான். அவனை நிறுத்தி தலைக் கவசம் அணிய சொன்ன பொழுது, ஒன்னும் பிரச்சனை இல்லை, இப்பொழுதுதான் காவல் துறையினர் என்னை பிடித்தார்கள், ஐம்பது ரூபாய் அபராதம் கட்ட சொன்னார்கள், இல்லை என்றேன், கையில் உள்ள பத்து ரூபாயை பிடுங்கிக் கொண்டு அனுப்பி விட்டார்கள் என்றான்.

வாழ்க........................நல்ல கல்லா கட்ட வழி.

சென்னை விமான நிலையம்

நான்கைந்து மாதங்களாக மாதம் இருமுறை சென்னை சென்று வந்து கொண்டிருக்கிறேன். பேய் தூங்கும் வேலையில் தான் விமானம் தரையிறக்கம். அங்கிருந்து வீடு செல்ல கால்டாக்ஸி ஏறக்குறைய விமான டிக்கெட் ரேஞ்சுக்கு கேட்கிறார்கள். கொஞ்சம் வெளியே வந்து பார்க்கிங் ஏரியா வந்தால் பழைய ஸ்டாண்டர்ட் டாக்ஸிகாரர் யாரவது மாட்டினால் இருநூற்றைம்பது கேட்பார்கள். இப்பொழுது விமான நிலையம் புதுப்பிக்கும் பணி நடப்பதால் கூடாரம் போட்ட பாதையில் பத்தடி நடந்தால் ஜி.எஸ். டி ரோடு மேம்பாலம் வந்து விடுகிறது. அங்கு இருக்கும் ஆட்டோ காரர் முதலில் கேட்டவுடன் ஏறக்குறைய கால்டாக்ஸி சார்ஜ் கேட்டார், இன்னா தலைவா நம்மகிட்டே இவ்வளவு கேட்கிறே என்றவுடன், நூற்றைம்பது ரூபாயில் அடையார் கொண்டு விட்டார். “தலைவா” என்றால் என்ன மதிப்புப்பா.

அரசியல் “ஆடுகளம்” கல்வித்துறை

புதிய ஆட்சி வந்தவுடன் சமச்சீர் கல்வியை கைவிட்டு மறு பரிசீலனை என்று அச்சடித்த புத்தகங்களை கிடப்பில் போட்டு விட்டது. இப்பொழுது போன ஆட்சியில் கோவை அண்ணா, திருச்சி அண்ணா என்று பிரித்த அண்ணா பல்கலைகழகத்தை மறுபடியும் ஒன்றாக்கி சென்னையிலிருந்து இயங்க வைக்கப் போகிறார்களாம். இதே பொழைப்பா போச்சு. புதியதாக வரும் கட்சி பழைய கட்சி செய்த வேலையை உல்டாவாக்குவது. அதுக்கு புதிய துறை, மந்திரி, வாரியம் காண்ட்ராக்ட் என்று கொள்ளையடிக்க புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்கப்பா.

கொட நாட்டுல குப்புற படுத்து யோசிப்பாய்ங்களோ.

நகைச்சுவை

செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..


“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....



ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு


புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...


மாணவர்கள்: புரியல சார்...



.காதலி காதலனிடன் சொல்கிறாள் ,


முடியாது என்று சொல்பவன் முட்டாள்...


முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...


இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?




ஜொள்ளுப் படம்



Follow kummachi on Twitter

Post Comment

Friday 27 May 2011

சமச்சீர் கல்வி அவசியமா?

தற்பொழுது ஆட்சி மாறியதால், சமச்சீர் கல்வி எல்லோர் வாயிலும் விழுந்து வறுபட்டு, அரைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அரசாங்கம் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டம், மாநில பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த சமச்சீர் கல்வி தேவை என்று ஒரு குழு அமைத்து காபி குடித்து, வடை கடித்து வாதாடி, குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் என எல்லா மாநிலங்களுக்கும் விசிட் அடித்து, பிறகு முடிவெடுத்து, புத்தகங்களும் அச்சிடப்பட்டு விநியோகித்த பின் ஆட்சி மாறியதால் இப்பொழுது இந்த திட்டம் மறு பரிசீலனை செய்யப்படுகிறது. இதனால் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறப்பது கால தாமதம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஆட்சி தங்களுக்கு பிடிக்காத பாடங்களை நீக்கி விட்டு விநியோகிப்பதில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. இதையே தான் முன்னாள் முதலமைச்சரும் சொல்லியிருக்கிறார்.


அதை அரசியல்வாதிகளுக்கும், கல்வி அமைப்பாளர்களுக்கும் விட்டு விடுவோம். எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு வருகிறேன்.

நான் படித்த பள்ளி தமிழ் நாட்டு அரசு பாட நூல் நிறுவனம் தயாரித்தப் புத்தகங்களை தான் பாடங்களாக வைத்தது. எனது அடுத்த வீட்டுப் பெண்ணோ மத்திய அரசு பாடநூலைப் படித்தாள், அவள் என்னைவிட இரண்டு வயது சின்னவள். நான் பதங்கமாதலை பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது அவள் எட்டாவது வகுப்பில் “sublimation” படித்தாள். நான் பௌதிக தராசின் பாகங்களை படிக்கும் பொழுது. அவள் “Physical balance” ல் எழுதிய காகிதத்திற்கும் எழுதாத காகித்தத்திற்கும் உள்ள எடை வித்தியாசத்தைக் கண்டுபிடித்தாள். எனக்கு அப்பொழுது இருவரின் பாடத் திட்டத்தில் உள்ள வேறுபாடு உரைக்கவில்லை.

ஆனால் கல்லூரியில் அடி எடுத்து வைத்த பின் மத்திய அரசின் பாடங்களை படித்தவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்யாசம் புரிந்தது. அவர்களால் எளிதாக புரிந்து கொண்டதை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டோம். பெறும்பாலும் முதல் ஆறு மாதங்களில் வந்த பாடங்கள் அவர்கள் ஏற்கனவே படித்ததுதான். முதல் செமெஸ்டரில் பாதி பேர் புட்டுக்கொண்டோம். ஆனால் இதெல்லாம் முதல் ஆறு மாதங்கள்தான். பின்னர் நாங்களும் அவர்கள் அளவிற்கு முன்னேறினோம். இருந்தாலும் கல்லூரியில் முதல் மூன்று இடங்களை எங்களால் பிடிக்க முடியவில்லை.

நாங்கள் படிக்கும் காலத்தில் இருந்த வித்யாசம் படிப்படியாக குறைக்கப் பட்டதை என்னால் இப்பொழுது உணரமுடிகிறது. ஆனால் அதே சமயத்தில் கோச்சிங், டியூஷன் என்ற பணம் பிடுங்கி சமாச்சாரங்கள் பெருகிவிட்டன. நாம் படித்த காலத்தில் டியூஷன் என்பது மக்குப் பிள்ளைகளுக்குதான் என்ற எண்ணம இருந்தது. ஆதலால் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதை வெளியில் சொல்லமாட்டோம். ஆனால் இப்பொழுது காசு உள்ளவர்கள் எல்லோரும் அவசியமோ அவசியம் இல்லையோ டியூஷன் வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருக்கிரார்கள். காசு உள்ளவர்களுக்குத்தான் நல்ல படிப்பு என்ற மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்றும் மத்திய அரசு பொதுப் பரீட்சைகளில் “Application based” வினாக்களை கொடுத்து மாணவர்களை சிந்திக்க வைக்கிறார்கள். இது மாநில பொதுத் தேர்வுகளில் இல்லை. கொடுத்த பாடங்களை மனப்பாடம் செய்து கொட்டினாலே முழு மதிப்பெண்கள் பெறமுடியும். ஆதலால் இங்கு வாங்கும் மதிப்பெண்கள் கேள்விக்குறியாகிறது.

ஆதலால் மாநில அரசின் கல்வியமைப்பு உயர்த்த வேண்டும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. அது பாடப் புத்தகங்களில் மட்டும் இல்லை, ஆசிரியர்களின் தரம், தேர்வுகளின் தன்மையிலும் இருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 25 May 2011

கலக்கல் காக்டெயில்-30

கிளம்பிட்டாங்கையா..........................


அம்மா ஆட்சிக்கு வந்தவுடனேயே புனித ஜார்ஜ் கோட்டையை புதுப்பிக்க அறுபத்தைந்து கோடி தண்ட செலவு, வீண் பிடிவாதத்தில் புதியதாக கட்டிய தலைமைச்செயலகம் ஆயிரம் கோடி ருபாய் அனாமத்தாகிறது.

அடுத்ததாக சமச்சீர் கல்விக்கு புத்தகங்கள் எல்லாம் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு பட்டுவாடா செய்த பின் ரத்து செய்யப்பட்டு அதற்கு ஒரு இருநூறு கோடி தண்டம். இதனால் பள்ளிகள் வேறு காலதாமதமாக திறக்கப்படுகிறது. பெற்றோர்களுக்கு பெரிய தலைவலி.

அடுத்த படியாக பேருந்துகளில் பொன்மொழிகள் அழிப்பு, முகபேர் ஜே.ஜே நகராக பெயர் மாற்றம். இன்னும் இன்னும் என்ன என்ன காத்திருக்கிறதோ ஓட்டுப் போட்ட பொது மக்களுக்கே வெளிச்சம்.

அவசர சிகிச்சை ஆம்புலன்சின் கதி தெரியவில்லை. இப்பொழுதிருக்கும் மற்றொரு கவலை மெட்ரோ ரயில் திட்டம் என்ன ஆகும்? என்பதே.

மரியம் பிச்சை

முதன் முதலில் அம்மா கடாட்சம் பெற்று அமைச்சராகி சட்டசபைக்கு செல்ல திருச்சியிலிருந்து கிளம்பி பெரம்பலூர் வருமுன்னே கோர விபத்தில் மரணம். இதில் ஏதோ மர்மம் இருப்பதாக கட்சி ஆட்கள் அம்மாவிடம் சொல்ல அம்மா சி.பி.சி.ஐ.டி போலிஸ் விசாரணைக்கு ஆணையிட்டிருக்கிறார்கள். திருச்சியில் யார் தலை உருளப் போகிறதோ?.

மஞ்சள் துண்டிலிருந்து வெள்ளை துண்டிற்கு மாற்றம்.

ஆட்சி போன கவலை ஒரு புறம் வாட்ட, தொங்கிப் போயிருக்கும் உடன் பிறப்புகளை உசுப்ப யோசிக்குமுன், மகள் கைது ஐயாவை ரொம்பவே கலங்கடித்திருக்கிறது. குடும்பமே டில்லியில் முகாமிட்டிருக்கிறது. இப்பொழுது நேரம் சரியில்லை சுக்கிரனுக்கு உகந்த வெள்ளை நிறத்திற்கு மாறவேண்டும் என்று ஏதோ ஒரு புடலங்காய் ஜோசியர் சொன்னதால் ஐயா தோளில் தொங்கும் மஞ்சள் வெண்மைக்கு மாறியிருக்கிறது, என்னே பகுத்தறிவு. அடிக்கடி துவைத்ததால் சாயம் போயிற்று என்று உடன் பிறப்புகளுக்கு சமாதானம் சொன்னாலும் சொல்லுவார்.

நகைச்சுவை 18++

அந்த ஒயின் கம்பெனிக்கு ஒயின் சுவைத்து பார்பதற்கு (Wine taster) ஆள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். தேர்விற்கு அந்த ஆளை முதலில் இருந்தே முதலாளிக்கு ஏனோ பிடிக்கவில்லை. எப்படியாவது கழித்து விடவேண்டும் என்று பார்த்தார்.


முதலில் ஒரு கிளாஸ் ஏதோ ஒரு தயாரிப்பை கொடுத்தார்கள். அவன் சுவைத்துப் பார்த்து எந்த தயாரிப்பு, எத்தனை ஆண்டுகள் காஸ்கில் வைக்கப் பட்டது என்றதை மிகவும் துல்லியமாக சொல்லிவிட்டான்.


முதலாளி தன் செக்ரடரியிடம் வேறு ஒரு தயாரிப்பை கொண்டு வர சொன்னார், அவளும் கொடுக்க வேலைக்கு வந்தவன் அதையும் சரியாக சொல்லிவிட்டான்.


முதலாளி கடுப்பாகி செக்ரடரியிடம் ஏதோ சமிக்ஞை செய்ய அவள் வேறு ஒரு கிளாஸ் கொண்டு வந்தாள். வேலைக்கு வந்தவன் அதை குடித்து, இருபத்தைந்து வயதுப் பெண், நாலு மாத கர்ப்பம், மவனே வேலையை கண்டி எனக்கு தரவில்லை என்றால் குழந்தைக்கு அப்பன் பேரை சொல்லிவிடுவேன் என்றானாம்.



சைடு டிஷ் (ஊறுகா)


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 24 May 2011

குனிய வைத்து குத்திட்டாங்க தலைவரே

சென்னை: கனிமொழி விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருக்க ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.


அப்போ எதுக்கு தலைவரே சி.பி. ஐ. ஆறாம் நம்பர் செல்லில் வைத்து குடையறாங்க.

இதுதொடர்பாக தனது கட்சி உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

என்னைப் பற்றியும், என் குடும்ப வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கைப் பற்றியும் நேரம் வரும்போதெல்லாம் பல முறை உனக்கும், உன் வாயிலாக ஊராருக்கும் சொல்லி இருக்கிறேன்.

நீங்க சொல்ல வேண்டாம் தலைவரே, அதான் ஊரு மொத்தமும் பேச்சு.

நான் உயிரினும் மேலாக கருதும் நமது கழகம், பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் கால கட்டம் இது. அந்த இழப்புக்கு எது காரணம்?

தேர்தல் முடிவு நாளில் முடிவு அறிவிப்பு தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே உங்க உடன் பிறப்புங்க, கெட்ட வார்த்தைகளில் யார் காரணமோ அவங்க பேரை சொல்லி வசை பாடிகிட்டே அறிவாலயத்திலிருந்து கிளம்பிட்டாங்க. அதனால் காரணம் நீங்க சொல்ல வேண்டாம்.

தமிழ்நாட்டிற்கென்றே தனியான "ஜபர்தஸ்து''களை, ஜனநாயக விரோதச்செயல்களை, சாட்டைகளாக கொண்டு, சர்வாதிகார "பாட்டை'' வகுத்துக்கொண்ட தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை.

அதான் தலைவரே அடிச்ச துட்டை கொடுக்க விடாம பண்ணிட்டாங்க அவாள் கூட்டம்.

நான் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் தள்ளாடி நடந்தும் பின்னர் திருவாரூர் பள்ளியில் பயின்றும், அங்கு பெற்ற அறிவால் அந்த இளமையிலேயே அண்ணாவையும், பெரியாரையும் முறையே அரசியல் இயக்கத்திற்கும், அறிவு இயக்கத்திற்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டும், சூடு தணியாத சுயமரியாதை உணர்வோடு பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

ஆமாம் தலைவரே, ஆனால் அதையெல்லாம் தான் உங்க குடும்பத்தினர் செழிக்க காங்கிரசிடம் அடகு வைத்துவிட்டீர்களே, அதைப்பற்றி இப்பொழுது எதுக்கு பேச்சு.

அப்படியானால் இத்தனை ஆண்டுக்காலம் கட்சிக்கு பொருளாளராக, 42 ஆண்டு காலம் கட்சிக்குத் தலைவராக, 19 ஆண்டு காலம் ஆட்சிக்கு முதல்வராக இருந்த காலகட்டங்களில் எதுவுமே சம்பாதிக்க வில்லையா என்ற கேள்விக்கு நான் தரும் பதில் ஆம்; சம்பாதித்தேன், "தமிழுக்கு தொண்டு செய்வோன்'', "தமிழ் வாழ தலையும் கொடுக்கத்துணிவோன்'' என்ற பட்டப்பெயர்களை, புகழுரைகளை நிரம்ப சம்பாதித்தேன்.

வேட்பாளர் மனுவில் நாற்பத்தியேழு கோடி போட்டதை மறந்துட்டிங்க தலைவரே.

"சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்து பிரிந்ததையொட்டி - 18-10-2005 அன்று "சன்'' தொலைக்காட்சி நிறுவனத்தால் தரப்பட்ட தொகை 100 கோடி ரூபாயில் - 22.5 கோடி ரூபாய் வருமான வரியாக முறைப்படி செலுத்திய பின் எஞ்சிய தொகையான 77.5 கோடி ரூபாய் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது என் இளைய மகள் கனிமொழி தனக்குக் கிடைத்த 2 கோடி ரூபாயை பங்குத்தொகையாக செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

தலைவரே கணக்குல தப்பு இருக்குது. இன்னாது இரண்டு கோடிதான் கனிமொழிக்கா? ராசாத்தி அம்மா இத்த படிக்கப் போறாங்க.


என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர்கூடி, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள போதிலும்கூட, அத்துடன் நிம்மதி அடையாது, நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி - புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று அதுவும் "தர்ப்பைப் புல்'' முளைத்த இடமாகப் போக வேண்டுமென்று குமரி முனையிலிருந்து இமயக் கொடுமுடி வரையிலே உள்ளவர்கள் தவம் கிடக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

“தர்ப்பைப்புல்” என்ற இடத்தில் சூட்சுமம் வைத்த நீவிர், முதலிலேயே உஷாரா இருந்திருக்கணும். தலைவா இந்திய ஜனத்தொகையில் மூன்று விழுக்காடு இருந்து கொண்டு ரொம்ப படுத்தரானுங்க. குமரி முதல் கொடுமுடி வரை உங்க கதைய நாரடிச்சுட்டானுங்க.

ஆனால் உங்க உடன் பிறப்புங்க அப்படி நினைக்கவில்லை. நீங்க உங்க குடும்பத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் ரொம்ப குனிந்து கட்சியை அடகு வைத்து, உங்க தலையே எங்கே என்று தேட முடியவில்லை. முதலில் தலைய வெளிய எடுத்து அண்ணா பெரியாரிடம் கற்ற தன் மானம் எங்கே? என்று தேடுங்க, அடுத்த முறை ஆட்சிக்கு வரலாம்.

தலைவரே கடைசியா ஒன்னு, உங்களை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள், தமிழகத்தை காட்டாட்சியிலிருந்து காப்பாற்றி, காட்டேரியிடம் கொடுத்த தன்மான தலைவர் நீங்க தான்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 23 May 2011

ரஜினி

ரஜினியின் உடல்நலத்தில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் மருத்துவமனை செய்திக்குறிப்பு அவரது ரசிகர்களுக்கு நிம்மதி தந்திருக்கிறது.


கடந்த ஒருவாரமாக என்.டி.டி.வி, ஹெட்லைன்ஸ் டுடே என்று எந்த சேனலை பார்த்தாலும் ரஜினி உடல் நலம் பெற்று திரும்ப வரவேண்டும் என்ற ஸ்க்ரோல் மெசெஜ் ஓடிக்கொண்டிருக்கிறது.

அவரது எண்ணற்ற ரசிகர்கள் விதவிதமான யாகங்கள், தங்கத்தேர் இழுத்தல், அலகு குத்துவது, மண்சோறு உண்பது என்று நேர்த்திக்கடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஜூன் 1 இந்தியா டுடே இதழ் கவர் ஸ்டோரியாக “ரஜினி எனும் மந்திரம்” என்று ஒரு கட்டுரை வெளியிருக்கிறது. “தலைவா உன் உடம்பு சரியாகிவிடும் ஐஸ்வர்யா ராய் மகளுடன் ஹீரோவாக நீ நடிக்கப் போறே” என்று அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் ட்வீட்டுகிறார் என்ற வாக்கியங்களுடன் கட்டுரை தொடங்குகிறது.

சிகிச்சை பெற்று வரும் தலைவரின் தரிசனம் கிடைக்காதா என்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

ரஜினி ஐ.சி.யூவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்று செய்திக் கேட்டவுடன் போரூர் பிரதான சாலையே போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவிற்கு கூட்டம் கூடியிருக்கிறது.

தமிழ் திரைப்படத்திற்கு அவர் தங்கச்சுரங்கம். இவரால் வாழ்வு பெற்ற தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மிக அதிகம். இவரது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையே வந்தாலும் அவர் ரசிகர்களுக்கு அன்று தான் தீபாவளி, பொங்கல் எல்லாம். ஐநூறு கோடி வரை பணம் புரளும் தமிழ் சினிமா ரஜனியை சுற்றித்தான் இயங்குகிறது என்றால் அது மிகையாகாது. திரையுலகின் மீது இவர் போல செல்வாக்கு செலுத்துபவர்கள் யாரும் கிடையாது என்கிறார் சன் பிக்சர்ஸின் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.

இவருக்கு திரைப்படத்துறை, அரசியல்தாண்டி நண்பர்கள் பல. இவருக்கு சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உள்ள ரசிகர் கூட்டம் ஏராளம்.

அவர் எஜமான் படத்தில் சொல்வது போல் “இது அவராக சேர்த்தக் கூட்டம் அல்ல தானாக சேர்ந்தக்கூட்டம்”. இவையெல்லாம் அவர் திரையில் செய்யும் சாகசங்களையும் தாண்டி நல்ல மனிதராக அடையாளம் காட்டிக்கொண்டதால் தான் என்பது உண்மை.

ரஜினி, நீவிர் விரைவில் நலம் பெற வேண்டுகிறோம்.

தலைவா “ராணா” வாக விரைவில் எதிர்பார்க்கிறோம்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 18 May 2011

இன அழிப்பு நாள்

மே பதினெட்டு யார் மறந்தாலும் தமிழன் மறக்கமாட்டான், குறிப்பாக ஈழத்தமிழன். முள்ளிவாய்க்கால் அவலம் தமிழன் மார்பில் பட்ட தழும்பு. வடுவை பார்க்கும் பொழுதெல்லாம் நம்பிக் கழுத்தறுத்து இந்த நிலைக்கு ஆளாக்கிய தொப்புள் கொடி உறவு என்று ஜல்லியடித்த தமிழீனத்தலைவர் முகம் ராட்சசன் போல் வந்து போகும்.


தங்களது சுதந்திரத்திற்கு போராடிய ஒரு மாவீரனை இழந்து அந்த சமூகம் மாலுமி இல்லாத கப்பல் போல தத்தளித்து சிங்களக் காடையரின் அராஜகத்திற்கு ஆளாகி நிற்கிறது.

போராளிகளை கட்டுக் கோப்பாக வைத்து ஒரு இயக்கத்தை மிகவும் நேர்மையாக நடத்தி சிங்களவனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி முப்பது வருடப் போராட்டம் சீரான பாதையில் செலுத்திய தலைவன், கடைசி வரை களத்தில் இருந்து குடும்பத்துடன் உயிர் தியாகம் செய்தவன். சூழ்ச்சியனால் கொல்லப்பட்டவன். இலவசங்கள் கொடுத்து தலைவனாகவில்லை, அடுத்தவர் புகழில் ஆட்டையை போட்டு சாவு ஊர்வலத்தில் சவ வண்டியில் அமர்ந்து தலைவனாகவில்லை. அல்லது தலைவர் இறந்தவுடன் ஏழு பேரை பின்னுக்கு தள்ளி, நடிகனின் துணையோடு, “பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவைத்த குற்றமா” என்று வாய்ச்சொல் வீரம் கட்டி தலைவனாகவில்லை.

மாவீரா உன்னையும் உன் போராட்டத்தையும் அழித்த கூட்டத்தினர் வசிக்கும் நாட்டில் இருக்கும் நாங்கள் அவர்கள் செயலுக்கு வெட்கி தலை குனிகிறோம்.

இந்த மே மாதம் பதினெட்டாம் தேதி வரும் போதெல்லாம் எங்கள் நெஞ்சில் உள்ள நெருஞ்சி முள் வேதனையை அதிகப்படுத்தும்.

Follow kummachi on Twitter

Post Comment

முதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம்

புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம் இல்லை மடல், அப்பப்போ தங்கத்தாரகை, தைர்யலட்சுமி, பொன்னகை துறந்த புன்னகை அரசி, அம்மா எல்லாம் போட்டுக்கோங்க.


உங்களை மறுபடியும் மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு நீங்க அப்படியே நேர்மையானவங்க, தமிழ் நாட்டை தங்க மாநிலமா ஆக்குவிங்க, விலைவாசி எல்லாம் அப்படியே குழி தோண்டி இறங்கிவிடும் என்று நம்பிக்கையில் அல்ல.

போன ஆட்சி அடிச்ச கூத்து, பத்திரிகைகள் எடுத்துக் கூறியும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் அதற்கு சாதிச் சாயம் பூசி மழுப்பியதைக் கண்டு மக்கள் கடுப்பானார்கள்.

குடும்பத்தோடு அடித்த கொள்ளை, முதல் பெண்டாட்டி, மக்கள், வப்பாட்டி, மகள் என்று போட்ட ஆட்டம் அவர்களுக்கு ஆப்பாகி உங்களுக்கு டாப்பாகிவிட்டது.

அது போகட்டும் அத்த விடுங்க.

ஆட்சிக்கு வந்தவுடனே தலைமை செயலகத்தை கோட்டைக்கு மாற்றி வீண் செலவில் தொடங்குகிறீர்கள். ஓட்டுப் போட்ட மக்கள் இப்பொழுது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

உர ஊழலில் ஆரம்பித்து கைதுப் படலம் தொடங்கியிருக்கிறீர்கள், இது அப்படியே முன்னாள் அமைச்சர் வரை போகும் என்பதில் தோல்வியடைந்தவர்கள் நடுங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் மக்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது இதையல்ல.

அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, தடையில்லா மின்சாரம் கொடுத்தால், எங்களுக்கு வேண்டியதை நாங்களே சம்பாதித்து டாஸ்மாக்கில் தண்ணியடித்து மட்டையாகி இருப்போம், அடுத்த தேர்தல் வரும் வரை.

இப்படிக்கு,

அடுத்த தேர்தல் வரும் வரை போட்டதை தின்று, டாஸ்மாக் வாசலில் கடை திறக்க தவமிருக்கும் டகால்டி.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 15 May 2011

மூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்......................

தலைப்பைப் பார்த்து ஏதோ “கதை” டுபாகூர் என்று வருபவர்கள் அப்படியே அபீட் ஆயி அடுத்த ப்லோகுக்கு போய்க்கினே இருங்க.


இந்த பதிவு தற்போது நமது தாய் திருநாட்டின் நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்களை பற்றிய அலசல்.



ஷீலா தீட்சித்.

டெல்லியின் முதலமைச்சராய் ரொம்ப நாளைக்கு சீட்டை தேய்த்துக் கொண்டிருக்கும் பெண்மணி.. தலைமைக்கு என்றும் ஓயாத ஜால்ரா. கல்மாடி களி தின்னும் பொழுது கூட இருந்து கொள்ளையடிச்ச அம்மா அம்பேல். கழுவுற மீன்ல நழுவுற மீன். காமன் வெல்த் விளையாட்டில் எல்லோரும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிச்சு கல்மாடிய களி தின்ன சொல்வது நமது சட்டத்தின் திருவிளையாடல்.



மாயாவதி.

தோற்றத்தில் நம்ம வளர்மதி பிச்சை வாங்க வேண்டும். ஓட்டளித்த மக்களையும் ஏழைகளையும் ஏதோ எடுபிடி ரேஞ்சில் வைக்கும் தாய்க்குலம். கிரேட்டர் நொய்டா விவசாய நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி “யமுனா எக்ஸ்பிரஸ்வே” மேல்மட்ட சுரண்டல் காரருக்கு ஷாப்பிங் சென்டரும், மாலும் கட்ட விற்று காசு பார்த்த புண்ணியவதி. கன்ஷிராமுக்கு வைத்த ஆப்பு அம்மா கட்டை வேகும் வரை கூட வரும்.

ஜெயலலிதா

ஆடம்பரத்தின் முடி சூடிய ராணி. அடுத்தவர் புகழிலும் செல்வாக்கிலும் ஆட்டையைப் போடும் அதீத அரசி. எம்.ஜி ஆர். புகழில் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கும் கொற்றவை. ஐந்தாண்டு காலம் கொட நாட்டில் குப்புறப் படுத்து ..சு விட்டுக் கொண்டிருந்தவரை வப்பாட்டி வழக்கில் கோட்டையில் ஏற்றிய புகழ் தமிழினத் தலைவர் பெருமை கொள்ளலாம். தொண்டர்கள் வெய்யிலில் வாடி வெற்றியை கொண்டாடும் பொழுது உப்பரிகையில் நின்று இருபது செகண்ட் கையாட்டி ஊக்குவித்த தலைவி. ஆரம்பமே அலம்பல். நேற்றைய சென்னை வாசிகள் ஐந்து மணி நேரம் போக்கு வரத்தில் சிக்கிய அவலம் சொல்லும் இவரின் ஆட்சி செய்யப் போகும் அவலத்தை. வக்கிரத்தின் உச்சம் பெருச்சாளிக் கோட்டையை புதுப்பித்து உட்காரப் போகிறார்களாம்.

தீதி மம்தா..............


பதினேழு வயதில் அரசியல் பிரவேசம். சி.பி,எம்மை எதிர்த்து அரசியல் போராட்டம். எதிர் கட்சி தடியடியில் மண்டை உடைப்பு. கம்யுனிஸ்ட் ஜாம்பவான் சோம்நாத் சட்டர்ஜியை எதிர்த்து வீழ்த்திய பெருமை இவரின் சாதனைகளில் சில. இவரது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியதில் மேற்கு வங்காளத்தை கிட்ட தட்ட இருபத்தைந்து வருடத்திற்கு பிறகு நேரில் கண்ட எனக்கு வியப்பு. அமைதியான பிரசாரம். மக்களுடன் மக்களாக கலந்து ஒரு பருத்தி சேலையும் ஹவாய் செருப்புடன் தோன்றும் எளிமையான தோற்றம். பெண் என்பதால் சலுகை எதிர் பார்க்காத மனோ பாவம். காலி காட்டில் அவர் வீட்டை நேரில் பார்த்த எனக்கு தோன்றிய ஆச்சர்யம் மறைய வெகு வருசங்கள் ஆகும்.

என்.டி.டி.வி தொலைகாட்சி நிருபர் பர்கா தட் “தீதி நீங்களும் ஜெயலலிதாவும்”: என்று ஆரம்பித்தவுடனே குறுக்கிட்டு “என்னையும் அவர்களையும் ஒப்பிடாதீர்கள் “ என்று கூறியதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. முப்பத்தி நான்கு ஆண்டுகளாக வெறும் நானூறு கிலோ மீட்டர் வளர்ச்சி கண்ட ரயில்வேயை ஒரே ஆண்டில் இரண்டாயிரம் கிலோ மீட்டர வளர்ச்சிக்கு வித்திட்டு பாராளு மன்றத்தில் “ஆம் என் மாநிலத்திற்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள்” என்று குரல் உயர்த்திய தீதி உம் காலத்தில் மேற்கு வங்காளம் உயர்வு பெறும் என்ற வங்காளிகளின் நம்பிக்கை எதிர் பார்ப்பு வீண் போகாது.

.





Follow kummachi on Twitter

Post Comment

Saturday 14 May 2011

கண்ணே கனி களி தின்ன ஆசையா?.................

வெற்றிக் களிப்பில்


திளைப்போம் என

சுற்றிக் களைத்த

உடன் பிறப்பே

இனி கேப்பைக் களி தின்ன

அணி திரண்டு நிற்போம்

கொடுத்த இலவசங்கள்

கூரை ஏறிக் காக்கும் என

படுத்திருந்து கண்ட கனவு

கடுப்பேற்றிப் போனதடா

வினை விதைத்தோம்

வினை அறுத்தோம்

கொட நாட்டில் படுத்தவரை

கோட்டையில் கொடி

ஏற்ற வைத்தோம்

குடும்பத்தை வளர்க்க

கூண்டோடு குனிந்தோம்

தமிழினம் என்று சொல்லி

தமிழர்களை அழித்தோம்

கூட இருந்து குனிய வைத்து

குமுறி எடுத்த கூட்டம்

கழட்டி விட்டு போகும் என

கனவிலும் நினையோம்

ராசா நீ அங்கே

கனி எங்கே?

குடும்பத்தினர்

குமுறி அடிக்க

களி கொண்டு அங்கே

கலந்து கொடுக்க

நான் இங்கே.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 11 May 2011

கருத்து கந்தசாமிங்கோ................

மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தவுடன் (Exit Poll) கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தபடியால் நேற்று சில கருத்துக் கணிப்புகள் வெளியாயின.


வடக்கத்தி தொலைக்காட்சிகள் தமிழ் நாட்டில் அம்மா கூட்டணி 112-130 இடங்களைப் பெறும் என்றும் ஐயா கூட்டணி 102-120 இடங்களைப் பெறும் என்றும் தலைப்பில் கூறிவிட்டு பட்டும் படாமல் போய் விட்டார்கள். அதே சமயத்தில் மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி 230 இடங்களை பிடிக்கும் என்று சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறினார்கள். கேரளத்தில் எண்களை தப்பாகப் போட்டு குழப்பினார்கள்.

சி.ஏன்.ஏன், சோ ராமசாமியிடம் கருத்துக் கேட்டு அம்மாதான் அடுத்த முதல்வர் என்று போயஸ் தோட்டத்திற்கும், கோட நாட்டிற்கும் குடை பிடித்தார்கள்.

ஹெட்லைன்ஸ் டுடே ஐயாதான் என்று கூறி நூற்று முப்பது வரை அள்ளி விடுவார் என்கிறார்கள்.

நக்கீரனோ தொகுதி வாரியாகப் பிரித்தது ஐயா கூட்டணி 134 என்று கூறி அம்மாவிற்கு 90 என்று விசுவாசம் காண்பித்துள்ளார்.

ஆக மொத்தம் கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமானது அல்லது புறம்பானது என்பது வெள்ளிக்கிழமை மதியம் தெரிந்துவிடும்.

யார் வேண்டுமானாலும் வரட்டும், எப்படியும் எங்களுக்கு கிடைக்கும் “இலவசம்” கேரண்டி என்று மக்கள் அமைதிக் காக்கிறார்கள்.

எங்களுக்கு இப்பொழுதுள்ள ஒரே கவலை “டாஸ்மாக்” வெள்ளிக்கிழமை எப்பொழுது திறப்பார்கள்?.

யாரவது கணித்து சொல்லுங்கப்பு.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 9 May 2011

கலக்கல் காக்டெயில்-29

ராசாவே உன்னை நம்பி...........................


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அறுபது விழுக்காடு பங்குள்ள தயாளு அம்மாளை விடுவித்து சரத்குமாரையும் கனிமொழியையும் சேர்க்கும் பொழுதே இந்த வழக்கு போகும் பாதை தெரிந்து விட்டது. இதில் இப்பொழுது கட்சிகள், கொள்கைகள் எல்லாவற்றையும் தாண்டி ராம்ஜெத்மால்னி கனிமொழிக்காக வாதடியவிதம் ராசாவிற்கு ஆப்பு ஆழ அடிப்பது உறுதி என்று புரிகிறது. இப்பொழுது தலித் என்ற பித்தலாட்ட வாதம் புழுத்து போய் விட்டது.

கூப்பிடாமலேயே கூவிட்டு போகும் சூரமணி எங்கு போனார் தெரியவில்லை?

தன் குடும்பத்திற்கு சோதனை என்றால் தலித், சூத்திரர் வாதம் எல்லாம் கிடப்பில் போட்டு பலிகடா தயார் செய்யும் இந்த அவலத்தை எங்கு போய் முட்டிக்கொள்வது?.

வஞ்சனை செய்யும் இவர்கள் வாய் சொல்லில் வீரர்கள்.

குரு பெயர்ச்சி

கஷ்டம் கஷ்டம் என்று கடவுளிடம் போனால் அதே கஷ்டம் அவரிடம் கட்டிங் வுட்டு ஆடிச்சாம். ஏதோ ஒரு ப்லோவில் வந்திடுச்சு. மன்னிச்சுக்குங்க. வேலையில் ஒரே டென்ஷன், நிம்மதியில்லை என்று புலம்பினால் ஏதோ குரு ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போயிருக்கிறாராம். அங்கு ராகுவோ கேதுவோ குறுக்கப் பூந்து கலைக்கிராராம், சூரிய மேட்டில் புதன் குழி தோண்டிட்டாராம் ஆதலால் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்று காலையில் தொலைக்காட்சியில் எல்லா சேனல்களிலும் ஜோசியரோ, ஜோசியச்சியோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் நடுநிசியில் எழுந்து குளித்து மூன்று பேருக்கு அன்னதானம் செய்தால் என் கஷ்டம் கொஞ்சம் குறையும் என்று சொன்னதை நம்பி நடு நிசியில் குளித்து ராப்பிச்சை எவனும் மாட்டாததால் பக்கத்து வீட்டுக் கதவை இடித்ததில் அவர் கடுப்பாகி “மவனே உன் கஷ்டம் ஒரு வருஷம்தான் அப்புறம் அதுவே பழகிடும், இன்னும் ஒருதடவை கதவ இடிச்ச கஷ்டத்தை அனுபவிக்க நீ இருக்க மாட்டேன்னு” கதவை சாத்திட்டார்.

படித்ததில் பிடித்த ஹைக்கூ(வா?)

அமாவாசையன்று

நிலவு

எதிர்வீட்டு சன்னலில்



வண்ணம் மாறுவதில்

பச்சோந்தியை வென்றார்கள்

அரசியல்வாதிகள்.



ஆண் நெடில் தொடக்கம்

பெண் குறில் தொடக்கம்

எழுத்திலும் அநீதி





இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment