Sunday 15 May 2011

மூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்......................

தலைப்பைப் பார்த்து ஏதோ “கதை” டுபாகூர் என்று வருபவர்கள் அப்படியே அபீட் ஆயி அடுத்த ப்லோகுக்கு போய்க்கினே இருங்க.


இந்த பதிவு தற்போது நமது தாய் திருநாட்டின் நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்களை பற்றிய அலசல்.ஷீலா தீட்சித்.

டெல்லியின் முதலமைச்சராய் ரொம்ப நாளைக்கு சீட்டை தேய்த்துக் கொண்டிருக்கும் பெண்மணி.. தலைமைக்கு என்றும் ஓயாத ஜால்ரா. கல்மாடி களி தின்னும் பொழுது கூட இருந்து கொள்ளையடிச்ச அம்மா அம்பேல். கழுவுற மீன்ல நழுவுற மீன். காமன் வெல்த் விளையாட்டில் எல்லோரும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிச்சு கல்மாடிய களி தின்ன சொல்வது நமது சட்டத்தின் திருவிளையாடல்.மாயாவதி.

தோற்றத்தில் நம்ம வளர்மதி பிச்சை வாங்க வேண்டும். ஓட்டளித்த மக்களையும் ஏழைகளையும் ஏதோ எடுபிடி ரேஞ்சில் வைக்கும் தாய்க்குலம். கிரேட்டர் நொய்டா விவசாய நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி “யமுனா எக்ஸ்பிரஸ்வே” மேல்மட்ட சுரண்டல் காரருக்கு ஷாப்பிங் சென்டரும், மாலும் கட்ட விற்று காசு பார்த்த புண்ணியவதி. கன்ஷிராமுக்கு வைத்த ஆப்பு அம்மா கட்டை வேகும் வரை கூட வரும்.

ஜெயலலிதா

ஆடம்பரத்தின் முடி சூடிய ராணி. அடுத்தவர் புகழிலும் செல்வாக்கிலும் ஆட்டையைப் போடும் அதீத அரசி. எம்.ஜி ஆர். புகழில் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கும் கொற்றவை. ஐந்தாண்டு காலம் கொட நாட்டில் குப்புறப் படுத்து ..சு விட்டுக் கொண்டிருந்தவரை வப்பாட்டி வழக்கில் கோட்டையில் ஏற்றிய புகழ் தமிழினத் தலைவர் பெருமை கொள்ளலாம். தொண்டர்கள் வெய்யிலில் வாடி வெற்றியை கொண்டாடும் பொழுது உப்பரிகையில் நின்று இருபது செகண்ட் கையாட்டி ஊக்குவித்த தலைவி. ஆரம்பமே அலம்பல். நேற்றைய சென்னை வாசிகள் ஐந்து மணி நேரம் போக்கு வரத்தில் சிக்கிய அவலம் சொல்லும் இவரின் ஆட்சி செய்யப் போகும் அவலத்தை. வக்கிரத்தின் உச்சம் பெருச்சாளிக் கோட்டையை புதுப்பித்து உட்காரப் போகிறார்களாம்.

தீதி மம்தா..............


பதினேழு வயதில் அரசியல் பிரவேசம். சி.பி,எம்மை எதிர்த்து அரசியல் போராட்டம். எதிர் கட்சி தடியடியில் மண்டை உடைப்பு. கம்யுனிஸ்ட் ஜாம்பவான் சோம்நாத் சட்டர்ஜியை எதிர்த்து வீழ்த்திய பெருமை இவரின் சாதனைகளில் சில. இவரது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியதில் மேற்கு வங்காளத்தை கிட்ட தட்ட இருபத்தைந்து வருடத்திற்கு பிறகு நேரில் கண்ட எனக்கு வியப்பு. அமைதியான பிரசாரம். மக்களுடன் மக்களாக கலந்து ஒரு பருத்தி சேலையும் ஹவாய் செருப்புடன் தோன்றும் எளிமையான தோற்றம். பெண் என்பதால் சலுகை எதிர் பார்க்காத மனோ பாவம். காலி காட்டில் அவர் வீட்டை நேரில் பார்த்த எனக்கு தோன்றிய ஆச்சர்யம் மறைய வெகு வருசங்கள் ஆகும்.

என்.டி.டி.வி தொலைகாட்சி நிருபர் பர்கா தட் “தீதி நீங்களும் ஜெயலலிதாவும்”: என்று ஆரம்பித்தவுடனே குறுக்கிட்டு “என்னையும் அவர்களையும் ஒப்பிடாதீர்கள் “ என்று கூறியதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. முப்பத்தி நான்கு ஆண்டுகளாக வெறும் நானூறு கிலோ மீட்டர் வளர்ச்சி கண்ட ரயில்வேயை ஒரே ஆண்டில் இரண்டாயிரம் கிலோ மீட்டர வளர்ச்சிக்கு வித்திட்டு பாராளு மன்றத்தில் “ஆம் என் மாநிலத்திற்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள்” என்று குரல் உயர்த்திய தீதி உம் காலத்தில் மேற்கு வங்காளம் உயர்வு பெறும் என்ற வங்காளிகளின் நம்பிக்கை எதிர் பார்ப்பு வீண் போகாது.

.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்ன நண்பா ஜெ மீது அவ்வளவு கோபமா?

பொன் மாலை பொழுது said...

உள்ளபடியே நம்ம ஊரு காட்டேரி, டெல்லி திருட்டு கிழவி சனியன் இதுகளை விட தீதி மம்தா மீது மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் தான் .

சுதா SJ said...

ஜெயாவை பற்றி கொஞ்சம் அதிகப்படுத்தியே எழுதிவிட்டிர்கள் என்று நினைக்குறேன்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.