Monday 9 May 2011

கலக்கல் காக்டெயில்-29

ராசாவே உன்னை நம்பி...........................


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அறுபது விழுக்காடு பங்குள்ள தயாளு அம்மாளை விடுவித்து சரத்குமாரையும் கனிமொழியையும் சேர்க்கும் பொழுதே இந்த வழக்கு போகும் பாதை தெரிந்து விட்டது. இதில் இப்பொழுது கட்சிகள், கொள்கைகள் எல்லாவற்றையும் தாண்டி ராம்ஜெத்மால்னி கனிமொழிக்காக வாதடியவிதம் ராசாவிற்கு ஆப்பு ஆழ அடிப்பது உறுதி என்று புரிகிறது. இப்பொழுது தலித் என்ற பித்தலாட்ட வாதம் புழுத்து போய் விட்டது.

கூப்பிடாமலேயே கூவிட்டு போகும் சூரமணி எங்கு போனார் தெரியவில்லை?

தன் குடும்பத்திற்கு சோதனை என்றால் தலித், சூத்திரர் வாதம் எல்லாம் கிடப்பில் போட்டு பலிகடா தயார் செய்யும் இந்த அவலத்தை எங்கு போய் முட்டிக்கொள்வது?.

வஞ்சனை செய்யும் இவர்கள் வாய் சொல்லில் வீரர்கள்.

குரு பெயர்ச்சி

கஷ்டம் கஷ்டம் என்று கடவுளிடம் போனால் அதே கஷ்டம் அவரிடம் கட்டிங் வுட்டு ஆடிச்சாம். ஏதோ ஒரு ப்லோவில் வந்திடுச்சு. மன்னிச்சுக்குங்க. வேலையில் ஒரே டென்ஷன், நிம்மதியில்லை என்று புலம்பினால் ஏதோ குரு ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போயிருக்கிறாராம். அங்கு ராகுவோ கேதுவோ குறுக்கப் பூந்து கலைக்கிராராம், சூரிய மேட்டில் புதன் குழி தோண்டிட்டாராம் ஆதலால் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்று காலையில் தொலைக்காட்சியில் எல்லா சேனல்களிலும் ஜோசியரோ, ஜோசியச்சியோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் நடுநிசியில் எழுந்து குளித்து மூன்று பேருக்கு அன்னதானம் செய்தால் என் கஷ்டம் கொஞ்சம் குறையும் என்று சொன்னதை நம்பி நடு நிசியில் குளித்து ராப்பிச்சை எவனும் மாட்டாததால் பக்கத்து வீட்டுக் கதவை இடித்ததில் அவர் கடுப்பாகி “மவனே உன் கஷ்டம் ஒரு வருஷம்தான் அப்புறம் அதுவே பழகிடும், இன்னும் ஒருதடவை கதவ இடிச்ச கஷ்டத்தை அனுபவிக்க நீ இருக்க மாட்டேன்னு” கதவை சாத்திட்டார்.

படித்ததில் பிடித்த ஹைக்கூ(வா?)

அமாவாசையன்று

நிலவு

எதிர்வீட்டு சன்னலில்



வண்ணம் மாறுவதில்

பச்சோந்தியை வென்றார்கள்

அரசியல்வாதிகள்.



ஆண் நெடில் தொடக்கம்

பெண் குறில் தொடக்கம்

எழுத்திலும் அநீதி





இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

RayJaguar said...

aatchi maarina ellam maarum

vasan said...

ஜொள்ளூ ப‌ட‌த்தைப் பார்த்தாலே, தெரியுது பிள்ளை பாவ‌ம், ம‌த்திய‌ கிழ‌க்கு நாட்டுல‌ (சொளவுதி) கிட‌ந்து தவிக்கிற‌து.
இது திமுக‌வின் வ‌ழ‌மையான ஊழ‌ல் இல்லை. ம‌த்திய‌, மாநில‌, க‌ட‌ல் க‌ட‌ந்த‌ க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ள் எல்லாம் சேர்ந்த‌ கூட்டுச் ச‌தி. அந்த‌ சுப்பர‌ம‌ணியும்,பிர‌சாந்த் புஷானும், நீதிப‌திக‌ள் க‌பாடியா, ச‌ங்வி. க‌ங்குலியும், பார‌த‌மாதாவும் தான் இந்த‌ நாட்‌டை, துபாய், பாக், சீனா, சுவிஸ், மொருஷிய‌ஸ், இத்தாலியிட‌மிருந்து காக்க‌ வேணும். ர‌ஜினி, அமிதாப் உட‌ல்சுக‌த்துக்கு சாமிய‌ வேண்டுர‌ கும்ப‌ல்ல‌ பாதிப் பேரு நாடு நல்ல‌ இருக்க‌னும்னு நினைச்சாலே நாடு நல்லாயிரும். பார்ப்போம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.