Wednesday 18 May 2011

இன அழிப்பு நாள்

மே பதினெட்டு யார் மறந்தாலும் தமிழன் மறக்கமாட்டான், குறிப்பாக ஈழத்தமிழன். முள்ளிவாய்க்கால் அவலம் தமிழன் மார்பில் பட்ட தழும்பு. வடுவை பார்க்கும் பொழுதெல்லாம் நம்பிக் கழுத்தறுத்து இந்த நிலைக்கு ஆளாக்கிய தொப்புள் கொடி உறவு என்று ஜல்லியடித்த தமிழீனத்தலைவர் முகம் ராட்சசன் போல் வந்து போகும்.


தங்களது சுதந்திரத்திற்கு போராடிய ஒரு மாவீரனை இழந்து அந்த சமூகம் மாலுமி இல்லாத கப்பல் போல தத்தளித்து சிங்களக் காடையரின் அராஜகத்திற்கு ஆளாகி நிற்கிறது.

போராளிகளை கட்டுக் கோப்பாக வைத்து ஒரு இயக்கத்தை மிகவும் நேர்மையாக நடத்தி சிங்களவனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி முப்பது வருடப் போராட்டம் சீரான பாதையில் செலுத்திய தலைவன், கடைசி வரை களத்தில் இருந்து குடும்பத்துடன் உயிர் தியாகம் செய்தவன். சூழ்ச்சியனால் கொல்லப்பட்டவன். இலவசங்கள் கொடுத்து தலைவனாகவில்லை, அடுத்தவர் புகழில் ஆட்டையை போட்டு சாவு ஊர்வலத்தில் சவ வண்டியில் அமர்ந்து தலைவனாகவில்லை. அல்லது தலைவர் இறந்தவுடன் ஏழு பேரை பின்னுக்கு தள்ளி, நடிகனின் துணையோடு, “பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவைத்த குற்றமா” என்று வாய்ச்சொல் வீரம் கட்டி தலைவனாகவில்லை.

மாவீரா உன்னையும் உன் போராட்டத்தையும் அழித்த கூட்டத்தினர் வசிக்கும் நாட்டில் இருக்கும் நாங்கள் அவர்கள் செயலுக்கு வெட்கி தலை குனிகிறோம்.

இந்த மே மாதம் பதினெட்டாம் தேதி வரும் போதெல்லாம் எங்கள் நெஞ்சில் உள்ள நெருஞ்சி முள் வேதனையை அதிகப்படுத்தும்.

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல் நடந்த நிகழ்வுகளுக்கு தண்டனை வாங்கி தர ஓர் அணியில் திரள்வோம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.