Friday 27 May 2011

சமச்சீர் கல்வி அவசியமா?

தற்பொழுது ஆட்சி மாறியதால், சமச்சீர் கல்வி எல்லோர் வாயிலும் விழுந்து வறுபட்டு, அரைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அரசாங்கம் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டம், மாநில பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த சமச்சீர் கல்வி தேவை என்று ஒரு குழு அமைத்து காபி குடித்து, வடை கடித்து வாதாடி, குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் என எல்லா மாநிலங்களுக்கும் விசிட் அடித்து, பிறகு முடிவெடுத்து, புத்தகங்களும் அச்சிடப்பட்டு விநியோகித்த பின் ஆட்சி மாறியதால் இப்பொழுது இந்த திட்டம் மறு பரிசீலனை செய்யப்படுகிறது. இதனால் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறப்பது கால தாமதம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஆட்சி தங்களுக்கு பிடிக்காத பாடங்களை நீக்கி விட்டு விநியோகிப்பதில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. இதையே தான் முன்னாள் முதலமைச்சரும் சொல்லியிருக்கிறார்.


அதை அரசியல்வாதிகளுக்கும், கல்வி அமைப்பாளர்களுக்கும் விட்டு விடுவோம். எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு வருகிறேன்.

நான் படித்த பள்ளி தமிழ் நாட்டு அரசு பாட நூல் நிறுவனம் தயாரித்தப் புத்தகங்களை தான் பாடங்களாக வைத்தது. எனது அடுத்த வீட்டுப் பெண்ணோ மத்திய அரசு பாடநூலைப் படித்தாள், அவள் என்னைவிட இரண்டு வயது சின்னவள். நான் பதங்கமாதலை பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது அவள் எட்டாவது வகுப்பில் “sublimation” படித்தாள். நான் பௌதிக தராசின் பாகங்களை படிக்கும் பொழுது. அவள் “Physical balance” ல் எழுதிய காகிதத்திற்கும் எழுதாத காகித்தத்திற்கும் உள்ள எடை வித்தியாசத்தைக் கண்டுபிடித்தாள். எனக்கு அப்பொழுது இருவரின் பாடத் திட்டத்தில் உள்ள வேறுபாடு உரைக்கவில்லை.

ஆனால் கல்லூரியில் அடி எடுத்து வைத்த பின் மத்திய அரசின் பாடங்களை படித்தவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்யாசம் புரிந்தது. அவர்களால் எளிதாக புரிந்து கொண்டதை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டோம். பெறும்பாலும் முதல் ஆறு மாதங்களில் வந்த பாடங்கள் அவர்கள் ஏற்கனவே படித்ததுதான். முதல் செமெஸ்டரில் பாதி பேர் புட்டுக்கொண்டோம். ஆனால் இதெல்லாம் முதல் ஆறு மாதங்கள்தான். பின்னர் நாங்களும் அவர்கள் அளவிற்கு முன்னேறினோம். இருந்தாலும் கல்லூரியில் முதல் மூன்று இடங்களை எங்களால் பிடிக்க முடியவில்லை.

நாங்கள் படிக்கும் காலத்தில் இருந்த வித்யாசம் படிப்படியாக குறைக்கப் பட்டதை என்னால் இப்பொழுது உணரமுடிகிறது. ஆனால் அதே சமயத்தில் கோச்சிங், டியூஷன் என்ற பணம் பிடுங்கி சமாச்சாரங்கள் பெருகிவிட்டன. நாம் படித்த காலத்தில் டியூஷன் என்பது மக்குப் பிள்ளைகளுக்குதான் என்ற எண்ணம இருந்தது. ஆதலால் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதை வெளியில் சொல்லமாட்டோம். ஆனால் இப்பொழுது காசு உள்ளவர்கள் எல்லோரும் அவசியமோ அவசியம் இல்லையோ டியூஷன் வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருக்கிரார்கள். காசு உள்ளவர்களுக்குத்தான் நல்ல படிப்பு என்ற மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்றும் மத்திய அரசு பொதுப் பரீட்சைகளில் “Application based” வினாக்களை கொடுத்து மாணவர்களை சிந்திக்க வைக்கிறார்கள். இது மாநில பொதுத் தேர்வுகளில் இல்லை. கொடுத்த பாடங்களை மனப்பாடம் செய்து கொட்டினாலே முழு மதிப்பெண்கள் பெறமுடியும். ஆதலால் இங்கு வாங்கும் மதிப்பெண்கள் கேள்விக்குறியாகிறது.

ஆதலால் மாநில அரசின் கல்வியமைப்பு உயர்த்த வேண்டும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. அது பாடப் புத்தகங்களில் மட்டும் இல்லை, ஆசிரியர்களின் தரம், தேர்வுகளின் தன்மையிலும் இருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

கூடல் பாலா said...

அனைவருக்கும் சமமான தரமான கல்வியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .பதிவு அருமை .

கும்மாச்சி said...

நன்றி பாலா

SURYAJEEVA said...

kummunnu oru column... vaazhththukkal...
ungal blog follow panna enna vazhi...
oru follow gadget serththaal nandraaga irukkume

Jayadev Das said...

எனக்குத் தெரிய இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியை காசு கொடுத்து கடைசி இரண்டே மாதங்களில் பரீக்ஷை எழுதி, பிட் அடித்து... தப்பு தப்பு தப்பு...புத்தகங்கள், நோட்ஸ்களை அப்படியே வைத்து காப்பியடித்து, தேர்ச்சி பெற்று ஆசிரியரானவர்கள் ஏராளம். இதுங்க கிட்ட படிக்கிற பிள்ளைங்க உருப்படுமா?

Mahan.Thamesh said...

நல்ல அலசல் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்

g said...

it a good idea

Unknown said...

//Mahan.Thamesh said...
நல்ல அலசல் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்//

repeatu

Anonymous said...

நல்லதொரு பதிவு முயற்சி .. தமிழ்நாடு STATE BOARD SYLLABUS என்பது உலகோடு ஒப்பு நோக்கும் போது உயவானது ஒன்றும் இல்லை என்பது உண்மை தான் .. இதன் காரணம் பெரும்பாலான முதல் தலைமுறை மாணவர்கள், கிராமப் புற மாணவர்கள், நூலக வசதியில்லாமல் இருக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் புரியும் படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக எளிமையாக வடிவமைக்கபட்டது பல காலம் முன்னர்....

ஏனெனில் மிகவும் வறியக் குடும்பத்துப் பிள்ளைகள் பள்ளியில் படிக்க கடினம் எனில் படிக்கவே வராமல் போய் விடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் ...

ஆனால் இன்று அந்நிலைமை மாறிவிட்டது ... இணையம், நூலகம் - புரிந்துக் கொள்ளும் ஆற்றல் அனைத்து மாணவர்களுக்கும் வந்துவிட்டது ... சமச்சீர் கல்வித் திட்டம் சற்றே மேம்பாடானது என்பதிலும் ஐயமில்லை ....

அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் புரிந்துக் கொள்ளும் திறனை வளர்க்க அரசு பயிற்சிப் பட்டறைகளை ஏற்படுத்துதல் அவசியம் ...

தங்களின் பதிவின் சாரமும் இது தான் ...

ஆனால் ..

Anonymous said...

ஆனால் CBSE யில் படித்தவர்களுக்கு STATE BOARD, MATRICULATION-யில் படிப்பவர்களை விடவும் புரிதல் திறன் குறைவு என்பது ஒரு MYTH என்பது தான் உண்மை.. அது ஒருவகைத் திட்டமிடப்பட்ட பரப்புரையே ஆகும் ..

நான் MATRICULATION-யில் படித்தவன் கல்லூரியில் எனது வகுப்பு MOST DIVERSE CLASS ROOM ஆக இருந்தது .. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து என்னுடம் படித்தனர் .... அதில் CBSEயில் படித்த தமிழ் மற்றும் வெளிமாநிலத்தவரும் அடங்கும் ...

ஆனால் எமது வகுப்பில் நன்குப் படித்தவர்கள் STATE BOARDயில் இருந்து வந்த தமிழ் மாணவர்களே என்று சொன்னால் நம்ப முடிகின்றதா ???

நீங்கள் எப்போது கல்லூரியில் படித்தீர்கள் எனத் தெரியாது. எனது கல்லூரிக் காலம் 2000-க்கு மேலான ஆண்டுகளில் ...

ஆகையால் STATE BOARD பாடத்திட்டம் என்பது எந்தவகையில் குறைவில்லாத ஒன்று தான் - அது CBSE யை விடவும் தாழ்வானது அல்லவே அல்ல !!!

பிரச்சனை எல்லாம் ஒருவரின் தனித்திறனிலும், எந்த பள்ளியில் படிக்கின்றீர்கள் என்பது தான் .. அரசுப் பள்ளியோ . தனியார் பள்ளியோ, MATRICULATION, STATE BOARD, CBSE எதுவானாலும் பள்ளி மற்றும் பள்ளியின் ஆசிரியரின் பயிற்றுவிப்பிலும் - பள்ளியின் பிற வசதிகளைப் பொறுத்துமே அமையும்.

பல தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளியில் இருக்கும் லேப், டாய்லெட் வசதிக் கூட இல்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை .. தனியார் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தல் பயிற்சி முடிக்காதோர் கூட மேல்வகுப்புகளுக்கு கூட பாடம் எடுக்கின்றார்கள் .. கம்மி சம்பளத்துக்கு ஆள் கிடைக்கணும் என்பதற்காக..

நான் படித்த தனியார் மத்தியத் தர பள்ளியில் 12 வகுப்பு சில மாதம் உயிரியல் ஆசிரியரே இல்லாமல் இருந்தது. இது அனேக தனியார் பள்ளிகளில் நடக்கும் கூத்து ...

அரசுப் பள்ளிகள் சிலவற்றை விடவும் தனியார் பள்ளிகள் பல மோசமாக உள்ளதை இந்த அரசுக் கவனிக்க வேண்டும் ...

Anonymous said...

சுருக்கமாச் சொன்னால் சாப்பாடு ருசிக்கவில்லை என்றால் அரிசியில் தவறில்லை, சமைத்தவன் மீது தான் தப்பே இருக்கு !!!

கும்மாச்சி said...

இக்பால் செல்வன் தங்கள் கருத்தை வரவேற்கிறேன். நான் சொல்வது நான் படித்த காலக்கட்டத்தில், ஆனால் இப்பொழுது தரம் உயர்த்தப் பட்டிருப்பதை நன்கு அறிவேன். ஸ்டேட் போர்டில் படித்த நான் எந்த வகையிலும் இப்பொழுது குறையவில்லை. ஆனால் நான் படித்த காலத்தில் எனக்கு இது உறுத்தலாகவே இருந்தது என்றால் அது மிகையாகாது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே... ஷேம் ப்ளட்...
:-)

RayJaguar said...

quite true!!! what i feel is 480 by cbse student is much more greater than a state board state first!!!. A close friend of mine who got double centum in maths(state board) in 12th kept an arrear in I sem maths!!!. I think education should have an uniform board throughout india of either cbse or icse

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.