Sunday 29 May 2011

கலக்கல் காக்டெயில்-31

நெஞ்சை கலங்கடித்த குரல்...........


சிங்கப்பூர் செல்வதற்கு முன் ரஜினி பேசியதாக ஒரு ஆடியோ கோப்பு அவரது இளைய மகளால் வெளியிடப்பட்டதாக இணையங்களில் வெளி வந்து கொண்டிருக்கிறது. கண்ணுகளா............... என்று ஆரம்பிக்கும் அந்த ரஜினியின் குரலில் கம்பீரம் இல்லை. வலியிலும், வேதனையிலும் உள்ள குரல் கேட்டவர்களை கலங்க அடிக்கிறது. காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் அவர் மேல் இத்தனை அன்பு காட்டுகிறீர்களே என்று நெகிழ்கிறது. கடவுள் கிருபை, குரு கிருபை உண்டு என்று சொல்லி கட்டாயம் தலை நிமிர்த்தி வருவேன் கண்ணுகளா........... என்கிறார்.

அந்தக் குரலை கேட்டவுடன் நெஞ்சை ஏதோ செய்கிறது.

எத்தனையோ உள்ளங்களை கட்டிப் போட்ட ரஜினி நலமுடன் திரும்ப ஆண்டவனை வேண்டுகிறோம்.

கட்டாய ஹெல்மெட் (தலை கவசம்)

சென்னையில் நேற்று முதல் இரு சக்கர வாகனங்களை செலுத்துவோர் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டுமென்றும், இல்லையேல் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும், அதற்காக தனி படை அமைக்கப் படும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. ஆஹா திருந்திட்டாங்கப்பு என்று நினைக்கும் முன்பே ஏன் பக்கத்து வீட்டுப் பையன் தன் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று வந்து கொண்டிருந்தான். அவனை நிறுத்தி தலைக் கவசம் அணிய சொன்ன பொழுது, ஒன்னும் பிரச்சனை இல்லை, இப்பொழுதுதான் காவல் துறையினர் என்னை பிடித்தார்கள், ஐம்பது ரூபாய் அபராதம் கட்ட சொன்னார்கள், இல்லை என்றேன், கையில் உள்ள பத்து ரூபாயை பிடுங்கிக் கொண்டு அனுப்பி விட்டார்கள் என்றான்.

வாழ்க........................நல்ல கல்லா கட்ட வழி.

சென்னை விமான நிலையம்

நான்கைந்து மாதங்களாக மாதம் இருமுறை சென்னை சென்று வந்து கொண்டிருக்கிறேன். பேய் தூங்கும் வேலையில் தான் விமானம் தரையிறக்கம். அங்கிருந்து வீடு செல்ல கால்டாக்ஸி ஏறக்குறைய விமான டிக்கெட் ரேஞ்சுக்கு கேட்கிறார்கள். கொஞ்சம் வெளியே வந்து பார்க்கிங் ஏரியா வந்தால் பழைய ஸ்டாண்டர்ட் டாக்ஸிகாரர் யாரவது மாட்டினால் இருநூற்றைம்பது கேட்பார்கள். இப்பொழுது விமான நிலையம் புதுப்பிக்கும் பணி நடப்பதால் கூடாரம் போட்ட பாதையில் பத்தடி நடந்தால் ஜி.எஸ். டி ரோடு மேம்பாலம் வந்து விடுகிறது. அங்கு இருக்கும் ஆட்டோ காரர் முதலில் கேட்டவுடன் ஏறக்குறைய கால்டாக்ஸி சார்ஜ் கேட்டார், இன்னா தலைவா நம்மகிட்டே இவ்வளவு கேட்கிறே என்றவுடன், நூற்றைம்பது ரூபாயில் அடையார் கொண்டு விட்டார். “தலைவா” என்றால் என்ன மதிப்புப்பா.

அரசியல் “ஆடுகளம்” கல்வித்துறை

புதிய ஆட்சி வந்தவுடன் சமச்சீர் கல்வியை கைவிட்டு மறு பரிசீலனை என்று அச்சடித்த புத்தகங்களை கிடப்பில் போட்டு விட்டது. இப்பொழுது போன ஆட்சியில் கோவை அண்ணா, திருச்சி அண்ணா என்று பிரித்த அண்ணா பல்கலைகழகத்தை மறுபடியும் ஒன்றாக்கி சென்னையிலிருந்து இயங்க வைக்கப் போகிறார்களாம். இதே பொழைப்பா போச்சு. புதியதாக வரும் கட்சி பழைய கட்சி செய்த வேலையை உல்டாவாக்குவது. அதுக்கு புதிய துறை, மந்திரி, வாரியம் காண்ட்ராக்ட் என்று கொள்ளையடிக்க புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்கப்பா.

கொட நாட்டுல குப்புற படுத்து யோசிப்பாய்ங்களோ.

நகைச்சுவை

செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..


“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு


புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...


மாணவர்கள்: புரியல சார்....காதலி காதலனிடன் சொல்கிறாள் ,


முடியாது என்று சொல்பவன் முட்டாள்...


முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...


இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
ஜொள்ளுப் படம்Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

Faizal said...

nalla irukku

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.