Friday 28 January 2011

மீனவர்கள் மாண்டால் என்ன, மீன் குழம்பு வேண்டுமடி.................ராசாத்தி

தமிழ்நாட்டு கடலோர மீனவர்களின் அவல வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருப்பது இந்திய அரசியலின் அவமானம். ஒவ்வொரு முறை மீனவர்கள் சிங்களனால் தாக்கப்படும் பொழுதும் கடிதம் மட்டும் எழுதி, நிவாரணம் கொடுத்துவிட்டு, அடுத்த இறப்பை எதிர்நோக்கும் அரசியல் நமக்கு சாபக்கேடு.


இருபத்தாறு வருடங்கள் கடலில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் எனக்கு மீனவர்களின் கடின வாழ்க்கை சற்று நன்றாவே தெரியும். இது ஒன்றும் பெரிய பணம் கொடுக்கக் கூடிய தொழில் அல்ல. அதுவும் சிறிய மீன் பிடி படகை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு “உயிரை பணயம் வைத்து தினம் தினம் செத்துப் பிழைக்கும் பிழைப்பு”. இவர்களிடம் நவீன GPRS  வசதியெல்லாம் கிடையாது. பழைய கருவிகள்தான். மீன் வளம் அதிகம் உள்ள இடங்களை தேடும் பொழுது எல்லை தாண்டுவது இயல்பு.

நமது கடலோரக் காவல் படை இருக்கிறார்களா? இல்லையா? என்று தெரியவில்லை. குஜராத் எல்லையில் மீனவர்களுக்கு உள்ள பாதுகாப்பு தமிழக மீனவர்களுக்கு இல்லை என்பது வருந்தக் கூடிய விஷயம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற வாதத்தின் அடிப்படையில் கட்சிகளின் அமைச்சரவை இடங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் பொது மனித வாழ்வில் கடைப் பிடிக்காத அரசியலை என்ன என்று சொல்லுவது?

இப்பொழுது நடந்த தாக்குதலை வைத்து தேர்தலை முன்னிட்டு அரசியல் செய்வது தலைவர்களின் சுய நலப் போக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அந்த ஆட்சியில் நாற்பது மீனவர்கள் இறந்த பொழுது அவர் ஏன் ஹெலிகாப்டரில் சென்று நிவாரணம் அளிக்கவில்லை என்று கோமணத்தை வரிந்து கட்டிக் கொண்டு குழாயடி சண்டை வேறு.



மீனவர்கள் மாண்டால் என்ன


சிங்களவன் சுட்டால் என்ன


மீனவக் குடும்பம் கெட்டால் என்ன


கிளியே


என் குடும்பம் வாழுமடி


ராசாத்தி மீன் குழம்பு வேண்டுமடி


எனக்கு தினமும்


மீன் குழம்பு வேண்டுமடி .



செந்தழல் ரவியின் வேண்டுகோளுக்கு இணங்கி தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சமர்ப்பணம்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 27 January 2011

ஐயா வேண்டாம், அம்மா வேண்டாம், கப்பலே கவிழ்ந்தாலும் கேப்டன் வேண்டாம்....................................

ஐந்து ஆண்டுகள் சக்கர நாற்காலி


ஆட்கள் சூழ அரசாட்சி செய்து

இலவசங்கள் பெயரில் கொசுறு

தமிழுக்கு செந்தமிழ் விழா

தமிழீனம் காத்து, தமிழீழம் பெற்று

திகட்ட திகட்ட பாராட்டு

ஒளி கற்றை விற்று

குடும்ப நலம் பேணி உழைத்து

வெங்காயத்தை தங்கமாக்கிய

தங்க ஐயா நீவிர் வேண்டாம்.



மாற்று வேண்டும் என நினைத்தாலும்

ஏமாற்றம் எஞ்சி நிற்பதாலே

ஊழல் பட்டாளம் பின் தொடர

ஆணவம் தலைக்கேறி

எடுத்தேன் கவிழ்த்தேன்

நானே அரசி நானே தலைவி

மக்கள் நலன் எல்லாம் பம்மாத்து

நிமிர்ந்தால் கோட்டை

குனிந்தால் கொடநாடு

அடுத்தவர் குடும்ப நலம்

பேணும் அறிக்கை ராணி

நீங்களும் வேண்டாம்





ஏற்றம் வேண்டி குடும்பம் தவிர்த்த

போற்றும் மக்கள் தலைவன் வேண்டும்

என்று கேப்டன் பக்கம் திரும்பினால்

மனைவி மச்சான் மப்பு ஏற

மாநாடு நடத்தும் மக்கள் தலைவன்

பதவிக்கு முன்பே ஆட்டம் போடும்

பதவி போதை முதலுக்கு மோசம்

கப்பல் கவிழுமென்றாலும்

டாக்டர் கேப்டன் வேண்டாம்.



வாய்க்கு வந்ததை பேசி

வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும்

மகனின் வளர்ச்சி நாடும்

மருத்துவரும் வேண்டாம்.



போர்வாள் போல புறப்பட்டு

போயஸ் தோட்டத்தில் பதுங்கும்

பிரட்சிப் புலியும் வேண்டாம்.



தேசியக் கட்சிகள் தேசியம் பேசி

கோடிகளில் பெருத்த டில்லி

கேடிகளும் வேண்டாம்.



நடிப்பில் நலிந்து

பிடித்த காசை

பேணிக் காக்க

அரசியல் நாடும்

அல்லக்கை

நடிகர்களும் வேண்டாம்.



மக்கள் நலன் கருதி

வளர்ச்சியை கருத்தில் கொண்டு

புதிய சரித்திரம் படைக்க

படித்த நல்லவர்கள் இருந்தால்

ஆதரவு கொடுக்க

அன்பு உள்ளங்கள்

இருந்தும் அரசியல்

அவர்களுக்கு வேண்டாம்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 24 January 2011

கலக்கல் காக்டெயில்-18

பிரபாவின் ஒயின் ஷாப் திறப்பு விழா.......




பதிவர் பிலாசபி பிரபாகரனின் கடை திறப்பு விழா தான் இந்த வார சூடான மேட்டர். அவரின் கடை வியாபாரம் செழிக்க எனது வாழ்த்துகள். இதைப் பற்றி அவருக்கு பின்னூட்டங்களில் சில நுணுக்கங்கள் கொடுத்திருக்கிறேன். பிரபா பதிவுலகத்திற்கு வந்து சில காலங்களிலேயே மிகவும் பிரபலமானவர். (அதில் எனக்கு ஒரு அன்பு கலந்த பொறாமை உண்டு.) பை த வே ப்ரபா உங்கள் முகப்பு நன்றாக உள்ளது. உங்கள் கடையில் எல்லா சரக்குகளையும் வியாபாரம் செய்யுங்கள். முக்கியமாக நாட்டு சரக்கை மறந்துவிடாதீர்கள்.


உங்கள் கடை திறப்பின் முன் பொங்கலுக்கு வந்த திரைப் படங்கள், அதில் உண்டான சர்ச்சைகள், தொடர்ந்து வரும் தொலைக்காட்சி தொகுப்புகள் எல்லாம் ஜுஜுபி.


வாழ்த்துகள் பிரபா.




ரசித்த கவிதை


நீ முதல் முறை என்னைத்

தலைசாய்த்துக்

கடைக்கண்ணால் பார்த்தபொழுது

என் உள்ளத்தில்

முள் பாய்ந்தது.

அதை இன்னும் எடுக்கவில்லை

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்

எனவே

இன்னொரு முறை என்னை பார்.

.................கவிஞர் மீரா.



ரசித்த நகைச்சுவை



கணவன் மனைவி ஜோசியரிடம் சென்றனர்

ஜோசியர் கணவனை பார்த்து, நீங்கள் இருவரும் இன்னும் ஏழு ஏழு ஜென்மத்திற்கு கணவன் மனைவியாக இருப்பீர்கள்.

கணவன்: ஜோசியரே இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டுங்களா?

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 19 January 2011

நாயரின் மனிதாபிமானம்

டமார சத்தம் கேட்டு எனக்கு விழிப்பு வந்துவிட்டது. பட்டப் படிப்பு முடித்து "இல்லாத" வேலையை தேடிக்கொண்டிருந்த காலம். தினமும் செய்தித்தாள்களைப் பார்த்து ஒரு கடமையாக இரண்டு அப்ளிகேஷன் போஸ்ட் செய்து விட்டு அன்றைய கடமை முடிந்து விட்டதாக நினைத்து மதிய சாப்பாட்டுக்குப் பின் உறக்கம்.


சரி ஒரு "தம்" அடிக்கலாம் என்று தெருமுனைக்கு வந்தேன். கோபாலன் நாயர் டீ கடை முன்புதான் இரண்டு பக்கமும் கோல் வைத்து நடுவில் கயிறு கட்டி அன்றைய பிழைப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தான் அவன். அவனுடன், அவன் மனைவி, அவள் மார்பினில் அபத்திரமாக தொங்கிக் கொண்டிருக்கும் கைக்குழைந்தை, எட்டு வயது சிறுமி. அச்சிறுமி மிகவும் வசீகரமாக இருந்தாள். அசப்பில் இந்தி பட அழகிகளின் சிறு வயதினர் போல் இருந்தாள். அச்சிறுமி கையில் கம்பு எடுத்துக் கொண்டு கையில் வைத்து சுழற்றிக் கொண்டிருந்தாள். மனைவி கையில் உள்ள வாத்தியத்தையடிக்க அவன் கூவி கூவி கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான்.

தெருவில் உள்ள நண்டு சிண்டுகள் எல்லாம் அங்கு கூடி விட்டன. அங்கங்கே ஒன்று இரண்டு பெரிசுகளும் நின்று கொண்டு கழைக் கூத்தாடியின் மனைவியை கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது சிறிதாக கூட்டம் கூடவே கழைக் கூத்தாடி தன் காட்சியை தொடங்கினான். முதலில் அந்த சிறுமி தரையில் சில வித்தைகளை செய்து காட்டினாள். பின்னர் அவன் அந்த சிறுமியின் வயிற்றில் ஒரு குச்சியை வைத்துத் தூக்கி அவளை மேலே எறிந்து பின்பு அவளை கீழே இறக்கினான். பின்னர் நான் கண்ட கட்சி இன்று வரை என் கனவில் வந்து நடு நிசியில் கலங்க வைத்திருக்கிறது. அந்த சிறுமியின் வயிற்றுப் பகுதியில் இருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது.

இதே காட்சியை கோபாலன் நாயரும் பார்த்து அவனது காட்சியை நிறுத்தி விட்டு அங்கிருந்து போக சொன்னார். நாயரின் கட்டுப் பாட்டில் உள்ள அந்த இடம், நாயரை மீறி எதுவும் நடக்காது.

அவன் சாமான் செட்டுகளை ஏறக்கட்டிவிட்டு அந்த இடத்திலிருந்து அகண்ட கட்சி என்னை ஏதோ செய்தது. நான் நாயரிடம் அவன் காசு சேகரிக்கும் முன் அவனை போக சொன்னது மிகவும் தப்பு, நாயர் கடையில் உள்ள தின் பண்டங்களை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்று வாதாடினேன்.

நாயர் “ஏலே உண்ட ஜோலியை நோக்கிக் கொண்டு போ அவனுக்கு இட்லி வடை கொடுத்தெங்கில் காசு யாரானும் கொடுக்கிறது” என்று வாதாடினான்.

பின்பு அருகில் உள்ள பாய் கடையில் வாடகை சைக்கிள் எடுத்து அந்த கழை கூத்தாடி போன திசையில் போனேன். அவன் மனைவியை ஒரு இரண்டு மைல் தள்ளி அந்த சினிமா கொட்டகையின் வாசலில் அடுத்த வித்தைக்கு ஆயத்தமாவதைக் கண்டேன்.

என்னுடைய கையிலிருந்த ஒரு இரண்டு ரூபாயை அவளிடன் நீட்டினேன்.

அவள் “ க்யா ஹம் லோக் பிகாரி நை” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 16 January 2011

உறக்கம்


கடைசி வண்டியின்



கடந்து போன சத்தம்


முரட்டு செருப்பின்


வறண்ட தேய்ப்பு


ஒற்றை நாயின்


வெற்று ஊளை


கடுவன் பூனையின்


சல்லாப அழைப்பு


தோட்டத்தில் சலசலக்கும்


வறண்ட இலைகள்


அடுத்த வீட்டு


கிழவியின் மூச்சிறைப்பு


எதுவும் வேண்டாம்


ஏன் இழுத்து மூடியும்


மனதினை விட்டு


அகல மறுக்கும்


வெய்யிலில் முதுமை


கேட்கும் பிச்சை


நாடும் பொழுது


நழுவுகிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 13 January 2011

ஹலோ மை சடை ராங் நம்பர்

ஏன்டா வீட்டுல தண்டசோறு கொட்டிண்டு எங்க உயிரே வாங்குறே. ஒழுங்கா உன்னால் ஒரு வேலை தேட முடியுதா?


வீட்டில் நுழைந்தவுடன் பெரிசு குரலை உயர்த்தி கத்தினார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதை வேடிக்கை பார்க்க நான் தலையை குனிந்து கொண்டேன்.

போதாத குறைக்கு அம்மா வேறு உங்க அண்ணணை பாரு ஒரு வம்பு தும்புக்கு போறானா? ஒரு பொன்னை ஏறெடுத்து பார்ப்பானா? நீயும் வந்து பொறந்தியே என் வயத்தில் என்று அப்பாவுடன் சேர்ந்து கொண்டாள்.

எதற்காக கத்துகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை, வரும் ஆத்திரத்தில் மவனே ரெண்டு வாயிலையும் துணியை வைத்து அடைக்கலாமா என்று தோன்றியது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த அண்ணனண் மேல் ஒரு கல்லை போட்டால் என்ன என்று தோன்றியது. இப்பொழுது பதில் பேசினால் இன்னும் கத்தல் அதிகமாகி ரஸாபாசம் ஆகிவிடும் என்று வாசலுக்கு வந்தேன்.

மவனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வேறு வேலையில்லை போலும், என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அடச்சீ என்று கக்கூசில் போய் ஒரு அரைமணி அடைந்து கிடந்தேன்.

அப்பா காபி சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட கடைப் பக்கம் போனவுடன் மெதுவாக ஏன் ரூமுக்குப் போனேன்.

அம்மா அங்கேயும் வந்து திரும்ப ஆரம்பித்தாள். ஏன்டா ஒரு வேலைக்குப் போய் உங்க அண்ணன் மாதிரி சம்பாரிச்சு வந்தா நாங்க ஏன்டா சத்தம் போடப் போறோம்.

ஏம்மா நானும் எத்தனை வேலைக்கு மனுப் போட்டு தேடி அலைகிறேன் எவனும் தர மாட்டேங்கிரானே நான் என்ன செய்வது, அது சரி எதுக்கும்மா இந்த ருத்ர தாண்டவம் நான் என்னம்மா செய்தேன் என்று அழாத குறையாக கேட்டேன்.

இந்த நாலாவது வீட்டில் ஒரு மோட்டார் கம்பெனி மேனஜெர் இருக்கிறாரே அவர் மகள்கிட்டே நீ எதாவது வம்பு பண்ணியா? அவர் வந்து உங்க அப்பாவை நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேட்டுட்டு போறார்? என்றாள்.

இல்லைம்மா நான் ஒன்னும் வம்பு பண்ணவில்லை என்றேன்.

என்னவோ போடா உன் சகவாசமே சரியில்லை என்றாள்.

அப்பாவுடன் போய் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வா என்றாள்.

அப்பா வந்தவுடன் அவர்கள் வீட்டுக்கு சென்று நான் செய்யாத தப்புக்கு மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் வீட்டில் வேறு எனக்கு இலவச அட்வைஸ். அந்த பெண்ணின் அப்பா அதான் மோட்டார் கம்பெனி டேமேஜர் அவர் பெண் மிகவும் நல்லப் பெண் என்றும் அவள் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டாள் என்று ஏதேதோ சொன்னார். இந்த மாதிரி கிண்டல் கேலி, காதல் கத்திரிக்காய் எல்லாம் என் பெண்ணுக்கு பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்பொழுது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

இரண்டு நாள் முன்பு கோயில் எதிரில் உள்ள நாயர் கடையில் நண்பர்களுடன் தம் அடித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அந்த பெண் குதிரை மாதிரி மாரை நிமிர்த்திக் கொண்டு எங்களை ஒரு திமிர் பார்வை பார்த்து கடையினுள் நுழைந்து போன் பண்ண நம்பரை சுழற்றியது.

அதற்குள் கூட இருந்த நண்பன் ஜேம்ஸ் ....த்தா யாருட இது மவளே இவளே ஒரு நாள்.........என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

அதற்குள் நான் சும்மா இரு, எங்க வீட்டாண்ட இருக்குது, கம்முனு இரு என்றேன்.

ஒரு ஐந்து நிமிடம் அது போனை சுழற்றி விட்டு வெளியே வந்தது.

ஜேம்ஸ் சும்மா தெருவை பார்த்துக் கொண்டு “ஒரு ராங் நம்பர் கூடவா கிடைக்கவில்லை” என்றான்.

வெளியே வந்த அவள் ஒரு நிமிடம் நின்று என்னை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு விடு விடு என்று சென்று விட்டாள்.

இதை தான் அவள் கண், காது, மூக்கு வைத்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து விட்டாள்.

நான் அப்பொழுதே ஜேம்ஸை கடிந்து கொண்டேன். ஏன்டா என்னை வம்புல மாட்டுற, அந்தப் பொண்ணு எங்க வீட்டாண்ட இருக்குது வம்பாகிப் போய்விடும் என்றேன்.

“உடுரா அவா இன்னா செய்வா? பெரிய மயிரு இவோ சும்மா பயந்து சாகாதே” என்றான்.

“இல்லைடா நல்ல பெண் அவளை எதற்கு கிண்டல் பண்றே” என்றேன்.

பிறகு நான் ஒரு இரண்டு வாரத்திற்கு நாயர் கடை பக்கம் போவதை நிறுத்திக் கொண்டேன்.

ஒரு நாள் மதியம் வீட்டில் வழக்கம் போல் தண்ட சோறு தின்று விட்டு வெட்டியாக இருந்தேன். ஜேம்ஸ் இன்னும் நான்கு நண்பர்களுடன் வந்து வெளியிலே வாடா இன்னிக்கு நந்துவிற்கு வேலை கிடைத்திருக்கிறது, இன்னிக்கு பார்ட்டி என்று கூட்டி சென்றான்.

எல்லோரும் நன்றாக பீர் குடித்து மப்பாகி பீச் பக்கம் சென்று மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

நல்ல மூன்று மணி வெயில், சிறிது நேரம் கழித்து நானும் ஜேம்சும் படகின் அருகில் சென்றோம்.

படகின் பின்னால் ஏதோ சத்தம் கேட்கவே ஜேம்ஸ் எட்டிப் பார்த்து, என்னிடம் மெதுவாக “ஏய் அங்கே பாரு உங்க வீட்டாண்ட இருக்குமே ஒரு பிகரு அது ஏன்னா செய்யுது பாரு” என்றான்.

நான் எட்டிப் பார்த்தேன், கண்ணகியின் பேத்தி தான், அவனுடைய மடியில் படுத்திருக்க, அந்த சண்டாளன் குனிந்து அவள் சட்டையின் பட்டனை அவிழ்த்து எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

நாங்கள் விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டோம்.

ஜேம்ஸ் “அவ கூட இருப்பது யார் தெரியுமா? என்றான்,

“சரியா பார்க்க வில்லை அவன் குனிந்து கொண்டிருந்தான் தெரிய வில்லை யாரு?” என்றேன்?

“சரி விடு பரவாயில்லை” என்றான்.

கடற்கரையை விட்டு வெளியே வரும்பொழுது என் அண்ணனின் பைக்கை பார்த்தேன். அண்ணன் வேலைக்கு போகாமல் இங்கு என்ன செய்கிறான்?

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 9 January 2011

கலக்கல் காக்டெயில்-17

பட்டாபட்டியை கழட்டுங்க....................


தமிழக ஆட்சியாளர்களுக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ் பாராட்டு.

அரசுக்கு ராமதாஸ் பாராட்டு, அ.தி.மு.க.விற்கு குட்டு......................செய்தி......

சட்டசபையில் ஆளுநர் உரையை அம்மா நக்கல் (ஆளுநர் உரை கொலைநோக்குப் பார்வையுடன் அமைந்திருக்கிறது) செய்திருக்கும் நேரம் ஐயா விடுத்திருக்கும் அறிக்கை இது.

மருத்துவர் ஐயா சிக்னல் உட்டுட்டாருடோய்!!!!!!!!

கலைஞரை பா.ம.க. வுடன் கூட்டணி உண்டா அங்கிருந்து சமிக்ஞை வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு “அவர்களும் சமிக்ஞை கொடுத்திருக்கிறார்கள், நாங்களும் கொடுத்திருக்கிறோம் (கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்)” என்றார், கூட்டணி பேரம் பொங்கல் விழா முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆஹா... மருத்துவர் ஐயா இந்த முறை புடவை துவைக்கப் போகமாட்டார். கண்மணிகளே பட்டாபட்டியை கழட்டுங்கள் ஐயா வாளியும் சௌகாரமும் எடுத்துக் கொண்டு தைலாபுரத்திலிருந்து அறிவாலயம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார், பராக், பராக்.........................

அந்தப் பக்கம் அம்மா ஊத்திகொடுக்க நம்ம கேப்டன் சீ போங்க.....

இனி கூட்டணி பேரம், தேர்தல் உளறல்கள் என்று பதிவர்களுக்கு ஒரே கோலாகலம்தான்..



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களைப்பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றிய அந்த கால பிரபலங்கள் சிலர் கூறியதும் இருந்தது.

ஸ்ரீதர் தன் கல்யாணப்பரிசு கதையை அவரிடம் சொல்லி பாட்டெழுத கேட்டுக் கொண்டாராம்.

முழுக் கதையும் கேட்ட அவர் “காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி” இதான் கதையா எழுதிடலாம் என்று சொல்லி சென்று விட்டாராம்.

ஸ்ரீதர் அட நான் இத்தனை நாள் உட்கார்ந்து எழுதிய கதையை இவர் இரண்டே வரிகளில் சுருக்கி அருமையாக சொல்லிவிட்டார் என்று அந்த வரிகளையே பல்லவியாக வைத்து ஒரு பாட்டெழுத கேட்டுக்கொண்டாராம்.

இப்படி வந்ததுதான் அந்தப் பாட்டு, பிற்காலத்தில் அந்த வரிகளை எத்தனையோ படங்களில் உபயோகித்துவிட்டார்கள். பின்பு “மீண்ட சொர்க்கம்” படத்திற்கும் அவரை பாட்டெழுத ஒப்பந்தம் செய்திருந்தாராம். அந்த வேலை முடியும் முன் அவர் மறைந்து விட்டார். 1930 ல் பிறந்து 1959 ல் மருத்துவ விபத்தினால் இறந்து விட்டார்.

அவர் இறக்கும் பொழுது அவருக்கு கல்யாணமாகி ஐந்து மாதத்தில் ஒரு குழந்தை இருந்தது.

குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகமடா

கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தெரிந்து நடந்து கொள்ளடா, திருந்த மருந்து சொல்லடா

எக்காலத்திற்கும் பொருந்தும் பாட்டு..................

நகைச்சுவை

சுவாமி நித்யானந்தா விடியோவில் உள்ள பெண் நானில்லை: நடிகை ரஞ்சிதா பேட்டி (நானே நானா யாரோ தானா)

Follow kummachi on Twitter

Post Comment

Friday 7 January 2011

கமல் எனும் அறிவுஜீவி, புடலங்காய்ஜீவி

“தமிழ் சாகுமாம்…



தமிழ் தெருப் பொறுக்குமாம்.’


வீடிழந்து, நாடிழந்து,


அக்காள் தங்கைகளின்


வாழ்விழந்து…


ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று…


கொத்துக் கொத்தாய்


தம்


சொந்தங்களை


மொத்தமாய்ப் பலியெடுத்த


கொடுமைகளுக்கு


இன்னும் அழுதே முடிக்காத


அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்


இடத்திற்கே போய்..


பனையேறி விழுந்தவரை


மாடு


மிதித்ததைப் @பால…


வாடகை வண்டி ஓட்டுகிறவராக


ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..


பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..


கதா பாத்திரமாக்கி..


ஒரு செருப்பாக அன்று..


இரு செருப்பாகவும்


என்று


கெஞ்ச வைத்து..


இறுதியில்


அந்த எங்கள்


ஈழத் தமிழரை


செருப்பால் அடிக்கவும்


ஆசைப்பட்டு ஏதோவோர்


ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள


முயன்றிருக்கிறீர்களே


கமல்!


அது என்ன ஆத்திரம்!




இது அறிவுமதி கமலைப் பற்றி சமீபத்தில் கொட்டியிருக்கும் ஆதங்கம். வேறு ஒன்றும் இல்லை மன்மதஅம்பின் எதிர்வினை.

நகைச்சுவை என்ற பெயரில் வலியுடன் இருக்கும் ஒரு சமுதாயத்தை கிண்டல் செய்திருக்கிறார். ஏன் அவர்கள் தட்டிக் கேட்க வலிமையில்லாத இல்லை முடியாத நிலையிலிருப்பவர்கள் என்ற நம்பிக்கைதான்.

ஏற்கனவே “கெக்கேபிக்கே” என்று ரங்கநாதரையும், தொந்தி கனபதியையும் வம்புக்கிழுத்து பாட்டு எழுதி ஆத்திகவாதிகளின் கோபத்திற்கு ஆளானார். இப்பொழுது இவர்களின் வாயிலும் விழுந்து எழுந்திருக்கிறார். கமல் போன்றவர்கள் ஒரு மைக்கும் காமிராவும் கிடைத்துவிட்டால் ஏதாவது வாயிற்கு வந்ததை பேசி, இல்லை பாடி வாங்கிக் கட்டிக்கொள்வது. இவர்கள் சில அறிவு ஜீவிகளிடம் பழகி ரெண்டு பெக் உள்ளே விட்டவுடன் தானும் அறிவுஜீவி என்று நினைத்துக் கொண்டு “ஐயா நானும் அறிவு ஜீவிதான் நம்புங்க” என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ஒரு கருத்தை சொல்லும் பொழுது மற்றவர்கள் மத உணர்வுகளையோ, நம்பிக்கைகளையோ அவமதித்து பேசுவதை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவன் ஆத்திகத்தையோ அல்லது நாத்திகத்தையோ தேர்வு செய்துக் கொள்வது தனி மனித உரிமை. அதில் மற்றவர்கள் கேவலப் படுத்தி பேசி ஆளுமை செய்வது அடிமடியில் கை வைக்கும் கயமைத்தனம்.

ஆனால் இங்கு பாமரர்கள் கூட இந்திய இறையாண்மையை நன்றாக புரிந்துகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் தான் இந்த நாட்டில் எத்துனையோ கோயில்களில் மற்ற மதக்காரர்கள் திருப் பணியில் கலந்துக் கொள்வதும், வேளாங்கன்னிக்கும், நாகூர் தர்காவிற்கு எல்லா மதத்தினரும் சென்று வந்து கொண்டும் இருக்கின்றனர். ஆனால் ஒன்று உண்மை. இவர்களின் ஒற்றுமையை பிரித்து ஆள நினைக்கும் அரசியல்வாதிகளையும், வியாபார நோக்கில் உளருபவர்களையும் மக்கள் நன்றாக அறிந்துக் கொண்டிருக்கின்றனர்.

நாட்டை திருத்த நினைப்பவர்கள் முதலில் வீட்டிலிருந்து தொடங்குங்கள். மொத்தத்தில் கமல் தன்னுடைய சமுதாய சம்பிரதாயங்களில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டு, வெளிப்புறத்தில் நாத்திகம் பேசும் பக்கா “hypocrite” என்று அடிக்கடி நினைவூட்டுகிறார்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 5 January 2011

சூரியனுக்கே சூன்யம் வைத்தேன்............ ஒரு (குடும்ப) தலைவரின் புலம்பல்

ஒன்றை மணந்து ஒன்றே பெற்றேன்


என்றும் போதையில் திளைக்கவிட்டேன்

மறைந்தவள் நினைவு மறையும் முன்னே

இருந்த ஒருவனை இறக்கிவிட்டேன்

பின்பு மணந்து நான்கு பெற்றேன்

வடக்கு, தெற்கு, கிழக்கு மேற்கு என

கணக்கு தவறாமல் பிரித்து கொடுத்தேன்

தென் திசை சிங்கம் என்னை

திணற வைக்க திண்டாடி நின்றேன்

நடுவில் ஒன்றை நட்டுவைத்தேன்

சடுதியில் ஒன்றை பெற்றுவிட்டேன்

பழம் என்று “கனி”ய வைத்தேன்

“அம்மா லூசு, அப்பா செவிடு”

அண்ணன் ஐந்தாம் வகுப்பு அடாசு

என்று ஊரார் கேட்க அல்லலுற்றேன்

பேரப் பிள்ளைகள் எல்லாம்

படம் பிடிக்க அனுப்பி வைத்தேன்

குடும்பம் செழிக்க

அல்லும் பகலும் அயராது

“சூரிய(ன்)னு”க்கே சூன்யம் வைத்தேன்

கண்மணிகளை கதற வைத்தேன்

மருமகனை வளரவிட்டேன்

வர்த்தக சாம்ராஜ்யம் செழிக்கவைத்தேன்

இத்தனை செய்தேன் என்று இறுமாந்திருந்தேன்



தமிழ் தமிழ் என்று

ஜல்லியடித்தேன்

தமிழை வைத்து வளர்ந்தேன்

தமிழ் இனமெல்லாம்

தொப்புள் கொடி உறவு என

மப்பில் உளறிவிட்டேன்

காலை சுற்றும் பொழுது

கழுத்தறுத்தேன்

இத்துணை செய்தும் நான்

சளைக்கவில்லை

உறவு கூட்டம்

இப்பொழுது கும்மியடிக்க

ஊழல் படம் எடுத்து ஆட

ஊரார் முன்பு ஊமையானேன்.



சமீபத்தில் நொந்து நூலாகிப் போன ஒரு தலைவரின் புலம்பல்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 3 January 2011

கலக்கல் காக்டெயில்-16

பத்துடன் ஊழல் போம், பதினொன்றில் .....................


இரண்டாயிரத்து பத்தில் செய்திகளை பெரிதும் ஆக்கிரமித்ததில் ஊழல் முதல் இடம் பெறுகிறது. காமன் வெல்த் விளையாட்டில் தொடங்கி, ஸ்பெக்ட்ரம், மகாராஷ்டிரா முதல்வரை காவு கொண்டு, எடியுரப்பாவிற்கு எனிமா கொடுத்து இந்திய அரசியலில் வழக்கம் போல் ஊழல் ஆட்சி புரிகிறது. இதன் பின் விளைவு நமக்கு அன்றாடம் தெரிகிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலையில் தொடங்கி எங்கும் பேய் முகம் காட்டுகிறது. இரண்டாயிரத்து பதினொன்றில் தமிழகம் தேர்தலை சந்திக்கப் போகிறது. வேறு ஒன்றும் புதியதாக இருக்காது. இனி இலவசங்களின் அணிவகுப்பைக் காணலாம். அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் அறிக்கையில் இலவச திட்டங்கள் போடுவார்கள். அதை வாங்கி நாமும் வோட்டுப் போட்டு வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவோம்.

இருந்தாலும் இரண்டாயிரத்துப் பதினொன்றை இனிதே வரவேற்போம்.

அணைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.



ரசித்த கவிதை

காற்று மாமா காற்று மாமா கருணை செய்குவீர்

ஏற்றி வந்த ஜோதி என்னை ஏன் அணைக்கிறீர்

சின்னஞ்சிறு குடிசை இது சிறிது நேரம் நான்

பொன்னிறத்துச் சுடரினாலே பொலியச் செய்குவேன்

ஏழைச் சிறுவன் என்னை நம்பிப் பாடம் படிக்கிறான்

ஏழும் மூனும் பத்து என்று எழுத்து கூட்டுகிறான்

காய்ச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம் காட்ட வேண்டாமோ

ஆச்சு இதோ ஆச்சு என்னை அணைத்து விடாதே.

..............கிருஷ்ணன் நம்பியின் குழந்தைப் பாடல்கள்.



ரசித்த நகைச்சுவை


ஒரு தமிழனும் சர்தார்ஜியும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். தமிழன் தன்னுடைய கைகடிகார பட்டையை கழட்ட தினருவதைக் கண்டு சர்தார்ஜி ஒரே உதறலில் கழட்டி விட்டு, “இதுக்குதான் உங்கள் மாதிரி மதராசிகள் கோதுமை சாப்பிடனும்” என்றார்.

தமிழனுக்கு பயங்கர கடுப்பு. சிறிது யோசித்துவிட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதுபோல் பாசாங்கு செய்தான். சர்தார்ஜி உடனே அதனை இழுத்து வண்டியை நிறுத்திவிட்டான்.

பிறகு கார்டும் ரயில்வே போலிசும் வந்து சர்தார்ஜியை ஒரு காய்ச்சு காய்ச்சிவிட்டு அபராதத் தொகையை பிடுங்கிச் சென்றனர்.

நம்ம ஆளு, சர்தார்ஜியிடம் “ அதுக்குதான் நீங்கள் எல்லாம் அரிசி சாப்பிடனும், மூளை வளரும்” என்றான்.

Follow kummachi on Twitter

Post Comment