Sunday 9 January 2011

கலக்கல் காக்டெயில்-17

பட்டாபட்டியை கழட்டுங்க....................


தமிழக ஆட்சியாளர்களுக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ் பாராட்டு.

அரசுக்கு ராமதாஸ் பாராட்டு, அ.தி.மு.க.விற்கு குட்டு......................செய்தி......

சட்டசபையில் ஆளுநர் உரையை அம்மா நக்கல் (ஆளுநர் உரை கொலைநோக்குப் பார்வையுடன் அமைந்திருக்கிறது) செய்திருக்கும் நேரம் ஐயா விடுத்திருக்கும் அறிக்கை இது.

மருத்துவர் ஐயா சிக்னல் உட்டுட்டாருடோய்!!!!!!!!

கலைஞரை பா.ம.க. வுடன் கூட்டணி உண்டா அங்கிருந்து சமிக்ஞை வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு “அவர்களும் சமிக்ஞை கொடுத்திருக்கிறார்கள், நாங்களும் கொடுத்திருக்கிறோம் (கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்)” என்றார், கூட்டணி பேரம் பொங்கல் விழா முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆஹா... மருத்துவர் ஐயா இந்த முறை புடவை துவைக்கப் போகமாட்டார். கண்மணிகளே பட்டாபட்டியை கழட்டுங்கள் ஐயா வாளியும் சௌகாரமும் எடுத்துக் கொண்டு தைலாபுரத்திலிருந்து அறிவாலயம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார், பராக், பராக்.........................

அந்தப் பக்கம் அம்மா ஊத்திகொடுக்க நம்ம கேப்டன் சீ போங்க.....

இனி கூட்டணி பேரம், தேர்தல் உளறல்கள் என்று பதிவர்களுக்கு ஒரே கோலாகலம்தான்..பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களைப்பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றிய அந்த கால பிரபலங்கள் சிலர் கூறியதும் இருந்தது.

ஸ்ரீதர் தன் கல்யாணப்பரிசு கதையை அவரிடம் சொல்லி பாட்டெழுத கேட்டுக் கொண்டாராம்.

முழுக் கதையும் கேட்ட அவர் “காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி” இதான் கதையா எழுதிடலாம் என்று சொல்லி சென்று விட்டாராம்.

ஸ்ரீதர் அட நான் இத்தனை நாள் உட்கார்ந்து எழுதிய கதையை இவர் இரண்டே வரிகளில் சுருக்கி அருமையாக சொல்லிவிட்டார் என்று அந்த வரிகளையே பல்லவியாக வைத்து ஒரு பாட்டெழுத கேட்டுக்கொண்டாராம்.

இப்படி வந்ததுதான் அந்தப் பாட்டு, பிற்காலத்தில் அந்த வரிகளை எத்தனையோ படங்களில் உபயோகித்துவிட்டார்கள். பின்பு “மீண்ட சொர்க்கம்” படத்திற்கும் அவரை பாட்டெழுத ஒப்பந்தம் செய்திருந்தாராம். அந்த வேலை முடியும் முன் அவர் மறைந்து விட்டார். 1930 ல் பிறந்து 1959 ல் மருத்துவ விபத்தினால் இறந்து விட்டார்.

அவர் இறக்கும் பொழுது அவருக்கு கல்யாணமாகி ஐந்து மாதத்தில் ஒரு குழந்தை இருந்தது.

குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகமடா

கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா

தெரிந்து நடந்து கொள்ளடா, திருந்த மருந்து சொல்லடா

எக்காலத்திற்கும் பொருந்தும் பாட்டு..................

நகைச்சுவை

சுவாமி நித்யானந்தா விடியோவில் உள்ள பெண் நானில்லை: நடிகை ரஞ்சிதா பேட்டி (நானே நானா யாரோ தானா)

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டாபட்டியை கழட்டுங்க....................

//

ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

“அவர்களும் சமிக்ஞை கொடுத்திருக்கிறார்கள், நாங்களும் கொடுத்திருக்கிறோம் (கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்)” என்றார்,
//

போன்ல் பேசினாலும் ஒட்டு கேட்கிறார்கள்..
அதனாலே....

பேசாம., நம்ம மாட்டு பேரம் பேசுவாங்களே.. துண்டைப்போட்டு.. அதுமாறி பண்ணீட்டா... தமிழகமே.. என்ன நடக்குது என தெரியாமல், திக்குமுக்காடிவிடும்.. ஹி..ஹி

கும்மாச்சி said...

பட்டாபட்டி நீங்க சொல்லுற யோசனையும் நல்லாத்தான் இருக்கு, “துண்டை போட்டு மாட்டு பேரம் பேசலாம்”.

benjamin david said...

makkalukku namam poda ennavennallum saivaanga intha jallakaara arasiyalvadhinga,samikshai koduthittangalam.paakallam intha murai makkal enna pathil kodukkiranga endru.

cheena (சீனா) said...

அன்பின் குமாச்சி - கலக்கல் காடெயில் அருமை - எலெக்ஷன் வந்து போற வரைக்கும் இப்படித்தான் - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

sarathy said...

மூன்றும் நல்ல கலக்கல்கள்தான். வளர்க தமிழ்நாடு!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.