Thursday 13 January 2011

ஹலோ மை சடை ராங் நம்பர்

ஏன்டா வீட்டுல தண்டசோறு கொட்டிண்டு எங்க உயிரே வாங்குறே. ஒழுங்கா உன்னால் ஒரு வேலை தேட முடியுதா?


வீட்டில் நுழைந்தவுடன் பெரிசு குரலை உயர்த்தி கத்தினார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதை வேடிக்கை பார்க்க நான் தலையை குனிந்து கொண்டேன்.

போதாத குறைக்கு அம்மா வேறு உங்க அண்ணணை பாரு ஒரு வம்பு தும்புக்கு போறானா? ஒரு பொன்னை ஏறெடுத்து பார்ப்பானா? நீயும் வந்து பொறந்தியே என் வயத்தில் என்று அப்பாவுடன் சேர்ந்து கொண்டாள்.

எதற்காக கத்துகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை, வரும் ஆத்திரத்தில் மவனே ரெண்டு வாயிலையும் துணியை வைத்து அடைக்கலாமா என்று தோன்றியது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த அண்ணனண் மேல் ஒரு கல்லை போட்டால் என்ன என்று தோன்றியது. இப்பொழுது பதில் பேசினால் இன்னும் கத்தல் அதிகமாகி ரஸாபாசம் ஆகிவிடும் என்று வாசலுக்கு வந்தேன்.

மவனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வேறு வேலையில்லை போலும், என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அடச்சீ என்று கக்கூசில் போய் ஒரு அரைமணி அடைந்து கிடந்தேன்.

அப்பா காபி சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட கடைப் பக்கம் போனவுடன் மெதுவாக ஏன் ரூமுக்குப் போனேன்.

அம்மா அங்கேயும் வந்து திரும்ப ஆரம்பித்தாள். ஏன்டா ஒரு வேலைக்குப் போய் உங்க அண்ணன் மாதிரி சம்பாரிச்சு வந்தா நாங்க ஏன்டா சத்தம் போடப் போறோம்.

ஏம்மா நானும் எத்தனை வேலைக்கு மனுப் போட்டு தேடி அலைகிறேன் எவனும் தர மாட்டேங்கிரானே நான் என்ன செய்வது, அது சரி எதுக்கும்மா இந்த ருத்ர தாண்டவம் நான் என்னம்மா செய்தேன் என்று அழாத குறையாக கேட்டேன்.

இந்த நாலாவது வீட்டில் ஒரு மோட்டார் கம்பெனி மேனஜெர் இருக்கிறாரே அவர் மகள்கிட்டே நீ எதாவது வம்பு பண்ணியா? அவர் வந்து உங்க அப்பாவை நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேட்டுட்டு போறார்? என்றாள்.

இல்லைம்மா நான் ஒன்னும் வம்பு பண்ணவில்லை என்றேன்.

என்னவோ போடா உன் சகவாசமே சரியில்லை என்றாள்.

அப்பாவுடன் போய் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வா என்றாள்.

அப்பா வந்தவுடன் அவர்கள் வீட்டுக்கு சென்று நான் செய்யாத தப்புக்கு மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் வீட்டில் வேறு எனக்கு இலவச அட்வைஸ். அந்த பெண்ணின் அப்பா அதான் மோட்டார் கம்பெனி டேமேஜர் அவர் பெண் மிகவும் நல்லப் பெண் என்றும் அவள் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டாள் என்று ஏதேதோ சொன்னார். இந்த மாதிரி கிண்டல் கேலி, காதல் கத்திரிக்காய் எல்லாம் என் பெண்ணுக்கு பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்பொழுது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

இரண்டு நாள் முன்பு கோயில் எதிரில் உள்ள நாயர் கடையில் நண்பர்களுடன் தம் அடித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அந்த பெண் குதிரை மாதிரி மாரை நிமிர்த்திக் கொண்டு எங்களை ஒரு திமிர் பார்வை பார்த்து கடையினுள் நுழைந்து போன் பண்ண நம்பரை சுழற்றியது.

அதற்குள் கூட இருந்த நண்பன் ஜேம்ஸ் ....த்தா யாருட இது மவளே இவளே ஒரு நாள்.........என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

அதற்குள் நான் சும்மா இரு, எங்க வீட்டாண்ட இருக்குது, கம்முனு இரு என்றேன்.

ஒரு ஐந்து நிமிடம் அது போனை சுழற்றி விட்டு வெளியே வந்தது.

ஜேம்ஸ் சும்மா தெருவை பார்த்துக் கொண்டு “ஒரு ராங் நம்பர் கூடவா கிடைக்கவில்லை” என்றான்.

வெளியே வந்த அவள் ஒரு நிமிடம் நின்று என்னை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு விடு விடு என்று சென்று விட்டாள்.

இதை தான் அவள் கண், காது, மூக்கு வைத்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து விட்டாள்.

நான் அப்பொழுதே ஜேம்ஸை கடிந்து கொண்டேன். ஏன்டா என்னை வம்புல மாட்டுற, அந்தப் பொண்ணு எங்க வீட்டாண்ட இருக்குது வம்பாகிப் போய்விடும் என்றேன்.

“உடுரா அவா இன்னா செய்வா? பெரிய மயிரு இவோ சும்மா பயந்து சாகாதே” என்றான்.

“இல்லைடா நல்ல பெண் அவளை எதற்கு கிண்டல் பண்றே” என்றேன்.

பிறகு நான் ஒரு இரண்டு வாரத்திற்கு நாயர் கடை பக்கம் போவதை நிறுத்திக் கொண்டேன்.

ஒரு நாள் மதியம் வீட்டில் வழக்கம் போல் தண்ட சோறு தின்று விட்டு வெட்டியாக இருந்தேன். ஜேம்ஸ் இன்னும் நான்கு நண்பர்களுடன் வந்து வெளியிலே வாடா இன்னிக்கு நந்துவிற்கு வேலை கிடைத்திருக்கிறது, இன்னிக்கு பார்ட்டி என்று கூட்டி சென்றான்.

எல்லோரும் நன்றாக பீர் குடித்து மப்பாகி பீச் பக்கம் சென்று மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

நல்ல மூன்று மணி வெயில், சிறிது நேரம் கழித்து நானும் ஜேம்சும் படகின் அருகில் சென்றோம்.

படகின் பின்னால் ஏதோ சத்தம் கேட்கவே ஜேம்ஸ் எட்டிப் பார்த்து, என்னிடம் மெதுவாக “ஏய் அங்கே பாரு உங்க வீட்டாண்ட இருக்குமே ஒரு பிகரு அது ஏன்னா செய்யுது பாரு” என்றான்.

நான் எட்டிப் பார்த்தேன், கண்ணகியின் பேத்தி தான், அவனுடைய மடியில் படுத்திருக்க, அந்த சண்டாளன் குனிந்து அவள் சட்டையின் பட்டனை அவிழ்த்து எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

நாங்கள் விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டோம்.

ஜேம்ஸ் “அவ கூட இருப்பது யார் தெரியுமா? என்றான்,

“சரியா பார்க்க வில்லை அவன் குனிந்து கொண்டிருந்தான் தெரிய வில்லை யாரு?” என்றேன்?

“சரி விடு பரவாயில்லை” என்றான்.

கடற்கரையை விட்டு வெளியே வரும்பொழுது என் அண்ணனின் பைக்கை பார்த்தேன். அண்ணன் வேலைக்கு போகாமல் இங்கு என்ன செய்கிறான்?

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

goget99 said...

கும்மாச்சி
உங்கள் Blog-இன் புதுத் தோற்றம் மிகவும் நன்றாக உள்ளது.

கும்மாச்சி said...

நன்றி கோபால்

ஜெயந்த் கிருஷ்ணா said...

புது வீடு நல்லாயிருக்கு... கதையும் நல்லாயிருக்கு.. பல இடங்களில் இது போல நடந்துகிட்டு தான் இருக்கு...

இத சொன்னா நம்மள கெட்டவன்னு சொல்லுவாங்க...

கும்மாச்சி said...

நன்றி வெறும்பய ஸார்,

Philosophy Prabhakaran said...

டெம்ப்ளேட் சிம்பிளா ஆனா சூப்பரா இருக்கு....

பித்தன் said...

template nalla irukku continue

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.