Monday 9 March 2015

டீ வித் முனியம்மா பார்ட்- 32

ஐயே.........இன்ன முனிம்மா கடியாண்ட காணோம், நீ வர்லியேன்னு லோகுப்பையனும் செல்வமும் மெர்சல் ஆயிகிரானுங்க.

அடப்போ பாய் நான் இன்னா அவனுகமாறி லுச்சா பார்ட்டிங்களா? வியாவாரம் கீது இல்ல.

முனிம்மா குடிக்கானு வேண்டி டீ அல்ல வெள்ளம்  வேணுமா?

இவன் ஒருத்தன் பேஜார் பண்ணிக்கினு கம்முன்னு டீ அடிடா..

இன்ன முனிம்மா பெங்களூரு வழக்குல இன்னா நூசு போட்டுகிறாங்க?

லிங்கம் சாரு, வயக்கு நல்லாத்தான் போயிகீதான், ஜட்ஜி தீர்ப்ப அப்பால அடுத்த வரம் சொல்லிக்றேன்னு போயிட்டாரு.

இன்னாதான் ஆவுமாம்?

இன்னா நாடார் இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச விசயம்தானே, ஜட்ஜி ரெண்டு பார்டியான்டையும் ஆதாரம்........ ஆதாரம்..... கொடுன்னு கேட்டுகினே கிறாரு. அவனுக எங்க போவானுங்க, ஆதாரம் இருந்தா இந்நேரத்துக்கு கேச இம்மாம் வருஷம் இஸ்துகினானுங்க.......வச்சினா பால்மாரிகிறாங்க.

அம்மா இன்னா சொல்லுதாம்.......

அது இன்னா சொல்லும், அவங்க ஆளு ஒருத்தன் வேற இப்போ புச்சா கேசுல மாட்டிக்கினு கீறான்.........

இன்ன சொல்ற முனிமா..........

அப்படி கேள்றா செல்வம், நீ இன்னாடா  நூசெல்லாம் கேட்டுகினு, பொம்பளைங்க படம் பாத்துட்டு ஜூட் வுட்டுகினு போய்கினே இருப்ப.........

அக்ரி கிச்னமூத்தி கேசா........டேய் அது பெரிய கேசுடா..............தோல துன்னவனுக்கே இந்த தண்டனைன்னா...........பயத்த துன்னவனுக்கு இன்னா செய்யுறதுன்னு கலீனறு நக்கல் உடுறாருடா........இவரு உசுப்பி வுட்டு அந்தம்மா இன்னும் என்ன செய்யப்போவுதோ.

சரி முனிம்மா இன்னா கேசு அது......அத்த சொல்லு.....

டேய் தின்னவேலில அதிகாரி முத்துக்குமாரசாமி தண்டவாளத்துல உயுந்து தற்கொல பண்ணிகினாறு............அதுக்கு காரணம் இந்த கிஸ்னமூத்திதாணு சொல்றானுங்க..

அதெப்டி..........

டேய் லோகு அந்தாளு ஆபிசுக்கு வண்டி ஓட்ட டிரைவருங்க வேலைக்கு எடுக்க சொல்ல அமைச்சரும் அவங்க ஆளுங்களும் அவங்க சொல்ற ஆள்தான் எடுக்கனமுன்னு சொல்லிகிறாங்க. அதுக்கு அவரு ஒத்துக்காம நியாயமா ஆளுங்கள வேலைக்கு எடுத்துகிராறு.

அப்பால.

அதுக்கு இவனுங்க சரி வேலைக்கு எடுத்ததுதான் எத்த அந்தாளுகிட்ட துட்டு வசூல் செஞ்சி கொடு இல்ல நடக்குறதே வேற மவனேன்னு மெர்ட்டிகிரானுங்க.

அந்தாளு பயந்துகினு தண்டவாளத்துல தலைய உட்டுகிராறு......அதாண்ட கேசு இப்ப.

அது சரி அம்மா இல்லாம இந்த அமைச்சருங்க கச்சி ஆளுங்க எல்லாம் நல்லா காசு பாக்குறதா சொல்றாங்க.

ஆமாண்டா அந்தம்மா இல்லாங்காட்டியும் நெம்பத்தான் ஆடுறானுங்க போல,

சரி முனிம்மா கலீனறு அறிவாலயத்தாண்ட கூட்டம் போட்டாரே இன்ன சொல்லிகினாங்க, அடுத்த முதல்வரு ஸ்டாலினாமா?

ஏண்டா லோகு அவரு இன்னா டக்கர்........பார்ட்டி, அத்த கண்டி சொல்ல மாட்டாரு..........பசி எடுக்குது அல்லாம் போய் துன்னுங்கன்னு சொல்லி கழண்டுகினாறு............

முனிம்மா டெல்லி நூசு இன்னா..........

போன வாரம் அதிமுக பார்ட்டி ஒன்னு பாடிக்கிச்சே அத்த கேக்குறியா........அத வயக்கம் போல நடக்கறதுதானே.........எல்லாம் அடிமைங்கடா............நம்மளகண்டி அங்க உட்டானுங்கன்னு வையி சொம்மா நாட்ல கீற அல்லா பிரச்சினையும் அவுத்து வுட்டு வூடு கட்டி அடிப்போம்.

கேஜ்ரிவாலு இன்னா சொல்றாரு.............

அவரு பெங்களூராண்ட சித்த வைத்தியம் செய்ய வந்துகிராறு.

சரி முனிமா சினிமா நூசு இன்னா சொல்லு...........

இப்போ ஒன்னியும் இல்லடா...........நானா உளுகனாய்க்கன் படம் வருதுடா. அதாண்ட நூசு.........

அந்தாளு வயக்கம் போல இன்னா பண்ணிகிறாரா? இல்ல புச்சா எதுனா செஞ்சுகிறாரானு பாப்பம்.
இந்தாடா செல்வம் பேப்பரு படம் பார்த்துக்க...............


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 4 March 2015

கலக்கல் காக்டெயில்-167

துண்டு என்ன வேட்டியே விழும்

வழக்கம் போல ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். சரியா அதுக்கு நீ ஏன்யா மெர்சல் ஆவுறே என கேட்பது புரிகிறது. நாம் ஒன்றும் தினமும் டன் கணக்கில் சரக்கு அனுப்பவில்லை. ஆனால் இந்த சரக்கு கட்டண உயர்வால் தமிழ் நாட்டிற்கு வந்த சோதனையை நினைத்துதான் நமக்கு மெர்சல் ஆவுது.

தமிழ்நாட்டின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி "கூட்ஸ் வண்டியில்" வருவது நாம் அறிந்ததே. அதற்கு உண்டான கட்டணம் உயர்த்தப்படுவதால் என்ன ஆகும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இந்த கட்டண உயர்வால் தமிழகத்தின் மின்சார உற்பத்தி செலவு மேலும் நானூறு கோடி அதிகாரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆதலால் "மக்கழே" நமது பட்ஜெட்டில் "துண்டு" விழ துண்டு என்ன? "ராம்ராஜ் வேட்டி" விழவே வாய்ப்பிருக்கிறது.

மார்ச் 18, லட்டா..........அல்வாவா?

பெங்களுருவில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு மார்ச் 18ம் தேதி ( பதினெட்டு கூட்டு தொகையை கவனிக்கவும்) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு தேதி முதலில் செப்டம்பர் 20 என்பதை மாற்றி 27 (கூட்டுத்தொகை கணக்கில் கொண்டு) தீர்ப்பை வெளியிட வைத்து தாமே தேடிப்போய் ஆப்பில் அமர்ந்த கதையும் அதைத்தொடர்ந்த தொண்டர்கள் அம்மா அறவழிப்போரட்டமும் தமிழகம் நன்றாக அறியும்.

இப்போது அமைச்சர்கள் "தெய்வம் போன்ற அம்மா" அவர்கள் வழக்கிலிருந்து விதலைபெற உபரி தெய்வங்களுக்கு அலகு குத்தி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செய்து கொண்டிருக்கின்றனர்.

தெய்வம் கலங்கி நிற்பதாக சொல்லப்படுகிறது.

ரசித்த கவிதை 

அவனின் குழந்தைகள் 

மான் வரைந்தாள் அக்கா
"மை" தெளித்து
புள்ளிமான் என்கிறாள் தங்கை

இப்போதோ
குதிரை வரைகிறாள் தங்கை
குறுக்கில் கோடுகளிட்டு
வரிக்குதிரையக்குகிறாள் அக்கா

புளியங்கொட்டைகள் புதைத்து
தண்ணீர் தெளிக்கிறாள் தங்கை
வேப்பங்கிளையொடித்து நட்டு
மரமென்கிறாள் அக்கா

தொடர்கிறது விளையாட்டு
நீதான் அம்மா
நான்தான் அப்பா
விளையாட்டு தொடர்கிறது

த்தூ..
உப்பில்ல ஓரப்பில்ல
என்னத்தடி கிண்டிவெச்சிருக்க......

அக்காள்.........தங்கையை அறைகிறாள் பொய்யாய்
அழுவதாய் அவளும் பாவனையிட்டு
கயிறொன்றைத் துழாவி யெடுத்தோடி
அறைக்கதவை அறைந்து மூடும்போது

வியர்த்து விறுவிறுக்க
விழிப்பு தட்டுகிறது
அவனுக்கு.                                   நன்றி: சூ.சிவராமன்ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 3 March 2015

அண்ணே பட்ஜெட் என்னண்ணே சொல்லுது..........

செந்தில்: அண்ணே பட்ஜெட் வந்திடுச்சு அண்ணே, நமக்கு எவ்ளோ கிடைக்குமுன்னே..........

கவுண்டர்: டேய் கப்ளிங் மண்டையா............அது இன்னாடா பட்ஜெட்டுன்னாலே பிச்ச எடுக்கறீங்க............

செந்தில்: அது இல்லீங்க அண்ணே......நமக்கு இலவசமா ஏதாவது கெடைக்குமா?

கவுண்டர்: கோமுட்டி தலையா.............இலவசம் வாங்கி வாங்கி இன்னும் தெருக்கோடில பிச்ச எடுக்குற நாயி நீ..........நீ எல்லாம் எப்படா முன்னுக்கு வரப்போறே........

செந்தில்: இல்லிங்கண்ணே வருமானவரி உச்ச வரம்பு அப்படின்னு டீக்கடை கிட்ட பேசிக்கறாங்க அதாங்கண்ணே கேட்டேன்...

கவுண்டர்: டேய் வடகறி மண்டையா டீக்கடகிட்ட எதுக்குடா போன நாயி.......எச்சி தட்டுல ஊத்துனா நக்குறவன் தானே நீ........வருமான வரி உச்சவரம்பு பத்தி பேசுது.

செந்தில்: இல்லிங்கண்ணே சொல்லுங்கண்ணே.......

கவுண்டர்: அப்படி கேளுடா ஆஃப் பாயில் மண்டையா.........தேர்தலுக்கு முன்னே மோடி சொன்னாருட.......வருமான வரி உச்ச வரம்ப படிப்படியா ஐந்து லட்சம் ஆக்குவேன்னாரு........அதாலதான் இந்த தடவ மூணு லட்சம் வரைக்குமாவது உயர்த்துவாருன்னு பாத்தாணுக...........ஆனா ஒன்னும் செய்யல.

செந்தில்: அப்புறம் என்னாண்ணே?

கவுண்டர்: அப்படி கேளுடா பண்ணி தலையா..........அதுக்குதாண்டா ஊருக்கு எண்ணிய மாதிரி ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்.

செந்தில்: மானியம் ஏதாவது அறிவிச்சாங்களா அண்ணே?

கவுண்டர்: டேய் புஸ்வான தலையா...........இருக்குற மானியம் பத்தாதாடா? அதையே துட்டு இருக்குற கம்முனாட்டிங்களும் வாங்குறானுங்க......அத அவனுகளே வேணாமுன்னு சொன்னா நல்லா இருக்கும் செயவானுங்களா?

செந்தில்: அதானே நிதியமைச்சரும் சொல்லிகிறாரு.......

கவுண்டர்: டேய் டகால்டி.............அவரு உன்னாண்ட வந்து சொன்னாரா? அரசு கொடுக்குற மானியமெல்லாம் போகற கைக்கு போக மாட்டேங்குது......ப்ளேன்ல போறவன் பிளேனு கம்பெனி வச்சிருக்கிற மொள்ள மாறி பசங்க சாராய வியாவரம் செய்யுற பேமானிங்க பக்கமா போவுது. அதாண்டா அத்த சரி செய்யன்னுன்னு சொல்லியிருக்காரு நிதி...................அமைச்சரு

செந்தில்: சும்மா இருங்கண்ணே.............சேவை வரின்னு சொல்றாங்களே அத்த இன்னா செஞ்சாக?

கவுண்டர்: டேய் பேரிக்கா மண்டையா அது 12% இருந்திச்சிடா? அத்த 14% ஏத்திட்டாங்க.

செந்தில்: அண்ணே ஒரு லட்சம் செலவு செஞ்சா பேன் கார்டு வேனுமா அண்ணே.

கவுண்டர்: டேய் பொறையும், பண்ணும் பொறிக்கி தின்ற நாயி பேன் கார்டு பத்தி பேசுது.........டேய் இந்த நாட்டுல எல்லாரும் வரி கட்டணமுடா? அதுல சலுகை கொடுத்தா அந்த சலுகைய இருக்கிற நாயிங்களே அனுபவிக்குதுங்க..................அதாண்டா அதிகமா செலவு செயுறவன் கணக்கு காட்டாத பேமானி .......எல்லாம் வரி கட்ட வைக்க ஐடியா.........

செந்தில்: சரி அதுக்கு இன்ன செய்யனமுன்னு சொல்றீங்கன்னே.......

கவுண்டர்: அப்படி கேளுடா ஐ ஆர் எட்டு தலையா? எல்லோர் சம்பளமும் பாங்கில்தான் போடோணும்........அது டாக்குட்டருங்க, வக்கீலுங்க அல்லாருக்கும் பணம் கொடுக்கனும்முன்னா பாங்கில்தான் கட்ட வைக்கணும். காசா கொடுத்த கணக்குல காட்ட மாட்டானுங்க. இல்லன்னா பில்லு கொடுக்கணும். எல்லா கொடுக்க வாங்கல்களையும் கணக்குல கொண்டு வரணும்

செந்தில்: அது சரி அண்ணே நம்ம கிட்ட அக்கவுண்டு இல்லையே அண்ணே...

கவுண்டர்: டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்.........நான் யாருன்னு உனக்கு தெரியும், நம்ம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்........உன் அக்கவுன்ட பாத்தா பில்லாவே புடுங்கிப்பான்.......

செந்தில்: சரிங்கண்ணே..........அல்லாரும் வரிக் கட்டினா நல்லதாண்ணே.......

கவுண்டர்: ஆமாண்டா செங்கல் தலையா? அப்போதாண்டா நாட்டு அடிப்படை கட்டுமான வசதிகள் உயரும்...........நெறைய வசதிகள் கெடைக்கும்.......இந்த பட்ஜெட்டு அதுக்கு முன்னோடிடா..........அதாண்ட சொல்றாங்க........

செந்தில்: அப்படியாங்கன்னே

கவுண்டர்: ஆமாண்டா கேனையா........ஊழல் இல்லாம சொன்னத  செஞ்சா இந்த பட்ஜெட்டு நல்ல பட்ஜெட்டு இல்லைன்னா  இந்த பட்ஜெட்டு வழக்கம் போல ....................................


Follow kummachi on Twitter

Post Comment