Tuesday 3 March 2015

அண்ணே பட்ஜெட் என்னண்ணே சொல்லுது..........

செந்தில்: அண்ணே பட்ஜெட் வந்திடுச்சு அண்ணே, நமக்கு எவ்ளோ கிடைக்குமுன்னே..........

கவுண்டர்: டேய் கப்ளிங் மண்டையா............அது இன்னாடா பட்ஜெட்டுன்னாலே பிச்ச எடுக்கறீங்க............

செந்தில்: அது இல்லீங்க அண்ணே......நமக்கு இலவசமா ஏதாவது கெடைக்குமா?

கவுண்டர்: கோமுட்டி தலையா.............இலவசம் வாங்கி வாங்கி இன்னும் தெருக்கோடில பிச்ச எடுக்குற நாயி நீ..........நீ எல்லாம் எப்படா முன்னுக்கு வரப்போறே........

செந்தில்: இல்லிங்கண்ணே வருமானவரி உச்ச வரம்பு அப்படின்னு டீக்கடை கிட்ட பேசிக்கறாங்க அதாங்கண்ணே கேட்டேன்...

கவுண்டர்: டேய் வடகறி மண்டையா டீக்கடகிட்ட எதுக்குடா போன நாயி.......எச்சி தட்டுல ஊத்துனா நக்குறவன் தானே நீ........வருமான வரி உச்சவரம்பு பத்தி பேசுது.

செந்தில்: இல்லிங்கண்ணே சொல்லுங்கண்ணே.......

கவுண்டர்: அப்படி கேளுடா ஆஃப் பாயில் மண்டையா.........தேர்தலுக்கு முன்னே மோடி சொன்னாருட.......வருமான வரி உச்ச வரம்ப படிப்படியா ஐந்து லட்சம் ஆக்குவேன்னாரு........அதாலதான் இந்த தடவ மூணு லட்சம் வரைக்குமாவது உயர்த்துவாருன்னு பாத்தாணுக...........ஆனா ஒன்னும் செய்யல.

செந்தில்: அப்புறம் என்னாண்ணே?

கவுண்டர்: அப்படி கேளுடா பண்ணி தலையா..........அதுக்குதாண்டா ஊருக்கு எண்ணிய மாதிரி ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்.

செந்தில்: மானியம் ஏதாவது அறிவிச்சாங்களா அண்ணே?

கவுண்டர்: டேய் புஸ்வான தலையா...........இருக்குற மானியம் பத்தாதாடா? அதையே துட்டு இருக்குற கம்முனாட்டிங்களும் வாங்குறானுங்க......அத அவனுகளே வேணாமுன்னு சொன்னா நல்லா இருக்கும் செயவானுங்களா?

செந்தில்: அதானே நிதியமைச்சரும் சொல்லிகிறாரு.......

கவுண்டர்: டேய் டகால்டி.............அவரு உன்னாண்ட வந்து சொன்னாரா? அரசு கொடுக்குற மானியமெல்லாம் போகற கைக்கு போக மாட்டேங்குது......ப்ளேன்ல போறவன் பிளேனு கம்பெனி வச்சிருக்கிற மொள்ள மாறி பசங்க சாராய வியாவரம் செய்யுற பேமானிங்க பக்கமா போவுது. அதாண்டா அத்த சரி செய்யன்னுன்னு சொல்லியிருக்காரு நிதி...................அமைச்சரு

செந்தில்: சும்மா இருங்கண்ணே.............சேவை வரின்னு சொல்றாங்களே அத்த இன்னா செஞ்சாக?

கவுண்டர்: டேய் பேரிக்கா மண்டையா அது 12% இருந்திச்சிடா? அத்த 14% ஏத்திட்டாங்க.

செந்தில்: அண்ணே ஒரு லட்சம் செலவு செஞ்சா பேன் கார்டு வேனுமா அண்ணே.

கவுண்டர்: டேய் பொறையும், பண்ணும் பொறிக்கி தின்ற நாயி பேன் கார்டு பத்தி பேசுது.........டேய் இந்த நாட்டுல எல்லாரும் வரி கட்டணமுடா? அதுல சலுகை கொடுத்தா அந்த சலுகைய இருக்கிற நாயிங்களே அனுபவிக்குதுங்க..................அதாண்டா அதிகமா செலவு செயுறவன் கணக்கு காட்டாத பேமானி .......எல்லாம் வரி கட்ட வைக்க ஐடியா.........

செந்தில்: சரி அதுக்கு இன்ன செய்யனமுன்னு சொல்றீங்கன்னே.......

கவுண்டர்: அப்படி கேளுடா ஐ ஆர் எட்டு தலையா? எல்லோர் சம்பளமும் பாங்கில்தான் போடோணும்........அது டாக்குட்டருங்க, வக்கீலுங்க அல்லாருக்கும் பணம் கொடுக்கனும்முன்னா பாங்கில்தான் கட்ட வைக்கணும். காசா கொடுத்த கணக்குல காட்ட மாட்டானுங்க. இல்லன்னா பில்லு கொடுக்கணும். எல்லா கொடுக்க வாங்கல்களையும் கணக்குல கொண்டு வரணும்

செந்தில்: அது சரி அண்ணே நம்ம கிட்ட அக்கவுண்டு இல்லையே அண்ணே...

கவுண்டர்: டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்.........நான் யாருன்னு உனக்கு தெரியும், நம்ம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்........உன் அக்கவுன்ட பாத்தா பில்லாவே புடுங்கிப்பான்.......

செந்தில்: சரிங்கண்ணே..........அல்லாரும் வரிக் கட்டினா நல்லதாண்ணே.......

கவுண்டர்: ஆமாண்டா செங்கல் தலையா? அப்போதாண்டா நாட்டு அடிப்படை கட்டுமான வசதிகள் உயரும்...........நெறைய வசதிகள் கெடைக்கும்.......இந்த பட்ஜெட்டு அதுக்கு முன்னோடிடா..........அதாண்ட சொல்றாங்க........

செந்தில்: அப்படியாங்கன்னே

கவுண்டர்: ஆமாண்டா கேனையா........ஊழல் இல்லாம சொன்னத  செஞ்சா இந்த பட்ஜெட்டு நல்ல பட்ஜெட்டு இல்லைன்னா  இந்த பட்ஜெட்டு வழக்கம் போல ....................................


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

Jayakumar Chandrasekaran said...

good

'பரிவை' சே.குமார் said...

நகைச்சுவையாய்ச் சொன்னாலும் நச்சின்னு சொல்லிட்டீங்க...

குல்ஜார் (அ) குல்ஷன் said...

supero super

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... செம...

sarathy said...

Final punch is really fine. Two common men conversation on budget is exemplary. Keep it up.

Anonymous said...

Excellent

Unknown said...

good comedy and informative

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.