Friday 15 May 2015

கலக்கல் காக்டெயில்-168

கணக்குல கோட்டை விட்டிடு


இந்த படத்தை "ஒரு ஊழியனின் குரல் வேலூர் ராமன்" அவர்கள் தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள்.

நாடே எதிர்பார்த்த ஒரு தீர்ப்பு, அரசியல் வா (வியா)திகள் இனிமேலும் ஊழல் செய்ய அஞ்ச வேண்டும்,  தீர்ப்பு கடுமையாக இருக்கும் என்று எதிர் பார்த்த தீர்ப்பு,  திருவாளர் பொதுஜனத்திற்கு நமது சட்டம், பொத்திக்கிட்டு இரு எங்களது வியாபாரத்தின்  முன்!!!!   நீதி நேர்மை நியாயம் எல்லாம் ஒரு "மை"த்தையும் புடுங்க முடியாது என்று அழுத்தமாக எழுதிவிட்டார் மாண்புமிகு நீதியரசர். இந்த தீர்ப்பின் அடிப்படை ஒரு பத்து விழுக்காடு அனுமதிக்கலாம் என்று முன்பே முடிவு செய்து எல்லா எண்களையும் கூட்டி கழித்துப் பார்த்து ஒரு வழியாக எட்டு விழுக்காடில் முடித்தார், ஆனால் அங்குதான் குழப்பமே. கூட்டலில் தவற விட்டுவிட்டார். இப்போது பார்த்தல் 75 விழுக்காடு வருகிறது.

இப்போ என்ன சொல்லுகிறார்கள் என்றால் இதை அவர் திருத்த முயன்றாலும் நீதிமன்றம் அனுமதிக்காதாம்!!!!!!. உச்சநீதிமன்றம் போகவேண்டுமாம்.

அங்கே போனால் டான்சி வழக்கு மாதிரி முடித்து விடுவார்கள்.

அடேய் காசு வாங்கி ஒட்டு போடும் ஓணான்டின்களே சட்டம் உங்களைபோன்ற அஞ்சுக்கும் பத்திற்கும் அல்லாடும் கூட்டங்களுக்குத்தான். திட்டம் போட்டு சுரண்டும்   கூட்டத்திற்கு அல்ல. அது திருடிக்கொண்டேதான் இருக்கும்.

Why I like MK


இன்றைய ட்விட்டரில் மேலே தலைப்பில் உள்ள ஹேஷ் டேக் உருவாக்கி இணைய போராளிகள் நிறைய கீச்சுகள் கீச்சினார்கள். உண்மையிலே அவையெல்லாம் அவர்கள் அவரை புகழ்கிறார்களா? இல்லை ஓட்டுகிறார்களா? என்பது புரியவில்லை.என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என்ற வார்த்தை இவரை தவிர யார் சொன்னாலும் அவ்வளவு உயிர்ப்போடு இருக்காது

தங்களை திருநங்கை என்று குறிப்பிட்டுக்கொள்வதில் அந்த இனமே விரும்பும்படியாக, திருநங்கை என்ற பெயர் வைத்தார்... உழவர் சந்தை, உள்கட்டமைப்பு 

எரிச்சல் தரும் கேள்விக்கும் எகத்தாளமாய் பதில் தரும் டைமிங் சென்ஸ்

ADMK உருவாகவும், DMK அழியவும் கருணாநிதி மட்டுமே காரணம்.. 

கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்ததால் #WhyILikeMK & ஒரு மணி நேர உண்ணாவிரதம் #WhyIhateMK.

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என எழவு வீட்டிலும் எதுகை மோனையில் விளையாடிய முத்தமிழே!.

என்னய்யா எல்லாரும் ‪#‎WhyILikeMKன்னு‬ கிளம்பிட்டீங்க? சரி நானும் சொல்லிக்கறேன்... என்னதான் கலாய்ச்சாலும் கழுவி ஊத்துனாலும், கிட்டத்தட்ட அறுபது வருஷமா, தமிழக அரசியலின் தவிர்க்கவே முடியாத முகமாக இருப்பதால் ‪#‎WhyILikeMK‬...

ஆபிஸ் அரசியலையே நம்மால தாக்கு பிடிக்க முடிய மாட்டேங்குது. இந்த வயசுலையும் தலைவரு அரசியல் பண்ணுற விதத்தை பார்த்தா ஆச்சரியமாத் தான் இருக்கு ‪#‎whyILikeMK‬

ரசித்த கவிதை 


வன் பிச்சைக்காரனா... 
பைத்தியக்காரனா எனத்
தெரியவில்லை.
விரல் இரண்டை
கத்தரிபோல் உதட்டில் வைத்து
பாவனை காட்டி
பீடி வாங்க வேண்டும் எனக்
கையேந்தினான்.
வழக்கம்போல்
பாக்கெட்டைப் பிதுக்கிக் காட்டி
சில்லறை இல்லை எனச்
சொல்லத் தோன்றவில்லை எனக்கு!

நன்றி: தென்பாண்டியன் 

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 14 May 2015

நாலும் மூனும் எட்டு?

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுமீதான  தீர்ப்பு வந்து நான்கு நாட்களாகின்றன, தீர்ப்பிற்கு பிறகு எதிர்பார்த்த நிகழ்வுகள் ஒன்றும் நடக்கவில்லை.

"ரர"க்கள் தற்பொழுது நடப்பது தெரியாமல் கூட்டம் கூட்டமாக மொட்டை அடித்துக்கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள் நேர்த்திக்கடனை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆத்தா வீட்டின் முன் கூடி வெடிவைத்து கொண்டாடிய கூட்டங்கள் எப்படியும் தங்கள் தெய்வம் உப்பரிகையில் வந்து காட்சி அளிக்கும் வரம் தரம் என்று எதிர்பார்த்து பின்னர் கடை நோக்கி கிளம்பிவிட்டனர்.

தீர்ப்பு வந்த அடுத்த தினமே, தீர்ப்பின் நகல் கர்நாடக உயர்நீதிமன்ற தளத்தில் போடப்பட்டது. அதன் நகல் கிடைத்தவுடன் 852ம்  பக்க "நாலும் மூனும் எட்டு" தெரியவந்தது. அதை வைத்து அனைவரும் தீர்ப்பின் நம்பகத்தன்மை மீது ஐயம் கொண்டனர்.

அம்மா அல்லக்கைகளோ நுனிப்புல் மேய்ந்து 851ம் பக்கத்தையும் சேர்த்து படிங்கடா "அறிவு ஜீவிகளே" என்றனர். சரி அப்படி என்னதான் அந்த பக்கத்தில் போட்டிருக்கிறது என்றால் ஆத்தா கூட்டம் தனியாரிடம் வாங்கிய கடன் வகையில் 24 கோடி அதை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்.

852ம் பக்கத்தில் வாங்கிய கடன் விவரங்களை பட்டியலிட்டு கூட்டலில் 24 கோடி சொச்சம் காண்பிக்கிறார். ஆனால் உண்மையான கூட்டுத்தொகை 10 கோடி அளவில் தான் வருகிறது. உடனே அம்மா அல்லக்கைகள் இந்தியன் வங்கியில் வாங்கிய கடனாக 1.5 கோடி காண்பிக்கிறார்கள் அது 15 கோடியாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் கூட்டி கழித்து பாருங்கள் சரியாக வரும் என்று வழக்கப்படி நுனிப்புல் மேய்ந்திருக்கின்றன.

அப்பரசண்டிகள் அதே தீர்ப்பின் 120 வது பக்கத்தில் இந்திய வங்கிக்கடன் 1.5 கோடி என்று இருப்பதை படிக்கவில்லை போலும்.  இரண்டு பக்கத்திலுமே அச்சுப்பிழைதானா? இல்லையா? என்பது அந்த நீதியரசருக்கே வெளிச்சம்.

எப்படியோ ஊழல் தொகையை பத்து விழுக்காடிற்கு கீழே கொண்டுவந்தால் மத்தியப்ரதேச க்ரிஷன்காந்த் வழக்கை தூசி தட்டி எடுத்து மேற்கோள் காட்டி  தீர்ப்பை சாதகமாக எழுதிவிடலாம். அதுதான் நடந்திருக்கிறது.

இந்த இடத்தில்தான் நமது சட்டத்தின் மீது சந்தேகம் வருகிறது. இன்னும் தீர்ப்பில் நிறைய ஆச்சரியங்கள் உள்ளன. 8 கோடிக்கு நிலம் வாங்கி பத்தே மாதத்தில் 8 கோடி லாபம் பார்த்ததாக வருமானத்தில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

எப்படியோ ஆத்தாவிற்கு இந்த தீர்ப்பின் குழப்பம் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஆதலால் தான் அடுத்த நடவடிக்கைகளில் தயக்கம் காட்டுகிறார். கர்நாடகா அரசாங்கம் உச்சநீதிமன்றம் வரை போகுமா? போகாதா? என்பதெல்லாம் அடுத்து வரும் தேர்தலை ஒட்டி ஆடப்படும் நாடகங்களில் ஒரு காட்சி.

இத்தனை தூரம் இந்த சொதப்பல் தெரிந்தவுடன் எப்படியோ யாரோ ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது நிச்சயம். கர்நாடகா செய்யவில்லை என்றால் முதலில் இந்த வழக்கை தொடுத்த சுவாமிக்கு அந்த உரிமை உண்டு, இரண்டாவது உரிமை இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வழிகோலிய அன்பழகனுக்கு உண்டு.

உச்ச நீதிமன்றம் போனால் மூன்று பேர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்படும், அதுவும் உடனே எடுத்துக்கொள்ளப்படுமா? என்பது தெரியாது. அதற்குப் பிறகு நடக்கப்போவது அரசியல் நாடகங்கள். ஆனால் இதை வைத்து கும்மியடிக்க பிரதான எதிர்கட்சிக்கும் தைர்யமில்லை, ஏன் என்றால் அவர்களுக்கு அடுத்த ஆப்பு ரொம்ப தூரத்தில் இல்லை. 2G  தன் கோரமுகம் காட்டி இளித்துக்கொண்டிருக்கிறது. இருகட்சிகளுமே அடுத்த தேர்தலை எப்படி சந்திப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அது வரை அந்த டவாலி கேல்குலேட்டரில் நாலும் மூனும் எட்டு என்று ஆத்தா அடிப்பொடிகள் கணக்குப்பாடம் கற்கலாம். உடன் பிறப்புகள் ஒரு லட்சத்தி எழுவத்தி ஆறாயிரம் கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்று அதே கேல்குலேட்டரில் சரி பார்க்கலாம்.

அண்ணா நாமம் வாழ்க!!!!!!!!Follow kummachi on Twitter

Post Comment

Monday 11 May 2015

சொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் இன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை  இருக்கையில் வந்து அமர்ந்த இரண்டே நிமிடங்களில் அறிவித்துவிட்டார்.

இது எதிர் பார்த்ததோ அல்லது எதிர்பாரததோ அல்ல. இந்த வழக்கின் போக்கையும் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற மசோதாக்கள் நிறைவேற்றமும் ஓரளவுக்கு தீர்ப்பை வாதிகளால் யூகிக்க முடிந்தது. பிரதிவாதி ஆதாரங்கள் ஒன்றும் வாதிகளுக்குக்கு எதிராக சமர்ப்பிக்க வில்லை. ஏன் அவர் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவே இல்லை. அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகி அவர்கள் கொடுத்த தீர்ப்புகளும் ஊரறிந்ததே.

சரி விஷயத்துக்கு வருவோம். வாதியின் சொத்து மதிப்பு முறைகேடாக கணிக்கப்பட்டுள்ளது. அவரது வருமானம் 1991 முதல் 1996 வரை அவர் பதவியிலிருந்த காலங்களில் 34, 76,65,654 ருபாய். அவரது சொத்தின் மதிப்பு 37,59,02,466 ரூபாய். ஆதலால் வாதி தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது 2,82,36,812 ருபாய். இது வருமானத்தில் 8.12% , இது 10% கீழே உள்ளதால் தண்டனை தேவையில்லை, ஆதலால் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி  தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

ஆதலால் திருவாளர்  அரசியல்வாதிகளுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால் தங்களது வருவாயில் 10% வரை லஞ்சம் வாங்கிக்கொள்ளலாம். அதற்கு மேலும் வாங்கி பின்னர் அதை மறைப்பதோ அல்லது மாட்டி வெளியில் வருவதோ அவரவர் திறமை.

தமிழ் நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் மாறி மாறி கடந்து முப்பது வருடங்களாக ஆட்டையைப் போட்டு கொண்டிருக்கின்றன.

மொத்தத்தில் "ஊழலின் ஊறுகண்ணாக இருந்தால் அது தி.மு.க ஊழலால் நீதியையே வளைக்க முடிந்தால் அது அ.தி.மு.க." இவர்களுடன் கூட்டணி வைக்கும் கோமாளிகள் என்றும் ஆட்சிக்கு வரப்போவதுமில்லை, தேர்தல் வரை தோள் கொடுத்து பின்னர் வெளிநடக்கும் அல்லது வெளியே எறியப்படும் சக்கைகள்.

நெஞ்சு பொறுக்குதில்லையே..............


Follow kummachi on Twitter

Post Comment