Friday 24 December 2010

ராசாவிடம் சி.பி. ஐ மராத்தான் விசாரணை-சொல்லுங்கள் ராசாவே

இன்று ராசா டெல்லி வந்த பிறகு சி.பி ஐ அலுவலகத்தில் ஆஜரானார். காலை பதினொரு மணிக்கு துவங்கிய விசாரணை மாலை ஏழு மணி வரை தொடர்ந்து நடை பெற்றது.


விசாரணை எவ்வாறு போயிருக்கும் என்பதில் நமது கற்பனை.

சி.பி.ஐ ஆபிசர்: வாங்க

ராசா: என்ன வாங்க

சி.பி.ஐ ஆபிசர்: சரி வாங்க ராசா

ராசா: என்ன சரி வாங்க ராசா

சி.பி.ஐ ஆபிசர்: வந்து அந்த டூஜி ஸ்பெக்ட்ரம்

ராசா: என்ன வந்து அந்த டூஜி ஸ்பெக்ட்ரம்

சி.பி.ஐ ஆபிசர்: இல்லை நீங்க தொலை தொடர்பு மந்திரியா இருந்தப்போ

ராசா: என்ன இல்லை நீங்க தொலை தொடர்பு மந்திரியா இருந்தப்போ

சி.பி.ஐ ஆபிசர்: ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு

ராசா: என்ன ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு

சி.பி.ஐ ஆபிசர்: முறைகேடு நடந்திருக்கு

ராசா: என்ன முறைகேடு நடந்திருக்கு

சி.பி.ஐ ஆபிசர்: அது வந்து நீரா ராடியா

ராசா: என்ன அது வந்து நீரா ராடியா

சி.பி.ஐ ஆபிசர்: சரி டி.எஸ்.மத்தூர்

ராசா: என்ன சரி டி.எஸ்.மத்தூர்

சி.பி.ஐ ஆபிசர்: அவர் சொன்ன ஆலோசனைகளை

ராசா: என்ன அவர் சொன்ன ஆலோசனைகளை

சி.பி.ஐ ஆபிசர்: உள்நோக்கத்தோடு உதாசீனம் செய்தீர்களாமே

ராசா: என்ன உள்நோக்கத்தோடு உதாசீனம் செய்தீர்களாமே

சி.பி.ஐ ஆபிசர்: பிரதீப் பைஜால் பணம் கைமாறி

ராசா: என்ன பிரதீப் பைஜால் பணம் கைமாறி

சி.பி.ஐ ஆபிசர்: ஹவாலா ஜெயின் சகோதர்கள்

ராசா: என்ன ஹவாலா ஜெயின் சகோதர்கள்

சி.பி.ஐ ஆபிசர்: கிரீன் ஹவுஸ் ப்ரமொடேர்ஸ்

ராசா: என்ன கிரீன் ஹவுஸ் ப்ரமொடேர்ஸ்

சி.பி.ஐ ஆபிசர்: திரும்ப திரும்ப சொல்லறீங்க

ராசா: என்ன திரும்ப திரும்ப சொல்லறீங்க

சி.பி.ஐ ஆபிசர்: இல்லை திரும்ப திரும்ப சொல்லறீங்க

ராசா: என்ன இல்லை திரும்ப திரும்ப சொல்லறீங்க

சி.பி.ஐ ஆபிசர்: யோவ் ராசா

ராசா: என்ன யோவ் ராசா

சி.பி.ஐ ஆபிசர்: ஹூம் விசாரணை அவ்வளவுதான்

ராசா: என்ன ஹூம் விசாரணை அவ்வளவுதான்



ஒரு வழியாக விசாரணை முடிந்து வெளியே வந்த ராசாவை பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்ட பொழுது, தான் சி.பி.ஐக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறி தன் காரில் சிரித்த முகத்துடன் சென்றார்.

Follow kummachi on Twitter

Post Comment

கலக்கல் காக்டெயில்-15

சுஜாதாவின் “அது”வும் நிகழ்கால ஜல்சா சாமியார்களும்


சமீபத்தில் சென்னை சென்ற பொழுது சுஜாதாவின் “விஞ்ஞான சிறுகதைகள்” வாங்கி வந்தேன். ஐம்பது விஞ்ஞான சிறுகதைகளின் தொகுப்பு. இதில் சில கதைகளை திரும்ப திரும்ப பல முறை படித்திருக்கிறேன். காலயந்திரம், திமலா, ஜில்லு, யாகம் எத்துனை முறை படித்தாலும் அலுக்காதவை.

இப்பொழுது படிக்கும் பொழுது “அது” கதையை வெகுவாக ரசித்தேன். கதையின் சுருக்கம்

அந்தப் புதிய ஒளி  வட்டம் வானத்தில் தெரிய ஆரம்பித்தவுடனே நாட்டு மக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். அரசாங்கம் பிடிவாதமாக வதந்திகளை நம்பாதீர்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள்.

ஆத்மாவும் நித்யாவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்பொழுதுதான் நித்யா நவீன மெஸ்ஸயா பாவாவிடம் போகலாம் என்று சொல்லுகிறாள். ஒரு நெடிய வரிசையில் நின்று அவரை சந்திக்கிறார்கள். அவர் உலகம் எப்படியும் அழியப் போகிறது என்னிடம் பாவ மன்னிப்பு பெறுங்கள் என்று சொல்லுகிறார்.

ஆத்மா, நித்யா முறை வருகிறது. ஆத்மா அவரிடம் “பாவா நீங்கள் தான் ஒரு பாவமும் செய்யாதவர் பின் ஏன் நீங்களும் பாவ மன்னிப்பு கோருகிறீர்கள்” என்று கேட்கிறான்.

அதற்கு பாவா, நீ கேட்ட கேள்வி ஆதாரமானது, அதை நான் அதிகம் யோசித்தேன். என் வாழ்நாள் முழுவதும் நான் ஒரு பாவமும் செய்யவில்லை. பாவம் எப்படி இருக்கும் என்று அறியாதவன் என்று சொல்லிக் கொண்டே ஒரு அறையின் கதவை திறக்கிறார்.

அறையின் நடுவே பத்துப் பதினைந்துப் பெண்கள் அரைகுறை உடையில் “பாவா” என்று ஓடிவருகின்றனர்.

பாவா இப்பொழுது அறைக் கதவை மூடிக் கொண்டே ஆத்மாவிடம் “இருக்கும் ஒன்றிரண்டு நாட்களில் கொஞ்சம் பாவம் செய்யலாம் என்று இருக்கிறேன்” என்று கண்ணை சிமிட்டிக் கதவை மூடுகிறார்.

உள்ளே “வலிக்கிறது பாவா” என்று பெண்கள் குரல் கேட்கிறது.

வா பெண்ணே என் முன் மண்டியிடு என்கிறார்.

இதைப் படித்தவுடன் சமீப கால ஜல்சா சாமியார்கள் நினைவு வந்தால் அதற்கு சுஜாதா பொறுப்பில்லை.

ரசித்த கவிதை

பொழுது விடியும் புதுவையில் ஓர் வீட்டில்

விழி மலர்ந்த பாரதியார் காலைவினை முடித்து

மாடிக்குப் போவார் கடிதங்கள் வந்திருக்கும்

வாடிக்கையாக வரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்

சென்னைத் தினசரியின் சேதி பல பார்ப்பார்

முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்

சரியாய் படிந்ததுண்டா இல்லையா என்று

வரி மேல் விரல் வைத்து வாசிப்பார் ஏட்டை


இந்த வகையான பாரதிதாசன் எளிய நடை கவிதைகளுக்கு பொழிப்புரை தேவையில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 15 December 2010

அரசியலில் அன்டிராயர்..............................சகஜமப்பா

குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் ஒரு மக்கள் பிரச்சனை கூட பேசப்படாமல் தினமும் ஒரு பத்து நிமிடம் கும்பலுடன் கோவிந்தா போட்டு, குய்யோ முறையோ என்று கூவி கும்மியடிக்கப் போய் விட்டனர் நமது எம்.பி கூட்டம். இந்தக் கூத்துக்கு இவர்களுக்கு சம்பளம், பேட்டா, விமான டிக்கெட், மயிரு மட்டு என்று ஏகப்பட்ட சலுகைகள். இதன்  எதிரொலிதான் நம் கத்திரிக்காய், உப்பு, பருப்பில் தெரிகிறது. போதாக்குறைக்கு இந்த வருடம் எட்டாவது முறையாக பெட்ரோல் விலை ஏற்றப்படுகிறது.


இவ்வளவு கூப்பாடு போட்டும், எதிர் கட்சிகள் ஜே.பி.சி விசாரணை என்று கூவினாலும், அசராமல் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் தினமும் பத்து நிமிடம் வந்து போனாரே, நம்ம டர்பன் தாத்தா, அப்பா இவரு பெரிய ஆளுப்பா. இவருக்கு இதற்காகவே “பாரதரத்னா” கொடுக்கலாம்.

நம்ம ஊரு அரசியல் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. நீரா ராடியவுடன் ஐயா வூட்டுக் காரங்களும், அவர்களது நண்பிகளும் பேசிய பேச்சுக்கள் அய்யா குடும்பத்தின் சச்சரவுகள் குழாயடி ரேஞ்சுக்கு வந்துவிட்டது. இதில் அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் விபரீத முடிவுக்குப் போவார்கள் என்று வேறு பேசுகிறார்கள். இப்படி கூடவா அமைச்சர் ஆவார்கள் என்று கேள்வி எழுகிறது.

ஜன நாயகத்தில் ஏதோ கட்சி தலைவர்கள் எல்லாம் சேர்ந்து தான் அமைச்சரவை அமைக்கப் படுகிறது என்று நினைத்த நமக்கெல்லாம் வைத்த ஆப்பு இப்பொழுது எரிகிறது. கனவான்களும், மாமாக்களும் (மாமிகளும்) தான் முடிவு செய்யறாங்கப் போல. இந்த வியாபாரம் நல்ல வியாபாரம் போல் தெரிகிறது. எதிர் காலத்தில் இந்த வேலைக்கு பலத்தப் போட்டி இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

இப்பொழுது தியேட்டர் கிடைக்காதவன், தியேட்டரில் டிக்கெட் கிடைக்காதவன், என்று ஒரு கூட்டம் இந்த ஜோதியில் ஐக்கியமாக தயாராகிறது. இன்னும் போக போக என்ன ஆகுமோ தெரியவில்லை.

அதுக்குதான் அம்மட்டன் வாராவதி மேல் நின்னு அரை பாட்டில் வுட்டு அசையாம நின்ன ஐயாவு அன்னைக்கே சொன்னாரு “ஏலே அரசியல்வாதியையும் அன்டிராயரையும் அடிச்சு துவைத்து காயப் போடணும் இல்லாங்காட்டி நாறிடும்” னு.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 13 December 2010

ஊழலுடன் பிறந்தோம்

உயிர் தரிக்கும் முன்பே


உற்றாருடன் தொடங்கி

நகை நட்டு, கட்டில், தொட்டில்

வரதட்சினை இன்ன பிற

மல்லிப்பூ, அல்வா மணக்க

மஞ்சத்தில் அடங்கி

மருத்துவமனை பிறப்பில்

மறக்காது கூட வரும்

அறிவுக்கண் திறக்க

அனைத்திலும் அயராது

சிரித்து நிற்கும்.



நின்றால் நடந்தால்

நிழல் போல தொடர்ந்து

வேலை வீடு என

வெளிர் பல் காட்டி

வேகம் பிடித்து

வேண்டாது கூடவரும்.

அறிந்தும் அறியாமல்

இருக்க அறிவுக்கண்

திறந்து விடும்.

அரசாங்கம் புகுந்து

அயராமல் ஆட்சிபுரியும்

எண்ணாயிரம் ஜாதியில்

எங்கள் நாடு பிரிந்தாலும்

ஒன்றே குலம்

ஒருவனே தேவனாகி

ஒன்றாக “ஒருஜாதி” என்று

ஓங்கி உயர்த்தும்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 9 December 2010

கேவுருல நெய் ஒழுகுது டோய்.......................அமெரிக்காவுல கூப்பிட்டாக, அண்டார்டிகாவுல கூப்பிட்டாக, அயனாவரத்துலயும் கூப்பிட்டாக.

சோழிங்கர்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சி, இதுவரை ஆண்ட கட்சி, தேசிய கட்சி என பல கட்சிகளும் பாமகவுக்கு அழைப்பு விடுத்து கொண்டிருக்கின்றன என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி கூறினார்.




கூட்டணிக்கு ஒபாமா கூப்பிட்டாரு, நாங்கதான் ஐந்து கோடி வன்னியரை தவிக்கவிட்டுப் போகவில்லை.


பாமக இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர், உலகின் பல்வேறு நாடுகளிலும் 5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறிய கிராமத்தில் பிறந்தார். வேளாண் தொழில் செய்து கிடைத்த வருமானத்தில் படித்தார். டாக்டருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட உறவினர்கள் உதவியுடன்தான் படிக்க முடிந்தது.



இன்னாபா சொல்லுற ஒன்னியும் விளங்கமாட்டேங்குது. ஒரே கேராகீது.

படித்து முடித்ததும் அமெரிக்காவுக்கு வேலைக்கு அழைத்தனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். எனது சமுதாயத்துக்காக பாடுபடப் போகிறேன் என்று கூறிவிட்டார்.

அஹான் அமெரிக்காவுல இடது கைபோன பாட்டிய பாத்துக்கவா. நாளைக்கு ஒரு டாலர் சம்பளம், மாதம் முப்பது டாலர் பிடிப்பு, அந்த வேலைதானே?

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சி பாமக மட்டும் தான். மற்ற கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகின்றன. மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களையும் பாமகவுக்கு அழைத்து வர வேண்டும்.




ஏம்பா நல்லா அளந்து பாத்தீங்களா, எத்தனை இஞ்ச் வளர்ந்தீங்கன்னு புள்ளிவிவரம் கொடுங்கப்பு. வளர்த்தும், தேயர்தும் அரசியலில் சகஜமப்பா.

பாமக ஆதரவு இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. டாக்டர் ராமதாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் முதல்வர் ஆக முடியும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

ஏனுங்க நீங்க முதல்வராகற கனவு அப்போ இந்த ஜென்மத்தில் இல்லையா?


அப்போ விஜயகாந்து, விஜய் டி ராஜேந்தர், விஜய், சிம்பு யார் பக்கமாவாது கையை காமிப்பீங்களா? பாத்து கைய காமிங்க.


அப்பாலே இன்னும் நிறைய பேர் இருக்காங்க. வைகோவ மறக்காதீங்க.


ஏங்க தமிழ்நாட்டு மக்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

...........

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 8 December 2010

கலக்கல் காக்டெயில்-14

மழையில் சிங்கார சென்னை


ஒரு வார விடுமுறையில் சென்னை சென்று வந்தேன். நான் சென்னையில் இறங்கிய வேளை என்னுடன் சேர்ந்து மழையும் இறங்கியது. இரண்டே நாளில் சென்னை தெருக்கள் எல்லாம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய நிலவு போல் ஆகிவிட்டது. பனகல் பார்க் சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் யாரும் மழை நாளில் வெள்ளையும் சொள்ளையுமாக போய் விடாதீர்கள். பத்தடி நடப்பதற்குள் பாதாள சாக்கடையில் விழுந்த பன்னிக்குட்டி போல் ஆகிவிடுவோம். பசுல்லா ரோடிற்கு பெயர் மாற்றம் தேவை. பசுல்லா எரி என்று மாற்றிவிடலாம். ஐ. டி ஹைவே பெருங்குடி, நாவலூர் வரையில் நன்றாக உள்ளாது. அதற்குப் பிறகு அங்கு ரோடு இருந்ததற்கான அறி குறியே இல்லை. பெசன்ட்நகர் பஸ் நிறுத்தம் அருகே தேங்கியிருக்கும் தண்ணீர் கழிவு நீருடன் சேர்ந்து கலங்க வைக்கிறது. மாநகராட்சி என்ன செய்கிறார்களோ தெரியவில்லை.

வேலூர் போகும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு, விபத்தை தவிர்க்க வைத்திருக்கும் போர்டின் வாசகம் யோசிக்க வைக்கிறது.

ஆபாச போஸ்டர் பார்க்காதே,

அஞ்சலி போஸ்டர் ஆகாதே.



ரசித்த கவிதை

ஒரு எஞ்சினியரின் புலம்பல்

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.


புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.


பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க,
பெங்களுரைத் தாண்டாத விரக்திகள் எரிச்சலைக் கிளப்புகிறது.


சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.


பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது

"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".


அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்ட தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து,
வீட்டிற்கு செல்வதற்குள் "செல்லமே" கூட முடிந்து விடுகிறது.



செம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
பொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.



...................எழுதியவர் பெயர் தெரியவில்லை

ரசித்த மொக்கைகள்

“கமலா, நான் வீட்டு வாசலில் தண்ணி தெளிச்சா போதும் என் வீட்டுக்காரர் உடனே எழுந்துடுவார்”.

“எப்படிடி விமலா”.

அவர் சரக்கு வுட்டுட்டு அங்கேதானே விழுந்து கிடப்பார்.

------------------------------------------------------------------------------------------------------------

நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே?

தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?

கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 2 December 2010

சி. ஜீ.....நண்பேன்டா

சிறு வயதில் நாம் செய்யும் எத்தனையோ செயல்கள், பின்பு யோசித்துப் பார்க்கும் பொழுது அபத்தமாக தோன்றும். அந்த ஒரு அனுபவம் ஹாங்காங் ஏர்போர்டில் பிளாஸ்டிக் நாற்காலியில் விமானத்திற்காக காத்திருக்கும் பொழுது எனக்குத் தோன்றும் எதிர் பார்க்கவில்லை. எனக்கு நன்றாகத் தெரியும் சி. ஜியும் அப்படித்தான் நினைத்திருப்பான் என்று.


சி. ஜியும் நானும் மூன்றாம் வகுப்பிலிருந்தே பகைவர்கள். நாங்கள் மூன்றாம் வகுப்பு அரைப் பரீட்சை முடிந்தவுடன் எனிமி விட்டுக் கொண்டோம். எதற்காக என்று இன்று வரை காரணம் எனக்குத் தெரியாது. அரைப் பரீட்சை முடிந்தவுடன் என்னை அவன் வீட்டிற்கு கூட்டிசென்றான். அப்பொழுது நண்பர்களாக இருந்தோம். அன்று அவன் அம்மா எங்களுக்கு அடை, மோர்க்குழம்பு எல்லாம் செய்து கொடுத்தார்கள். அவர்கள் வீட்டு ஸ்பெஷாலிட்டி அது. பிறகு நன்றாக விளையாடினோம். பின்பு நான் வீட்டிற்கு வந்து அன்று இரவு விடுமுறையை கழிக்க பொள்ளாச்சியில் சித்தப்பா வீட்டிற்கு பயணமானோம். பிறகு விடுமுறை முடிந்து, பொங்கல் முடிந்து பள்ளித் திறந்தவுடந்தான் சி. ஜீ வித்யாசமாக நடந்து கொண்டான். என்னிடம் எனிமி விட்டான்.



இருந்தாலும் அதற்குப் பிறகு இருவரும் ஒன்றாக இருப்போம், ஒன்றாக விளையாடுவோம் ஆனால் பேசிக்கொள்ள மாட்டோம். என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் மற்றவரிடம் சொல்லி சொல்லச் சொல்வான். அதே சமயத்தில் எங்களில் ஒருவருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தயங்காமல் உதவி செய்து கொள்வோம். இது எங்களுடன் இருக்கும் மற்றத் தோழர்களுக்கு வித்தியாசமாக இருக்கும்.


பள்ளி இறுதியாண்டு முடியும் சமயம் ஒரு கூட்டம் எங்களை எப்படியும் பேச வைக்க வேண்டுமென்று தீர்மானித்து தனியாக கொண்டு சென்றார்கள்.

எங்கள் இருவரையும் கை குலுக்க வைத்து பேச சொன்னார்கள்.

நான்தான் முதலில் என்னாட சி ஜீ என்றேன்.

சி ஜீ பதிலுக்கு என்னாடா சங்கர்லால் என்றான்.

ஆனால் எங்களின் நட்பு அடுத்த நாளே முறிந்தது.

சி ஜீ அடுத்த நாள் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தான். நான் அவனுடன் “எனிமிதாண்டா” என்று மற்றவர்களிடம் சொன்னான். அதற்குப் பிறகும் நாங்கள் ஒன்றாகத் தான் இருந்தோம், ஆனால் பேச்சும் வார்த்தை மட்டும் கிடையாது.

இது இப்படியிருக்க சி ஜியின் தங்கை என் கல்லூரித் தோழனை காதலித்தாள். அவர்கள் இருவரும் திருமனம் புரிய நான்தான் காரணமாயிருந்தேன். அவன் தங்கை சாயா ஒரு வேற்று ஜாதிக் காரனை காதலித்தாள். நான் அவன் அம்மாவிடம் பேசி கல்யாணம் முடித்து வைத்தேன். அவர்கள் வீட்டில் அந்த பையனை யாருக்கும் பிடிக்கவில்லை. இருந்தாலும் கல்யாணம் நடந்தேறியது.


பிறகு காலத்தின் கட்டாயத்தில் நாங்கள் பிழைப்புக்காக வேறு வேறு நாடு சென்று சிதறி விட்டோம். இப்பொழுது சி ஜீயுடன் ஹாங்காங்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறன். சாயாவை பற்றி பேச்சு திரும்பியது. சாயாவுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொன்னான், இருந்தாலும் அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டான்.


சாயா என்னுடனும், என் மனைவியுடனும் தினமும் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றேன். அவளுக்கு இப்பொழுது இரண்டு பையன்கள், அட்லாண்டாவில் சுகமாக இருக்கிறாள் என்றேன்.


போன விடுமுறை நாங்கள் அவள் குடும்பத்துடந்தான் கழித்தேன் என்றேன். உன்னை பற்றி நாங்கள் பேசாத நாளில்லை என்றேன்.

பிறகு எனக்கு விமானத்திற்கு சமயம் ஆகிவிட்டதால் நான் அவனை பிரிய முடியாமல் பிரிந்தேன்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 1 December 2010

கவுஜ எழுதலாம் வாங்க.......

கவுஜ எழுதலாம் என்று தொடங்குமுன் என்ன கவிதை என்பதை யோசிக்க வேண்டும். கருத்து மிகவும் முக்கியம். தலைப்பு சும்மா நச்சுன்னு இருக்கணும்.


அப்புறம் மரபுக் கவிதைன்னா இந்த சீர், தளை அதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் படிக்க வில்லையென்றால் ஐயம்பெருமாள் கோனார் விலாவரியாக சொல்லியிருக்கிறார், அந்தப் புத்தகத்தை தேடி படிக்க வேண்டும்.

இதற்கு பழக வேண்டுமானால், சீத்தலை சாத்தனார், போன்றவர்களின் கவிதைகளை எடுத்து தளை பிரித்து அதை தேமா, புளிமா தோசை மா என்று பிரித்து அக்கு அக்காக அடுக்கி வைக்கப் பழக வேண்டும்.

இதை வைத்து அறுசீர் விருத்தம், கழிநெடி விருத்தம், வெண்பா, கலிப்பா, கட்டளைக் கலிப்பா, அருட்பா..................

இருப்பா!!!!!!!!!!..................... எங்கே ஓடுறீங்க.

சரி சரி அதெல்லாம் வேண்டாமா, அப்போ வாங்க நீங்க நம்ம ஆளு.

இப்படித்தான் நம்ம நண்பன் ஒருத்தன் பக்கத்து செக்ஷனில் ஆணி பிடுங்குற பய வந்து என்னாண்ட கேட்டான், மச்சி நீ எப்படிடா கவுஜ எழுதுற எனக்கு வர மாட்டேங்குது.

நான் எங்கேடா எழுதினேன், அது சும்மா உவ்வாகாட்டிக்கு.

அப்படியும் விடாம இல்ல மச்சி சொல்லிக் கொடுடா என்று கேட்டு நகர மாட்டேங்கிறான்.

டேய் போடா போய் ஆணி புடுங்கு, இங்கே எனக்கு தலைக்கு மேல வேலை இருக்குன்னாலும் கேக்காம நகர மாட்டேங்கிறான்.

சரி இவன எப்படிடா காலி பண்றதுன்னு சொல்லித்தான் மேலே கூறிய இலக்கணமெல்லாம் அவுத்து வுட்டேன்.

ஹூஹூம் பய அசரலை.

சரி இப்போ உனக்கு என்ன மாதிரிக் கவிதை வேணும் சொல்லுன்னேன்.

தோடா மெதுவா சின்னதா எழுத ஆர்மபிச்சு அப்பால சினிமாவுக்கு பாட்டு எழுதுனமுங்கிறான்.

சரி அவ்வளவுதானே வுடு,

தோ பார் மொதல்ல எதுகை மோனை தெரிஞ்சிருக்கணும். உதாரணத்திற்கு

பஞ்சம்- மஞ்சம்

மாடு – காடு

வாடி- போடி

வாடா – போடா

அடி- கடி

இது போல ஒரு நூறு வார்த்தை தெருஞ்சிக்கின்னு அத்தே மொதோ வரியிலும் அடுத்த வரியிலும் முதலில் வைத்து அப்பால நீ இன்னா வார்த்தை வேனுமுன்னாலும் போட்டுக்கலாம், இன்னா தெரியுதான்னு கேட்டா, ஓகே மாமு இப்போ புரியுது அப்படின்னான்.

இதுதான் புதுக் கவிதைன்னு சொல்றானுங்க, இதே எப்படி வேணுன்னாலும் எழுதலாம். எத்தகை மோனைப் போட்டா சினிமாவுல போனியாகும். அப்படிய இல்லன்னா பத்திரிகை, வலைப்பூவுல பிச்சிக்கின்னு ஒடுன்னேன்.

இன்ன வேனுமுன்னாலும் எழுது அப்படின்னேன்.

சரி நான் உனக்கு முதல் வரி எடுத்துக் குடுக்கிறேன் நீ கவிதை சொல்லுன்னேன்.

ஆத்தா நான் பாசாயிட்டேன்.


அதுக்கு அவன்

.. த்தா நான் பெயிலாயிட்டேன்


மவனே அவன் சொன்ன அந்த வரியில நான் ஆடிப் போயிட்டேன்.

சரி ஆள வுடு இனி தமிழ்நாட்டுல உன்னை விட சிறந்த கவிஞன் எவனும் பிறக்கப் போவதில்லைன்னு வாழ்த்தி அனுப்பி விட்டேன்.

பையன் இப்போ நிறைய சினிமாப் பாட்டு எழுதிக்கின்னு இருக்கான்.

சமீபத்தில் கூட ஒரு பாட்டு நீங்க கேட்டிருப்பீங்க.



ங்கொய்யால ங்கொய்யால

ஐய்யால ஐய்யால

இன்னாடா பண்ணலாம்

எவளாண்ட போவலாம்

கீதா தேடிப் போனா

சோடா குடின்னு சொன்னா



அது அவன் எழுதியப் பாட்டுதான். அந்தப் பாட்டு விருதுக்கு போயிருக்குன்னு சொல்லின்டிருக்கான்.

Follow kummachi on Twitter

Post Comment