Wednesday 8 December 2010

கலக்கல் காக்டெயில்-14

மழையில் சிங்கார சென்னை


ஒரு வார விடுமுறையில் சென்னை சென்று வந்தேன். நான் சென்னையில் இறங்கிய வேளை என்னுடன் சேர்ந்து மழையும் இறங்கியது. இரண்டே நாளில் சென்னை தெருக்கள் எல்லாம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய நிலவு போல் ஆகிவிட்டது. பனகல் பார்க் சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் யாரும் மழை நாளில் வெள்ளையும் சொள்ளையுமாக போய் விடாதீர்கள். பத்தடி நடப்பதற்குள் பாதாள சாக்கடையில் விழுந்த பன்னிக்குட்டி போல் ஆகிவிடுவோம். பசுல்லா ரோடிற்கு பெயர் மாற்றம் தேவை. பசுல்லா எரி என்று மாற்றிவிடலாம். ஐ. டி ஹைவே பெருங்குடி, நாவலூர் வரையில் நன்றாக உள்ளாது. அதற்குப் பிறகு அங்கு ரோடு இருந்ததற்கான அறி குறியே இல்லை. பெசன்ட்நகர் பஸ் நிறுத்தம் அருகே தேங்கியிருக்கும் தண்ணீர் கழிவு நீருடன் சேர்ந்து கலங்க வைக்கிறது. மாநகராட்சி என்ன செய்கிறார்களோ தெரியவில்லை.

வேலூர் போகும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு, விபத்தை தவிர்க்க வைத்திருக்கும் போர்டின் வாசகம் யோசிக்க வைக்கிறது.

ஆபாச போஸ்டர் பார்க்காதே,

அஞ்சலி போஸ்டர் ஆகாதே.



ரசித்த கவிதை

ஒரு எஞ்சினியரின் புலம்பல்

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.


புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.


பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய் ஃபேஸ்புக்கில் சிரிக்க,
பெங்களுரைத் தாண்டாத விரக்திகள் எரிச்சலைக் கிளப்புகிறது.


சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.


பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது

"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".


அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்ட தர்க்கங்களில் 'புரிந்தது' போல நடித்து,
வீட்டிற்கு செல்வதற்குள் "செல்லமே" கூட முடிந்து விடுகிறது.



செம்மறி ஆடுகள் பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
பொறியாளர்கள் பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.



...................எழுதியவர் பெயர் தெரியவில்லை

ரசித்த மொக்கைகள்

“கமலா, நான் வீட்டு வாசலில் தண்ணி தெளிச்சா போதும் என் வீட்டுக்காரர் உடனே எழுந்துடுவார்”.

“எப்படிடி விமலா”.

அவர் சரக்கு வுட்டுட்டு அங்கேதானே விழுந்து கிடப்பார்.

------------------------------------------------------------------------------------------------------------

நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே?

தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?

கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Chitra said...

பனகல் பார்க் சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் யாரும் மழை நாளில் வெள்ளையும் சொள்ளையுமாக போய் விடாதீர்கள். பத்தடி நடப்பதற்குள் பாதாள சாக்கடையில் விழுந்த பன்னிக்குட்டி போல் ஆகிவிடுவோம்


......சோகம் என்றாலும் சிரிப்பு..... செம கமென்ட்!

கும்மாச்சி said...

சித்ரா வருகைக்கு நன்றி.

Philosophy Prabhakaran said...

// ஆபாச போஸ்டர் பார்க்காதே,

அஞ்சலி போஸ்டர் ஆகாதே. //

தத்துவம் தூக்கல்,....

ஜெயந்த் கிருஷ்ணா said...

காக்டெயில் கலக்கல்..

Anonymous said...

ஆபாச போஸ்டர் பார்க்காதே,

அஞ்சலி போஸ்டர் ஆகாதே//
சூப்பராத்தான் இருக்கு

சாந்தி மாரியப்பன் said...

//ஆபாச போஸ்டர் பார்க்காதே,
அஞ்சலி போஸ்டர் ஆகாதே.//

நல்லாருக்கு.. அப்படியே வண்டி ஓட்டிக்கிட்டே மொபைல்ல பேசுறவங்களுக்கும் அரசாங்கம் ஏதாவது தத்துவம் சொல்லலாம்..

sarathy said...

நல்லாவே கலக்கிவிட்டீரையா!

sarathy said...

நல்லாவே கலக்கிவிட்டீரையா!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.