Friday 24 December 2010

ராசாவிடம் சி.பி. ஐ மராத்தான் விசாரணை-சொல்லுங்கள் ராசாவே

இன்று ராசா டெல்லி வந்த பிறகு சி.பி ஐ அலுவலகத்தில் ஆஜரானார். காலை பதினொரு மணிக்கு துவங்கிய விசாரணை மாலை ஏழு மணி வரை தொடர்ந்து நடை பெற்றது.


விசாரணை எவ்வாறு போயிருக்கும் என்பதில் நமது கற்பனை.

சி.பி.ஐ ஆபிசர்: வாங்க

ராசா: என்ன வாங்க

சி.பி.ஐ ஆபிசர்: சரி வாங்க ராசா

ராசா: என்ன சரி வாங்க ராசா

சி.பி.ஐ ஆபிசர்: வந்து அந்த டூஜி ஸ்பெக்ட்ரம்

ராசா: என்ன வந்து அந்த டூஜி ஸ்பெக்ட்ரம்

சி.பி.ஐ ஆபிசர்: இல்லை நீங்க தொலை தொடர்பு மந்திரியா இருந்தப்போ

ராசா: என்ன இல்லை நீங்க தொலை தொடர்பு மந்திரியா இருந்தப்போ

சி.பி.ஐ ஆபிசர்: ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு

ராசா: என்ன ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு

சி.பி.ஐ ஆபிசர்: முறைகேடு நடந்திருக்கு

ராசா: என்ன முறைகேடு நடந்திருக்கு

சி.பி.ஐ ஆபிசர்: அது வந்து நீரா ராடியா

ராசா: என்ன அது வந்து நீரா ராடியா

சி.பி.ஐ ஆபிசர்: சரி டி.எஸ்.மத்தூர்

ராசா: என்ன சரி டி.எஸ்.மத்தூர்

சி.பி.ஐ ஆபிசர்: அவர் சொன்ன ஆலோசனைகளை

ராசா: என்ன அவர் சொன்ன ஆலோசனைகளை

சி.பி.ஐ ஆபிசர்: உள்நோக்கத்தோடு உதாசீனம் செய்தீர்களாமே

ராசா: என்ன உள்நோக்கத்தோடு உதாசீனம் செய்தீர்களாமே

சி.பி.ஐ ஆபிசர்: பிரதீப் பைஜால் பணம் கைமாறி

ராசா: என்ன பிரதீப் பைஜால் பணம் கைமாறி

சி.பி.ஐ ஆபிசர்: ஹவாலா ஜெயின் சகோதர்கள்

ராசா: என்ன ஹவாலா ஜெயின் சகோதர்கள்

சி.பி.ஐ ஆபிசர்: கிரீன் ஹவுஸ் ப்ரமொடேர்ஸ்

ராசா: என்ன கிரீன் ஹவுஸ் ப்ரமொடேர்ஸ்

சி.பி.ஐ ஆபிசர்: திரும்ப திரும்ப சொல்லறீங்க

ராசா: என்ன திரும்ப திரும்ப சொல்லறீங்க

சி.பி.ஐ ஆபிசர்: இல்லை திரும்ப திரும்ப சொல்லறீங்க

ராசா: என்ன இல்லை திரும்ப திரும்ப சொல்லறீங்க

சி.பி.ஐ ஆபிசர்: யோவ் ராசா

ராசா: என்ன யோவ் ராசா

சி.பி.ஐ ஆபிசர்: ஹூம் விசாரணை அவ்வளவுதான்

ராசா: என்ன ஹூம் விசாரணை அவ்வளவுதான்



ஒரு வழியாக விசாரணை முடிந்து வெளியே வந்த ராசாவை பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்ட பொழுது, தான் சி.பி.ஐக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறி தன் காரில் சிரித்த முகத்துடன் சென்றார்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

பொன் மாலை பொழுது said...

கருணாநிதியின் கேவலமான அல்ப புத்தியினால் ராசாத்தி அம்மாளின் பேராசையினால் ஒரு தமிழ் அரசியல் இயக்கம் கேடு கேட்டு சிரிப்பாய் சிரித்து போனது தான் மிச்சம். ராஜா ஒரு கருவி மட்டும்தான். முழு குற்றவாளி வேறு யாரும் அல்ல. சாக நாள் வராமல், ஒரு இயக்கத்தை அழித்துக்கொண்டிருக்கும் அந்த கிழவன்தான்.

cheena (சீனா) said...

அன்பின் கும்மாச்சி - தங்கள் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - cheenakay@g.mail.com

Philosophy Prabhakaran said...

யப்பா.... மரணமொக்கை....

கும்மாச்சி said...

வருகை தந்த அணைவருக்கும் நன்றி. இனிய கிறிஸ்துமஸ்தின நல் வாழ்த்துகள்

உமர் | Umar said...

இந்த விடியோவையும் சேத்து பாருங்க.

http://www.youtube.com/watch?v=rgANpyU48cw

sarathy said...

enna othuzaipu koduththaar?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.