Saturday 27 December 2014

கலக்கல் காக்டெயில்-162

பதிவுலகத்திற்கு வந்து எழுதிக்கிழித்ததில் இது 799வது. உருப்படியாகக் கிழித்ததில் எத்தனை தேறும் என்று தெரியாது?. விடுமுறையில் வரும்பொழுது இந்தப் பதிவை வந்த முதள் நாளன்றே போடவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் உடல்நிலை காரணங்களால் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை.

2014 நடந்தது என்ன?

இந்த வருடம் நடந்த முக்கிய நிகழ்வுகளில் மத்தியில் ஆட்சி மாறியது. ஆட்சி மாற்றத்திற்குப் பின் சுபிட்சம் வந்துவிடும், தேனும் பாலும் பெருகி ஓடும் என்று நினைத்தோம் ஆனால் முதலுக்கு மோசமில்லை.

அடுத்த முக்கிய நிகழ்வு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு. முன்னாள் முதல்வர் மக்கள் முதல்வராகி, மற்றுமொரு டீ ஆத்தியவர் முக்கிய பொறுப்பு ஏற்றுள்ளார். தமிழ் நாட்டில் ஏதாவது உருப்படியாக நடக்கிறதா என்றால் ஒன்றும் இல்லை. சட்டசபையை ஒரு மூன்று நாட்களுக்கு கூட்டி அம்மா புகழ்பாடி முடித்தார்கள், வழக்கம்போல் எதிர்கட்சிகள் வெளிநடப்போ இல்லை வெளியேற்றவோ செய்யப்பட்டனர்.

திரையுலகில் நீ சூப்பர் நான் சூப்பர் என்று தங்களையே சொறிந்துகொண்டு நடிகர்களும் இயக்குனர்களும் மொக்கைப் படங்கள் கொடுத்து தமிழகத்தை அவர்கள் பங்கிற்கு வதைத்தனர், நடுவில் சத்தம்போடாமல் சில நல்ல படங்கள் வந்து சென்றன.

இயக்குனர் சிகரம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டம் அண்ணா, எம்.ஜி. ஆர் இறுதி மரியாதை கூட்டத்தை நியாபகப்படுத்தியது.

இசை விழா

டிசம்பர் சீசன் சென்னையில் களைகட்டியிருக்கிறது. வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் சபாவிற்கு கூட செல்லமுடியாதபடி வேலை. சனி ஞாயிறுகளில் தப்பித்தவறி வண்டியை எடுத்துவிட்டு லேட்டாக வந்தால் கச்சேரிக்கு வந்தவர்கள்  நம்ம பார்க்கிங்கில் வண்டியை விட்டு சென்றுவிடுகிறார்கள். பின்பு கச்சேரி முடியும் வரை அடுத்த தெருவில் வண்டியை விட்டு நடுநிசியில் கொண்டு நம்ம பார்க்கிங்கில் போடவேண்டும், நல்லா இருங்கப்பு............


ரசித்த கவிதை 

கவிதை 

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்..................
2014, டிசம்பர் 3 இரவு சுமார் 8 மணியிருக்கும்
'மூக்கின் மேலே
மூக்குத்தி போலே'
மச்சம் உள்ளதே............அதுவா?
என்று நீங்கள் கேட்க
கோயமுத்தூர் முனியாடி விலாஸில்
அடுப்பில் கிடந்தது கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்
அதுவா?
அதுவா?
 அதுவா?
என்று திருப்பிக் கேட்டான்
அப்போது உங்களுக்குச் சிலிர்த்துகொண்டதா?
எஸ்.பி.பி சார்

-----------------------------இசை

ஜொள்ளு 




Follow kummachi on Twitter

Post Comment

Saturday 13 December 2014

லிங்கா பன்ச் ட்வீட்டுகள்

சூப்பர் ஸ்டார் நடித்து இன்று வெளிவந்துள்ள லிங்கா படம் பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அடடா இன்னா ஒரு ஸ்டைலு..........
ஆனால் ட்விட்டர் நேற்றே களைகட்டிவிட்டது. லிங்கா என்ற ஹாஷ் டேக் ஆரம்பித்து ஒரே ரணகளம்.

அவற்றில் சில..........

காலடில குத்துறத்துக்கு அவர் ஒன்றும் மலிங்கா இல்லடா, காலகாலமா நிக்குற லிங்காடா.

காட்டுல கல்லடி படுற மாங்கா இல்லடா அவர் தமிழ் நாட்டின் லிங்காடா.

படம் பட்டாசுன்னு பசங்க சொல்ட்டாங்க. நாளைக்கு ஹாஃப் டே லீவ் போடுறோம்............லிங்கா பாக்குறோம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் ரெண்டே வகைதான், ரஜினிய கொண்டாடிக்கிட்டே படம் பாக்கிறவங்க, ரஜினிய திட்டிகிட்டே படம் பாக்கிறவங்க.

ரஜினி ப்ளேவர் படையப்பா விட கம்மி, ஆனா சிவாஜியைவிட அதிகம் இது போதாதா? பட்டாசை கொளுத்துங்கடா. இன்னைக்கு தீபாவளி.

பர்ஸ்ட் ஹாப் தெய்வ லெவல் மாஸ். செகண்ட் ஹாப் அதுக்கும் மேல. ரஜினி லெவல் மாஸ்.

லிங்கா டேக்க மொத்தமா சுத்துனா படம் சரியில்லைன்னு சொல்ற பீசுகள் முக்கால்வாசி துப்பாக்கி, கத்தின்னு இருக்குது. தம்பி இஸ்கூலு லீவாடா?

அந்த இரு நடிகர்களின் ரசிகர்கள் மொக்கை படங்களையே  கொண்டாடும்  சூழலில் ரஜினி ரசிகர்கள் இந்தப் படத்திற்கு தாராளமாக சந்தோஷிக்கலாம்.

ரஜினி ட்விட்டருக்கு வரதால தான் படம் ஓடுதா? முப்பது வருசமா அவரு படம் ஓடிக்கிட்டுதான் இருக்கு லூசுங்களா! ஜெலுசில் ம்ஹூம் ஓமத்திரவம் குடிங்க!

Follow kummachi on Twitter

Post Comment

Friday 12 December 2014

லிங்கா விமர்சனம்-என்னுடையது அல்ல.....

நடிப்பு: ரஜினிகாந்த் (இருவேடங்கள்),
சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம், ராதாரவி, விஜயகுமார், இயக்குநர் விஸ்வநாத் 
ஒளிப்பதிவு: ரத்னவேலு கதை : 
பொன் குமரன் 
இசை: ஏ ஆர் ரஹ்மான் 
தயாரிப்பு: ராக்லைன் வெங்கடேஷ் 
இயக்கம்: கே எஸ் ரவிக்குமார் 

இந்தியாவில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ரஜினியின் லிங்கா, சரித்திரமும் சமகாலமும் கலந்த ஒரு சுவாரஸ்யமான கதை. அரங்குக்கு வரும் ஒவ்வொரு ரசிகனையும் அனைத்து விதங்களிலும் திருப்திப்படுத்த வேண்டும் என்று பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு பிரமாண்டம்.

கதை மிக அழுத்தமானது. ஊருக்கு ஆறு என ஒன்று இருந்தாலும், அந்த ஆறால் எந்தப் பயனுமின்றி, பஞ்சத்தில் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் சோலையூர் மக்களுக்காக ஒரு அணையைக் கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன் (ரஜினி). இந்த அணைக்காக தான் வகிக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசின் கலெக்டர் பதவியைத் துறக்கிறார். சொத்து முழுவதையும் இழக்கிறார். ஆனால், எந்த மக்களுக்காக அணை கட்டினாரோ அதே மக்களால் விரட்டப்படுகிறார் ஒரு பிரிட்டிஷ் அதிகாரின் நயவஞ்சகம் மற்றும் நம்ம ஊர் எட்டப்பன்களால். எழுபதாண்டு காலம் ஓடுகிறது. மீண்டும் அந்த ஊர் மக்களுக்கும் அவர் கட்டிய அணைக்கும் ஆபத்து நேர்கிறது, அரசியல்வாதி ரூபத்தில். எப்படி இவர்களைக் காக்கிறார் ராஜாவின் வாரிசு (இன்னொரு ரஜினி) என்பது திரையில் பார்க்க வேண்டிய மீதி. 

வாரே வா... என்ன ஒரு அருமையான கதை, அதற்கேற்ற திரைக்கதை. பாராட்டுகள். குறிப்பாக அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் அத்தனை கச்சிதம். இவற்றை மட்டும் தனியாகப் பிரித்தால் கூட ஒரு முதல் தரமான வரலாற்றுப் படம் கிடைத்துவிடும் எனும் அளவுக்கு அற்புதமான பகுதி அது. ரஜினிக்கு மட்டுமே இப்படி அற்புதமான ப்ளாஷ்பேக்குகள் அமைகின்றன.

அடுத்து ரஜினி. படம் முழுவதையும் சுமப்பவர் ரஜினிதான். அறிமுகமாகும் அந்த முதல் காட்சி பிரமிக்க வைக்கிறது. இந்த மனிதருக்கு திரையில் மட்டும் வயதே ஆகாது என்று கற்பூரம் அடித்துச் சொல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் அந்த ஸ்டைலும் அழகும் இளமையும் அவரது உடல் மொழியும் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. அந்த ரயில் சண்டையில் கிரிக்கெட் மட்டையால் அவர் ஸ்டன்ட் ஆட்களைப் பந்தாடும் ஸ்டைல் அருமை.

இரண்டு வேடங்களிலுமே ரஜினி தன் ரசிகர்களை வசியம் செய்துவிட்டார் என்றால் மிகையல்ல. ரஜினிக்கு மேக்கப் போட்டவர்கள், காஸ்ட்யூம் பார்த்தவர்கள் அனைவருக்குமே பாராட்டுகள். லீ விட்டேகரின் அந்த ரயில் சண்டைக் காட்சி உறைய வைக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் அத்தனை நேரமும் சலிப்பின்றி ரஜினியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவு மனிதர் வசீகரிக்கிறார்! 

ரஜினியின் நாயகிகளாக வரும் சோனாக்ஷி மற்றும் அனுஷ்கா இருவருக்குமே நடிக்க வாய்ப்புடன் கூடிய பாத்திரங்கள். அருமையாக நடித்துள்ளனர். அந்த மரகத நெக்லஸ் திருடும் காட்சியில் அனுஷ்காவும் ரஜினியும் ரசிகரின் உள்ளங்களைக் கொள்ளையடிக்கின்றனர். ரஜினியிடம் அனுஷ்கா தன்னைப் பறிகொடுக்கும் நெருக்கமான காட்சிகளில் காதல் ரசம்..! 

ஜாக்கெட் போடாத காலத்துப் பெண்ணாக வரும் சோனாக்ஷி சிறப்பாக நடித்துள்ளார். ஒரு காட்சி... எல்லாம் இழந்த ரஜினியிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார் சோனாக்ஷி. பின்னர் ஊர்க்காரர்கள் எங்கெங்கோ தேடி ஒரு நாள் அவர்களைக் கண்டுபிடித்து ஊருக்கு அழைக்கிறார்கள். மீண்டும் ராஜவாழ்க்கையை வாழச் சொல்கிறார்கள். அதை சிம்பிளாக மறுத்துவிட்டு, இந்த வாழ்க்கை எப்படி என மனைவி சோனாக்ஷியைப் பார்ப்பார். அதைப் புரிந்து, நிறைந்த மனசு முகத்தில் எதிரொலிக்க சோனாக்ஷி பார்க்கும் பார்வையில் அவரது பக்குவ நடிப்பு தெரிகிறது. 

முந்தைய படங்களில் ரஜினியுடன் கொஞ்சம் எட்ட நின்றே காமெடி செய்த சந்தானம் இந்த முறை, மிக நெருங்கிய 'நண்பேன்டா' தோழனாக (கவனிக்க நண்பேன் மட்டும் சந்தானம் சொல்ல, டா என முடிப்பார் ரஜினி.. மரியாதை மரியாதை!!) வருகிறார். முதல் பாதி முழுக்க ரஜினியுடன் சந்தானம் கலக்குகிறார். 

வில்லனாக வரும் ஜெகபதி பாபு, கருணாகரன், விஜயகுமார், ராதாரவி, அனுமோகன், பொன் வண்ணன், ஜெயப்பிரகாஷ், அந்த பிரிட்டிஷ் கலெக்டர் மற்றும் அவர் மனைவி என அனைவருமே சரியாகச் செய்துள்ளனர். 

படத்தின் அத்தனை காட்சிகளுமே பிரமாண்டம்தான். அதுவும் அந்த அணை கட்டும் காட்சியும், கூடவே வரும் ஆயிரக்கணக்கான துணை நட்சத்திரங்களும்.. இவ்வளவு பெரும்படையைக் கட்டியாள ரவிக்குமார் மாதிரி இயக்குநர்களால்தான் முடியும். 

ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் 'வந்தா மட்டும் போதும்'தான். ஆனால் மற்றவர்களுக்கு...? 

படத்தின் ஆகப் பெரிய குறை.. அநியாயத்துக்கு நீளும் அந்த க்ளைமாக்ஸ் துரத்தல், பவர் ரேஞ்சர்ஸ் கேம் மாதிரி ஆகிவிட்ட அந்த பலூன் சண்டை... (ஆதவன் ராக்கெட் லாஞ்சர் மேட்டரை விட மாட்டேங்குறாரே டைரக்டர்!) இத்தனை நம்பகமான வரலாற்று ரீதியான கதையை உருவாக்கியவர்கள், எதற்காக இத்தனை சினிமாத்தன க்ளைமாக்ஸை வைத்தார்கள்? இவற்றை நிச்சயம் தவிர்த்துவிட்டு, தரையிலேயே நடப்பது போல ஒரு அழுத்தமான காட்சியை வைத்திருக்கலாம். 

முத்து, படையப்பா, அருணாச்சலம், சிவாஜி படங்களில் ரஜினி எல்லா சொத்துகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வருவார். இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சி. சென்டிமென்ட் என்றாலும், கதையின் போக்கை எளிதில் யூகிக்க முடிகிறது. 

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பிரமிப்பை பல மடங்காக்குகிறது. ரஜினியை ஏக ஸ்டைல், இளமை, அழகுடன் படம்பிடித்திருக்கிறார். கலை இயக்குநருக்கு செம வேலை. அந்த பிரமாண்ட அணையை இவ்வளவு குறுகிய காலத்துக்குள் கட்டி, படமாக்கியது அசர வைக்கிறது. 

ஏ ஆர் ரஹ்மான் இன்னொரு ஹீரோ. அனைத்துப் பாடல்களும் பிரபலம். மன்னவா, இந்தியனே.. பாடல்கள் இனிமை. மோனா கேசோலினாவில் ரஜினியின் ஸ்டைல், நடனம், அனுஷ்காவின் அழகு கிறங்கடிக்கிறது. துவக்கப் பாடல் இன்னும் கூட நன்றாக ட்யூன் செய்திருக்கலாம். அதே போல, ரஜினி படங்களில் அவர் நடந்து வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பொதுவாகவே கலக்குவார் ரஹ்மான். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். ஆனால் அந்தக் குறையைப் போக்குகிறது ரஜினியின் நடனம். அதே பழைய உற்சாகம், துடிப்பு, துள்ளல்! 

இதுவரை ரஜினியைக் காட்டாத அளவுக்கு இந்தப் படத்தில் புதிதாகக் காட்டிவிட வேண்டும் என்ற மெனக்கெடல் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருக்கு. அதற்கான பலனும் திரையில் தெரிகிறது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி, க்ளைமாக்ஸை நச்சென்று முடித்திருந்தால், லிங்கா வெறும் படமல்ல, சரித்திரமாய் மனதில் பதிந்திருக்கும். ஆனால் ரஜினியை, அவர் படத்தை ரசிக்க இது ஒரு பெரும் தடையல்ல.. என்ஜாய்! 

நன்றி: ஷங்கர்.
FILMIBEAT

Follow kummachi on Twitter

Post Comment

எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது...........


சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைவாசம் என்று தீர்ப்பு வழங்கி இருபத்தியொரு நாட்கள் பரப்பான அக்ராஹார சிறையில் ஊதுபத்தி உருட்டிய பின் ஒரு வழியாக உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது, சட்டசபையைக் கூட்டி "மம்மி" புகழ் பாடியது என்பதெல்லாம் செய்திகள், இதற்கெல்லாம் உச்சகட்டமாக "மம்மி" தலைமை மற்றும் அறிவுரை பேரில்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்று கூறி அதை அவைக்குறிப்பிலும் ஏற்றிவிட்டார்கள். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி எப்படி ஆட்சிக்கு தலைமை தாங்கலாம்? மேலும் இது இந்திய ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் கேலிகூத்தாக்கும் செயல் என்று அரசியல் வல்லுனர்கள் சொல்வதெல்லாம் ஒரு பொருட்டாக யாருக்கும் தெரியவில்லை. மதுவில் மயங்கிக்கிடக்கும் தமிழக மக்களுக்கும் இது புரியப்போவதும் இல்லை.

வருமான வரி வழக்கில் பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு அபராதத்தொகையை செலுத்தி வழக்கிலிருந்து விடுபட்டு விட்டார்கள்!!!!!!!!!!!!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் டிசம்பர் 18 தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறி ஜாமீன் வழங்கிய பின் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல் போன்றிருந்தது. தற்பொழுது கொடுத்த கெடுவின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கையேடு உச்ச நீதிமன்றத்தை அணுகி வழக்கை விரைவில் தொடங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். அதை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.

பதினெட்டு ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி, வழக்கு ஆவணங்கள் தமிழில் மொழி பெயர்த்து தரவேண்டும் என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லி வழக்கை இழுத்தடித்தவர்கள் இப்பொழுது மேல்முறையீட்டை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோருவது சில சந்தேகங்களை எழுப்புகிறது.

யாரை பார்த்து என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்துவிட்டுதான் இந்த அவசரம் காட்டுகிறார்களோ என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது...............என்னமோ போடா மாதவா.............

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 11 December 2014

பாரதியை நினைவுகொள்வோம்

டிசம்பர் 11, பாரதியின் பிறந்தநாள். இந்த நாளில் அவரது கவிகளில் சிலவற்றை மீண்டும் நினைவுகொள்வோம்.


 அன்பு செய்தல் 


இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?

வேறு


மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!




 சென்றது மீளாது 


சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 10 December 2014

டீ வித் முனியம்மா பார்ட் - 27

மோனா மோனா மோனா கேஸ்ஸோலினா...........மோனா மோனா........

இன்னாடா செல்வம் தலிவர் பாட்டு பாடிக்கினு வர...........டிக்கட் எத்திட்டியா?.

ஐய இன்னா முனிம்மா சொல்ற, கவுண்ட்டரு தொறந்து பத்து நிமிஷம் ஆவ சொல்ல கபால்னு மூணு நாளிக்கி வித்திட்சிங்கிறான், அல்லாம் வூட்ல குந்திகினே டிக்கட்டு எத்திடுரானுங்க....இன்னா செய்ய. நீ வாங்கிட்டியா முனிம்மா?

இன்னாடா அவசரம், நமக்கு வியாவாரம் கீதில்ல, அப்பால பாத்துக்கலாம். இன்னாடா ஒரு டிக்கட்டு ஐநூறு ரூவாயாமே, இன்னாடா அவளவு துட்டு..

பின்ன தலீவரு படம்னா சொம்மாவா?

டேய் மீச இன்னாடா நிக்குற, டீ போடுறா.......

முனியம்மா ஏதானும் சேதி..........

இருடா மீச தோ அல்லாம் வந்துகினு கீறாங்க........

இன்னா முனிம்மா சகாயம் விசாரனைய ஸ்டார்ட்டு செஞ்சிகினாரா?

லிங்கம் சாரு அந்தாளு மதுரைல குந்திகினு ஆரம்பிக்க சொல்ல ஆளுங்கட்சிகாரன் வந்து அமைச்சர் செல்லூரு ராசு வராரு அவருக்கு இந்த ரூம்பு வேணும் காலி பண்ணுன்னு கீறானுங்க, அப்பால அந்தாளு கொடுத்த டைப்படிக்கிற பொம்பளையாண்ட வேல செய்யாதன்னு மெரட்டிகிரானுங்க, அந்த பொண்ணு சகாயத்தான்டையே ஓ............ன்னு அயுதுகீது.

ஆமாம் முனிம்மா அப்பால அங்க இன்னா நடக்குதுன்னு ஒட்டு கேட்டுகிறானுங்க.

அதானே நாடார் போலீசு காரனுன்களே ரெண்டு பேரு சகாயத்தாண்ட கம்ப்ளைண்ட்டு கொடுத்துகிரானுங்க, அவனுக க்வாரியாண்ட நெலம் வாங்கி பெஜாராகிக்கிரானுங்க.

இன்னா முனிம்மா இது பெரிய ஊயலா இருக்கும் போல கீதே.

ஆமாண்டா லோகு எல்லாம் டங்கமாரி பசங்க...........விசயம் வெளிய வந்தா அல்லா அமைச்சருங்க பாடு டப்பா டான்சு ஆடிடும்.

இன்னா முனிம்மா வைகோ கூட்டணி வுட்டு வெளியாந்துட்டாறு..............

அவரு இன்னா செய்வாரு, ஈயத்த வச்சி அரசியல் செஞ்சி ஒஞ்சிட்டாறு......ஒரு ......மவனும் கண்டுக்க மாட்டேங்கிறான். சாமி வேற நக்கலடிக்கிறாரு, மருத்துவர் ஐயா கச்சியும் ஓடிடுங்கிராறு. தமாசு பார்ட்டிப்பா........

முனிம்மா சட்டசப மூணு நாலு கூட்டினானுகளே இன்னா பேசிக்கினானுங்க.....

இன்னாத்த பேசுவானுங்க...........அம்மா......... தேவாரம், திருவாசகம், பெரிய பாலையத்தம்மனு, மாங்கையர்க்கரசின்னு பாட்டு பாடி ஒரே பக்கமா ஆடுறானுங்க.

எதிர் கட்சி இன்னா செஞ்சானுங்க.............

அவனுங்க வயக்கம் போல கூவிட்டு ..............கேட்டாண்ட நின்னுகினு டீ.வி.காரனாண்ட பேசிக்கினு பூட்டானுங்க.

பாலுல தண்ணி ஊத்தி துட்டுல கைவச்சானே அவன் இன்னா ஆனான்?

லோகு அது கேசு நடக்கப்போவுதுடா.........அந்தாளுக்கு ஜாமீனு கெடையாதுன்னு சொல்லி உள்ளாரையே வச்சிகிரானுங்க. அந்தாள நோண்டினா இன்னும் இதுல பங்கு வாங்கினவனுங்க பேரெல்லாம் வெளிய வரும்.

இன்னா முனிம்மா  கரெண்டு இருக்குற வூட்டுக்கு மண்ணெண்ன கடிக்காதாமே?

ஏண்டா பயம் நீ மெர்சல் ஆவுற, நம்ம வூட்ல எண்ணிக்கிடா கரெண்டு இருந்து கீது..........

இன்னா முனிம்மா குஸ்பூ கச்சி மாரிகிச்சி.............ஏண்டா லோகு உனுக்கு அரசியல்னா சினிமாகாரவளுகதானா? சொம்மா குஸ்பூ, நமீத்தானுகினு.

மோடி இன்னா செஞ்சுகின்னு கீறாரு முனிமா..........

அவரு இன்னா..........காஸ்மீருல ஒட்டு வாங்கிக்கினு கீறாரு...........அப்பால சைனா, ரஸ்யான்னு போய்கினுகீராறு. எவன் ஆண்டாலும் நமக்கு நம்ம பொயப்பு, அப்பால தொ இந்த டீக்கடைதான்...............

டேய் பழம்................இன்னாடா தலீவரு பட வியா........... ராயப்பேட்டயாண்ட வச்சானுன்களே நீ போன...........

அஹான் முனிம்மா இன்னா ஜெனம்.........உள்ளர உடமாட்டேன்னுட்டானுங்க..........அப்பால அனுஸ்காவ கண்டுக்கினு வந்துகினேன்.











Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 9 December 2014

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
’நெடிய’ என்னாது, சுரம் பல கடந்து,
வடியா நாவின் வல் ஆங்குப் பாடி,
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்து அன்றோ? இன்றே; திறப்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.
இதை பாடியவர் கோவூர் கிழார். 
புலவர்கள் பல காடு மேடுகளை எல்லாம் கடந்து ஒவ்வொரு அரசரையும் கண்டு அவர்களை புகழ்ந்து பாடி அவர்கள் பரிசை ஏற்று அதை மற்றவர்களுடன் பகிர்ந்துண்டு வாழ்கிறோம். அப்படியிருக்க அவ்வாறு வந்திருக்கும் அந்த புலவனை எதிரி நாட்டு ஒற்றன் என்று சந்தேகம் கொண்டு தண்டிக்காதீர்கள் என்று புலவர்களின் நிலைமையை விளக்கி அரசனுக்கு அழகாக அறிவுரை கூறுவதாக அமைந்துள்ளது இந்த பாடல்.
சரி அதையெல்லாம் இப்பொழுது கூறி மொக்கை போடுகிறேன் என்று கேட்காதீர்கள்.
நேற்றைய தின சட்டசபைக்கூட்டத்தில் மாநில முதல்வர் முன்னாள் மன்னிக்கவும் மக்களின் முதல்வரின் பெருமையை லாவணி பாடியதற்கும் மேலே உள்ள பாடலுக்கும் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டத்தான்.
இப்பொழுது ஓ.பி.எஸ் பாடிய லாவணி 
அன்னை தமிழகத்தை, அன்புச் சரணாலயமாய் பூத்துக் குலுங்க வைக்கும், புறநானூற்றின் புதுவடிவே!
 தாயாகி, தந்தையாகி, தமிழர் குலச் சாமியாகி, யாதுமாகி நிற்கும் எங்கள் தாயுமானவரே!
 "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பாடிய நாவுக்கரசரின் திருவாய்மொழிப்படி வாழுகின்ற எடுத்துக்காட்டாய் திகழும் வரலாற்று வடிவே! 
முன்னிருந்தோர் முடிக்க இயலாப் பெருஞ்செயல்களை முன்நின்று நிறைவேற்றும் முத்தமிழின் திருவடிவே!
வேதனைகளெல்லாம் தமக்கென்றும், விளைகின்ற நலம் எல்லாம் பிறர்க்கென்றும், தமிழகம் செழிக்க தவ வாழ்வு வாழ்கின்ற தியாகத் திருவுருவே! 
நிலத்தில் யார்க்கும் அஞ்சா நன்னெறியும், நேருக்கு நேர் நின்று போராடும் நெஞ்சுரமும், தனக்கே உரிமைஎனக் கொண்ட தன்மானச் சிங்கமே! 
சோழநாட்டுக் கரிகால் பெருவளத்தானும், பாண்டி நாட்டு ராணி மங்கம்மாளும், வாளெடுத்துப் போரிட்டு வரவழைத்த நீராதார உரிமைகளை, வெள்ளைத் தாளெடுத்துப் போரிட்டு வென்று வந்த வீரத்தாயே! 
தமிழகமே தனது இல்லமாய், தமிழ் மக்களே தனது சுற்றமாய் தமிழ்நாட்டின் நலனுக்கென தன் வாழ்வையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னிகரில்லாத் தங்கமே! 
மக்கள் முதல்வர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களே! 
தங்கள் பொற்பாதங்களில் எனது வணக்க மலர்களைக் காணிக்கை ஆக்கி, தாங்கள் வீற்றிருக்கும் திசை நோக்கி வணங்கி, 2014-2015 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் துணை மதிப்பீடுகளின் மீதான விவாதத்திற்கு எனது பதிலுரையை வழங்க விழைகிறேன்.
அப்பா பின்னுராங்கப்பா................போன ஆட்சியில் "அரங்கங்களில் அரைகுறை ஆடை நங்கைகளை ஆட விட்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" என்று லாவணி பாடினார்கள். இப்பொழுது சட்டசபையில் வேட்டி அவிழ்த்து பாடுகிறார்கள். இரண்டிற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.
இந்த அழகில் இரண்டு கட்சிகளும் வார்த்தைக்கு வார்த்தை பெரியார், சுயமரியாதை என்று கூவிக்கொண்டு கூத்தடிக்கிறார்கள். 
நாமெல்லாம் சரக்கடித்து "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று ஆடை அவிழ நடுத்தெருவில் படுத்திருந்து அடுத்த தேர்தல் காசு வரும் வரை களித்திருப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 8 December 2014

கலக்கல் காக்டெயில்-161

தேவாரமே, திருவாசகமே, தேறாதவளே.........

சட்டசபையைக் கூட்டுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி ஒ.பன்னீர்செல்வம் ஒரு வழியாக சட்டசபையைக் கூட்டி ஒரு மூன்று நாட்கள் அம்மா புகழ் பாடி மக்கள் பிரச்சினைகளை? அலசி ஆராய்ந்து தீர்ப்பும் கண்டு பல நல்ல திட்டங்களை? அறிவித்துவிட்டார். இருங்க இருங்க அவசரப்படாதீங்க. அம்மா புகழ் பாடினால் நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தானகவே தீர்ந்து விடாதா? அம்மாக்கு லாவணி பாடினாலே திட்டங்கள் அறிவித்ததாகத் தானே அர்த்தம்.

இந்த கூத்தை ஜெயா டி.வியில் வேறு போட்டுக்காட்டி மக்கள் முதல்வர் புகழ் பாடினார்கள்.

ஆறு கோடி மக்கள் அம்மா என்றழைக்கும் தேவாரமே
பூமித்தாயை குளிர்விக்க மழை நீர் சேமிப்பு திட்டம் தந்த மங்கையர்க்கரசியே
இன்னும் மடிக்கணினி தந்த மகாராணியே...........என்று ஒரு பத்துப்பக்கத்திற்கு எழுதி வாசித்தார். அம்மாவின் அல்லக்கைகள் விடாது பெஞ்ச் தட்டிக்கொண்டிருந்தனர்.

இன்னும் கூட கொஞ்சம் லாவணியை சுருதி சுத்தமாகப் பாடியிருக்கலாம்.

அறுபத்தியாறு கோடி ஆட்டையைப் போட்ட அங்காள  பரமேஸ்வரியே
குன்ஹாவிடம் குட்டு வாங்கிய குணசுந்தரியே
ஜாமீனில் வந்திருக்கும் ஜான்சிரானியே
வருமான வரி வழக்கில் வெளிவந்த விடிவெள்ளியே...........ஏன்யா இதையெல்லாம் விட்டீங்க.

கேப்டன் வந்துவிட்டார்.......... அவர் வந்துவிட்டார்
மவன் சம்முகம் படத்துக்கு லொகேஷன் பார்த்துவிட்டு தாய் நாடு திரும்பிவிட்டார் கேப்டன். சட்டசபைக்கு சென்று மக்கள் பிரச்சினையை விவாதிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் ஒரு மாதமாக பேப்பர் படிக்கவில்லை ஆதலால் தமிழக நடப்பு என்னவென்று தெரியாது என்று மிகவும் நிதானத்துடன் பதிலளித்திருக்கிறார். பிறகு தொண்டர்களுக்கு அறிவுரை வேறு, என்னை கிண்டலடிப்பார்கள் அமைதியாக இருங்க என்று.

ஆமாம் கேப்டன் கிண்டலடிப்பாக, அடிச்சுக்கூட கேப்பாக ஒன்றும் சொல்லிடாதீங்க................கேப்டன் நீங்க இல்லாத ஒரு மாதத்தில் சரக்கு விலை கூடிப்போச்சு. பேப்பர்ல பார்த்துட்டு சட்டசபை பக்கம் போனா கேளுங்க இது இன்னா நியாயம்.

ரசித்த கவிதை 

நீ வேறு நான் வேறு கவிதை 

ப்போதெல்லாம்
நீ கொலைகளைச் செய்ய அஞ்சுவதில்லை.
நம் சமையல் அறைக்குள்
ஜன்னல் வழியே ஊர்ந்துவரும் எறும்புகளை
பழுப்பில் சிக்கிய பருக்கைகளைத் தேடும்
மூஞ்சுறுகளை
நம் குளியல் அறையின்
மூலையில் படுத்துக்கிடக்கும் கரப்பான்களை
வேலிச் சுவரைத் தாண்டி
தலை நீட்டிக்கொண்டிருக்கும்
முருங்கைக் கிளைகளை
பழுத்துவிட்டால் புழு தின்றுவிடும் என
பிஞ்சு கொய்யாக்களை
இன்னும் நிறைய்ய்யவற்றை
நீ கொலை செய்ய அஞ்சுவதில்லை.
பூ பூத்ததும்
தென்னை வயசுக்கு வந்துடுச்சுனு
ஊருக்கே புட்டு அவிச்சிக் குடுத்தாங்க
எங்க அம்மா
உன் அழிப்பின் ரகசியங்களோ
என் பண்பாட்டை
ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன!

நன்றி: கு. உமாதேவி 


ஜொள்ளு 






Follow kummachi on Twitter

Post Comment

Sunday 30 November 2014

குஷ்பூ துரத்தப்பட்டாரா?

இணையத்தில் அவ்வப்பொழுது "போட்டோ கமெண்ட்ஸ்" வந்துகொண்டிருக்கிறது .  சில புன்னகையை வரவழைக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வந்தவற்றில் ரசித்தது.

கலைஞர் சொத்துல இவ்வளுண்டுதாங்க கேட்டேன்.
வெளிய போடீன்னு சொல்லிட்டாங்க.
நன்றி: சங்கர் 




நன்றி: பன்னிகுட்டி ராமசாமி 

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 29 November 2014

எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் பள்ளி மாணவனை அதே பள்ளியில் +2 படித்த மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த செய்தி  அதிர்ச்சி அளிக்கிறது.

பாஸ்கரன் என்ற மாணவனை கொலை செய்த மாணவன் மாரீஸ்வரனை (ஏற்கனவே மாணவிகள் கடத்தல் பலாத்காரம் முதலிய வழக்குகள் இவன் மீது இருப்பதாக சொல்லப்படுகிறது) இன்று போலீசார் கோவையில் வைத்து கைது செய்துள்ளனர். மாரீஸ்வரன் ஓரின சேர்க்கையாளன், அவன் பாஸ்கரனை உறவுக்கு அழைத்ததால் பாஸ்கரனின் பெற்றோர் காவல் துறையில் புகார் செய்யப்போக அதனால் கோபம் கொண்ட மாரீஸ்வரன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த மாணவ சமுதாயம்? படிக்கும் வயதில் இந்த வக்கிர என்னங்கள் வரக்காரணம் என்ன? நீதி நெறியை போதிக்க வேண்டிய கல்வி இப்பொழுது என்ன சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறது?  ஊடகங்கள் வியாபார நோக்கில் பிஞ்சுகளின் மனதில் தங்கள் பங்கிற்கு நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கின்றன. எங்கோ நடக்கும் ஓரிரு சம்பவங்களால் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தைக் குறை கூற முடியாது. இருந்தாலும் இது போன்ற சம்பவங்களை கேட்கும் பொழுது இயல்பாகவே நாளைய சமுதாயத்தை பற்றியக் கவலை வராமல் இருக்க முடியாது.

ஊடகங்களுக்கும் இது போன்ற செய்திகள் தான் தேவைப்படுகிறது. எத்தனையோ பள்ளிகளில் எத்தனையோ மாணவர்கள் ஒழுங்காகப் பள்ளி வந்து  படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அதை செய்தியாகக் கொடுத்தால் யார் படிப்பார்கள் இல்லை பார்ப்பார்கள்? இதைப் போன்ற ஓரிரு செய்திகள்தான் அவர்களுக்கும் ஸ்கூப் நியூஸ்.

இருந்தாலும் இது போன்ற செய்திகள் மாணவ சமுதாயத்தின் மேல் உள்ள கவலையை அதிகரிக்க செய்கிறது. நீதி நெறியை போதிக்க வேண்டிய பெற்றோர்களும், ஆசிரியர்களுக்கும் இப்பொழுது நேரம் இல்லை. பெற்றோர்கள் பணத்தை துரத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தங்களது பிள்ளைகளின் மதிப்பெண்கள்தான் முக்கியம். ஆசிரியர்களுக்கோ பள்ளிக்கூடத்தின் பெயரும் சம்பளமும் முக்கியம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் அதையும் செய்யவில்லை எனபது வேறு விஷயம்.

நல்ல பழக்க வழக்கங்களையும் ஒழுக்கத்தையும் போதிக்கப் போவது யார்? குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொருவரும் தங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

Follow kummachi on Twitter

Post Comment

Friday 28 November 2014

செய்திகளும் லொள்ளுகளும்

கத்தி படத்தில் லைகா பெயரைப் போடலாம் மீறி அச்சுறுத்தினால் தண்டனை-நீதி மன்றம் அதிரடி உத்தரவு.

இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன?

ஒரு நடிகரை இருபது வருஷமாவா  அரசியலுக்கு கூப்பிடுவீங்க-பாரதிராஜா சாட்டையடி.

ஒவ்வொரு பட ரிலீசுக்கும் நூறு வருஷமானாலும் கூப்பிடுவாங்க-ரசிகர்கள் பதிலடி.

உனக்கு தைர்யம் இருந்தால் சட்டசபையில் நான் அமர ஏற்பாடு செய்துவிட்டு தகவலனுப்புங்கள் -கருணாநிதி

சீட்டு இருந்தால் சொல்லியனுப்பு தள்ளுவண்டி கிடைத்தால் வருகிறேன்.

ஸ்டாலினைப் பாத்துட்டாரு தீ போல் பரவிய செய்தியால் பதட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஐயோ நான் பார்க்கலாமா அவருதான் பார்த்தாரு.............ஊ...ஊ..ஊ..

பா.ஜ.க.வுக்கு ரஜினி வந்தால்தான் பலம் என்பதை ஏற்கமுடியாது--தமிழிசை

அவங்க வீட்டு சுண்டல் கொண்டுவந்தால் ஒரு வேளை பலம் வரலாம்.

சோனியா ராகுலை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் குஷ்பு.

இதுக்கு முன்னாடி இந்த கார ஜமீன்தார் வச்சிருந்தாரு, அதுக்கு முன்ன ஸ்வப்பனசுந்தரி வச்சிருந்தாக...........ஸ்வப்பனசுந்தரிய..........படுவா ஏண்டா என்னப்பாத்து அந்த கேள்வி கேட்ட.........

நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு இருக்கு?-சீமான்

ஆமா அவிகள வச்சி படையப்பா-2 எடுங்க.

கருணாநிதிக்கு பினாமியின் அர்த்தம் தெரியவில்ல-ஓ.பி.எஸ்.

அஹான் அம்மாகிட்டேயும் வைகுண்டராஜன் கிட்டேயும் கேட்டா சொல்லுவாக விளக்கம்.


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 27 November 2014

சி.எம். என்பார் முதல்வர் என்பார் ..........................

நமது பினாமி முதல்வரும் மைனாரிட்டி அரசு நடத்திய கலைஞரும் அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நொந்து நூடூல்ஸ் ஆகிப்போன ஓ.பி.செல்வம் பாடும் பாடல், புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வந்த "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள" என்ற மெட்டில் பாடிக்கொ(ல்ல)ள்ளவும்.

சி.எம் என்பார் முதல்வர் என்பார்
நாற்காலி இல்லை அமர
ஒரு அதிகாரமும் இல்லை ஆள
இது பொய்யும் இல்லை
அருகில் அம்மா இல்லை
டீக்கடையில் என்றோ
டீ அடித்தேன் நானே

சட்டசபையைக் கூட்டவில்லை
உட்கார இருக்கை இல்லை
காலியிடம் காணவில்லை
கண்டுபிடிக்க ஆளுமில்லை
கலைஞரும் கேள்வி கேட்டால்
பதிலளிக்க எவருமில்லை
பழிகளை தீர்க்க
வேறு வழி தெரியவில்லை

மேயருக்கு சீட்டு உண்டு
மேலே போட கவுனுமுண்டு
சபாநாயகருக்கு மைக்குண்டு
எனக்கென்று என்ன உண்டு
ஏன் கொடுத்தாங்களோ
அம்மா இந்த பதவி எனக்கு
மொத்தத்தில் எனக்கு
நிம்மதி இல்லை

இதய தெய்வம் உன்னை கண்டேன்
தினம் தினம் குனிந்து நின்றேன்
மரியாதை கொடுக்க என்று
காலில் விழுந்து வணங்கி நின்றேன்
பதவி ஏற்கும் போதோ
குலுங்கி குலுங்க அழுது நின்றேன்
சரித்திரத்தில் எனக்கோ
எப்போதும் இடம் உண்டு..............

சி.எம் என்பார் முதல்வர் என்பார்
நாற்காலி இல்லை அமர
ஒரு அதிகாரமும் இல்லை ஆள
இது பொய்யும் இல்லை
அருகில் அம்மா இல்லை
டீக்கடையில் என்றோ
டீ அடித்தேன் நானே

Follow kummachi on Twitter

Post Comment

துலுக்கானமும் திருவள்ளுவரும்

டேய் துலுக்காணம் இன்னாடா லுங்கி கீய வுயுது போய்கினே கீற..........

ஐய உடு நைனா கடையாண்ட ஒரே சனமா கீது, என்பத்திநாலுல ஒன்னு வாங்கணும்............

டேய் பாத்துரா.........ரொம்ப ஓவராயி கோகிலா சுளுக்கு ஏத்தா மாரி இன்னிக்கி எவளாவது .............லிங்கிய உருவிட போறாளுக.

அது இன்னா மேட்டரு தொரை.......

அதாண்டா துலுக்காணம் அன்னிக்கி ஃபுல்லா அட்சி மப்பாயிட்டானா........சிங்கபெருமாலு கோயிலாண்ட பிளாட்பாரத்துல நட்டுகினான்........மப்புல நான்தாண்டா சிங்கபெருமாளுன்னு சொல்லி அந்த ஆளு கசிபு வவுத்த கியிக்கிறேன்னு கத்திகினே பூக்கட வச்சிகீதே கோகிலா அத்த பிடிச்சி வவுத்துல கை வச்சிகீறான், அது மெர்சலாய் இவன கயுத்தாமட்டைல தட்டி கவட்டையிலே வுட்டுகீது......

அதானா வாத்தியாரு ரெண்டு நாளா விரியாம்பாகாத்துல ஒரு காலும் வியாசர்பாடில ஒருகாலும் வச்சிக்கினு போய்கினான்.

இன்னிக்கி காலில இன்னா வண்டலூராண்ட ஒரு பெருச புட்ச்சி பேஜார் பண்ணிக்கின்னுகீறான்.

அந்தப் பெர்சு தாடி வச்சிகினு ரோட்டாரமா போய்கினு இருந்துதா, இவன் மப்புல அந்த பெர்ச புட்ச்சி யோவ் பெர்சு நீ வள்ளுவர்தான.....அப்படின்னு கேட்டுகிறான்.

பெர்சு பேஜாராய் பைய எடுத்து அக்கிளில சொருகிக்கினு  போய்கினே இருந்திகிது.

துலுக்காணம் விடாம பின்னாலேயே போயி ஆ......பெர்சு சொம்மா கேட்டுகினுகீரான் போய்கினே கீறே இன்னா மேட்டரு. பெர்சு நீ வள்ளுவருதானன்னு கேட்டுகினு கெயவர மடக்கிகீறான்.

யோவ் அவரு நான் இல்ல, அவரு போயிட்டாருப்பான்னு அவுரு எஸ் ஆவப்பாக்குறாரு.

துலுக்காணம் விடாம, யோவ் பெருசு இன்னா கமால் காட்ற அவரு எங்க போயிட்டாரு, அப்பீட் ஆயிட்டாரா?, . த நீ அவருதான், மய்லாப்பூராண்ட செல வச்சிகிறாங்க நான் பாத்துக்கிறான், அப்பாலகண்யாகுமரியாண்ட கடலுல சொம்மா கலீனறு செல வச்சிகிறாரே, அதுல கூட நீ அப்படியே சிம்ரன் கணுக்கா இடுப்ப ஓடிச்சிகினு நிப்பயே, அந்தாளுதான் நீ........அதே மாறி தாடி வுட்டுகீற.....

யோவ் நீ குடிச்சிருக்க, சொம்மா வம்பு வலிக்காத, அப்படின்னு கீறாரு.

யோவ் நீ வள்ளுவருதான் எனிக்கி அல்லாம் தெர்யும், நீ இன்னா பாட்டு எய்திகீறன்னு அவரு கைய புட்சிகீரான், . அகர மொதல எயுத்து..........ஆ.........ன்........அதான் கொரலு, டாஸ்மாக் பார்டிகளுக்கு இன்னா எய்திகீற சொல்லு. இந்தா நா சொல்றன் எய்திக்க..........

மிக்ஸ் செய்து குடிச்சவனுக்கு உய்வுண்டாம் உய்வில்ல 
ராவா குடிச்சவனுக்கு.......

கட்டிங் வுட்டு வாய்வாரே வாய்வார் அப்பால 
தெருல உய்ந்து கிடப்பர்.

உயச்சதனால் இன்னா பயனு சொல்லு
க்வாட்டரு அடிக்கான்காட்டியம்.

மவன் நைனாக்கு செய்யும் வேல
பொய்தோட க்வாட்டர் வாங்கியாரனும்.

போதை எறிட்சினா போட்டி வாங்கி 
கொடுப்பான் தோஸ்த்து.

தொ போயி அப்பால வா, இன்னொரு கட்டிங் வுட்டு அப்பால இன்னும் எத்து உட்றேன்னு... அவரு கைய வுட்டுகிறான்.

பெர்சு பைய தூக்கிகினு ஓடற பஸ்சுல ஏறி பூட்ச்சு.........

இந்த துலுக்காணம் பையன் தெனிக்கும் ஒராள புட்ச்சி மெர்சலாக்குறான். கோகிலா கணுக்கா எவங்கிட்டயோ உண்ட வாங்கப்போறான்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 26 November 2014

நல்லவன்

கே. வி. கே நல்லவன் தான் அவர்கள் வீட்டு சமையல் அறை தரையை கடப்பாரை வைத்து நோண்டும் வரை. நான் அவர்கள் வீட்டில் நுழைந்த பொழுது அவனது தங்கை உத்ரா "போடா போய் கே.வி.கேக்கு ஒரு கை கொடு" என்று சமையலறை நோக்கி கை நீட்டினாள். "என்னவோ உன் நண்பன் செய்வது ஒன்றும் பிடிக்கவில்லை" என்றாள். நான் சமையலறை நோக்கி சென்றபொழுது அவன் கடப்பாறையை கையில் கொடுத்து நீயும் நாலு குத்து குத்து என்றான். அப்படியே சீதாராமன், ரவி, சீனா, சுந்து எல்லோரையும் கூப்பிட்டு வா என்றான்.

நான் தயங்கிய பொழுது போடா சொன்ன வேலையை செய், அந்த பெருமாளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றான். பெருமாள் அவர்கள் வீட்டுகாரரின் இளைய மகன். இந்த இடத்தில் கே.வி.கேவிற்கும் பெருமாளுக்கு உள்ள கொடுக்கல் வாங்கலை சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் பெருமாள் தான் கே.வி.கே வீட்டு வாடகை வாங்க வருவான். அதை அவன் கொடுக்கும் விதத்தை நாங்கள் ரசித்ததில்லை. ஏதோ பிச்சைக்காரருக்கு போடுவது போல் முன்னூறு ரூபாயும் பத்து ரூபாவாக மாற்றி அவனது கையில் பிச்சைக்காரனுக்கு போடுவதுபோல் போடுவான்.

பெருமாளுக்கு அம்மா கிடையாது, அவனது சின்ன வயசிலேயே இறந்துவிட்டாள். அப்பா சமீபத்தில்தான் காலமானார். ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் உண்டு. தங்கை ஒரு மனநோயாளி. அடிக்கடி காட்டு கடத்தல் கத்துவாள். அந்த சத்தம் கேட்டால் எனக்கு உடம்பு என்னவோ செய்யும். அண்ணனும் கிட்டத்தட்ட அப்படித்தான், ஆனால் அவர் டை கட்டிக்கொண்டு சில நாட்கள் எங்கோ சென்றுவருவார். நாங்கள் அவருக்கு பைத்தியம் தெளிந்துவிட்டது அதனால்தான் ஆபிஸ் போகிறார் என்று நினைத்துக் கொண்டோம். அதற்கேற்றாற்போல் சில நாட்களில் அவருக்கு கல்யாணம் நடந்தது. அவர்கள் வீட்டிற்கு வந்த மருமகள் இப்பொழுது பொறுப்பை எடுத்துக்கொண்டாள். ஆனால் இதெல்லாம் சில காலம்தான். ஒரு நாள் இரவு அண்ணனுக்கு உடம்பு சரியில்லை என்று ஆம்புலன்ஸ் வரவைத்து பெருமாள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றான், பின்னர் பெருமாள்தான் திரும்பி வந்தான், அண்ணன் என்ன ஆனார் என்று தெரியவில்லை.  சில நாட்கள் கழித்து பெருமாளின் அண்ணியும் அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டாள்.

பெருமாள் தன் தங்கையையும் தானே கவனித்துக் கொண்டான். வேலை ஒன்றிற்கும் செல்வதாக தெரியவில்லை. எங்கள் யாருக்குமே பெருமாளை கண்டால் அவ்வளவாக பிடிப்பதில்லை, அதன் காரணம் இன்று வரை தெரியவில்லை. விளையாடும் பொழுது பந்து அவர்கள் வீட்டில் விழுந்தால் மாடியிலிருந்து கத்துவான். அவர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்தால் இங்கெல்லாம் உட்காரக்கூடாது என்று விரட்டி விடுவான். முக்கியமாக எங்களைக் கண்டால் ஒரு இருகிய முகத்துடன் திட்டிக்கொண்டே செல்வான். இதைத் தவிர வலுவான காரணம் ஒன்றும் இல்லை.

 கே. வி. கேவும்  அவனை வெறுக்க வலுவான காரணம் இருப்பதாகத் தெரிய வில்லை. இருந்தாலும் பெருமாள் மாடியில் இறங்கி வந்தாலோ அல்லது வெளியே செல்லும்பொழுது அவர்கள் வீட்டை கதவை ஓங்கி சாத்துவான். எனக்கு என்னவோ அந்த பகை வீட்டுக்காரருக்கும் குடித்தனக்காரருக்கும் உள்ள பகையாகவே தோன்றியது. ஆனால் கே.வி.கே எங்கள் எல்லோருக்கும் நிறைய உதவிகள் செய்வான். அவன் எங்களை விட பத்து வயதுப் பெரியவன். நாங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது அவன் ஒரு மருந்துக் கம்பெனியில் பிரதிநிதியாக வேலை செய்துகொண்டிருந்தான். நண்பர்கள் வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் மருந்து சீட்டை அவனிடம் கொடுத்தால் போதும் இலவசமாக மருந்து கொடுப்பான். மேலும் எங்கள் கிரிக்கட் டீமில் உள்ள பொருட்கள் யாவும் அவன் வாங்கிக்கொடுத்தது. ஆதலால் அவன் எங்களுக்கு ரொம்ப நல்லவன்.

ஒரு நாள் பெருமாளுக்கும் அவனுக்கும் பெரிய வாக்குவாதம் அதன் காரணம் எங்களுக்கு தெரியவில்லை. முடிவில் பெருமாள் அவர்களை வீடு காலி செய்ய சொல்லிவிட்டான்.

அவர்களும் காலி செய்ய ஏற்பாடும் செய்துவிட்டார்கள். வீட்டு வாசலில் வண்டியில் சாமான்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவன் வீட்டாருக்கு உதவி செய்யலாம் என்று அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுதுதான் கே.வி. கே சமையலறை தரையை இடித்துக்கொண்டிருந்தான்.

சீக்கிரம் எல்லா சாமான்களை வண்டியில் ஏற்றுவதற்கு முன் ஹால், பெட்ரூம் தரைகளையும் நோண்டவேண்டும் போய் மற்றவர்களை கூட்டிவா என்றான்.

அவனது அம்மாவும் தங்கையும் வேணாண்டா போனாபோறது விடு என்றாலும் அவன் கேட்பதாக இல்லை.

அவன் என்னை நோக்கி "நீ போய்  அவர்களை கூப்பிட்டுக்கொண்டு வருகிறாயா இல்லையா" என்று கத்தினான்.

நான் தயங்க "போடா போ இனி என் மூஞ்சியில் முழிக்காதே நன்றி கெட்டவனே" என்று கூறிக்கொண்டு இன்னும் தரையை ஒங்கி கடப்பாரையால் குத்தினான்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 25 November 2014

டீ வித் முனியம்மா பார்ட் -26

டங்கமாரி ஊதாரி 
புட்டுகின நீ நாறி 

இன்னாடா செல்வம் வரசொல்லவே கானா பாடிகினு வர........

அயுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்சி கயுவி நாளாச்சி..

டேய் மீச என்க்கும் முனிம்மாக்கும் ரெண்டு ஸ்டாங் டீ போடுறா........

டேய் பயக்கட உனுக்கு வேணும்னா நீ சொல்லிக்க, எனக்கு உன் ஓசி டீ வேணாம்.

ஆடப்போனேன் மங்காத்தா.......
தெரித்தி வந்தா எங்காத்தா......

டேய் பாட்ட நிறுத்துடா.........இன்னா பாட்டுடா இது.

நீ தூக்காதடா பொருள
நான் எடுத்துடுவேன் வெரல........

சரி முனியம்மா இன்னா நூசு. வா லிங்கம் சார், நாடாறு பாரு சைடு வாங்கிக்கினே வராரு. லோகு, பாயோட கடில பேசிக்கினு இருக்கான் தொ வந்துருவான்.......

ஸ்ரீரங்கத்துல இடைதேர்தல் வருதாம்........இளவரசி மருமவப்பிள்ளையதான் நிப்பாட்டப்போறாங்களாம்.

அப்ப மத்த கட்சிங்க யார நிறுத்தப்போறாங்களாம்?

கலீனறு அவரு கட்சில ஒரு ஆள விடுவாரு லிங்கம் சார் அவுற மத்த ஆளுங்க சப்போர்ட்டு குடுன்னு கேப்பாராம்.

பொது வேட்பாளரா?

ஆமாண்டா லோகு........அப்படிதான் சொல்றாங்க.

முனியமா இந்த மீனவங்கள தூக்குதண்டனையிலேந்து வுட்டாங்களே அவனுகள எதுக்கு தில்லிக்கி இட்டுகினு போனாக.

அதெல்லாம் அரசியல் பாய், அவனுக வெளில விட்டதுக்கு நாங்கதான் காரணம்னு சொல்லி அடிச்சிகிறானுங்க....

அதான் முனியமா அதுக்கு அவனுகள டில்லி இட்டாந்து  மாலையெல்லாம் போட்டு ஒரே கும்மியடிச்சிகிரானுங்க.

அஹான் நாடார் இவனுக பொணம்  மேலயே  அரசியல் செய்வானுங்க. அடுத்த வருஷம் தேர்தல் வருதா அதுக்கு இப்பவே துண்டு போடுறானுங்க.

இன்னா முனியம்மா பன்னீரு சட்டசபைய கூட்டிட்டாரு.

ஆமாம் பாய் அதுக்குதான் கலீனறு நக்கலு உட்டுகிராறு, பன்னீரு எங்க குந்துவாருன்னு...................இன்னா அம்மா இல்லைன்னா சட்டசப தமாசா இருக்கும். கேப்டனு கூட வருவாரு பாரு.

இன்னா முனிமா இளங்கோவன் வாசன ஓடுகாலின்னு சொல்லிகினு பேஜார் பண்ணிகினுகீறாரு.....

அவரு அம்மாவையே சுளுக்கு எடுப்பாரு, வாசன் எல்லாம் அவருக்கு ஜூஜூபி.

முனிம்மா மேயரு இன்னா ரிசைன்னு பண்ணிகினாராமே?

ஆமாம் லிங்கம் சார், அம்மா வூட்டாண்ட கூட்டி சுலுக்கு எடுத்திச்சாம்.........ராஜ கீய் பாக்கத்தாண்ட பெரிய பங்களா கட்டிகிறாராமே.........இவனுக எத்த வேணா வுடுவானுங்க.........கவுர்மெண்டு துட்டுல ஆட்டைய போடுறத கண்டி வுடமாட்டானுங்க.

முனிமா இன்னா தலீவரு  படம் வெளிய வருமா, கோர்ட்ல கேசு போட்டுகிறானுங்க.

நாடார் சொம்மனாங்காட்டியும் கேசு போட்டு காசு பாப்பானுங்க. அந்தாளு இன்னா ட்ரைலர் லேயே இன்னா மெரட்டலு காட்டுறாரு. படம் காட்டியும் வரட்டும்.........அப்பால கீது பார். தலீவர் இன்னா ஸ்டைலா கீறாரு பா.

முனிம்மா இன்னா படம் போட்டுக்கிறான் காட்டு..........














Follow kummachi on Twitter

Post Comment

Monday 24 November 2014

கலக்கல் காக்டெயில்-160

சென்னை அனுபவம்

கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் வாசம், அவசர வேலையாக விடுமுறையில் சென்று வந்தேன். இந்த மூன்று வாரங்களில் ஒரு இரண்டு நாட்கள் மழை பெய்தது, அப்படி ஒன்றும் பேய் மழையில்லை. இருந்தாலும் சென்னையின் சாலைகளின் நிலைமை படுமோசம். கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலைக்கு மூப்பனார் பாலத்தின் மேல் ஏறாமல் சைடாக வந்தால் பாலத்திற்கு பீச்சாங்கைப் பக்கம் ஒரு பெரிய பள்ளம், கண்ட குப்பைகளைப் போட்டு தற்காலிகமாக மூடி வைத்திருக்கிறார்கள். அதை கவனிக்காமல் இருட்டில் வண்டியை விட்டால் சில்லறை கிடைப்பது நிச்சயம்.

சமீபத்தில் ரிப்பேர் செய்யப்பட்ட தெருக்கள் மறுபடியும் பல்லிளிக்க ஆரம்பித்து விட்டன. இந்த பேச் வொர்க் எல்லாம் வேலைக்கு ஆவாது. ஒவ்வொரு தெருவையும் அடியோடு நோண்டி எடுத்து புதிதாக கான்க்ரீட் போட்டு மெடல் வைத்தால்தான் அடுத்த மழை வரையாவது தாங்கும்.

இதெல்லாம் நடக்கிற கதையா?

எப்படியெல்லாம் அரசியல் செய்யுறாங்கப்பா?

சமீபத்தில் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் திருச்சி விமான நிலையத்தில் காத்திருக்க அவர்களை சத்தம் போடாமல் டில்லிக்கு திருப்பிவிட்டது மத்தியில் ஆளுங்கட்சி. அங்கே சென்று  கட்டிய லுங்கியுடன் மேடையில் அமரவைத்து அரசியல் நாடகம் ஆடி ஒரு வழியாக திருச்சி கொண்டு வந்து இறக்கினால் அங்கு மத்தியில் ஆளும் கூட்டமும் மாநிலத்தில் ஆளும் கூட்டமும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களை வரவேற்று அரசியல் நாடகமாடி அவர்கள் வீட்டாண்ட அம்போ என்று விட்டுவிட்டார்கள். இனி அவர்கள் தேவையில்லை. அடுத்த நாடகத்திற்கு காத்திருப்பார்கள்.

அந்த மீனவர்கள் இதற்கு மரணதண்டனையே மேல் என்று நினைத்திருக்கக்கூடும்.

ரசித்த கவிதை 

வணக்கம்

"கோவை முகப்பில் உங்களை வரவேற்கும்
வாலாங்குளக் கோட்டைமேட்டுப்
பாலத்தின் முனையின்
கள்ளுக்கடைக்கு வணக்கம்.
அதன் வாசல் புழுதியில் கருப்பன்
காசு கொண்டுவரக் காத்திருக்கும்
நகரசுத்திப் பெண்ணுக்கும்
கள்ளுக்கடை சாராயக்கடை
வைன்ஷாப் முதலாளிகளுக்கும்
கொடைக்கானலில் படிக்கும் அவர் புதல்வருக்கும்
அவரின் புதிய கண்டேஸ்ஸா கார்களுக்கும்
வணக்கம்"

நன்றி: உமாமஹேஸ்வரி 


ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

Thursday 13 November 2014

டீ வித் முனியம்மா-பார்ட் 25

மொத தபா பாத்தேன் உன்ன
பெஜாராகிப்பூட்டேன் பொன்னே

யோவ் மீச ரெண்டு டீ போடுறா.........

இன்ன செல்வம் குஜாலா கீற இன்னொரு பிகர கரெக்ட் பண்ணிக்கினியா?

அடப்போ முனிம்மா ஒன்ன ஒட்டவே இங்க டாவு தீருது........

அதான பாத்தேன் அஞ்சல சொம்மா கரகம் ஆடிடும். அப்பால உன்பாடு டப்பா டான்சுதான்.....

சரி முனியம்மா இன்னா நூசு, கடியாண்ட காணோம்.

எங்கடா மய பொத்துகிட்டு ஊத்துது, வியாவாரம் ஒயுங்க செய்யமுடியல. ரோடெல்லாம் தொண்டி உயுந்துகீது, மவன கார்பரேசன் காரனுங்க இன்னா செய்யுறானுங்க தெர்ல.

கரீட்டா சொன்ன முனிம்மா, அந்தம்மாவ ஊட்டுல குந்தவச்சிகிரானுங்க, அவனவன் மொட்ட போடுறான், காவடி தூகுறான், வேலகண்டி செய்ய மாட்டேங்கிறானுங்க.

அத்த வுடு பாய், இவனுங்க ஒல் பஜனி செய்யுறது அல்லாருக்கும் தெரியும்.

காங்கிரஸ் காரனுங்க இன்னா கூத்தடிக்கிரானுங்க.

நாடாறு அது வந்து அவனுக வயக்கமா செய்யுற லுங்கி டான்சுதான். வாசன் புது கட்சி ஆரம்பிக்கிறாராம். அவரு அப்பா காலத்துல செஞ்சாங்க, போனி ஆச்சு, அப்பால இயுத்து மூடிக்கினாறு. இப்போ புள்ள செய்யுறான், இருக்கிற பத்து பேருல கூட்டம் சேர்த்து கும்மியடிக்கிரானுங்க.

க்ரானைட்டுல ஊயலு, சகாயம் கமிசன் வச்சாங்க இன்னாச்சு.

வைகுண்ட ராஜன் எப்ப வேணா உள்ள தூக்கி போட்டுருவானுங்க லிங்கம் சார். தமாசு பாரு அவர போட்டு கொடைசாங்கன்னு வையி, அல்லா தலையும் உருளும்.

பத்த வச்சாளே
குயா தண்ணி என்ன.......

இந்த செல்வம் பாட்ட நிப்பாட்டுரா, கொயா தண்ணி இன்னா கிஸ்னாயிலா பத்திக்க, ஒரே பாட்ட புடிச்சி கூவிக்கினு கீறான்.

இன்னா முனியம்மா மகாராஸ்ட்ராவில கவுனருக்கு உண்ட கொடுத்துகிரானுங்க.

ஆமாண்டா லோகு அவரு சட்டசபையில் உள்ளார போவாதேன்னு கூவிகினே காங்கிரஸ் காரனுங்க சட்டைய கொத்தா புட்ச்சி குமுரிகிரானுங்க. தமிய் நாட்டு நூஸ் படிக்கிறானுங்க காட்டியம்.

வேறென்னா நூசு.........

டேய் செல்வம் போய் பொயப்பபாரு.  மய வருது, அதுக்குள்ளார வியாவரத்த முடிக்கணும். இந்தாடா பேப்பரு..........உன் மேட்டரு இருக்கா பாரு.






Follow kummachi on Twitter

Post Comment

Friday 31 October 2014

திராவிட இட்லி

சமீபத்தில் வெளிவந்த படத்தில் கம்யூனிச விளக்கத்தை தொடர்ந்து இட்லியை வைத்து சமூக வலைதளங்களில் தாறுமாறாக உப்புமா பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்றால் என்ன?

தட்டுல இருக்கிற இட்லியை இது திராவிட உணவல்ல ஆரிய உணவு என்று சொல்லிவிட்டு இட்லிய குண்டானோட களவான்ட்டு ஓடறது.

இது ட்விட்டரில் படித்தது.

இனி நம்ம பங்கிற்கு

ஆரியம் என்றால் என்ன?

இட்லிக்குள்ள உருளைக்கிழங்கு போண்டா வைத்து "பட்டட்டா இட்லி" என்று வியாவாரம் செய்து, காசு பார்ப்பது.

அண்ணாயிசம் என்றால் என்ன?

அறுபத்தியாறு கோடி இட்லிய ஆட்டையப்போட்டு ஆறு இட்லிய "விலையில்லா" இட்லியாக கொடுப்பது.

பார்ப்பனீயம் என்றால் என்ன?

நாலு இட்லில கெட்டி சட்னி  வைத்து முக்கிவிட்டு, அடுத்தவன் இட்லில உப்புமா செய்வது.

ஹிந்துத்வா என்றால் என்ன?

இந்துக்கள் எல்லோரும் பத்து குழந்தை பெத்துக்கிட்டு இட்லி உற்பத்தியை பெருக்குவது.

சோஷலிசம் என்றால் என்ன?

ஒரு இட்லிய கட்டிக்கிட்டு, ஒரு துணை இட்லியும், ஒரு தோழி இட்லியும் வைத்துக்கொண்டு மீதி இட்லிகள் வப்பாட்டிகளாய் உள்ளே தள்ளுவது.

பகுத்தறிவு என்றால் என்ன? 

இட்லியையும் பார்ப்பானையும் கண்டால் இட்லியை தின்றுவிட்டு பார்ப்பானை திட்டு என்ற கொள்கை பிடிப்பு.

ஆத்திகம் என்றால் என்ன?

ஆண்டவன் இல்லையேல் அரிசி இல்லை அரிசி இல்லையேல் இட்லி இல்லை ஆனால் சட்னி உண்டு என்று வெறும் சட்னியை தின்பது.

நாத்திகம் என்றால் என்ன?

இட்லியும் இல்லை சட்னியும் இல்லை என்ற பகுத்தறிவு பகலவன் "இடியாப்பர்" கொள்கைதான் உண்மை என்று இடியாப்பம் பாயா சாப்பிடுவது.

இன்னாது குஷ்புயிசம், த்ரிஷாயிசமா?


குஷ்பு இட்லி, த்ரிஷா இட்லிக்கேல்லாம் விளக்கம் தேவையில்லை.





...............ப்ப்பா மிடில

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 29 October 2014

ஸ்ருதி ஹாசனும் ஐபோன் மாதிரி தான்.......


ட்விட்டரில் ஒரு நாளுக்கு எத்துணையோ கீச்சுகள் வருகின்றன. ஆனால் சில கீச்சுகள் நம்மை புன்னகைக்க வைக்கின்றன, சில சிந்திக்க வைக்கின்றன. இந்த நவீன "திருவள்ளுவர்"களின் கீச்சுகளில்  நான் ரசித்தது உங்களது நகைப்பிற்கு.

2ஜி வழக்கு பற்றி சர்ச்சை வசனம் விஜய், முருகதாஸ், லைகா- நீதிமன்றம் நோட்டிசு#மாசானம் ஹாஸ்பிடல் நர்ஸ் பேரு மேரி. வசனம் எழுதினத்துக்கு சாரி----------சி.பி.செந்தில்குமார்.

பால் விலை உயர்வுக்கு தி.மு.க. காரணம்-ஓ.பி.எஸ்.# கலைஞர் ரியாக்சன்: வன்னாந்துறையில் உள்பாவாடை காணாமல் போனா கூட என்னைய தான் புடிக்க வராங்க!----------------சுபாஷ்.

ஸ்ருதி ஹாசனும் ஐபோன் மாதிரி தான் மொக்கை ஆனா கமல் பொண்ணுங்கிற பிராண்ட் நேம் காரணமா பொழப்போட்டுது.........லார்டு.

சென்னை புத்தக கண்காட்சி தேதி அறிவிப்பு # இனி சந்தில் சுற்றும் உப்புமா எழுத்தாளர்களெல்லாம் தம் புத்தகங்களை விளம்பரம் செய்து சாவடிப்பார்களே:-(-----------------வாழவந்தான்.

திரைப்பிம்பமான கூத்தாடிகளுக்கு "Self Appraisal" என்பது அவர்களின் ரசிகமகா கூமுட்டைகள் செய்யும் சில்லறை வேலைகளின் தன்மையில் அடங்கிவிடுகிறது.--------------------மகிழ்வரசு.

கம்யூணீசத்த  பத்தி  தெரிஞ்சுகனுமின்னா இட்லி கடைக்கு போங்க இங்க வந்து உயிரை எடுக்காதீங்க--------------------ரைட்டர்MiRa.

ஆண்ட்டி என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது! பாபி என்று சொல்லும்போது தான் உதடுகள் ஒரு முறையல்ல; இரண்டு முறை ஓட்டும் # Hailbobbies---------குணாயோகசெல்வன்.

எனக்கு ஒரே ஒரு டவுட் தான் இந்தப் போராளிகள் போய் உட்காரும் பொது எப்படி குழாய்களுக்குள் ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம இருக்கு?  ரமணா எடுத்த ARMஆ?-----------சுஷிமா சேகர்.

நான் முதலமைச்சர் ஆக மோடி ஆதரவு தருவார்--விஜயகாந்து# மொத நீங்க குடிக்க ஒரு பாட்டிலு சரக்கு தருவாரான்னு கேளுங்க தலைவரே--------சிவனாண்டி.

போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்னு சொன்னா ரஜினி ரசிகன், இருந்தா நல்லாருக்குமேன்னு சொன்னா கமல் ரசிகன், "நான் கடவுள்" ன்னு சொன்னா "பாலா" ரசிகன்------------வெங்கி.

லக்னோவில் லஞ்சம்  கேட்ட அரசு ஊழியர் முன் 40 பாம்புகளை அவிழ்த்து விட்ட விவசாயிகள்------------ராதா இல்லாபடம் சாதா.
இந்த குன்ஹாவெல்லாம் வேலைக்கு ஆவாது 

மச்சினியிடம் இருந்து வரும் மாமா என்ற வார்த்தைக்கு  ஒரு பர்சன்ட் கிக் அதிகம் தான்யா!:))-----------நாட்டுப்புறத்தான்.

அனைத்து கீச்சர்களுக்கும் நன்றி.


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 28 October 2014

டீ வித் முனியம்மா பார்ட்-24

டேய் மீச ரண்டு இட்லி வடகறி குடு....

இன்னாடா செல்வம் ரண்டு இட்லி ஏன் மூணுதான் சொல்றது.


அடப்போ முனிம்மா காலிலேயே பேஜார் செய்யாத, மூணாவது இட்லி அடுத்த ஆளுது, வந்து அதுல ஆட்டையப் போட்டா கம்மூனிஸ்ட்டுங்க காண்டாய்டுவானுங்க, சொல்லிகிறாங்க.

அடப்போடா, கோடி கோடியா சம்பாரிக்கிறவனுங்க சினிமாவுல வசனம் பேசுவானுங்க அதுக்கு பிகில் உட்டு இங்க வந்து பேசுற, டேய் உன்னிய மாதிரி ஆளுங்கலாலத்தான் எளிக்சணுல துட்டு கொடுத்து அப்பால நம்ம துட்டுல ஆட்டையப் போடுறானுங்க.......இன்னா சொல்லுற பாய்.
டேய் செல்வம் அஞ்சலைய கண்ணாலம் கட்டிகினு வாராவதியாண்ட ஒரு  பிகர ஓரம் கட்டுறியே அங்க எங்கடா போச்சு உன் கம்மூணிசம்.

அஹான் முனிம்மா அந்த சினிமாவ கண்டுக்கினுதான் ஒருத்தன் மப்பாய் பாடிக்கினே போறான்
கொக்க கோலா பிரவுனு கலருடா
என் அக்கா பொன்னும் அதே கலருடா
கொயாவுல தண்ணி வரலடா-என் வாயில
வண்ட வண்டயா வருதுடா..........

டேய் மீச டீ போடுறா......இன்னாடா டீ வெலை ஏறிடுச்சா.

அதே முனிமா பாலு எறிப்போயில்லே.

வெலை ஏறாத சொல்லவே நீ பாலுல தண்ணி ஊத்துவ, இப்ப இன்னா மீச தண்ணில பால ஊத்துறையா? இன்னிக்கி செத்தா நாளிக்கி பாலுன்னுவானுங்க, இப்போ அதுக்கே வழியில்ல....நாமெல்லாம் அப்பீட் ஆயிட்டா பாலு கெடியாது..........தண்ணிதான் ஊத்துவானுங்க போல.

இன்னா முனிம்மா இன்னா................ மய பெயுது...

அதானே பாய், இந்தாளு பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனாரு, மய பொத்துகிட்டு ஊத்துது, மக்கள் முதல்வர் இருக்கசொல்ல மய இல்ல, ஆனா பாரு லிங்கம் சார், தெருவெல்லாம் ஒரு தொண்டி உயுந்து போயி, அங்க அங்க பொத்தலாகீது.....இந்த கார்பரேசன் காரனுங்க இன்னா செயுரானுங்களோ.

மேயரு, அமைச்சர் அல்லாரும் மக்கள் முதல்வர் வயக்குலேர்ந்து வெளிய வர மண் சோறு துன்றாணுக, அவிங்களுக்கு எங்க இதுக்கு நேரம்?

இன்னா முனிம்மா அடுத்த கேசு வருதுபோல.......

அதான் லோகு சாரு, இப்போ 2G கையில எடுத்துகிறானுங்க.

எவன் எவனுக்கு ஆப்பு உயப்போவுதோ.

ஆமா நாடார், போன தபா அந்த ஆயா ஜெயிலுக்கு போவ சொல்ல நான் பேசறத பார்த்து ஒரு பாடு சொல்லுறான், நீ இன்னா களிஞருக்கு ஜால்ரான்னு.

அதுக்கு நீ இன்னா சொன்ன முனிம்மா.

டேய் லோகு எவன் கொள்ளையடிச்சாலும் தப்புடா........இதுல ஆயா என்ன தாத்தா என்ன?

இவனுக அதிகாரம் இருக்க சொல்ல, தேடி தேடி ஆட்டையப் போடுவானுங்க, அப்பால் அந்த துட்டு வச்சிகினு இனாம் குடுத்து ஆச்சியப் பிடிப்பானுங்க, அப்பால கேசு வந்திச்சினா அந்த துட்டு வச்சே வெளில வருவாய்ங்க. இன்னா ஜனநாயகமோ.

அது சரி முனிமா விலைவாசி ஏறிப்போச்சுன்னு நீ இன்னா மீன்கறி துன்னாமையா கீற.

அடேய் செல்வம் கவர்மெண்டுல வேலை செயுறவன், பெரிய பெரிய கம்பெனில வேல செயுறவன் அல்லாருக்கும் விலைவாசி எர்ச்சுன்னா பஞ்சப்படி அந்தப்படி இந்தப்படின்னு கொடுத்து சம்பளம் ஏத்திடுவானுங்க, பயம் விக்கிற உனுக்கு, பூ விக்கிற நமக்கு எவண்டா ஏத்துவான், நாம எட்டணா ஏத்தினா வந்துருவானுங்க இன்னா வேலைய ஏத்திட்டேனு.

அதான் முனிம்மா நீ சொல்றதும் சரிதான், நாம  வெலை ஏத்தி இன்னா ஸ்விஸ் பாங்குலேயா துட்ட வச்சிகீறோம்.

அதானே லோகு, இப்போ ஸ்விஸ் பாங்குல துட்டு வச்சிக்கிற நாலு பேர சொல்லிகிறாங்க.

இன்னும் யாரு யாரு வச்சிகிறாங்க?.

அது கச்சிகாரனா இருந்தா சொல்லமாட்டாங்க, அது அவனுக்குள அடுஜஸ்டுமெண்டு.

கரீட்டு முனிம்மா, வியாபாரிங்க பேர்தான் சொல்லிகிரானுங்க.

முனிம்மா இன்னா தீவாளிக்கு இன்னா செஞ்ச, படம் கிடம் பார்த்தியா?

அடப்போடா, தீவாளி அன்னிக்கும் வியாவாரம்தான்..........அப்பால நடுவீட்டுல படையலு வச்சி சாமி கும்புட்டேன்.........இன்னா படம்னாலும் டீவில போடுவானுங்க அப்பால பார்க்கவேண்டியதுதான்.

நல்லா வெவரமாத்தான் கீற முனிம்மா........

சரி முனிம்மா நூஸ் பேப்பர கொடு இன்னா படம் போட்டுக்கிறான்.......

டேய் செல்வம் நீ உருப்பட மாட்ட போ........படமெல்லாம் மேல போட்டுக்கிறான் பாரு......





Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 21 October 2014

கலக்கல் காக்டெயில்-159

கூத்தாடிகளை கொண்டாடாதீர்...........

சமீபத்தில் ஊழல் வழக்கில் சிக்கி பிணையில் வெளி வந்திருக்கும் ஒரு கட்சி தலைமைக்கு நடந்த வரவேற்பு கூத்தும் அதை ஒளிபரப்பிய அந்த கட்சி சார்ந்த ஒரு தொலைக்காட்சியும் மற்றும் அந்த கட்சி தலைமைக்கு அடிவருடும் மற்றுமொரு கூட்டமும் "வானம் வரவேற்றது" "பூமி புடுங்கிடிச்சு", "நாடி நட்டுக்கிச்சு" என்று வாழ்த்துப்பா பாடி மக்களை வதைத்தார்கள்.

கூத்தாடிகள் தங்களது சுயநலத்திற்காக அரியணையில் எவர் இருக்கிறாரோ அவர்களை நாலு காலில் மண்டியிட்டு நாக்கு தள்ள லாவணி பாடுவது ஒன்றும் இந்த கேடுகெட்ட தமிழகத்திற்கு புதியதல்ல.

அதன் உச்சகட்டமாக உச்ச நடிகரின் வாழ்த்து இப்பொழுது வலைதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

யூ டூ......................உச்சம்.

ஒரு மலேசியா கூட்டத்தில் நடிகவேள் பேசியது நியாபகத்திற்கு வருகிறது.

"நாங்களெல்லாம் கூத்தாடி பசங்க, ஏதோ நாங்க நடிக்கும் நடிப்பை பார்த்து கைதட்டுங்க. உங்க கிட்ட காசு வாங்கிக்கிட்டுதான் நடிக்கிறோம். அதால் ஏதோ கைத்தட்டிட்டுப் போங்க. அத விட்டு விட்டுட்டு மன்றம் ஆரபிக்கிறேன், கட்சி ஆரம்பிக்கிறேன்னு வராதீங்க. நடிகன் எல்லாம் நாட்ட ஆண்டா நாடு உருப்படாது".

ராதா ஒரு தீர்க்கதரிசி.

இன்னும் கூத்தாடிகளையே நம்பி, அவர்கள் பின்னே சென்றுகொண்டிருக்கும் இந்த தமிழ் கூறும் கேடுகெட்ட சமுதாயத்தை என்ன சொல்வது.


"கஞ்சி குடிப்பதற்கில்லார்
அதன் காரணங்கள் எவை என்று
அறியுமில்லார்"

மோடி சுனாமி

நடந்து முடிந்த மகாராஷ்டிரம், ஹரியான சட்டமன்றத் தேர்தல்களில் பி.ஜே.பி வெற்றிவாகை சூடி இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் தனிபெருங்கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க இன்னும் இருபது முப்பது சீட்டுகளை பெற வேண்டிய நிர்பந்தம். ஆதலால் இங்கு அமீத்ஷா சொல்வதுபோல் சுனாமி அடிக்கவில்லை.

ஹரியானாவில் வேணுமென்றால்  சொல்லிக்கொள்ளலாம்.

இருந்தாலும் பி.ஜே.பி தென்னகத்தில் கால்பதிப்பது சந்தேகமே. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் வாய்ப்பே  இல்லை.

எந்த நடிகரை நம்பி களம் இறங்கினாலும், பின்னர் சேற்றை பூசிக்கொள்வது நிச்சயம்.


ரசித்த கவிதை 

ராமவாணம் ஒளிரும் கணம் 
சிவப்பு விளக்கொளியில் நின்று
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாகவமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்
சுவாசம் முட்டி வரும்
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க
மன்மதக் கணைகளை
முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
'மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப் பூ’ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின் அத்தனை அம்புகளும்
ஒளிர்கிறது ராமர் பச்சையில்!

நன்றி: ஜான் சுந்தர்.

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment