Saturday 27 December 2014

கலக்கல் காக்டெயில்-162

பதிவுலகத்திற்கு வந்து எழுதிக்கிழித்ததில் இது 799வது. உருப்படியாகக் கிழித்ததில் எத்தனை தேறும் என்று தெரியாது?. விடுமுறையில் வரும்பொழுது இந்தப் பதிவை வந்த முதள் நாளன்றே போடவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் உடல்நிலை காரணங்களால் பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை.

2014 நடந்தது என்ன?

இந்த வருடம் நடந்த முக்கிய நிகழ்வுகளில் மத்தியில் ஆட்சி மாறியது. ஆட்சி மாற்றத்திற்குப் பின் சுபிட்சம் வந்துவிடும், தேனும் பாலும் பெருகி ஓடும் என்று நினைத்தோம் ஆனால் முதலுக்கு மோசமில்லை.

அடுத்த முக்கிய நிகழ்வு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு. முன்னாள் முதல்வர் மக்கள் முதல்வராகி, மற்றுமொரு டீ ஆத்தியவர் முக்கிய பொறுப்பு ஏற்றுள்ளார். தமிழ் நாட்டில் ஏதாவது உருப்படியாக நடக்கிறதா என்றால் ஒன்றும் இல்லை. சட்டசபையை ஒரு மூன்று நாட்களுக்கு கூட்டி அம்மா புகழ்பாடி முடித்தார்கள், வழக்கம்போல் எதிர்கட்சிகள் வெளிநடப்போ இல்லை வெளியேற்றவோ செய்யப்பட்டனர்.

திரையுலகில் நீ சூப்பர் நான் சூப்பர் என்று தங்களையே சொறிந்துகொண்டு நடிகர்களும் இயக்குனர்களும் மொக்கைப் படங்கள் கொடுத்து தமிழகத்தை அவர்கள் பங்கிற்கு வதைத்தனர், நடுவில் சத்தம்போடாமல் சில நல்ல படங்கள் வந்து சென்றன.

இயக்குனர் சிகரம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்த கூட்டம் அண்ணா, எம்.ஜி. ஆர் இறுதி மரியாதை கூட்டத்தை நியாபகப்படுத்தியது.

இசை விழா

டிசம்பர் சீசன் சென்னையில் களைகட்டியிருக்கிறது. வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் சபாவிற்கு கூட செல்லமுடியாதபடி வேலை. சனி ஞாயிறுகளில் தப்பித்தவறி வண்டியை எடுத்துவிட்டு லேட்டாக வந்தால் கச்சேரிக்கு வந்தவர்கள்  நம்ம பார்க்கிங்கில் வண்டியை விட்டு சென்றுவிடுகிறார்கள். பின்பு கச்சேரி முடியும் வரை அடுத்த தெருவில் வண்டியை விட்டு நடுநிசியில் கொண்டு நம்ம பார்க்கிங்கில் போடவேண்டும், நல்லா இருங்கப்பு............


ரசித்த கவிதை 

கவிதை 

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்..................
2014, டிசம்பர் 3 இரவு சுமார் 8 மணியிருக்கும்
'மூக்கின் மேலே
மூக்குத்தி போலே'
மச்சம் உள்ளதே............அதுவா?
என்று நீங்கள் கேட்க
கோயமுத்தூர் முனியாடி விலாஸில்
அடுப்பில் கிடந்தது கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்
அதுவா?
அதுவா?
 அதுவா?
என்று திருப்பிக் கேட்டான்
அப்போது உங்களுக்குச் சிலிர்த்துகொண்டதா?
எஸ்.பி.பி சார்

-----------------------------இசை

ஜொள்ளு 




Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

தி.தமிழ் இளங்கோ said...

நானும் ஒருவன். தங்களது 800 ஆவது பதிவிற்கு இந்த வாசகனின் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
த.ம.1

கும்மாச்சி said...

தமிழ் இளங்கோ வருகைக்கு நன்றி.

Avargal Unmaigal said...

உங்களது 800 வது 'ஜொள்ளு' பதிவு அருமை

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் நண்பரே! வழக்கம் போல ஓர் ஆண்டு கழிந்துவிட்டது! புத்தாண்டிலாவது புதுமைகள் நடக்கட்டும்!

KILLERGEE Devakottai said...

விரைவில் 1000த்தை தொட வாழ்த்துகிறேன் நண்பா,,,,

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா...

saamaaniyan said...

இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.