Monday 24 July 2017

பெத்த பாஸ்லு.....

பெரிய முதலாளி, பெத்த பாஸ்லு, BIGG BOSS, பற்றி தெரியலேன்னா ஏதோ வேற்று கிரக வாசிபோல நம்ம பார்ப்பாங்க போல. இது ஏதோ டுபாகூர் ப்ரோக்ராம் இத எவன் பார்க்கிறது என்று செவனே இருந்த நம்மள சமூக ஊடகங்கள் இந்த பக்கம் திருப்பிவிட்டது.

ட்விட்டர், மூஞ்சிபுத்தகம் பக்கம் போனால் ஒவியாங்கறான், நமீதாங்கறான், ஜூலிங்கிறான், கால்சியம் ஆண்டின்கிறான் ஒன்னும் புரியல. இது என்னடா புது ரோதனையாபோச்சு என்று அலுவலக தோழிய கேட்கப்போக அந்தக்கா பெரிய முதலாளி பார்க்காத நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று நம்மை நாய் கொண்டு போட்ட வஸ்துவை பார்ப்பது போல ஒரு பார்வை வீசி சென்றாள்.

சரி இது என்னடா என்று பார்க்கப்போனால் நம்ம உலக நாயகன் வந்து பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்காரு.

எது எப்படியோ இதை வைத்து வரும் மீம்சுகள், கீச்சுகள் நம்மை நகைக்க வைக்கின்றன.

அதில் ஜூலியை கலாய்த்து வரும் கீச்சுகள் அதிகம்..............அந்த புள்ள என்ன பாவம் பண்ணிச்சு என்று பார்த்தால் அது கால்சியம் ஆண்டி கூட கூட்டணி வச்சிகிட்டு "ஓவியா பாப்பா"விற்கு கொடைச்சல் கொடுக்குதுங்க............அதான் மேட்டரா? அதான் தமிழகமே ஜூலிய கழுவி ஊத்துது. ஆண்டவர் வேற ஜூலி ஒரு புளுகு மூட்டை என்று "குறும்படம்" விட்டு வீர தமிழச்சி மானத்த  கழுவுல ஏத்திட்டார்.

இனி அந்த வரலாறு சிறப்பு மிக்க கீச்சுகள்

ஜூலிக்கு மேக்கப் போட்டு பிக்பாஸ் குடும்பத்துல வாழ விடுறதும் நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைக்கிறதும் ஒன்னு தான்.

என்ன ஜூலி ஆண்டவர்கிட்டேய வார்த்தை விளையாட்டா ? கிழிச்சு கேப்பையி நட்டுப்புடுவாரும்மா.

கொட்டிலில் மாடு தன் சாணத்தின் மேல் உருண்டு புரண்டு மிதித்து அதோடேயே வாழும் வேறு இடத்தில் கட்டும் வரை. அதே நிலையில் ஜூலி. இவரை மன்னியும் ஆண்டவரே.

காயத்ரி மாதிரி அம்மாவும் ஜூலி மாதிரி மனைவியும் கெடைச்சா பரணி மாதிரி சுவர் ஏறி குதிச்சுதான் வெளியே ஓடனும்.

தெரியாத்தனமா எங்க வீட்டு நாய்க்கு ஜூலின்னு பேரு வச்சிட்டேன், முதலில் ஒரு நல்ல நாள் பார்த்து பேர மாத்தி வச்சு, காது குத்தி ஒரு கணபதி ஹோமம் பண்ணிடனும்.Follow kummachi on Twitter

Post Comment

Friday 21 July 2017

மன்மத வம்பன், மொத்தமும் வில்லன், உலக்கை நாயகன்.....ஒன்டிக்கி ஒண்டி வாறியா?

மல்ஹாசன் தற்போதைய ஆட்சி ஊழல் நிறைந்தது என்று சொல்லப்போக ஆளுங்கட்சி அமைச்சர்கள் முதல் பெஞ்சு தட்டி அல்லக்கைகள் வரை அவரை வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
 இன்று நமது எம்.ஜி.ஆரில் கமலை வசை பாடி ஒரு பதிவு இட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ள அருஞ்சொட்கள்தான் தலைப்பில் உள்ளவை.
ஏழைக்குப் பயன்படாத இந்த குரோட்டன்ஸ் செடி எளியோருக்குப்பயன்படும் கீரையைப் பார்த்து பழிக்கிறது! 'உன்னால் முடியும் தம்பி' என்று இவர் உதட்டளவில் வாயசைத்துப்பாடியதை, இளையோர் கரத்தில் மடிக்கணினி கொடுத்து உலகை உள்ளங்கைக்குள் உட்கார வைத்த ஒப்பில்லா கழகத்தை முப்பொழுதும் தப்பென்று பழிக்கிறார். மஞ்சள் துண்டு தயவு கூடவே, ஒன்றே முக்கால் லட்சம் கோடி கொள்ளையர்க்கு ஒத்தடமும் கொடுக்கிறார். மஞ்சள் துண்டின் தயவில் மக்கள் திலகத்தின் இயக்கத்தை வன்மத்து வார்த்தைகளால் வசைபாடி திரிகிறார்.

புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவியின் புகழ்மனத்து இயக்கத்தை புண்படுத்தி மு.க.வை மகிழ்விக்க முன்னோட்டம் பார்க்கிறார். ஓடுவேன் என்றார் ஒரு படம் ஓடாவிட்டாலே ஓடுவேன் நாட்டைவிட்டு என்ற இந்த ஒப்பாரித் திலகம் குகையில் சிம்மம் இல்லை என்றதும் ஒத்தைக்கு ஒத்தை வர்றியா என்பதாக ஊளையெல்லாம் இடுகிறார். காவி மீது பாசம் கருப்புச் சட்டை போட்டுக்கிட்டு சாதிக்கு ஆலவட்டம் வீசுகிற சாடிஸ்ட் கோஷம் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்து காவி மீதும் பாசம். காவேரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன், கெயில், நெடுவாசல், 'நீட்...' என்றெனும் தமிழர்தம் உரிமை என்றால் மட்டும் மன்மத வம்பன் போடுவதோ மவுன விரத வேஷம். உலக்கை நாயகன் இந்த உலக்கை நாயகனின் விமர்சன எல்லையெல்லாம் கழகத்தைப் பழிக்கிற ஓரம்ச திட்டம் மட்டும் என்றால் அதனை உலகம் சுற்றும் வாலிபனின் இயக்கம் ஓட ஓட விரட்டும்.ஊழல் நிறைந்த ஆட்சி என்று கமல் சொன்னதைத்தான் ஓட்டுபோட்ட நாளிலிருந்து மக்கள் காசுவாங்கி ஒட்டு போட்ட பாவத்திற்காக சொல்லாமல் அடுத்த தேர்தலை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆளும்கட்சிதான் அவரை வசை பாடுகிறது என்றால் "ஏன் சங்கத்து ஆள எவண்டா அடிச்சது" என்று எலும்பு நிபுணரும் டுமீளிசையும் கமல்மீது சேற்றை வாரி இறைப்பதாக நினைத்து தாங்களே சாக்கடையில் முங்கி எழுந்திருக்கின்றனர்.

ஆளுங்கட்சி அல்லக்கைகள் ஒருபடி மேலே போயி அவரது 
 சொந்த வாழ்க்கையை விமர்சிக்கின்றனர். அதுவும் ரெட்போர்ட்டான்
 சொல்லுவதுதான் முரண். இவர் கட்டியவளை விட்டு செட்டப்புடன் இருப்பதாக கட்டியவள் ஒற்றை ரோசாவிடம் முறையிட்டதால் அமைச்சர் பதவிய இழந்தவர்.

எது எப்படியோ நல்ல ஷோதான். 


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 19 July 2017

கலக்கல் காக்டெயில் 180

அரசியலுக்கு ஆண்டவர் தேவை 

ஒரு நடிகர் அரசியலுக்கு வரேன்னு சொல்லவே இல்ல அதுக்குள்ளே எல்லா ஊடகங்களும் இதோ வாராரு, அதோ வராரருன்னு ஒரு ரெண்டு மாதம்  அலறினானுக.....

போதாத குறைக்கு அஞ்சு ஒட்டு பத்து ஒட்டு வாங்கினவனுங்க அவரு வந்தேறி மரமேறி அவர விடமாட்டோம்........அவருக்கு அறிவு பத்தாது என்று தங்களது அறிவின் முழு வீச்சை முஷ்டி முறுக்கி முழங்கினார்கள்.

இப்போ பேட்டை ஆண்டவர் வழக்கம்போல் புரியாத கவிதை எழுதி அரசியல் வியாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கிறார்.

இவர்கள் வருவார்களா மாட்டார்களா தெரியாது, ஆனால் இவர்களை எதிர்த்து குரல் கொண்டுத்துக்கொண்டிருக்கும் அல்லக்கைகளின் பயம் மக்களுக்கு புரியும்.

பணம் பரப்பன அக்ரஹாரா வரை பாயும்

தவ வாழ்வு வாழும் மினியம்மா பரப்பன ஆக்ராஹரவில் பூனை நடை நடந்து கடைத்தெரு செல்லும்  காட்சி கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறையின் முதலாவது மாடியில் ஐந்து அறைகளை ஆக்கிரமித்துக் கொண்டு வேண்டியதை சமைத்து உண்டு கிட்டத்தட்ட  போயஸ் தோட்ட வீட்டு வாழ்க்கை போல  வாழ்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

இந்த செட்டப்பிற்கு இரண்டு கோடி மொத்தமாகவும் மாதத்திற்கு கை செலவிற்கு மூன்று லட்சம் கொடுத்து வருவதாகவும் பேசப்படுகிறது.

அஞ்சு பத்து ஆட்டையப்போடுரவனுங்க இனியாவது திருந்துங்க...அடிச்சா ஐநூறு ஆயிரம் கோடின்னு அடிங்கடா அப்ரசண்டிகளா!!!!!

ரசித்த கவிதை  

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தேழுவோம் மனதளவில் உம்போல் யாம்  மன்னரில்லை
தோற்றரிந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
பேடா மூடா எனலாம் அது தவறு
தேடாப்பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்

கவிஞர்: ஆழ்வார் பேட்டை ஆண்டவர் 

புரிவதும் புரியாததும் அவரவர் தமிழ் அறிவை சார்ந்த விஷயம்

பிக் பாஸ்  பிக்பாஸ் வாக்கெடுப்பில் ஜனநாயக கடமை ஆற்றும் "ஓவியா புரட்சிப்படை தொண்டர்களுக்கும்" மற்றும் கள்ளவோட்டு போடும் கடமை வீரர்களுக்கும் சமர்ப்பணம்Follow kummachi on Twitter

Post Comment