Wednesday 19 July 2017

கலக்கல் காக்டெயில் 180

அரசியலுக்கு ஆண்டவர் தேவை 

ஒரு நடிகர் அரசியலுக்கு வரேன்னு சொல்லவே இல்ல அதுக்குள்ளே எல்லா ஊடகங்களும் இதோ வாராரு, அதோ வராரருன்னு ஒரு ரெண்டு மாதம்  அலறினானுக.....

போதாத குறைக்கு அஞ்சு ஒட்டு பத்து ஒட்டு வாங்கினவனுங்க அவரு வந்தேறி மரமேறி அவர விடமாட்டோம்........அவருக்கு அறிவு பத்தாது என்று தங்களது அறிவின் முழு வீச்சை முஷ்டி முறுக்கி முழங்கினார்கள்.

இப்போ பேட்டை ஆண்டவர் வழக்கம்போல் புரியாத கவிதை எழுதி அரசியல் வியாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கிறார்.

இவர்கள் வருவார்களா மாட்டார்களா தெரியாது, ஆனால் இவர்களை எதிர்த்து குரல் கொண்டுத்துக்கொண்டிருக்கும் அல்லக்கைகளின் பயம் மக்களுக்கு புரியும்.

பணம் பரப்பன அக்ரஹாரா வரை பாயும்

தவ வாழ்வு வாழும் மினியம்மா பரப்பன ஆக்ராஹரவில் பூனை நடை நடந்து கடைத்தெரு செல்லும்  காட்சி கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறையின் முதலாவது மாடியில் ஐந்து அறைகளை ஆக்கிரமித்துக் கொண்டு வேண்டியதை சமைத்து உண்டு கிட்டத்தட்ட  போயஸ் தோட்ட வீட்டு வாழ்க்கை போல  வாழ்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

இந்த செட்டப்பிற்கு இரண்டு கோடி மொத்தமாகவும் மாதத்திற்கு கை செலவிற்கு மூன்று லட்சம் கொடுத்து வருவதாகவும் பேசப்படுகிறது.

அஞ்சு பத்து ஆட்டையப்போடுரவனுங்க இனியாவது திருந்துங்க...அடிச்சா ஐநூறு ஆயிரம் கோடின்னு அடிங்கடா அப்ரசண்டிகளா!!!!!

ரசித்த கவிதை  

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தேழுவோம் மனதளவில் உம்போல் யாம்  மன்னரில்லை
தோற்றரிந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
பேடா மூடா எனலாம் அது தவறு
தேடாப்பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்

கவிஞர்: ஆழ்வார் பேட்டை ஆண்டவர் 

புரிவதும் புரியாததும் அவரவர் தமிழ் அறிவை சார்ந்த விஷயம்

பிக் பாஸ்  பிக்பாஸ் வாக்கெடுப்பில் ஜனநாயக கடமை ஆற்றும் "ஓவியா புரட்சிப்படை தொண்டர்களுக்கும்" மற்றும் கள்ளவோட்டு போடும் கடமை வீரர்களுக்கும் சமர்ப்பணம்Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

KILLERGEE Devakottai said...

கூத்தாடிகளின் காட்சிகள் ஆரம்பம்.

இவதான் உள்ளே இருக்கும் ஓவியாவா ?

கும்மாச்சி said...

பொருத்திருந்து பார்ப்போம்..

”தளிர் சுரேஷ்” said...

அரசியல் அவலங்களை தோலுரித்து காட்டுகிறது பதிவு! தொடருங்கள்! ஓவியாவுக்கு நீங்க ஓட்டு போட்டுட்டீங்களா?

Thulasidharan V Thillaiakathu said...

தமிழ்நாட்டு அரசியல் அ சிங்கமாக நடைபோடுகிறது.

ஆழ்வார்பேட்டை ஆண்டவர் நா கமல்??!!! அதான் புரியலை...ஸார் நமக்குத் தமிழ் அறிவு கம்மிபா...

இதுதான் ஓவியாவா? ஹும் மேக்கப் ஒரு ஆளையே அடையாளம் தெரியாம மாத்திடும் போல!!

கீதா

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.