Monday 24 July 2017

பெத்த பாஸ்லு.....

பெரிய முதலாளி, பெத்த பாஸ்லு, BIGG BOSS, பற்றி தெரியலேன்னா ஏதோ வேற்று கிரக வாசிபோல நம்ம பார்ப்பாங்க போல. இது ஏதோ டுபாகூர் ப்ரோக்ராம் இத எவன் பார்க்கிறது என்று செவனே இருந்த நம்மள சமூக ஊடகங்கள் இந்த பக்கம் திருப்பிவிட்டது.

ட்விட்டர், மூஞ்சிபுத்தகம் பக்கம் போனால் ஒவியாங்கறான், நமீதாங்கறான், ஜூலிங்கிறான், கால்சியம் ஆண்டின்கிறான் ஒன்னும் புரியல. இது என்னடா புது ரோதனையாபோச்சு என்று அலுவலக தோழிய கேட்கப்போக அந்தக்கா பெரிய முதலாளி பார்க்காத நீ எல்லாம் ஒரு மனுஷனா என்று நம்மை நாய் கொண்டு போட்ட வஸ்துவை பார்ப்பது போல ஒரு பார்வை வீசி சென்றாள்.

சரி இது என்னடா என்று பார்க்கப்போனால் நம்ம உலக நாயகன் வந்து பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்காரு.

எது எப்படியோ இதை வைத்து வரும் மீம்சுகள், கீச்சுகள் நம்மை நகைக்க வைக்கின்றன.

அதில் ஜூலியை கலாய்த்து வரும் கீச்சுகள் அதிகம்..............அந்த புள்ள என்ன பாவம் பண்ணிச்சு என்று பார்த்தால் அது கால்சியம் ஆண்டி கூட கூட்டணி வச்சிகிட்டு "ஓவியா பாப்பா"விற்கு கொடைச்சல் கொடுக்குதுங்க............அதான் மேட்டரா? அதான் தமிழகமே ஜூலிய கழுவி ஊத்துது. ஆண்டவர் வேற ஜூலி ஒரு புளுகு மூட்டை என்று "குறும்படம்" விட்டு வீர தமிழச்சி மானத்த  கழுவுல ஏத்திட்டார்.

இனி அந்த வரலாறு சிறப்பு மிக்க கீச்சுகள்

ஜூலிக்கு மேக்கப் போட்டு பிக்பாஸ் குடும்பத்துல வாழ விடுறதும் நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைக்கிறதும் ஒன்னு தான்.

என்ன ஜூலி ஆண்டவர்கிட்டேய வார்த்தை விளையாட்டா ? கிழிச்சு கேப்பையி நட்டுப்புடுவாரும்மா.

கொட்டிலில் மாடு தன் சாணத்தின் மேல் உருண்டு புரண்டு மிதித்து அதோடேயே வாழும் வேறு இடத்தில் கட்டும் வரை. அதே நிலையில் ஜூலி. இவரை மன்னியும் ஆண்டவரே.

காயத்ரி மாதிரி அம்மாவும் ஜூலி மாதிரி மனைவியும் கெடைச்சா பரணி மாதிரி சுவர் ஏறி குதிச்சுதான் வெளியே ஓடனும்.

தெரியாத்தனமா எங்க வீட்டு நாய்க்கு ஜூலின்னு பேரு வச்சிட்டேன், முதலில் ஒரு நல்ல நாள் பார்த்து பேர மாத்தி வச்சு, காது குத்தி ஒரு கணபதி ஹோமம் பண்ணிடனும்.Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ இம்புட்டு நடக்குதா.....

ஹூம்... பெரிய முதலாளிய பாத்தாதானே தெரியும் ..ஆண்டவர் நா யாருப்பா அது...

கீதா

வேகநரி said...

நல்ல பதிவு.
ஜல்லிக்கட்டு புரட்ச்சி மெரினாவில் நடத்திய வீரத்தமிழச்சி ஜூலியாவை கண்டு ஆனந்த கண்ணீர் :)

Anonymous said...

Ha haaa.. super post sekar ji!!
-Vils

வெங்கட் நாகராஜ் said...

இதுவரை பார்க்கவில்லை. இனிமேலும் பார்க்கப் போவதில்லை! :)

ஆனால் இணையத்தில் எத்தனை மீம்ஸ்! எத்தனை பகிர்வுகள் இந்நிகழ்வு பற்றி!

கும்மாச்சி said...

அனைவரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

தமிழ்நாடே ஒரு மார்க்கமாத்தான் அலையுது...!!

sarathy said...

அருமையான பதிவு! விளாசுங்க பாஸ்!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.