Thursday 29 May 2014

கோச்சடையான்---------பார்த்தாச்சு..

கோச்சடையான் வெளிநாடுகளில் போன வியாழக்கிழமையே வெளிவந்து விட்டது. அப்பொழுது கடல் நடுவே ஆணி பிடுங்கிக்கொண்டிருந்ததால் பார்க்க முடியவில்லை. இரண்டு வாரம் விடுமுறையில் நாட்டிற்கு செல்வதால் அங்கு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.

இன்று சாந்தம் திரையரங்கில் படத்தை ரஜினி ரசிகர் கூட்டத்தோடு பார்க்க முடிந்தது.

ஏற்கனவே கோச்சடையான் பற்றி நம் பதிவர் பெருமக்கள் ஏகத்திற்கும்   விமர்சனம் எழுதிவிட்டனர் ஆதலால் புதிதாக எழுத  ஒன்றும் இல்லை.

படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் படம் வெளிவரும் முன்பே அவரவர்கள் குத்தி குத்தி கிழித்து விட்டதால் படம் "பூட்ட கேசு" என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் படம் பார்த்த பொழுது ஒரு புது அனுபவம்.

படத்தில் அனிமேஷனில் நிறைய குறைகள் இருந்தாலும் படம் நல்ல திரைக்கதை, ரஜினியின் காந்தக்குரல், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் நம்மை கட்டிப்போடுகிறது.

இது பொம்மை படம் என்று சொன்னவர்களுக்கு, படத்தை கட்டாயம் ஒரு முறை பாருங்கள், நிச்சயம் ரசிப்பீர்கள்.

இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய தொழிநுட்பத்தில் முதல் சோதனை முயற்சி. படம் முடிந்த பின்னும் கடைசியில் படம் எவ்வாறு உருவானது என்று காண்பிப்பதை மக்கள் கடைசிவரை பார்த்துவிட்டு  போவதிலிருந்து  இது இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்லல்லாம்.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 24 May 2014

கொஞ்சம் சிரிங்கப்பு.

நகைச்சுவைக்கு..............கொஞ்சம் சிரிச்சுட்டு போங்க.............

இணையத்தில் சுட்டவை
இது தேவையா?

ஏய் எவண்டா அது பொடனியில போட்டது..........ஆங்.... 
அட விடுங்க தலைவரே...........எல்லாம் அவாளின் சதி.

சரிபுள்ளஅடுத்த தபா வரசொல்ல கறிசோறு போடலாம்
டேய் தகப்பா இது நியாயமா?
சுத்தமா கழுவி ஊத்திடுவானோ?
செத்தாண்டா நாய் சேகரு
அட சரி புள்ள ஏதோ ஒரு மச்சி
இல்ல எங்கள் மகளிரணி  வரவேற்புதான்

Follow kummachi on Twitter

Post Comment

Friday 23 May 2014

கேடுகெட்டவளும், கோச்சடையானும் பின்னே சுவற்றை கீறியவர்களும்

ஒரு அழகிய பெண் ஒரு உயரமான அபார்ட்மெண்டின் 20வது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டாள்.

அவளை பதினைந்தாவது மாடியிலிருந்து ஒருவன் பிடித்துவிட்டு, என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா? காப்பாற்றுகிறேன் என்றானாம், அதற்கு அவள் சீ போடா பொறுக்கி என்று சொல்லவே அவளை கீழே விட்டுவிட்டான்.


அடுத்து 10வது மாடியில் ஒருவன் பிடித்து எனக்கு முத்தம் கொடு உன்னை காப்பாற்றுகிறேன், அதற்கு அவள் சீ போடா நாயே என்று  திட்ட அவனும் அவளை கீழே விட்டுவிட்டான்.

பின்னர் ஐந்தாவது மாடியில் ஒருவன் அவளை பிடிக்க அந்தப் பெண் அவனிடம் என்னை கீழே விட்டுவிடாதே உன்னை நான் கல்யாண செய்துகொள்கிறேன், முத்தம் கொடுக்கிறேன் என்று சொல்ல, அவன் அட சீ இவள் கேடுகெட்டவளாக இருப்பாள் போலிருக்கிறது "சாவுடி" என்று அவளைக் கீழேபோட்டுவிட்டான், அவளும் இறந்து விட்டாள்.

நீதி: எல்லா ஆளையும் தப்பாக நினைத்தால் சாவவேண்டியதுதான்.

முகநூலில்படித்தது, என்னமா யோசிக்கறாய்ங்க.


கோச்சடையான் இப்போ வரும், அப்போவரும் என்று இழுத்தடிக்கப்பட்டு ஒரு வழியாக வந்துவிட்டது. இந்த படம் வருவதற்கு முன்பாகவே இந்தப்படம் பிளாப்பு, பொம்மைப்படம் என்று ஏகப்பட்ட விமர்சனங்கள்.

இப்பொழுது படம் வெளியே வந்து "பொம்மைபடம்" என்று சுவற்றில் நகத்தால் கீறியவர்களுக்கு ஆப்படிப்பதுபோல் விமர்சனங்கள் வந்து கொள்ளவே ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் " Rajinikanth is finally back 10 reasons you must watch Koachadaiyan" என்று எழுதி படத்திற்கு இன்னும் ஆவலை தூண்டிவிட்டிருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்லும் பத்துகாரனங்களில் முக்கியமானது கே. எஸ். ரவிகுமாரின் திரைகதை-வசனம், ரஜினி, ஏ.ஆர். ரஹ்மான் மூவரும் இது ஒரு பொம்மை படம் என்ற மாயை விலக்கியுள்ளார்கள்.

படத்தில் நாகேஷின் அறிமுகம்,ருத்ரதாண்டவம், அதை தொடர்ந்து வரும் கப்பல் சண்டை, பின்னர் க்ளைமாக்சில் ரஜினியின் வசனங்கள் முதலியவை மிகவும் நன்றாக இருப்பதாக சொல்லுகிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்த விமர்சனங்களோ படத்தின் தொழில்நுட்பத்தை சிலாகித்திருக்கிறது. மேலும் இது ஒரு எல்லா வயதினருக்கான படம் என்று திட்டவட்டமாக சொல்லுகிறார்கள்.


ரஜினி பொம்மைக்கே இந்த மவுசா?......

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 22 May 2014

புதிய அரசும் புளித்துப் போன வெளியுறவும்

மோடி பதவி ஏற்பதற்கு முன்பாகவே பிரச்சினைகள் கூட்டம் போட்டு கொடிபிடிக்க ஆரம்பித்து விட்டன. பதவி ஏற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளப் போவதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் அறிவித்துள்ளார்.

அவர் கலந்து கொள்ளப்போகும் பதவி ஏற்பு விழாவிற்கு தமிழக முதலமைச்சர் செல்வாரா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது.

பா.ஜ.க. வுடன் கூட்டு சேர்ந்த கட்சிகள் பா.ஜ. க ஆட்சிக்கு வந்தால் இலங்கையுடனான வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படும், ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலம் என்று எல்லா தலைவர்களும் தேர்தல் பரப்புரைகளில் சொல்லி வந்தனர். இருந்தாலும் பா.ஜ.க தலைவர்கள் இந்தியா இலங்கையுடன் நட்புறவை பேணும் என்றுதான் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது தொடக்கத்திலேயே பா.ஜ. க தன் நிலைமையை மேலும் உறுதி செய்துள்ளது.

இபோழுது வை.கோ போன்றோர் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். மேலும் இருபத்தியாறாம் தேதி தமிழ் நாட்டில் ராஜபக்ஷே வருகையை எதிர்த்து போராட்டம் என்று சில கட்சிகள் அறிவித்துவிட்டன. இந்த நிலைமையில் தமிழக முதலமைச்சர் என்ன முடிவெடுப்பார் என்பது பெரிய கேள்விக்குறி.

பா.ஜ. க இந்தியாவில் தீவிர வாதத்தை ஒழிக்க அல்லது ஒடுக்க இலங்கையுடனான நட்புறவு அவசியம் என்று கருதுகிறது. இந்த கருத்தில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையுடன் நெடுங்காலமாகவே நெருங்கிவருகிறது.  இது இந்தியாவிற்கு நல்லதல்ல. அதிலும் பாகிஸ்தான் இலங்கை மூலமாக தென்னிந்திய நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டங்கள் தீட்டுகிறது என்பதை நமது உளவுத்துறை ஏகனவே பலமுறை எச்ச்சரித்துவிட்டது. ஆதலால் பா.ஜ. க வும் இலங்கை ஆதரவு நிலைப்பாடே  எடுக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்த விஷயத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து செயல்பாட்டாலே இந்த நிலைப்பாட்டில் ஓரளவிற்கு மாற்றம் கொண்டு வரமுடியும். ஆனால் இவர்கள் இந்த விஷயத்தில் ஒன்று சேரமாட்டார்கள். இல்லையேல் வை.கோ. போல அனைவரும் புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். மேலும் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவது வெகு காலத்திற்கு தாங்காது.

(சீமான் என்று ஒருவர் கூவிக்கொண்டிருந்தாரே அவரை எங்கே காணோம்?)
Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 21 May 2014

டீ வித் முனியம்மா--பார்ட் 10

டேய் மீச இன்னிக்கி அல்லாருக்கும் டீ இனாமா கொடுக்கிற இன்னா புர்ந்சுதா...........


இன்னா சாரே லோகு நம்ம அயாலு இல்லா...........

டேய் போடா டோமரு உங்காளுதான் இப்போ பிரதமரு, அவங்க கட்சி காரனுகளே அல்லாருக்கும் லட்டும் டீயும் கொடுத்துகிறாங்க. இப்படியே உட்டா நீ கூட ஒரு நாளிக்கி அங்க போயி குந்துவே.......

அடபோ செல்வம் மலையாளத்தான காலிலேயே கலாய்ச்சுனுகீற.....

தோ பாரு பாயும் லிங்கமும் ஓடியாறாங்க............

முனியம்மா எங்க போயகீது ஆள இன்னும் காணோம்.

தோ வந்துகினே கீது.

இன்னா முனியம்மா டீகட காரரு பிரதமரு ஆயிட்டாரு........

டேய் இன்னா செல்வம் அவரு ஆகக்கூடாதா..........மனுசண் இன்னாமா வேல செஞ்சுகிறாரு.ஒண்டி ஆளா இந்தியா பூரா சுத்தி கச்சிய கெலிக்க வச்சிகிராறு.செம அப்பாடக்கருவேலப்பா.......இன்னா சொல்ற பாய்.

அதானே முனியம்மா எங்காளுங்க நெம்ப இருக்குற மாநிலத்திலேயே கமாலு வேல காமிச்சுகிராறு.......

அது கண்டி இல்ல எந்த கட்சியுமே கூட இட்டார வேண்டாம், ஃபுல்லு மேஜாரிட்டில அள்ளிகினாறு............

அதானே லோகு..

தமியு நாட்டுல அம்மா இந்த கெலி கெலிச்சுகீது.  இன்னாதான் பவுரு கட்டுன்னு சொல்லி  தி.மு.க நக்கலு வுட்டாலும் அல்லாத்தையும் அள்ளிகினு சந்துல சிந்து பாடிக்கீது. இன்னா முனியமா இன்னா விசயம் சுத்தமா ஐயா கட்சி வழிச்சிகிச்சு................

அது வேற ஒன்நியம் இல்ல லிங்கம் சாரு, அம்மா கணுக்க கரீட்டா போட்டுகீது. தனிய நிக்கிறேன்னு சொல்லி ரெண்டு வருஷம் முன்னியே கட்சிக்காரங்கள உசுப்பி வுட்டு செமையா பெண்டேடுத்துகீது. டேய் செல்வம் அம்மானா சொம்மா இல்லடா..........

அப்போ முனியம்மா இன்னா ஐயா கட்சி தாராந்து போயிடுமா...........

அடப்போ லோகு அரசியல் தெரியாம ஆஃப் பாயில் கணுக்கா பேசிகினு கீற.
எம்.ஜி.ஆரு காலத்திலேயே சும்மா ஜனங்க ஆப்பு அடிச்சு வச்சானுங்க........அப்பால வரிலியா?

முனியம்மா இந்த அயகிரி உள்குத்துதான் கவுத்திடுச்சுன்னு சொல்லிகிரானுங்க..........

இன்னா பாய் பேசுற, அந்தாளு இருந்தாலும் இந்த ரிசுல்டுதான் வந்திருக்கும்.

அதான் பெரிசே சொல்லுதே........அவரு இருந்த போதும்தான் தோத்துகிறோமுனு.

இன்னா பெர்சு கண்ணு புளிச்சுது, காது அரிக்குதுன்னு அப்பால கட்சில அஞ்சா நெஞ்சன சேத்துகுவாறு..........

லிங்கம் சாரு அத கன்டி இந்த தபா  செஞ்சாரு கச்சிகாரனுங்க அல்லாம் காண்டாய்டுவானுங்க............

கேப்டனு இன்னா சொல்றாரு...........லோகு

அவரு இன்னா மச்சான் புட்டுகிட்டானு பொலம்பினுகீராறு........வூட்டம்மா சோறு வக்க மாட்டேங்குதாம்........

இன்னா முனியம்மா மேட்டரு ஏதாவது வச்சிக்கிற........

டேய் சும்மா இருடா பயம், வயக்கம் போல கடசீல காட்டுறேன்.......இன்னா மேட்டரு பேசிகினுகீறோம்....இவன் வேற, ரொம்பதான் ஆடுற அஞ்சலையாண்ட போட்டு கொடுத்தாதான்  நீ அடங்குவ.....

வை.கோ கூட புட்டுகினாரே..........செல்வம்

செல்வம் அதாண்டா தமியு நாடு............

தமியு நாட்டுக்கு மந்திரி பதவி கொடுப்பாரா மோடி........

தெர்ல பாய், பொன்னாருக்கு குடுப்பாருன்னு பேசிகிரானுங்க..........ஆனா பாய் காங்கிரசுக்கு நல்லா வச்சானுங்க ஆப்பு, இன்னா ஆட்டம் ஆடினானுங்க, அல்லாத்திலேயும் ஆட்டையப் போட்டானுங்க.


நம்ம சிங்கு இன்னா சொல்றாரு...........

அவரு இன்னா செய்வாரு பாவம், மூட்ட முடிச்ச கட்டிகினு வூட்ல குந்திக்கிராறு.

ஆறாயிரம் ஒட்டு வாங்கி இன்னா சிவகங்கை சின்ன சீமானு புட்டுகினாறு........

அவரு நைனா நின்னாலே அவ்வளதான் கெடச்சிருக்கும்.

இன்னா முனியம்மா நக்மா புட்டுகிச்சே..........

டேய் செல்வம் இன்னாடா நக்மா நக்மானு..........மோடி புன்னியவாண்டா, அக்கா, அம்மாகூட எல்லாம் கூட்டு சேரவேணாம். அப்பால ஏமாற சொல்ல லிங்கிய உருவிடும்...........

இன்னா முனியம்மா மோடி  நேத்திக்கி பேச சொல்ல பேஜாரா ஆயி அயுதுகினாராமே.

ஆமாண்டா லோகு நாடு எனுக்கு தாய் மாதிரி கட்சி எனுக்கு தாய் மாதிரி தாய்க்கு சேவை எண்ணிய வுட்டா யாரு செய்வாங்கன்னு பேஜாராய்கிராறு. மனுசன் இந்தில பாயி, பெஹனொன்னு சொல்லிகினு இன்னாவோ சொன்னாரு ஒன்நியம் புரில.

அப்பாலிகா............

அப்பாலிகா என்ன? போடா போயி தொயில பாரு.

இந்தாடா செல்வம் பாத்துக்க.........

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 20 May 2014

கலக்கல் காக்டெயில்-146

அம்மான்னா சொம்மாவா?

எல்லோரும் எதிர்பார்த்த  அல்லது எதிர்பாராத முடிவுகள் வந்து விட்டன. கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் எல்லா தலைகளும் ஓடி ஓடி அல்லது பறந்து பறந்து செய்த பிரச்சாரத்தின் முடிவுகள் பதினாறாம் தேதி தெரியவந்தது.

நாற்பதையும் பிடிக்கவில்லை என்றாலும் அம்மா எதிர் பார்த்த முப்பத்திமூன்று தொகுதிகளுக்கு அதிகமாகவே மேலும் நாலு தொகுதிகள் கிடைத்துவிட்டன. மத்திய சென்னை, வடசென்னை  வேலூர் தொகுதி நீங்கலாக மற்ற எல்லா தொகுதிகளிலுமே கிட்டத்தட்ட இரண்டு லட்சம்  ஒட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். தி.மு.க ஒன்று இரண்டு தொகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இரண்டாவது இடத்தை பெற்று ஒரளவிற்கு மானத்தை காப்பாற்றி கொண்டது என்று தான் சொல்லவேண்டும்.

எல்லா கட்சிகளுக்கும் போக்கு காட்டி கேப்டன் அடித்த கூத்து பல இடங்களில் காணாமல் போய்விட்டது.

என்னதான் மின்வெட்டு தண்ணீர் பிரச்சனை என்றாலும் தமிழக மக்கள் தங்கள் நியாபக மறதியை புறந்தள்ளி இந்த முறை  "அம்மாதான்" என்று அழுத்தமாகவே முடிவை எழுதிவிட்டனர்.

மோடி அலை, டாடி அலையை தாண்டி லேடி அலை தமிழகத்தில் வீசிவிட்டது.

அம்மாவிற்கு இப்பொழுது நல்ல காலம். தமிழகத்திற்கும் நல்ல காலமா என்பது போக போகத்தான் தெரியும்.

சரக்கடிக்க  நேபாளம் போகவேண்டி இருக்குமோ?

மோடி பிரதமரானவுடன் நாடெங்கும் மதுவிலக்கு வந்துவிடுமோ? என்று குடிமகன்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு உள்ளது. அதேபோல மோடி நாடெங்கும் மதுவை ஒழித்தால் வளரும் சமுதாயத்திற்கு ஒரு பெரிய சேவையாக இருக்கும்.

என்ன குடிமகன்கள் சரக்கு தேடி நேபாளத்திற்கும், சிறிலங்காவிற்கும் போகவேண்டி வரும்.

இப்பொழுது சமூக வலைதளங்களில் இந்த டாபிக்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

அவனவனுக்கு ஆயிரம் கவலைகள். குடிமகன்களுக்கு ஒரே கவலைதான்.

ரசித்த கவிதை

நம் சந்திப்பு 

நம் சந்திப்பு
நிகழாமல் போனது

பறவைகள்
தலையில் தோளில்
எச்சமிடலாமெனவோ
என்னவோ
மரத்தடியை ஏற்கனவே
தவிர்த்திருந்தோம்
சற்றே மனம் பகிர்ந்து .

புல்தரை
மீதமர்ந்த உடனேயே
கலையத்தவிக்கும்
இரும்புப் புற்றை கண்ணுற்றோம்
வேறு சில பூச்சிகளும்
சமன் குலைந்து
இடம் பெயர்ந்தன
படித்துக் கொண்டிருந்த பக்கத்தை
உடன் எடுக்கத் தோதுவாய்
உன் சுட்டு விரலை
நெடுநேரமாய் ஒரு
புத்தகத்துக் குள்ளேயே
வேறு வைத்திருந்தாய்

துணைத் தலைப்புகளையே
பார்த்துகொண்டிருந்ததில்
வாசிக்க முயன்று தோற்றத்தில்
படவிழா சினிமாவின்
மற்ற நல்ல பரிமாணங்களை
தவற விட்டது போல்

நம் சந்திப்பு
நிகழாமல் போனது
நாம் சந்தித்த அன்று-------------------கலாப்ரியா


ஜொள்ளு
Follow kummachi on Twitter

Post Comment

Thursday 15 May 2014

காம்பைப் பிடித்து பால் கறப்பதும்.............

 ரசித்த கீச்சுகள்

வாழ்க்கையில் நம் வெற்றியை தடுப்பது வெட்கமும் கூச்சமும்தான், எனவே கூச்சப்படாமல் கேட்போம் அண்ணே அக்கா என்ன ஃபாலோ பண்ணுங்கன்னு---------குருபிரபாகரன்.

சென்னைல அக்னி வெயில் கொளுத்துது  இதுல கரண்ட் வேறே இல்ல கொஞ்சம் கூட ஈவு  இரக்கமில்லாத அரசு------------சந்திரா தங்கராஜ் 

கடைசிவரை சென்னை 28 வசந்த் போல வயிறுமுட்ட குடித்தும் ஸ்டடியாக இருந்த மச்சான் சுப்புணியை வாழ்த்த வயதில்ல வணங்குகிறோம்:-)))----கர்ணா 

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால்  குட்டுப்படவேண்டும் என்பதற்காக மோதிரம் அணிந்திருந்த  ஒருவரிடம் வம்பிழுத்தேன் "பொளேர்: என்று அறைந்துவிட்டார்------------மாண்டியா


ஆபீசுக்கு நீட்டா அயன் பண்ணின ட்ரெஸ்ல வரவன 4 பொண்ணுங்கதான் பாக்குறாங்க அதே அயன் பண்ணாம சுருங்கிய ட்ரெஸ்ல வரவன 40 பொண்ணுங்க பாக்குறாங்க------------கருத்து கந்தன் 

மாட்டின் கொம்பை பிடித்து அடக்குவது மிருகவதை என்றால் காம்பைப் பிடித்து பால் கறப்பதும் மிருகவதைதான்# எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்க-------யாரோ--------கும்மாச்சி

கலைஞரின் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடவேண்டும் --மு.க.ஸ்டாலின்# எல்லா கோவில்களிலும் சிறப்பு அர்ச்சனையும் தீபாராதனையும் ஏற்பாடு பண்ணிடலாம்---------கருத்து கந்தன் 

புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் தேர்வு, அதுக்கு  விஜயகாந்தை ஏன்யா இழுக்குறீங்க--------------V. ஸ்ரீதர் 

தமிழர்களுக்கு தமிழ் மீதுள்ள  பாசம் பாராட்டுக்குரியது --------சித்தராமையா# இதெல்லாம் வக்கனையா சொல்வாரு குடிக்க தண்ணி கேட்டா மட்டும் தரமாட்டாரு----------கணியன் 

இன்னும் இரண்டு நாட்களில் இந்தியனின் தலைவிதி அடுத்த 5 வருடத்திற்கு எவன் கூட இருக்கப்போவுதோ. மோடிசார் டவரில் வைஃபை வாக்குறுதி மறந்துடாதீய-----------ராஸ்கோலு 

அன்பே! சித்ரா பவுர்ணமி அன்னைக்கு முத்தம் அளித்தால் குடும்பம் சுபிட்சம் அடையுமாம்.காசா? பணமா? கொடுத்துத்தான் பாரேன்-----சி.பி. செந்தில்குமார் 

 பெங்களூர்ல குருமா எப்படி வெப்பீங்கனுதான் கேட்டேன்! ஒரு குண்டா குழம்பும், ஒரு கப்பு கீரைப் பொரியலும் கொண்டு வந்து குடுத்துட்டுப் போறாங்க!------------மழை!!

 

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 14 May 2014

டீ வித் முனியம்மா---------- பார்ட் 9இன்னா மீச முனிம்மா வந்துச்சு..........

யனிக்கி எங்கன அறியும் பழக்கட ,நீயே நோக்கி கொள்ளு.........

மவனே உனுக்கு கொயுப்புடா, முல்லை பெரியாரு தீர்ப்பு வந்தகண்டி காண்டா கீறான்...........பாடு, டேய் மீச ஒரு சைனா டீ  போடு, மவனே டீ ல கண்டி தண்ணிய ஊத்துன..........உனுக்கு இருக்குது..........

டேய் பயம் உடுறா அவனாட வம்பு வலிச்சிகின்னு...............

பின்ன இன்னா நாடார் முனியம்மா எங்கடான்னு கேட்டா பேஜார் பண்றான்..........

டேய் பயம் அதோடா முனியம்மா வருது பாரு, பாயும் கூட வராப்பல...........

இன்னா முனிம்மா லேட்டா வர, இன்னா எலிக்சன் முடிவு வந்திச்சா, அவனவன் அம்மா ஆட்டிகினாங்க, கொடாய்ஞ்சுகினாங்கன்னு உதார் உட்டுகினு கிரானுங்க.

டேய் பயம் நீ சின்ன பையன் உனுக்கு டாக்கத்து கெடையாது..........அதுக்கு பேரு எக்சிட் போல்லுடா...........ஒட்டு போட்டு வர்வனாண்ட யாருக்கு போட்டேன்னு கேட்டு போட்டுகிரானுங்க...............அத்த வச்சி இவங்களுக்கு அஞ்சு அவங்களுக்கு பத்து, முப்பது அவங்களுக்குன்னு அடிச்சி உட்டுகிரானுங்க........அவன் அவன் சொம்மா அடிச்சி உடுரானுங்க.......எதுவும் வெள்ளி கெயம தெர்ஞ்சிடும்..........

யாருதான் வருவாங்க முனியமா............

இரு பாய் இன்னா அவசரம்..............அல்லாம் தெரியப்போவுது.......

நம்ம பிரதமரு மன்மோகனு வூட்டுக்கு போவ சொல்ல ஆபிசுல கீற அல்லாரும் அய்தாங்கலாமே............

அஹான் லோகு, இன்னா சிங்கு இப்பகூட வாய தொறக்கம கம்முனு கீறேன்னு ஒரே பொலம்பலாம்.....................

ஆன்னா மனுஷன் கம்முனு குந்திகினே  பத்து வருஷம் ஓட்டிகுனு போயிட்டாரு.........பெரியாளுபா............

முனியம்மா இப்பா மோடி பிரதமரானா குஜராதுக்கு யாரு சி.எமு.........

அதுக்கு யாரோ ஒரு பொம்பள பேரு சொல்றாங்கபா...........ஆனந்திபெண்ணோ .......பண்ணோ....அந்தம்மா இப்போ அங்க நம்ம ஓ.பி. மாறியாம்........

நம்ம கொடநாடு தாயி ...........திட்டம் அம்பேலா..............மூணாவது அணி பிரதமருன்னு  கூவிகினு இருந்திச்சே............இன்னா முனியம்மா.....

அம்மா இன்னா செய்யும்னு எவனுக்கும் தெரியாது.............ஆனா அம்மா கட்சி நெறைய சீட்டு அடிக்கும்னு சொல்றானுங்க.....

யாரு சொல்றாங்க முனியமா................

டேய் லோகு அம்மாதாண்டா சொல்றாங்க.............

சரி முனியம்மா கேப்டனு நூசு இன்னா.......

அந்தாளு இப்போதான் கம்முனு கீறாரு. அவரப்போயி உசுப்பி உட்டுகினு..........

சரி முனியம்மா மோடி வந்தாருன்னா நம்ம மீனவங்கள சுடுரானுன்களே சிங்கலனுங்க அவங்களுக்கு ஆப்பு வைப்பாரா?

அது தெரியாது, இப்போகிறாரே, தேசிய பாதுகாப்பு ஆலோசகரு.........சிவசங்கர மேனனு அவர தூக்கிடுவாங்க, அந்தாளு நமக்கு எதிராவே கொரலு உட்டு அல்லாத்தையும்  பேஜாரு பண்ணிகினு இருந்தாரு.............இப்போஅஜித்தோவல்ன்னு ஒருஆள இட்டாறாங்க, இந்தாளு கொஞ்சம் தில்லு பார்ட்டி.............

சரி முனிம்மா போனவாரம் நீலாங்கரைல ஒரே அலம்பலாம்மே........சொம்பு, நயனு அல்லாம் டைட்டா ஆயிகினாகலாமே.............

அஹாண்டா பயம் விசயத்துக்கு வந்துட்டான்.........

அதாண்ட பொறந்தநாளு பார்ட்டியாம்...................அப்பால இன்னா ஓபின் தி பாட்டிலுதான்................

அப்புறம் அல்லாரும் குஜாலா இருப்பாய்ங்க..............அதெல்லாம் வயக்கமா நடக்குறதுதான்........
  

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 13 May 2014

நாட்டின் தலையெழுத்து எழுதப்பட்டன...........

நாடகங்கள் நடத்தப்பட்டன

ஊடகங்கள் வாங்கப்பட்டன

ஏடுகளில் பொறிக்கப்பட்டன

வீடுகளில் கொடுக்கப்பட்டன

வாக்குறுதிகள் இறைக்கப்பட்டன

வாக்குகள் வாங்கப்பட்டன

ஓட்டுரிமை விற்கப்பட்டன

லாவணிகள் பாடப்பட்டன

ஜனநாயகம் புதைக்கப்பட்டன

பணநாயகம் விதைக்கப்பட்டன

முடிவுகள் திணிக்கப்பட்டன

தலையெழுத்து எழுதப்பட்டன

நாட்டின்

தலையெழுத்து எழுதப்பட்டன............
Follow kummachi on Twitter

Post Comment

Monday 12 May 2014

கலக்கல் காக்டெயில்-145

நீயா? நானா?

முல்லபெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். அதை தொடர்ந்து அம்மா டிவியும் ஐயா டிவியும் அல்லக்கைகளை வைத்து "தலை"க்கு சொம்படிக்கும் விழா தொடங்கியது. பின்னர் இரு தலைகளுமே இந்த வரலாற்று வெற்றிக்கு நான்தான் காரணமென்று அறிக்கை போர்கள் தொடங்கின.

காவிரி தீர்ப்பு கூட நமக்கு சாதகமாகத்தான் வந்தது. ஆனால் ஆற்றில் தண்ணீர் என்னமோ வரவில்லை. உச்சநீதிமன்றம் என்ன  இடைக்கால தீர்ப்புகள் வழங்கினாலும் அதை கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் எந்த அரசும் கண்டுகொள்வதில்லை. நமக்கு கிடைக்கவேண்டிய நியாயமான அளவு தண்ணீர் மறுக்கப்படுகிறது. அதே காட்சிதான் இப்பொழுது முல்லபெரியாறு விஷயத்திலும் நடக்கும்,  ஆதலால் இந்த தீர்ப்புகளுக்கு ஒன்றும் இந்த ஆர்பாட்டங்கள் தேவையில்லை.

உண்மையிலேயே நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைத்து விவசாயிகள் விளைச்சலுக்கு சேதம் வராமலிருந்தால் தான் இந்த தீர்ப்புகளுக்கு அர்த்தம் உள்ளது.

இரும்புக்கரம் தேவை 

சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பல கேள்விகளை நம்மிடையே எழுப்பியுள்ளது. வெடிகுண்டு சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் திருவல்லிகேனியில் பிடிபட்ட ஜாகீர் ஹுசேனுக்கும் சென்ட் ரல் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், ஜாகீர் ஹுசேனிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்தியாவின் அமைதியை குலைத்து, பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த பாகிஸ்தானும், ஸ்ரீலங்காவும் எப்படி செயல்படுகின்றன என்பது வெட்டவெளிச்சமாகிறது..

குறிப்பாக ஸ்ரீலங்கா நம்மிடமிருந்து ராணுவ உதவி முதல் பொருளாதார உதவி வரை எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நமக்கு எதிராக செயல்படுவதை நமது மத்திய அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

மேலும் ஜாகீர் ஹுசேன் போன்ற தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் புல்லுருவிகளை அரசு பிடித்து தக்க தண்டனை தரவேண்டும்.

இதெல்லாம் எப்பொழுது நடக்கும்?

ரசித்த கவிதை 

தென்றல் 


இரவுப் பொழுதில்,
இறகுகள் மறித்து,
இயற்கையெனும் விசிறி வீசும்,
ஈரக் காற்றிது....

கனவுகள் காணும் இரவின் முன்னே,
கவிதையாய் வரும் நினைவுச் சாரல்....
கசந்து நிற்கும் நினைவுகளெல்லாம்,
தென்றல் உந்தன் சுவாசம் பட்டு,
இன்சுவை நினைவாய் மாறாதோ....

அவளைப் பற்றி சிந்திக்கும் இவ்வேலையில்,
தென்றலின் நினைவிருக்காது எம் சித்தத்தில்....
அடர் குளிர் காற்று தந்து,
அவள் நினைவை உண்டாகுதே....

நிலாமகள் தூது இதுவோ,
நித்திரை முழுதும் தவழ்ந்திடுதே....
பூமி உலா வந்த பிறகும்,
ஓய்வதில்லை உந்தன் பணிகள் முற்றிலும்....!!!!----------------பிரதீப்

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 7 May 2014

கையில மை..............பையில?

தேர்தல் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது, விடிந்தால் ஓட்டுப்பதிவு. அன்று செந்தில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தான். உறவினர் அந்த பிரபல கட்சியின் மாவட்ட செயலாளர், இரண்டு முறை எம்.பி. ஆக இருந்தவர். இந்தமுறை கட்சி தலைமை சீட் தரவில்லை, அடுத்தமுறை சட்டசபைக்கு சீட் தருவதாகவும் மந்திரி ஆகப்போவதாகவும் கட்சிக்குள் பேச்சு. தற்பொழுது அந்த தொகுதியில் எம்.பி தேர்தலுக்கு நிற்பவருக்கு துடியாக வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். கட்சியும் வேட்பாளரும் அவரை மலைபோல நம்பியிருக்கிறார்கள்.

செந்தில் அவர் வீட்டிற்கு சென்ற பொழுது அவர் இல்லை. அத்தை தான் வரவேற்றார்கள். "செந்தில் நல்ல வேலை இப்பொழுது வந்தாய், மாமா தேர்தல் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள், நான் தனியாக குழந்தைகளுடன் இருக்கிறேன், நிறைய கட்சி ஆட்கள் வந்துபோகிறார்கள் என்னால் அவரகளுக்கு பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை, ஆதலால் அவர் வரும் வரை சற்று இருந்து விட்டு செல்" என்றார்கள்.

செந்திலும் அவர் வரும் வரை அங்கு இருப்பதாக முடிவு செய்தான். நிறைய கட்சி ஆட்கள் வந்து அவர் எப்பொழுது வருவார் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான். நேரம் போய்க்கொண்டிருந்தது. ஒன்பது மணி அளவில் ஒருவர் காரில் வந்தார். அவர் இருக்கிறாரா? என்று விசாரித்தார்.

அதற்கு செந்தில் மாமா இல்லை என்றும் எப்பொழுது வருவார் தெரியாது என்றும் கூறி, அவசரமென்றால் அவரை அலை பேசியில் அழையுங்கள் என்று கூறினான்.

வந்தவர் அலைபேசியில் அழைப்பதற்கு ஏனோ தயங்கினார், ஆனால் அவர் உடனே கிளம்ப வேண்டும் என்ற அவசரம் அவரின் படபடப்பில் தெரிந்தது. பின்னர்  அவர் செந்திலிடம், "தம்பி காரில் சில பெட்டிகள் இருக்கின்றன அதை அவரிடம் ஒப்படைக்கவே வந்தேன், ஆனால் அவர் இல்லை நான் அதை நெடு நேரம் என்னிடம் வைத்திருக்க முடியாது எப்படியாவது அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் நான் என்ன செய்வேன்? தம்பி அதை வாங்கி நீங்கள் வாங்கி வீட்டில் வைத்து அவர் வந்ததும் சொல்லுகிறீர்களா? என்றார்.

செந்திலுக்கு தயக்கம் பெட்டியில் என்ன இருக்கிறது என்று தெரியாது. வந்தவரிடம் சரி அவர் மனைவியிடம் கேட்டு சொல்கிறேன் என்றான்.

வந்தவர் தம்பி அவர்களுக்கு தெரிய வேண்டாம் இதை நான் அந்த பெட்டிகளை வாசலில் உள்ள அறையில் வைத்துவிட்டு போகிறேன், நீங்கள் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

செந்திலின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட அவர் தம்பி பயப்பட வேண்டாம் பெட்டியில் வெடிகுண்டு இல்லை என்று ஒரு பெட்டியை திறந்து காட்டினார். அதில் கட்டுகட்டுகளாக ருபாய் நோட்டுகளும், இரண்டு மை குப்பிகளும் இருந்தன. அவர் அதை செந்திலிடம் காட்டிக்கொண்டிருக்கும் பொழுதே காரில் இருந்து டிரைவர் மற்ற ஐந்து பெட்டிகளையும் இறக்கி அந்த அறையில் வைத்துவிட்டான். பின்னர் அவர்கள் இருவரும் விடைபெற்று சென்றுவிட்டார்கள்.

செந்திலுக்கு பெட்டியில் உள்ள பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு என்பதை ஊகிக்க முடிந்தது, அனால் அதில் உள்ள மை குப்பி எதற்கு என்பது விளங்கவில்லை. இப்பொழுது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது வழக்கமாகிவிட்டது. போன பஞ்சாயத்து தேர்தலில் இதை அவன் நேரிலேயே பார்த்திருந்தான். அனால் மை குப்பி தான் உறுத்திக்கொண்டிருந்தது.

பத்து மணி அளவில் மாமா வந்தார், அவருடன் அவரது அரசியல் சகாக்கள் ஒரு இருபது முப்பது பேர் வந்திருந்தனர். மாமா வந்தவுடன் செந்திலை விசாரித்தார். செந்தில் அவரிடம் அந்த பெட்டி விஷயத்தை கூறினான்.

அவர் உடனே அரசியல் சகாக்களை அழைத்தார், அவர்களை ஆறு குழுக்களாக பிரித்து அந்த பெட்டிகளை ஒப்படைத்தார். பின்னர் அவர்களிடம் ஹூம் கிளம்புங்கள் நேரமில்லை, விடியலுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்றார்.

செந்திலுக்கு மை பாட்டில் விஷயம் அவரிடம் கேட்க தயக்கம் இருந்தும் கேட்டு விட்டான். அவரும் சிரித்துக்கொண்டே

"செந்தில் இதெல்லாம் அரசியலில் சாதாரணம்,எதிர்கட்சிகாரன் பத்தடி பாய்ந்தால் நாம் நூறடி பாயவேண்டி உள்ளது. அவன் காசு கொடுத்து வாக்களர்களை விலைக்கு வாங்கி அவர்கள் கட்சிக்கு  ஒட்டு போட செய்கிறான். நாங்கள் அவன் காசு கொடுத்த அதே ஆட்களிடம் எங்கள் பங்கிற்கு விநியோகம் செய்கிறோம், மேலும் அவனுக்கே காலம் காலமாக ஓட்டுப் போட்ட ஆட்களிடமும் காசு கொடுத்து வேலையை முடிக்கிறோம், இந்த முறை நிச்சயம் எங்கள் வேட்பாளரின் வெற்றி உறுதி" என்றார்.

இப்பொழுது செந்திலுக்கு அந்த மை குப்பிகளின் அவசியம் புரிந்தது. ஆனால் அதை எப்படி கொண்டு வந்தார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அதற்கு விடை சற்று நேரத்தில் கிடைத்தது. அந்த பெட்டியை கொண்டுவந்தவர் செந்திலின் மாமாவிடம் அந்த மைகுப்பிகளை எவ்வாறு போல்லிங் ஆபிசரிடமிருந்து பெற்றார் என்பதை விளக்கிக்கொண்டிருந்தார்.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா? என்று கவுண்டர் செந்திலின் காதில் கத்திக்கொண்டிருந்தார்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 5 May 2014

டீ வித் முனியம்மா----------பார்ட் 8

லோகு இன்னா ஒரே மெர்சல்ல கீறே இன்னா மேட்டரு...............

அதில்ல முனியம்மா நம்மாளு ஒருத்தன் குண்டூரு பக்கம் போறேன்னு ஸொல்லிகினு காலிலேயே சென்ட்ரல் டேசனாண்ட போனான்..............இப்போ காலில அங்கன குண்டு வெடிச்சுதாம்.............நெம்ப ஆளுங்க அம்பேல் ஆயிட்டாங்கலாமே......................

டேய் சொம்மா பீலா விடாத, ஒரு பொண்ணுதான் செத்துகீது, பாஞ்சு இருபது பேத்துக்கு அடி பட்டுகீதாம்................எந்த பேமானி இந்த வேலைய செஞ்சிகிறானோ தெர்ல.....

அதான, அயோத்தி குப்பத்தாண்ட ஒரு ஆளு மாட்நானே அவுன கொடஞ்சா விஷயம் வெளிவருது.............

அட இன்ன நாடார் நீயும் அந்த தாத்தா மாதிரி பேசிகினுகீற. மவன இந்த குண்டு வச்ச டார்ச்சர் கூட தேவல, இந்த தாத்தா கோபால புரத்தில குந்திகினு கொரலு விட்றதும் பதிலுக்கு அந்த ஆயா  கொடனாட்ல குசும்பு அடிக்கிறதும்...........இன்னா பேஜார் பண்றாங்கப்பா..............ரண்டு பெர்சுக்கும் வயசாயிடிச்சு ஆனா மண்டைல மர்வாதி இல்ல.......சுடுதண்ணில உயுந்த பூனை, காவால உயுந்த பெருச்சாளின்னு பேசிகினு........

அஹான் முனியம்மா இவங்க எயவு வூட்ல கூட அரசியல் பேசி டார்ச்சர் கொடுப்பாய்ங்க.

மத்திய உளவு துறைகாரனுக இன்னும் காப்ரா பண்ணிகிறானுங்க தமிய்  நாட்ல தீவிரவாதிங்க நெறைய ஆளுங்க  உள்ளார பூந்துகிரானுங்கலாம்............இன்னா நடக்கப்போவுதோ.

அறுபத்தியேழு வயசு காங்கிரஸ் பெர்சு ஒன்னு கூத்தியா வச்சிகிரதாமே இன்னா மேட்டரு............

அஹான் பாய் எவனோ திக்கு விஜய்,  அம்ரிதான்ற பிகர வச்சிகினு இன்னாவோ நூலு உட்டுகிறான், அதெல்லாம் ஒரு மேட்டரா கேக்குறியே.........

இன்னா முனியம்மா மோடி வந்துருவாருங்குற....

அதான் சொல்லினுகிறாங்க, அந்த காண்டுலதான் பாகிஸ்தான் காரனும், ஸ்ரீலங்கா காரனும் குண்டு வக்கிறாய்ங்கலாம்................

ஆந்திரா எலிக்ஸனு எப்படி.............

அங்கியும் காங்கிரசுக்கு சமாதிதான் போல............அண்ணாத்தைய எதித்தே தம்பி போட்டி போடுறான்...............சிரஞ்சீவி  வரிசையில வராம ஒட்டு போட போ சொல்ல எவனோ ஒருத்தன் பூந்து டபாய்ச்சிகிறான்.............செம தமாஸ்பா.........

இன்னா முனியம்மா சினிமா நூசு கீதா............

அஹான் தலீவரு படம் வருது அது கண்டி உனுக்கு இன்னா நூசு வேணும். அமெரிக்கால கண்டி இருநூறு கொட்டாய்ல ரிலீசு ஆவுதான்............தலீவர் தலீவர்தான்...............இந்தியா முயுக்க ஆறாயிரம் கொட்டாயில உடுராங்களாம்......

அப்ப டிக்கட்டு கெடைக்கும்...............

கெடிக்கும்...........கெடிக்கும்ரெண்டு வாரத்துக்கு அப்பால...........

தலீவர் கூட யாரு ஈரோயின்?

அது யாரோ தீபிகா படுக்கவேணுமோ இன்னாவோ சொல்றானுங்க.......


Follow kummachi on Twitter

Post Comment

Friday 2 May 2014

கலக்கல் காக்டெயில்-144

இரண்டு மாநிலங்கள் (Two states)

சமீபத்தில் வந்திருக்கும் இந்திப் படம். ட்ரெய்லரிலேயே முத்தக் காட்சிகள் வைத்து ஒரு பரபரப்பை ஏற்படுத்திய படம். சேத்தன் பகத்தின் Two states என்ற நாவல் தான் படமாக்கப்பட்டுள்ளது.

நாயகன் கிருஷ் (அர்ஜுன் கபூர்) அனன்யா (அலியா பட்) எம்.பி.எ ஒன்றாக படித்துக் கொண்டிருக்கும் பொழுது லவ்வுகிறார்கள். கிருஷ் ஒரு பஞ்சாபி, அனன்யா நம்மூரு பெண். இவர்கள் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்யும் பொழுது இரு வீட்டாரின் வெவ்வேரு மாநில கலாச்சார பிரச்சினைகளால் எதிர்ப்பு கிளம்ப, எப்படி இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்து ஒன்று சேருகிறார்கள் என்பதே கதை களம். கதை களம் ஒன்றும் புதியதல்ல நாம் ஏற்கனவே சந்தித்ததுதான். இருந்தாலும் மிகவும் சொற்பமான கேரக்டர்களை வைத்து மிகவும் அழகாகவே சொல்லப்பட்ட கதை. கிரிஷின் அம்மாவாக அம்ரீதா சிங்கும்,அனன்யாவின்அம்மாவாக ரேவதியும்கொடுத்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள். கிரிஷின் அப்பாவாக வரும் ரோநிட் ராய் படம் முழுவதும் இறுகிய முகத்துடன் வந்து கடைசியில் நெகிழ வைக்கிறார்.

இயக்குனர் அபிஷேக் வர்மன் நன்றாகவே செய்திருக்கிறார்.சென்னை காட்சிகளை சென்னையிலேயே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். படத்தில் காட்டப்படும் மயிலாப்பூர் ஏரியா புனே ராஸ்தா பேட் ஏரியாவை வைத்து செட் அமைத்ததுபோல் தோன்றுகிறது.

படத்தின் நாயகி அலியா பட் செம க்யூட்.

வெகு நாட்களுக்கு பிறகு நான் ரசித்த இந்தி படம்.

கொடநாட்டில் கோயில் கொண்ட தாயே...........

தேர்தலில் அம்மா பறந்து பறந்து பிரச்சாரம் செய்த அலுப்பு நீங்க கொடநாட்டில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்!!!!!!!!!!!!!.

தேர்தல் முடிந்த கையோடு நேற்று முதல் சென்னையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. கத்திரி வெயில் துவங்கும் முன்பு அம்மா எல்லோருக்கும் கொடுத்த அன்பு பரிசு.

அடுத்ததாக தண்ணீர் பஞ்சம் தொடங்கப்போகிறது. இனி டேங்கர் லாரி அடிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் காட்டில்மழைதான். போன வருடம்  வெயில் காலம் முடிந்தவுடன் எட்டாயிரம் லிட்டர் தண்ணீருக்கு மூவாயிரம் ரூபாய் வரைக் கேட்டார்கள், அதற்கும் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த தண்ணி லாரிகள் பழைய மகாபலிபுரம் தெருவில் உள்ள ஐ.டி. கம்பனிகளுக்கு தண்ணி அடிப்பதில் ரொம்பவும் பிசி ஆக இருக்கிறார்கள். ஆதலால் இந்த வருடம் இன்னும் அதிகம் கேட்க வாய்ப்புள்ளது.

இப்பொழுது அம்மா கொடநாட்டு பக்கம் போனதால் மற்ற மந்திரி அல்லக்கைகள் தலைமை செயலகம் பக்கம் வருவதில்லையாம். தலைமை செயலகம் இப்பொழுது ஆள் நடமாட்டம் இல்லாமல் பெருச்சாளிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாம். 

அம்மா மலையேறிய தாயே விரைவில் மலை இறங்கு.

ரசித்த கவிதை 

நோய்மை

இரவு வருவதும் பகல் போவதும்
தெரிவதில்லை
நேற்றைக்கும் இன்றைக்கும்
வித்தியாசமில்லை.
கிழமைகளும், தேதிகளும் வெறும்
பெயர்களும், எண்களுமாகிறது
அறைக்குள்ளே இருப்பவளின் புலன்கள்
அதிகம் உபயோகப்படுவதில்லை
உறக்கத்தின் ஆழமும், விழிப்பின்
மேற்பரப்பும் ஒன்றாகிவிடுகிறது
வானத்தைப் பார்க்க முடிவதில்லை
காலத்தைப் பிரிக்க முடிவதில்லை.
முடிவில்லாத சுழற்சியினுள்
மூழ்கிக்கிடக்கிறது வாழ்வு
என் முகமே மறந்துபோனதொரு
காலமற்ற வெளிக்குள்
என்னைக் கடக்கிறது
நோய்மை.-----------------------------------நர்மதா குப்புசாமி


ஜொள்ளு 
Follow kummachi on Twitter

Post Comment

Thursday 1 May 2014

காங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு

வலை கீச்சுதே.

இந்த வாரம் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில் நமது கீச்சர்களும் மிகவும் சுறுசுறுப்பாக கீச்சிய கீச்சுகளில் ரசித்தவை.

ஆணி சொல்கிறது " சிலுவையில் நாங்களும்தான் அடிவாங்கினோம்"-குருசாமி எனும் குடிகாரர் ஒருவரின் கவிதை--------கோட்டிக்காரன் 

யாரைப் பார்த்தும் பயப்படமாட்டேன்# பிரியங்கா காந்தி-# கண்ணு செவந்து நாக்கை துருத்தர எங்க கேப்டன் மூஞ்சியைப் பார்த்துக்கூடவா?----------கணியன்

அஞ்சலை குப்பவாசியின் பெயராம், அஞ்சலா குபேரவாசியாம் என்னையா நியாயம்------------------கோவை-கமல் 

கடந்த தலைமுறையில் வாங்கிய பூரிக்கட்டை அடியால்தான் அதை தாங்கும் சக்தியை இன்றைய தலைமுறை பெற்றிருக்கிறோம்# அப்பாவுக்கு நன்றி-------------உடன்பிறப்பே 

அம்மா சொன்னது மாதிரி திருடனுங்க பூரா ஆந்திராக்கு போயிட்டானுங்க போல#திருப்பதில என்  புது செருப்பு தொலைஞ்சு போச்சு------------------ட்விட்டர் MGR

இங்க (அமெரிக்காவில்) இந்த குளிர்காலம் மரங்களை நிர்வாணமாகவும் பெண்களை முழுவதும் மறைக்க வைத்து ஆண்கள் இயற்கையை ரசிக்க முடியாமல் செய்து விடுகிறது----------------ஞான "உள்" குத்து

சிரஞ்சீவி காங்கிரசில் இருக்கப் போயிதான் அசிங்கப்படுத்தி விட்டுருக்கானுங்க போல# காங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு--------------பொதிகை செல்வன் 

கையா அன்றிக் கமலமா வெல்லும்
பையா உனக்கு பதற்றம் எதற்கு?
மையால் விரலில் மச்சம் வைத்தபின்
தையா தக்க ததுங்கி னத்தோம்.#கலிவிருத்தம்-------------------என் . சொக்கன் 

நான் சாவேன் எனத்தெரிந்தே பூமிக்கு எனை  அனுப்பியவன் சாமி எனில்அதே நோக்கத்தில் எனக்கு சரக்கு வாங்கித்தரும் நண்பனும் சாமிதான் -------------சால்ட் & பெப்பர் தளபதி 

வயிறு எரிஞ்சு சொல்றேன்
-
-
-
-
வெயில் காலத்தில் யாரும் காரசட்னி சாப்பிடாதீங்க-----------சுட்ட பழம்

Follow kummachi on Twitter

Post Comment