Tuesday 7 June 2011

கலக்கல் காக்டெயில்-32

சாமியார் அரசியல்பாபா ராம்தேவை ராம்லீலா மைதானத்தில் புகுந்து நள்ளிரவில் கைது செய்ததை எதிர்த்து இப்பொழுது எல்லா நாளேடுகளும் எழுதி கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றனர். சிங்கு வழக்கம் போல் வாய் மூடிக்கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆடிப் போயிருப்பது உண்மை. சாமியாரை வேறு வழியில் ஆஃப் செய்திருக்கலாம். ங்கொயால இதேகண்டி தமிழ்நாடு அரசியலா இருந்தா, ஒரு நடிகையை செட் செய்து அவர் கோமணத்தை உருவியிருப்பார்கள். இல்லை என்றால் அரை கிலோ கஞ்சா வேலையை முடித்திருக்கும். வட நாட்டானுக்கு வெவரம் பத்தாது என்று இதற்குத்தான் சொல்கிறது.

ஆற்காட்டார் வாழ்க

அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் இருபத்து நாலு மணியும் ஃபேன் ஓடும், ஏசி வேலை செய்யும் என்று நினைத்தவர்களுக்கு அப்பப்போ ஆஃப் செய்து ஆற்ரகாட்டாரை நியாபகப் படுத்துகிறார்கள். தேர்தல் முன்பு எங்கள் ஏரியாவில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை மட்டுமே மின் தடை ஏற்பட்டது. இப்பொழுது நம் வீட்டிற்கு வரும் அழையா விருந்தாளி போல், ஒரு நான்கு மணி நேரம் காணமல் போய் சோற்றுக்கு வருவது போல் ஒரு சில நாட்களில் ஆறு மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது. மிக்ஸி, க்ரைண்டர் கொடுத்தவுடன் இது இன்னும் அதிகமாகலாம். எதற்கும் ஒரு டீசல் ஜெனரேடர் வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அஸ்தமித்த சூரியன் உதிக்காது


இன்று சட்டசபையில் அம்மா உரையில் தமிகத்திற்கு மேல்சபை என்றும் வராது என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க வந்தால் மேல் சபை பற்றிய பேச்சும், அ.தி.மு.க வந்தால் அதை ரத்து செய்து அந்த பேச்சிற்கு சமாதி கட்டுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் அம்மா சொன்ன காரணம் அவர் ஆனவப்போக்கை காண்பிக்கிறது. “அஸ்தமித்த சூரியன்” இனி தமிழகத்தில் உதிக்காது என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார். தமிழக மக்கள் பார்ப்பதற்கு கேனையன் போலிருப்பார்கள், தேர்தல் நேரத்தில் தெளிவாக கும்மிவிடுவார்கள்.

செருப்பு கலாசாரம்

இராக்கில் ஜார்ஜ் புஷ் மீது வீசப்பட்ட செருப்பு இப்பொழுது நம் நாட்டில் சகஜமாகிவிட்டது. முதலில் நம்ம “செட்டியார்” மீது வீசினார்கள். அடுத்தது கல்மாடி என்று தொடங்கி இப்பொழுது அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த காலத்து ராஜா எல்லாம் உஷார் பார்ட்டிகள். அரசவையில் ராஜாவை தவிர யாரும் செருப்பு அணிய அனுமதி இல்லை. இல்லை என்றால் நிறைய சிரச்சேதம் நடந்திருக்கும்.

“யாரங்கே ராஜ மீது பாதரட்சை பிரயோகம் செய்த செங்குட்டுவனின் தலையை பட்டத்து யானை நிரடட்டும்” என்று ராஜாவின் கூஜா கூவியிருப்பதை நம் பாடத்தில் படித்திருப்போம்.ஜொள்ளுப் படம்

Follow kummachi on Twitter

Post Comment

Monday 6 June 2011

எம். ஆர். கே. ...........................டி.சி.டி, பி.டி.பி.சி.டி.

எங்கள் பார்ட்டி சங்கர் வந்தவுடன்தான் தொடங்கும். அவன் வானிலை அறிக்கை கேட்காமல் பார்ட்டிக்கு வரமாட்டான். பார்ட்டி என்பது எங்கள் அறுவரின் வாரக்கடைசியில் எல்லோரும் சேர்த்திருக்கும் பொழுது நடக்கும் “ஜலப்ரவாகம்”தான். இது எல்லா வாரத்திலும் நடக்காது. ஏனெனில் குமாருக்கும் எனக்கும் மூன்று வேலை ஷிப்ட் டூட்டி. ஆதலால் எங்களுக்கு சலவைக்கடை போல் பிரதி திங்கள் விடுமுறை என்று ஆரம்பித்து, சனி ஞாயிறு விடுமுறை வர எப்படியும் ஒரு ஒன்ரரை மாதம் ஆகிவிடும். இருந்தாலும் எப்படியாவது ஒரு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை லீவ், ஷிப்ட் சேன்ஜ் என்று போட்டுவிட்டு “தீர்த்தவாரி” ஏற்பாடு செய்து விடுவோம்.


சங்கர் மப்பில் கூட பில் கொடுக்கமாட்டான். கேட்டால் ஆயிரம் காரணம் சொல்லுவான். அடுத்த முறை கொடுக்கிறேன் என்பான். தப்பித்தவறி கையில் காசு இருந்தால் கூட, இல்லைடா இந்த காசு “நாய் ............த்தில் தேனடை போல” தொட முடியாது என்பான். நாளைக்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணம் என்பான்.

வானிலை அறிக்கை கேட்டு விட்டு ரமணன் நாளைக்கு மழை வரும் என்று சொல்லியிருக்கார் ஆதலால் நல்ல சில்லுன்னு பீர் சொல்லு என்பான். வெயில் மண்டையை பிளக்கும் என்று சொன்னால் விஸ்கி வாங்கி ராவாக அடிப்பான்.

நிற்க. தலைப்பில் எம்.ஆர்.கே. என்று போட்டுவிட்டு எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவு எம். ஆர். கேயைப்பற்றியது. பெரும்பாலும் நாங்கள் நல்ல மப்பில் கடையை விட்டு வெளியே வந்து கையேந்தி பவனுக்கு நடந்து செல்லும் பொழுது எதிரே எம். ஆர். கே தூய வெள்ளை நிறத்தில் அரை பாண்டும் டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு வேர்த்து வியர்க்க வாக்கிங் போய்விட்டு எதிரே வருவான். இவனுக்கு வானிலை அறிக்கை எல்லாம் கிடையாது. ஒரு நாளும் நடையை விடமாட்டான். தண்ணி. ஊஹூம்.... வாசனை கூட பார்க்கமாட்டான். நல்ல கிரிக்கெட் பிளேயர். எங்களுக்கெல்லாம் அவன் எம். ஆர். கே, அவன் பெயர் நிறைய பேருக்கு தெரியாது இருந்தாலும் அவனது விளையாட்டு திறனால் அவன் நாங்கள் வசித்த இடத்தில் மிகவும் பிரபலம்,. எங்கள் கம்பெனியில் தான் அவனும் பணி புரிந்தான். எங்கள் கம்பனி அவனை சேர்த்துக் கொண்டதில் கிரிக்கெட் ரேங்கிங்கில் எங்கேயோ கடைசி இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது. ஏன்டா உன் பெயர் இவ்வளவு சின்னது, பெயருக்கு முன்னால் இத்தனை எழுத்துக்கள் போட்டிருக்கிறாயே என்றால் மையமாக சிரிப்பான். பேருக்கு பின்னால் இருப்பது அவன் படித்த பட்டங்கள், மேலும் படிக்க இனி இல்லை என்பதால் மீதி எழுத்துக்களை முன்னால் போட்டுக் கொண்டாயோ என்று கிண்டலடிப்போம்.

வீட்டிற்கு மிகவும் அடங்கியவன். அவர்கள் குடும்பம் சற்றே பெரிய குடும்பம். நிறைய தம்பி தங்கைகள். அவன் அப்பா ஏதோ ஒரு அரசாங்க வேலையில் இருந்தார். அவன் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தான் அவர்களின் வசதிகள் பெருகலாயிற்று.

எம். ஆர். கே நல்ல வாட்ட சாட்டமாக இருப்பான். அவனது தெருவில் அவன் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி இருந்த மீனா அவனி “லவ்வி”னாள். பிறகு இருவரும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எம். ஆர். கேவிற்க்கு அவன் அப்பாவிடம் சொல்ல பயம், அம்மாவிடம் சொல்லி சொன்ன பொழுது, அந்த மனுஷனுடன் நான் பேச முடியாது, வேணுமென்றால் உன் நண்பன் “என் பெயரை” சொல்லி அவனை பேச சொல்லு ஒரு சமயம் கேட்பார் என்று சொல்லிவிட்டாள். அதற்கு காரணம் உண்டு. அவனை எப்பொழுது பார்க்க சென்றாலும் அவர் என்னிடம் மிகவும் சகஜமாக பேசுவார். மற்ற என் நண்பர்கள் யார் போனாலும் ஏண்டா அவனை கூப்பிடறிங்க அவன் தண்ணியடிக்க வரமாட்டான் என்று ஏடா கூடமாக பேசுவார். ஒரு முறை என் நண்பர்கள் மற்ற எல்லோரும் என்னை பாரில் பில் செட்டில் செய்ய விட்டு வெளியே நின்று கொண்டிருந்த பொழுது அவர்களைப் பார்த்துவிட்டார். ஆதலால் அவருக்கு நான் மிகவும் நல்ல பையன் “ஒன்றுக்கு போகமாட்டான்” என்ற நினைப்பு. நானும் அதை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

அன்று காலையில் நான் அவர்கள் வீட்டிற்கு சென்று அவன் அப்பாவிடம் எம். ஆர். கே காதலை சொன்னேன். எவடா அவள் போய் அவளை அழைத்து வா என்றார். நானும் மீனா வீட்டிற்கு சென்று அவளை அழைத்து வந்தேன். அவர் ஏதோ இரண்டு பேரையும் திட்டப் போகிறார் என்று நினைத்தேன், அதற்கு அவர் சற்றும் எதிர்பாராமல் அவளிடம் “நீ அவனக் கல்யாணம் செய்துகொள் ஆனால் அவன் குடும்பத்தை சப்போர்ட் செய்யவேண்டும். ஏன் என்றால் என் சம்பாத்தியத்தில் முடியாது என்றார். மீனா சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள்.

பிறகு நான் பிழைப்புக்காக ஊர் ஊராக சுற்றி ஒவ்வொரு முறை சென்னை செல்லும் பொழுது எம். ஆர். கே வீட்டிற்கு போவேன். அவன் தங்கைகள் எல்லோருக்கும் கல்யாணம் முடிந்த வெவ்வேறு திசையில் செட்டில் ஆகிவிட்டார்கள். எம் ஆர். கே வின் பையன் இப்பொழுது ஸ்கூல் லெவலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். பத்து வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாக மீனா சொன்னாள். எம். ஆர். கே இன்னும் நடையை விடவில்லை.

போன வாரம் மறுபடியும் சென்னை சென்றேன். பழையபடி நாங்கள் நண்பர் கூட்டம் வெகு நாட்களுக்கு பிறகு தீர்த்தவாரி. வழக்கம் போல சாப்பிட கையேந்தி பவனுக்கு வரும் வழியில் எம். ஆர். கே தரிசனம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு சென்றான். பின்பு நாங்கள் பார்க்கில் உட்கார்ந்து பழைய கதைகளை பேசி விட்டு வீடு போய் சேர்ந்தோம்.

அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு முழிப்பு வந்து விட்டது. எழுந்தவுடன் அப்பா உனக்கு மீனா என்று யாரோ போன் செய்தாள், என்றார் அவருக்கு மீனாவை தெரியாது.

நான் எம். ஆர். கே வீட்டிற்கு போன் செய்தேன், போன் எடுத்தவர்கள் யாரும் பேசவில்லை. ஒரே அழுகை சத்தம்.

நான் விறு விறு என்று அவர்கள் வீட்டிற்கு போனேன்.

எம். ஆர். கே நடுக்கூடத்தில் கிடந்தான். அவன் அப்பா துணியால் வாயை மூடிக்கொண்டு ஏன் தோளில் சாய்ந்தார்.

என்ன வாழ்கை இது, நேற்று பார்த்தவன் நெடுஞ்சாண்கிடையாக கிடக்கிறான்.

அவன் முகத்தைப் பார்த்தேன், “அவன் இன்னும் சிரிப்பது போல் தோன்றியது”.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 4 June 2011

அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்

இந்தப் பதிவை இடுவதனால் நான் தி.மு.க. அனுதாபி அல்ல. அம்மா வந்தவுடன் ஏதோ தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று நினைத்த மக்களுக்கு இன்றைய ஆளுநர் உரை வைத்தது பெரிய ஆப்பு. அம்மா போடும் திட்டங்கள் எதிர் பார்த்த ஒன்று தான். ஏன் என்றால் சில ஜென்மங்கள் என்றும் திருந்தாது. திரை உலகத்தினரின் விழாவை புறக்கணித்த முதலமைச்சர் மாறிவிட்டார் என்று நினைத்தேன் அதற்கும் இன்று விழுந்தது இடி. நவரச நாயகன், இளையதலைவலி, அவன் அப்பன் என்று போயஸ் தோட்டத்தில் கூஜா, சொம்புடன் அலைந்த செய்தியை ஜெயா டிவியில் காண்பித்தார்கள்.


போன ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு புதிய திட்டங்கள் ஆரம்பிப்பதின் ஒரே நோக்கம் எங்க கட்சி ஆளுங்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டும் என்பதே. இதன் விளைவுகள் நாம் வாங்கும் அரிசி, உப்பு, பருப்பு, புளியில் எதிரொலிக்கும்.

பதினைந்தாயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டு, அம்மா தொடங்கும் முன்னூறு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடப் போகும் மோனோ ரயில் திட்டமாம். இந்த மாதிரி மோனோ ரயில் திட்டங்கள் சிறுவர் பூங்காவில் செல்லுபடியாகும். ஒரு மாநகரத்தின் போக்கு வரத்து நெரிசலை போக்க போனியாகாது. ஏற்கனவே இதைப் போன்று ஜல்லியடித்த மலேசியா, சீனாவில் இந்த திட்டம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை. நம் தமிழ் மக்களுக்கு இதையெல்லாம் அறிந்து பார்க்கும் அனுபவம் இருந்ததாக சரித்திரம் இல்லை. பணப்புழக்கம் இல்லை என்று ஆட்சி மாற்றியவர்கள் தான் நாம் “முன் தோன்றி மூத்தகுடி”.

அம்மா வந்தவுடன் மணல் கொள்ளை நின்று விடும், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் என்று நினைத்த பாமர அப்பாவி மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்கள் கொள்ளை “கை மாறிய” செய்தியை.

நான் மாலை வேலையில் நடந்து செல்லும் பாதையில் உள்ள “தியசாபிகால் சொசைட்டி” சுவர்களில் தமிழை காத்த ராஜ ராஜ சோழன் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு அம்மா புகழ் பாடும் சுவரொட்டிகள் காண்பதை தவிர வேறு ஒரு மாற்றம் நிகழ தமிழகத்தில் வாய்ப்பில்லை.

வாழ்க தமிழ், வாழ்க தமிழ் நாடு.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 1 June 2011

சென்னை போடா வெண்ணை

இந்த முறை சென்னை விஜயம் வழக்கம்போல் இல்லாமல் விமானம் சற்றே தாமதமாக தரை இறங்கியது. இமிக்ரேஷன் வரிசையில் ஒராயிரம் பேர் நின்று கொண்டிருந்தனர். இரண்டு ஆபீசர் உட்காரும் இடங்களில் எல்லாம் ஒரு ஆபீசர் தான் இருந்தனர். சரிதான் எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.


வரிசை ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வரிசையில் நிற்கும் பொழுது குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு, கையில் கைப்பையும் சுமந்து கொண்டு தாய், தந்தையர்களை பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக இருக்கும். ஆனால் இவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்தாலும் சரி அண்டார்டிகாவில் இருந்து வந்தாலும் சரி வரிசையை முந்த சலுகைகள் எதிர் பார்ப்பதில்லை. அதே சமயத்தில் ஒற்றையாய் வரும் “நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் நுங்கு மார்பு நங்கைகள்” வரிசையில் முந்திக் கொண்டு நைச்சியமாக பேசி ஒரு ஜொள்ளு பேர்வழியின் முன் முந்திக் கொண்டு சென்று விடுவார்கள்.

நிற்க நான் சொல்ல வந்தது இவர்களைப் பற்றி அல்ல. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்த என்னுடைய முறை வந்த பொழுது வேறொரு விமானம் தரை இறங்கி ஒரு கூட்டம் இப்பொழுது வரிசையில் சேர்ந்து கொண்டனர்.

ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாக சொல்லி எங்கள் எல்லோரிடமும் கெஞ்சி என் முன்னால் வந்து நின்று கொண்டார். பின்னர் அதிகாரி அவர் கடவுச்சீட்டை வாங்கி கணினியில் விவரங்களை பதிவு செய்யும் முன் அவருடைய விண்ணப்பத்தை நிரப்ப சொன்னார்.

அதற்கு அந்த அம்மையார் தன் அம்மா இறந்து விட்டதாகவும் தான் அவசரமாக போக வேண்டும என்று குரலை உயர்த்தினார். அதற்கு அந்த அதிகாரி சரியம்மா நீங்கள் வேறு யாரையாவது நிரப்ப சொல்லி கையொப்பம் இடுங்கள், என்று சொல்லி அடுத்தவரை அழைத்தார்.

அந்த அம்மையார் தன் நிலை இழந்து “யோவ் நீயெல்லாம் மனிதரா, என் அம்மா இறந்து விட்டதாக சொல்லுகிறேன் என்னை நிற்க வைக்கிறாயே, உனக்கெல்லாம் உன் அம்மா இறந்தால் தான் தெரியும்” என்று சொல்லி மற்றும் வரிசையில் உள்ளவர்களையும் பார்த்து இதே வார்த்தைகளை பிரயோகித்து சாபம் விட்டார். .

எனக்கு இதில் உள்ள நியாய அநியாயங்கள் இன்னும் புலப்படவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment