Wednesday 27 October 2010

கலக்கல் காக்டெயில்-11

வெறி பிடித்திருக்கிறது
அன்புமணி ராமதாஸ் சமீபத்திய கூட்டம் ஒன்றில் தனக்கு வெறி பிடித்திருப்பதாக கூறியுள்ளார். ஆட்சியைப் பிடிக்கும் வெறியாம். மூன்று கோடி வன்னியர் உள்ள நாட்டில் நம் கட்சி ஆட்சியைப் பிடிப்பது அரிதா? என்று கேட்டுள்ளார்.

மேலும் இது வரை இருந்த மத்திய அமைச்ச்சர்களிலே தான் தான் ஏதோ கிழித்ததுப் போலவும், மற்றவர்கள் கு........யை தேய்ப்பதற்கு பாராளுமன்றம் போவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இவர் பாராளுமன்றம் போனது பின் வழியாக. இன்னும் ஒரு முறைகூட மக்களை சந்திக்கவில்லை.

இவர்கள் பகிரங்கமாக ஜாதியரசியல் நடத்துவது நம் நாட்டின் சாபக்கேடு. வெள்ளையனைவிட இவர்கள் தான் சாதிப்பெயரை சொல்லிக்கொண்டு பிரித்தாண்டு கொண்டிருக்கிறார்கள்.

வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டு பிடித்தார்கள், ஆனால் இன்னும் பதவி வெறி, ஜாதி வெறி, பண வெறி, காம வெறி போன்றவற்றிக்கு எப்பொழுது கண்டு பிடிப்பார்களோ?

இந்த முறை இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அப்பாவும் மகனும் சேர்ந்து ஒரு வேளை கண்டு பிடிப்பார்களோ?படித்ததில் ரசித்த கவிதைகள் சில

இடமற்று நிற்கும்

கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க

பேருந்து வெளியே

பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம்

எதை எதிர்பார்க்கிறாய்

காதலையா?வரிக்கு வரி நிஜம்ஆமாம் ஆமாம்

நீ பேசும் ஒவ்வொன்றும்

வரிக்கு வரி நிஜம்

முற்றுப்புள்ளி உள்ளிட்ட

அனைத்தும் ஏற்கத் தயார்

அனைத்துக்கும் ஆமாம்.

சங்கிலியால் கட்டப்பட்டது

யானை என்றாலே

தப்புவது கடினமாச்சே

சங்கிலியால் கட்டப்பட்ட டம்ளர்

தப்புமோ கூறு.நன்றி: பா. சத்தியமோகன்.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 23 October 2010

ஜீரோ ஆன ஹீரோ -----அம்மா பார்வையில்

அம்மாவின் மதுரை கூட்டம்தான் இப்பொழுது அரசியல் களத்தின் ஹைலைட். வழக்கம்போல தி.மு.க தலைவரையும் அவர்கள் குடும்பத்தாரையும் ஒரு பிடி பிடித்துவிட்டார்கள்.


அஞ்சா நெஞ்சனை பிரித்து, அடித்து, பிழிந்து, காயப் போட்டு தொங்க விட்டார்கள். ஐயாவின் குடும்பம் கொழிப்பதையும், திரைப் படத்துறையில் அவர்களது ஆக்கிரமிப்பு, ஆதிக்கம் இப்பொழுது கோலோச்சுவதையும் ஒரு பிடி பிடித்தார்கள். அப்பொழுது சொன்ன விஷயம் ஒன்று நெருடுகிறது. கலைஞர் குடும்பம் ஹீரோவை ஜீரோவாக்கி விட்டதாக சொன்னார்கள். அம்மாவின் பார்வையில் உள்ள அந்த ஹீரோ ஜீரோவானது சூரிய குடும்பம் காரணம் என்று கூற்று சற்றே நெருடுகிறது. அதே சூரிய குடும்பம் அந்த ஹீரோவை தூக்கி வைத்துக் கொண்டாடிய காலமும் உண்டு. உண்மையில் ஹீரோ ஜீரோவாவதும், ஜீரோ ஹீரோவாவதும் அவரவர் திறமை சார்ந்த விஷயம்.

தமிழ் திரையுலகம் எத்தனையோ ஹீரோக்களை பார்த்திருக்கிறது. தயாரிப்பாளர் வாரிசுகள், நடிகர்களின் வாரிசுகள், இயக்குனரின் வாரிசுகள் என்று புது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் எத்துனை பேர் நிலைக்கிறார்கள் என்பது தான் கேள்வி. என்ன தான் ஊடங்கங்கள் ஒத்தூதினாலும், உயர தூக்கிப் பிடித்தாலும் ரசிகனின் பார்வை வேறு பட்டது. அதே நேரத்தில் நாம் என்ன பார்க்க வேண்டும், என்ன கேட்க வேண்டும் என்பது இப்பொழுது தொலைக் காட்சிகள் நிர்ணயிக்கின்றன என்ற கூற்றில் ஓரளவிற்கு உண்மை இருக்கவே செய்கிறது.

அம்மா இது போல பல விஷயங்களை மதுரையில் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். அறிவாலயமும் பதிலுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கட்சிகள் வந்தாலும் எங்களை ஒன்றும் பண்ண முடியாது என்கிறார்கள். அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இன்னும் என்ன என்ன நடக்கப் போகிறது, திருவாளர் பொது ஜனம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் எழுதப் போகும் தீர்ப்பு அவருக்கே தெரிந்த விஷயம்.

ஆனால் அவர் மாத்தி மாத்தி குத்தி மன்னிப்போம் மறப்போம் என்று எல்லோரும் கொள்ளையடிக்க வழி செய்வார்.

இனி கட்சிகள் அணி மாறும் கூத்து, பேரம் பேசுதல், அல்லக்கை கட்சிகளின் ஆட்டம் ஒரே ரகளைதான்.

இனி ஒரு படம் நடித்தவர், ஓரமா தலையக் காட்டினவர், எல்லோரும் அரசியல் களத்தில் ஆடுவார்கள். இரண்டு கட்சிகளும் மார்க்கெட் போன நடிகை, நடிகர்களை காசு கொடுத்து களத்தில் இறக்குவார்கள். அவர்களும் வாங்கிய காசிற்கு ஜால்ரா போடுவார்கள். தமிழ் நாட்டு அரசியலின் சாபக்கேடு இது.

அது சரி நடிகரின் படத்திற்கு பாலபிஷேகமும், பீரபிஷேகமும் செய்யும் பகுத்தறிவாளர்கள் உள்ள நாடு இது.

எப்பொழுது விடியும்?.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 20 October 2010

கலக்கல் காக்டெயில் -10 (++ 18 வயது வந்தவர்களுக்கு மட்டும்)

எந்திரனும் எரியும் வயிறுகளும்


எந்திரன் அடித்த வசூலைக் கண்டு நிறைய வயிறுகள் இப்பொழுது எரிந்துக் கொண்டிருக்கின்றன. படத்திற்கு வந்த விமர்சனங்களில் பெரும்பாலானவை படத்தைப் பற்றி நல்லதாகவே சொல்லியிருக்கின்றன. படத்தின் பிரம்மாண்டம், கொடுக்கப்பட்ட விளம்பரம் எல்லாம் படத்திற்கு நினைத்ததைவிட சற்று அதிகப் படியான வெற்றியையே கொடுத்திருக்கிறது. படத்திற்கு “ரிபீட் ஆடியன்ஸ்” அதிகம். அடையாரில் உள்ள மூன்று தியேட்டர்களிலும் எந்திரந்தான் ஓடுகிறது. இளைஞர்கள் இந்தப் படத்தை “ ஐ ரோபோ” “பைசெண்டியநெல் மேன்” படங்களின் அட்டைக் காப்பி என்று சொன்னாலும் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் இரண்டு வாரத்தை விட டிக்கெட்டுகள் இப்பொழுது எளிதாக கிடைக்கின்றன. இரண்டாயிரம் தியேட்டரிலிருந்து படிப்படியாக இருநூறு தியேட்டர் என்று இளைத்தாலும் இக்கால கட்டத்தில் இது வெற்றியே. கலாநிதி மாறன் காட்டில் மழை.படித்ததில் பிடித்த கவிதை

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்

இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்

அவனும் யானுமே அறிந்தலை அறிக

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்

நானே தொடக்கம் நானே முடிவு

நானுரைப்பதுதான் நாட்டின் சட்டம்.--------------கண்ணதாசன்ரசித்த நகைச்சுவை

சுஜாதாவின் கேள்வி பதில் தொடரில் “வயாக்ரா” பற்றிய கேள்விக்கு, வந்த ஒரு ஜோக்.

ஒருவன் டாக்டரிடம் சென்று தன் இயலாமையை கூறி மருந்து கேட்க அவர் மேற் கூறிய ஏழு மாத்திரைகளைக் கொடுத்து நாளைக்கு ஒன்று வீதம் ஏழு நாட்களுக்கு சாப்பிட சொன்னாராம். அவன் பேராசையில் ஒரே நாளில் ஏழையும் சாப்பிட்டிருக்கிறான். அப்புறம் என்ன ஓயாமல் இன்பத்தில் திளைத்து இறந்தே விட்டான்.

சவப் பெட்டியை இன்னும் மூடமுடியவில்லையாம்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 19 October 2010

மரணம்

பிறப்புடன் தவறாமல் பிறக்கும் சகோதரன்


எப்பொழுதும் இருப்பான் எப்பொழுது அணைப்பான்

தப்பாமல் சொல்ல தந்திரனாலும் இயலாது

வேண்டுவர்க்கு விந்தையாகி வேடிக்கை காட்டுவான்

வேண்டாதவரை விரைந்து வந்து தழுவுவான்

கருணை மறந்து கருவிலும் அழிப்பான்

முதியவர்களின் நண்பன், இளசுகளின் எதிரி

விபத்து, வியாதி, இயற்கை பல ரூபம் காட்டுவான்

சமத்துவத்தை சத்தியாமாக்கும் சாதனையாளன்

சாதிப் பிரிவினை சடுதியிலே மறைத்து

இறுதியிலே ஒரு ஜாதிக் காட்டுவான்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 6 October 2010

கலக்கல் காக்டெயில்-9

எந்திரனும் என் அருமை தங்கமணியும்


எந்திரன் பார்த்த களிப்பில் தற்சமயம் வண்டி பிடித்து நாடு வந்து சேர்ந்துவிட்டேன். ஒரு பத்து நாட்கள் விடுப்பில் வந்திருக்கிறேன். ஆதலால் பதிவு எழுதுவதில் சற்று சுணக்கம். வீடு வந்து சேர்ந்தவுடன் தங்கமணி எந்திரனுக்கு டிக்கெட் புக் செய்து வைத்திருந்த செய்தியை சொன்னாள். தோஹாவில் ஒரு மொக்கை தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஒலி அமைப்பு கேவலமாக இருந்தது. இந்த அழகில் முதல் நாள் முதல் காட்சி வேறு, டிக்கெட் வாங்கி மன்னன் ரஜினி, கௌண்டமணி ரேஞ்சில் அரங்கத்திற்குள் நுழைந்தேன். ஆனால் படம் தந்த பிரமிப்பில் இது எல்லாம் ஜூஜூபி. நாளை நல்ல தியேட்டரில் பார்த்துவிட்டு எந்திரன் பார்ட்--2 விமர்சனம்.

நான் ரசித்த கவிதை

நம்ம காக்டெயில் வரிசையில் கவிதை போட வேண்டும். அந்த வகையில் நான் ரசித்த கவிதை

கவிதை என்று எதை சொல்வது?கவிதை என்று எதை சொல்வது

வார்த்தைகளைக் கோர்த்து வடிவமைத்து

பொருளிலே உட்பொருள் வைத்து

விளங்கச் சொல்வது கவிதையா?, இல்லைவார்த்தைகளின் தொடர்பறுத்து,

உரை நடையை உடைத்துப் போட்டு

வாசகனின் மூளையை வறுத்தெடுத்து

விளங்காத புதிர் செய்வதையா?, இல்லை“தளை” பார்த்து “சீர்” அமைத்து

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்

வெண்பா, கலிப்பா என கிண்டி

புரியாத புதிர் செய்வதா? , இல்லையாப்பிலக்கணம் பொருந்தாத

வசனக்கவி, புதுக் கவிதை

ஹைக்கூ, லிமரிக் வடிவ

எளிய வார்த்தைக் கோர்வைகளா?, இல்லைகந்தனைகான கார்த்திகைக்கு வந்தேன்

உன்னைக் கண்டேன் ஊருக்கு செல்லேன் என்ற

நாட்டுப் புறக் கவிஞனின் எளிமையான

புரியும் மண் வாசக் கவிதைகளா? இல்லை,

குனிந்து நிமிர்ந்து கூடம் பெருக்கினாள்,

கூடம் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு

என்ற நகர நையாண்டி வகை

புதுக் கவிதைகளா? இல்லை,எழுதும் கவிஞனின் அறிவும்

எளிமையான வார்த்தைகளும்

நயம் கொண்டு சேர்த்து

வாசகனின் என்ன ஓட்டத்தில்

நிலைத்து நிற்கின்ற

சலனத்தை கொடுக்கும்

கவிதைகளா?

கவிதை என்று

எதை சொல்வது?இதை எழுதியவர் அடியேன் தான். எல்லா “தலை”ங்களும் மன்னிப்பீர்களாக.

Follow kummachi on Twitter

Post Comment