Wednesday 6 October 2010

கலக்கல் காக்டெயில்-9

எந்திரனும் என் அருமை தங்கமணியும்


எந்திரன் பார்த்த களிப்பில் தற்சமயம் வண்டி பிடித்து நாடு வந்து சேர்ந்துவிட்டேன். ஒரு பத்து நாட்கள் விடுப்பில் வந்திருக்கிறேன். ஆதலால் பதிவு எழுதுவதில் சற்று சுணக்கம். வீடு வந்து சேர்ந்தவுடன் தங்கமணி எந்திரனுக்கு டிக்கெட் புக் செய்து வைத்திருந்த செய்தியை சொன்னாள். தோஹாவில் ஒரு மொக்கை தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஒலி அமைப்பு கேவலமாக இருந்தது. இந்த அழகில் முதல் நாள் முதல் காட்சி வேறு, டிக்கெட் வாங்கி மன்னன் ரஜினி, கௌண்டமணி ரேஞ்சில் அரங்கத்திற்குள் நுழைந்தேன். ஆனால் படம் தந்த பிரமிப்பில் இது எல்லாம் ஜூஜூபி. நாளை நல்ல தியேட்டரில் பார்த்துவிட்டு எந்திரன் பார்ட்--2 விமர்சனம்.

நான் ரசித்த கவிதை

நம்ம காக்டெயில் வரிசையில் கவிதை போட வேண்டும். அந்த வகையில் நான் ரசித்த கவிதை

கவிதை என்று எதை சொல்வது?



கவிதை என்று எதை சொல்வது

வார்த்தைகளைக் கோர்த்து வடிவமைத்து

பொருளிலே உட்பொருள் வைத்து

விளங்கச் சொல்வது கவிதையா?, இல்லை



வார்த்தைகளின் தொடர்பறுத்து,

உரை நடையை உடைத்துப் போட்டு

வாசகனின் மூளையை வறுத்தெடுத்து

விளங்காத புதிர் செய்வதையா?, இல்லை



“தளை” பார்த்து “சீர்” அமைத்து

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்

வெண்பா, கலிப்பா என கிண்டி

புரியாத புதிர் செய்வதா? , இல்லை



யாப்பிலக்கணம் பொருந்தாத

வசனக்கவி, புதுக் கவிதை

ஹைக்கூ, லிமரிக் வடிவ

எளிய வார்த்தைக் கோர்வைகளா?, இல்லை



கந்தனைகான கார்த்திகைக்கு வந்தேன்

உன்னைக் கண்டேன் ஊருக்கு செல்லேன் என்ற

நாட்டுப் புறக் கவிஞனின் எளிமையான

புரியும் மண் வாசக் கவிதைகளா? இல்லை,





குனிந்து நிமிர்ந்து கூடம் பெருக்கினாள்,

கூடம் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு

என்ற நகர நையாண்டி வகை

புதுக் கவிதைகளா? இல்லை,



எழுதும் கவிஞனின் அறிவும்

எளிமையான வார்த்தைகளும்

நயம் கொண்டு சேர்த்து

வாசகனின் என்ன ஓட்டத்தில்

நிலைத்து நிற்கின்ற

சலனத்தை கொடுக்கும்

கவிதைகளா?

கவிதை என்று

எதை சொல்வது?



இதை எழுதியவர் அடியேன் தான். எல்லா “தலை”ங்களும் மன்னிப்பீர்களாக.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல்

nis said...

நல்லா இருக்கு

vasu balaji said...

ithaiyum sollalam:)

பித்தன் said...

ok

Chitra said...

கவிதைக்கு இலக்கணம் சொல்லி - வகைகளை கவிதையாய் வடித்த கவிஞரே...... வாழ்த்துக்கள்!

sarathy said...

தங்கமணிக்கு ஒரு big 'ஓ' போட்டு படம் பார்த்தீரா?

இது எல்லாம் கலந்த 'அவியல்' தான் கவிதை என்பது என் எண்ணம்!

குல்ஜார் (அ) குல்ஷன் said...

தங்கமணியை விட்டுட்டு மொத நாள் மொத ஷோ பார்த்ததுக்கு பரிகாரமாக, தாஜா பண்ண மொத டைட்டில் சூப்பர்.
கவிதையோ சூப்பரோ சூப்பர்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அசோக்ராஜ்.

http://rkguru.blogspot.com/ said...

நல்லா இருக்கு ...அசத்தல்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.