Monday, 8 July 2019

கலக்கல் காக்டெயில்-190

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் 

மத்திய அரசின் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூறில் மேற்கோள் காட்டி நடப்பு ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ததை பாராட்டியும் நக்கலடித்தும் சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. "யானை புக்க புலம் போல" வரிகள் விதிப்பது தவறு என்று பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே" என்று தொடங்கும் பாடல் மூலம் அறிவுறுத்துகிறார்.நிதியமைச்சர் அவரது பெயரை "பிசிர் ஆந்தையார்" என்று உச்சரிப்பு தெரியாமல் உளறுகிறார் என்று "தமில் வால்க" கூட்டம் நக்கலடித்துக் கொண்டிருக்கிறது. அவரது இயற்பெயர் ஆந்தையார், அவரது ஊர் பாண்டிநாட்டில் உள்ள பிசிர் என்று இருந்த ஊர். அதனாலாயே அவர் பிசிராந்தையார் என்று அழைக்கப்பட்டார். இப்பொழுது அவரது உச்சரிப்பு சரியா? தவறா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அனால் அந்த செய்யுளுக்கு பொழிப்புரை கேட்ட பொழுது நமது முன்னாள் "காற்றில் கறந்த" அமைச்சர்கள் சிரித்த சிரிப்பு இருக்கே "ராஜா, தெய்வீக சிரிப்பையா உமக்கு".


இந்த பட்ஜெட் பற்றிய கருத்து எதிர்கட்சிகள்: இது கார்பரேட்களுக்கான பட்ஜெட்
ஆளுங்கட்சி: வளர்ச்சிக்கான பட்ஜெட்

உலகக் கோப்பை

இலங்கை கிரிக்கட் குழு ஒரு மொக்கையான டீம். நேற்றைய அவர்களுடைய ஆட்டம் டாஸ் வென்ற நல்ல நிலைமையை கோட்டை விட்டதிலிருந்தே தெரிகிறது அவர்களது திறமை. ஆனால் சிறீலங்காவில் உள்ள சிங்களர்களைவிட தமிழகளுக்கு இலங்கை  டீம் மேல் அபார  நம்பிக்கை. சமீபகாலத்தில் அவர்கள் சமூக வலைதளங்களில்  இந்தியாவை நக்கல் அடிப்பதை பார்த்தால் தெரியும் அவர்கள் இந்தியாவின் மீதுகொண்டுள்ள வெறுப்பை, இது கிரிக்கட் மட்டுமல்ல இந்திய அரசியல், தமிழ அரசியல் என்று அவர்கள் நக்கல் செய்வதை பார்த்தால் புரியும். திராவிட அரசியல்தான்  தொப்புள் கொடி, அக்குள் முடி என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறது, மற்றபடி அவர்கள் நம்பளை "*அப்டமன்கார்டாக" கூட மதிப்பதில்லை. (*கிரிக்கட் விளையாடியவர்களுக்கு புரியும்)

ரசித்த கவிதை


கூர்

நீரோடு நீராடி
முற்றும் துறந்து துறவியானது
தன் கூராடை களைந்த
ஆற்றின் கூழாங்கற்கள்..!

நன்றி:
- ச.மோகனப்பிரியா

திரையுலகம்

சிந்துசமவெளி சர்ச்சையை  தொடரும் அமலா பால் "ஆடையில்"


Follow kummachi on Twitter

Post Comment

Friday, 5 July 2019

நான்காம் கலீனரும் கல் தோசையும்

தி.மு.க வில் யாருக்கு பதவி தந்தாலும் அதைப்பற்றி கருத்து சொல்லும் உரிமை தி.மு.கவினருக்கு மட்டுமே உண்டு----------தோசை மாறன்

சரிதான் அவரு இன்னா சொல்றாருன்னா உதயநிதிக்கு இளைஞரணி பதவி கொடுத்ததற்கு குறை சொல்லும் உரிமை இன்பநிதிக்கு கு...கழுவிவிடும் தோசைமாறன் வகையறாக்களுக்கு மட்டுமே உண்டாம்.

எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. இந்திரா காந்தி தொடங்கி, அன்புமணி, ஒபிஎஸ் மகன் வரை அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவர்கள் என் குடும்ப வாரிசுகள் பட்டத்திற்கு வர இது ஒன்றும் சங்கரமடமல்ல என்று பிலிம் காட்டவில்லை.

தாத்தா தொடங்கி அப்பன் வரை என் மகனோ மருமகனோ பதவிக்கு வரமாட்டார்கள் என்று வாக்குறுதி கொடுத்து தொண்டர்களை ஏமாற்றவில்லை.

தி.மு.கவிற்கு கோடிகளில் சொத்துக்கள் உண்டு. அதற்கு இப்பவே வாரிசுகளை தயார் செய்யணும், இல்லையென்றால் நடுவில் வேறு யாராவது ஆட்டையை போட்டு விடுவார்கள். மேலும் இதெல்லாம் "கிச்சன் காபினெட்" முடிவு என்பதை ஊரறியும்.

உபீசுகளின் உண்மை நிலை அறிந்தே சுடாலின் அறிவித்திருக்கிறார், அப்படியே அந்த பொருளாளர் பதவியையும் செல்விக்கோ, அருள்நிதிக்கோ கொடுத்தீர்கள் என்றால் வேலை முடிந்தது.

கணியக்காவிற்கு எம்.பி யோட சரி, சும்மா பொத்திக்கிட்டு இருக்கணும்.

போண்டா வாயன் இப்பொழுதே உதயநிதிக்கு அடிவருட ஆரம்பித்துவிட்டார். இல்லையென்றால் அவருக்கு ஆப்பு அடிக்கப்படும். ஏற்கனவே அவரது மகன் தேர்தலில் வெற்றிபெறாமல் இருக்கவேண்டிய ஆயத்தங்களை செய்தாகிவிட்டது.

கோவாலுக்கு ராஜ்யசபா எலும்புத்துண்டு போட்டாகிவிட்டது, இல்லையென்றாலும் சற்றுநேரம் குரைத்துவிட்டு ஓய்ந்துவிடும். இருந்தாலும் அவர் வெளி ஆள்.

அடேய் இணைய அல்லக்கைகளா அப்படியே முட்டுகொடுத்துகிட்டு இருங்க. உங்களது சம்பளம் 200 லிருந்து 250  ஆக உயர்த்த நான்காம் கலீனர் ஆவன செய்வார். ஆனா நல்லா கழுவனும் OK. தோச புரிஞ்சுதா.........நல்ல சோப்பா வாங்கி வச்சுக்க.....ஆமா.


Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 4 July 2019

உலகக்கோப்பையும், லாஸ்லியாவும் மற்றும் இத்துப்போன ஈழமும்

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி அரை இறுதி இடத்தை பங்களாதேஷ் அணியை வென்று உறுதி செய்துவிட்டது. இதுவரையில் நமது பலவீனங்களை உணர்ந்து எல்லா அணிகளிடனும் நன்றகாவே ஆடினார்கள், இங்கிலாந்து நீங்கலாக. வழக்கம் போல் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ரசிகர்கள் புகைவிட ஆரம்பித்து விட்டனர். இதில் பாகிஸ்தானும், பங்களாதேஷ் அணிகள் இந்த போட்டிகளில் பிரமாதமாக ஆடினார்கள், அனால் இலங்கை அணி சொதப்பிய சொதப்பல்கள் கிரிக்கட் உலகம் அறிந்தது. இங்கிலாந்தை  வென்றது அவர்களின் ஆட்டம் அன்று சிறப்பாக இருந்தது. பங்களாதேஷ் ரசிகர்களும், பாக் ரசிகர்களும் சற்று அடங்கிவிட்டார்கள், ஸ்ரீலங்கா ரசிகர்கள்?.

இப்பொழுது வழக்கம்போல இந்தியா, ஸ்ரீலங்கா ஆட்டத்தை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆவலாக உள்ளார்களோ இல்லையோ, ஸ்ரீலங்கா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். சமீபத்திய இந்திய ஸ்ரீலங்கா போட்டிகளின் முடிவுகள் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கு சாதகமாக இல்லை. இருந்தாலும் முகநூலில் பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ ஓவியா "பெரிய முதலாளி" வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மையத்தாரின் ஆஸ்தான ஷோவிற்கு பார்வையாளர்கள் குறைந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இப்பொழுது நடக்கும் பெரிய முதலாளியில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாச்லியா பங்குபெறுகிறார். இலங்கை கிரிக்கட்டில் சோர்ந்து போயிருக்கும் ரசிகர்களுக்கு, இலங்கை தோல்விமுகம் காணும் பொழுது சிறிது லாஸ்லியாக்கும் "ஜொள்ளுகிறார்கள்".

"பேண்டவர்" ஆறாம் தேதி வரை லாஸ்லியா வெளியேறாமல் பார்த்துக்கொள்வது அவருக்கும் இலங்கை கிரிக்கட்டுக்கும் நல்லது.

அது சரி அது என்ன இத்துப்போன ஈழம்?, அதற்கு நம் தொம்பிகளை தான் கேட்கவேண்டும். ஆமைக்கறியார் தலைவர் எப்படி சம்பாதித்தார் என்று சமீபத்திய செய்திகள் எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டது.


Follow kummachi on Twitter

Post Comment