Wednesday 24 July 2019

பரியேறும், பேட்ட 96

பெங்களூரிலிருந்து சிகாகோ 22 மணி நேர பயணம் முதலில் நான்கு மணி நேரத்தில் டோஹா, பின்னர் இரண்டு மூன்று மணி நேரங்கள் கழித்து டோஹவிலிருந்து 15 மணி நேர பயணம், சற்று கடினமானது தான். என்ன வேளைக்கு சாப்பிட்டுவிட்டு, விட்டுவிட்டு தூக்கம், அவ்வப்பொழுது திரையில் இருக்கும் படங்களில் ஒரு மூன்று படங்கள் பார்க்க நேர்ந்தது. அந்த படங்களை பற்றிய எனது பார்வை.

ரியேறும் பெருமாள், வெகுகாலமாக பார்க்கவேண்டிய படம் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. ப. ரஞ்சித் தயாரிப்பில் மாரிதாஸ் இயக்கத்தில் "பரியேறும் பெருமாள்". ரஞ்சித் படமென்றால் என்ன சப்ஜெக்ட் என்பதை கண்டுபிடிக்க ஒன்றும் மெனக்கெட வேண்டாம், அதேதான் ஜாதி வெறிதான். இவர்கள் எல்லாம் இதே மாதிரி படம் எடுத்துகொண்டு இருக்கும் வரை இந்த பிரச்சினை அணையாமல் இருக்கும். காலத்தின் கட்டாயம் கூட.

இனி படத்தை பற்றி, மிகவும் எதார்த்தமான நடிப்பில்  கதிரும், ஆனந்தியும் மிளிர்கிறார்கள். ஆனந்தியை தமிழ் சினிமா இன்னும் சரியாக உபயோகிக்கவில்லை. சற்றும் மிகைப்படுத்தாத நடிப்பு, ஓராயிரம் உணர்சிகளை காட்டும் கண்கள். கதிரும், யோகிபாபுவும் கல்லூரியில் கடைசிபென்ச் மாணவர்கள், இயல்பான நடிப்பு, எங்களது கல்லூரி காலம் நினைவிற்கு வருகிறது. படத்தில் பிரச்சார நெடி சற்றே அதிகம்தான், ஆனால் தமிழ் சினிமா காலம் காலமாக இதை தவிக்க முயற்ச்சி செய்யவில்லை, சில  இயக்குனர்களை தவிர.


பேட்ட , வழக்கமாக சூப்பர் ஸ்டார் படங்கள் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது தலையாய கடன்,  பேட்ட வந்த பொழுது அதை கடை பிடிக்க முடியவில்லை. கிராம வேலைகளில் மும்முரமாக இருந்ததால் தவற விடப்பட்டது. இப்பொழுது விமானத்தில் பார்க்க நேர்ந்தது.

அக்மார்க் சூப்பர் ஸ்டார் படம். பிரேமுக்கு பிரேம் தலைவரின் அதிரடி. படத்திற்கு வேறெதுவும் தேவையில்லை. சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா எல்லாம் வந்து போகிறார்கள். கூடவே சசிகுமார், பாபி சின்ஹா, விஜய்சேதுபதி என்று  பெரிய பட்டாளம் கூடவே வருகிறார்கள். ஆனால் படம் முழுவதும் ரஜினி, ரஜினிதான். பாபி சிம்ஹா வீட்டிற்கே சென்று மிரட்டுவது, அதகளம். சர்க்கரை சற்று தூக்கலா ஒரு டீ என்று பாபி சிம்ஹா அம்மாவிடம் கலாய்ப்பதும், பின்னர் டீ கேன்சல் என்று நடப்பதும், டிபிகல் ரஜினி.

96

90 கிட்ஸ் காதல் கதை, விஜய் சேதுபதி, த்ரிஷா, நடிப்பில் ஒரு காதல் கதை. அரைச்சு கரைச்சு தமிழ் சினிமா கொத்சு,  சட்டினி செய்த கதைதான். புதியதாக ஒன்றுமில்லை. என்ன த்ரிஷாவிற்கு வெகு பொருத்தமான வேடம், நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். விஜய்சேதுபதி வெகு வருடங்கள் கழித்து த்ரிஷாவை பார்க்கும் காட்சியில் காட்டும் எக்ச்பிரசன்ஸ் என்ன என்று புரியவில்லை.

படத்தின் கடைசி ஒரு 45 நிமிடம் எதற்கு என்று நமக்கும் புரியவில்லை, இயக்குனருக்கும் புரிந்திருக்க நியாயமில்லை.
Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

சேக்காளி said...

//ப. ரஞ்சித் தயாரிப்பில் மாரிதாஸ் இயக்கத்தில்//
இயக்குநர் மாரி செல்வராஜ்.
இதன் மூலம் எந்த ஒரு மனநிலையோடு நீங்கள் படம் பார்த்திருப்பீர்கள் என அறிய முடிகிறது.

வெங்கட் நாகராஜ் said...

மூன்றில் 96 மட்டுமே பார்த்தேன். அதுவும் இணைய வழி... பெரிதாகக் கவரவில்லை.

22 மணி நேரப் பயணம் - கொஞ்சம் கடினமான பயணம் தான். இப்படி ஏதாவது படம் பார்த்தோ, புத்தகம் படித்தோ தான் கழிக்க வேண்டியிருக்கும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.