Thursday, 25 July 2019

அத்தியும் அத்தையும்

நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் தண்ணியிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எழுபதில் வெளியே வந்த பொழுது எனது அத்தையும் மாமாவும் காஞ்சிபுரத்தில் இருந்தார்கள். நிறையமுறை அங்கே வந்தால் சுலபமாக தரிசனம் செய்து வைப்பதாக சொல்லி கூப்பிட்டார்கள்.  அவர்கள் எத்தனை முறை அழைத்தும் அப்பொழுது போக முடியவில்லை. மாமா அப்பொழுது காஞ்சிபுரத்தில் காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டமும் கம்மியும் கூட, பெரியார் மண் என்ற பிரயோகம் எல்லாம் புழக்கத்தில் இல்லாத நேரம். எனது குடும்பத்தில் என்னைத் தவிர எல்லோரும் சென்று அத்தியை கண்டுகொண்டார்கள்.

நாற்பது வருடங்களுக்குப் பிறகு 2019 ல் அத்தி தண்ணியிலிருந்து தற்பொழுது வெளியே வந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு முறை காஞ்சி வழியாக சென்னை பெங்களுரு பயணம், இருந்தும் அத்தியை தரிசனம் செய்யமுடியவில்லை. காரணம் எனக்கும் கூட்டத்திற்கும் ஆகாது. உலகத்தில் எங்கு சென்றாலும் க்யூ (வரிசை) வில் ஒழுங்கு கடை பிடிப்பதை பார்க்கலாம், இந்தியாவைத் தவிர. இங்கு வரிசைத் தாவுவது ( Que Jumping) என்பது கல்யாணங்களிலும் மற்றைய விழாக்களிலும உறவினர்களிடையே " எனக்கு அந்த கட்சியின் "வட்ட சதுர செயலாளர்" ரொம்ப வேண்டப்பட்டவர், நான் அங்கே வரேன் என்று சொன்னவுடன் ஒரே நிமிடத்தில் ஒரு லட்சம் பேர் கடந்து என்னை தரிசனம் செய்ய வைத்தார் என்று சுய தம்பட்டம் சப்ஜெக்ட்.

இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில்  செய்தி வந்து கொண்டிருக்கிறது. பெரியார் மண், சொறியார் புண் என்று பிதற்றிக்கொண்டிருந்த பக்கூத்தறிவு கூட்டம்தான் சிபாரிசு கடிதத்துடன் முன்னால் முண்டியடித்து தரிசனம் செய்திருக்கிறார்கள்.

தட்டில் பாப்பான் பிச்சை எடுக்கிறான் என்று சொல்லி வரிசையில் முந்திய பரிகாரத்திற்கு துட்டு இட்டிருக்கிறார்கள்.

டேய் போலி பகூத்தறிவாளிகளா, உங்கள் முகமூடிகள் கிழிந்து கொண்டிருக்கிறது, இன்னும் கோவணம் கிழியும் முன்பே, உங்களது பகுத்தறிவு போராளி பெருச்சாளிகளை உஷார் செய்யுங்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

KILLERGEE Devakottai said...

கோவணமும் கிழிக்கப்படுமா ?
இது ரொம்பவும் அபத்தமாவுல இருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

கதைகள் நிறைய உலா வந்து கொண்டிருக்கின்றன அத்திவரதரும் விஐபிக்களும் என்று..

கீதா

வருண் said...

***இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.***

சும்மா என்னத்தையாவது இஷ்டத்துக்கு விட வேன்டியது.. Can you provide me the data you collected? How would you know someone is "rationalist" or "paNdaaram".

ஊடகம் ஒரு மொள்ளமாரினா உம்மைப் போல் பக்தர்கள் எதையாவது உளறவேண்டியது.

அத்தியைக் கொஞ்சு இல்லை அத்தயை கொஞ்சு, இல்லை பகவானுக்கு உருவி விடு. எதுக்கு நாத்திகனை பத்தி அரகுறை விமர்சனம் இங்கே?

கும்மாச்சி said...

வருண் உங்களது கருத்தில் உள்ள நாகரீகத்தில் உங்களது நாத்திகர்களின் உண்மை முகம் தெரிகிறது, அது சரி நாயை குளிப்பாட்டி நடுவூட்டில் வைத்தாலும் வாலை குழைத்துக்கொண்டு போகுமாம் எதையோ தின்ன....

Anonymous said...

இந்த சைக்கோவின் கமெண்ட் எல்லாம் எதுக்கு வெளியிடுறீங்க ?

Ravisankar said...

போலி பகுத்தறிவாளர்களை நம்பித்தான் தமிழக மக்கள் 45 வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அத்தி வரதர்தான் தமிழக மக்களை மாயையிலிருந்து வெளிக் கொணர்ந்து அருள் புரிய வேண்டும். இல்லையென்றால் 40 வருடங்களுக்குப் பிறகு அத்தி வரதரைக் கண்டு பிடிப்பதற்கு இன்னொரு பொன் மாணிக்கவேல் தேவைப்படும்.

Ravisankar said...

45 வருடமாக போலி பகுத்தறிவாளர்களால் தமிழக மக்கள் முழுவதுமாக மூளைச் சலவை செய்யப்பட்டு இலவச டீவி,மிக்சி, கிரைண்டர், ஃபேன், ஓட்டுக்கு இரண்டாயிரம் மூவாயிரம் என்று தங்களுடைய பொன்னான வாக்குகளால் ஆள்கிறவர்களை தேர்ந்தெடுத்து அவர்களும் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து மக்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கும் அவலம் தமிழ்நாட்டைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் காண்பது அரிது. உடனடியாக அருள்மிகு அத்தி வரதர் தமிழக மக்களை காப்பாற்றவில்லை என்றால் 40 வருடத்துக்கு பிறகு அவரைத் தேடவே இன்னொரு பொன் மாணிக்கவேல் தேவைப்படுவார் என்பது திண்ணம்.

வேகநரி said...

//இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.//

கடவுளுக்கு டாஸ்மாக் பாட்டிலை கொடுத்து வணங்கும் அளவிற்கு ஆன்மிகத்தில் வளர்ச்சி கொண்ட மிகபெரும் தொகை மக்களை கொண்ட இந்தியாவில், மிகவும் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள நாத்திகர்களை ஏதோ பொரும் தொகையினர் இந்தியாவில் உள்ளது போல் இந்த முறை அத்தி விழாவில் ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதே ஒரு ஏமாற்று வேலை அல்லவா?
திரு X நடிகர் எமது மதத்தை தழுவி கொண்டார் என்பது போன்ற விளம்பரம் தானே இதுவும்.
அல்ஹாவையும், யேசுவையும் எற்று கொள்பவர்களும் இந்திய ஆன்மிகவாதிகளே. அவர்கள் ஒரு போதுமே நாத்திகர்கள் கிடையாது.

Anonymous said...

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று பகுத்தறிவு
பேசிவிட்டு 1967 க்கு பிறகு தமிழ்நாட்டை சூறையாடி பத்து
தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டு பெயரிலே ஏகப்பட்ட "நிதிகளை"
வைத்துக்கொண்டு இருக்கும் கொள்ளை குடும்பத்தின் அம்மணிகள்
அத்திவரதரை சேவித்து தங்கள் சொத்தை காக்க வேண்டுவது முரண் தான்

Post a comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.