Monday 8 July 2019

கலக்கல் காக்டெயில்-190

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் 

மத்திய அரசின் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூறில் மேற்கோள் காட்டி நடப்பு ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ததை பாராட்டியும் நக்கலடித்தும் சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. "யானை புக்க புலம் போல" வரிகள் விதிப்பது தவறு என்று பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே" என்று தொடங்கும் பாடல் மூலம் அறிவுறுத்துகிறார்.நிதியமைச்சர் அவரது பெயரை "பிசிர் ஆந்தையார்" என்று உச்சரிப்பு தெரியாமல் உளறுகிறார் என்று "தமில் வால்க" கூட்டம் நக்கலடித்துக் கொண்டிருக்கிறது. அவரது இயற்பெயர் ஆந்தையார், அவரது ஊர் பாண்டிநாட்டில் உள்ள பிசிர் என்று இருந்த ஊர். அதனாலாயே அவர் பிசிராந்தையார் என்று அழைக்கப்பட்டார். இப்பொழுது அவரது உச்சரிப்பு சரியா? தவறா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். அனால் அந்த செய்யுளுக்கு பொழிப்புரை கேட்ட பொழுது நமது முன்னாள் "காற்றில் கறந்த" அமைச்சர்கள் சிரித்த சிரிப்பு இருக்கே "ராஜா, தெய்வீக சிரிப்பையா உமக்கு".


இந்த பட்ஜெட் பற்றிய கருத்து எதிர்கட்சிகள்: இது கார்பரேட்களுக்கான பட்ஜெட்
ஆளுங்கட்சி: வளர்ச்சிக்கான பட்ஜெட்

உலகக் கோப்பை

இலங்கை கிரிக்கட் குழு ஒரு மொக்கையான டீம். நேற்றைய அவர்களுடைய ஆட்டம் டாஸ் வென்ற நல்ல நிலைமையை கோட்டை விட்டதிலிருந்தே தெரிகிறது அவர்களது திறமை. ஆனால் சிறீலங்காவில் உள்ள சிங்களர்களைவிட தமிழகளுக்கு இலங்கை  டீம் மேல் அபார  நம்பிக்கை. சமீபகாலத்தில் அவர்கள் சமூக வலைதளங்களில்  இந்தியாவை நக்கல் அடிப்பதை பார்த்தால் தெரியும் அவர்கள் இந்தியாவின் மீதுகொண்டுள்ள வெறுப்பை, இது கிரிக்கட் மட்டுமல்ல இந்திய அரசியல், தமிழ அரசியல் என்று அவர்கள் நக்கல் செய்வதை பார்த்தால் புரியும். திராவிட அரசியல்தான்  தொப்புள் கொடி, அக்குள் முடி என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறது, மற்றபடி அவர்கள் நம்பளை "*அப்டமன்கார்டாக" கூட மதிப்பதில்லை. (*கிரிக்கட் விளையாடியவர்களுக்கு புரியும்)

ரசித்த கவிதை


கூர்

நீரோடு நீராடி
முற்றும் துறந்து துறவியானது
தன் கூராடை களைந்த
ஆற்றின் கூழாங்கற்கள்..!

நன்றி:
- ச.மோகனப்பிரியா

திரையுலகம்

சிந்துசமவெளி சர்ச்சையை  தொடரும் அமலா பால் "ஆடையில்"


Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

Paranthaman said...

ராஜா, தெய்வீக சிரிப்பையா உமக்கு". Super

ஸ்ரீராம். said...

ரசனையான டெயில்!

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை அருமை ரசித்தேன்

இப்ப அமலா பாலா!! காக்டெயிலுக்கு!! ஹா ஹா ஹா

கீதா

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.