Wednesday 23 December 2009

கடவுளுக்கு “பிட்டு” ப்படம்


கருவறையில் கடவுளின்
கண்கள் திறந்திருக்க
காஞ்சி குருக்களின்
காமக் களியாட்டம்

சட்டத்தின் பிடியில்
வெட்ட வெளிச்சமானது.
ஓட்ட வெட்டவேண்டும்
சட்டத்தின் கைக்கொண்டு.

கடவுளின் பெயரால்
காம லீலை,
கடவுளுக்கே நேரடி
ஒளி பரப்பு.

கடையிலே காட்சிப்பொருள்
குருந்தட்டிலே விருந்து
கலகல விற்பனை
கல்லா நிறைவு.

காமுகனை இரும்புக்கரம்
கொண்டு கண்டிக்க
சட்டம் தன்
கடமையை செய்யட்டும்.


கருவியாக இருந்த
கண்ணிகைகளை கண்
திறந்துப் பார்த்த
கடவுள் தண்டிக்கட்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 20 December 2009

மண்ணாங்கட்டியின் சந்தேகம்-தெலுங்கானா.


ஏனுங்கோ நான் மண்ணாங்கட்டி, மறுபடியும் வரேனுங்கோ. நம்ம பக்கத்து மாநிலத்துலே இன்னாங்கோ ஒரே கலீஜா, கலட்டவா கீது.ஏனுங்கோ இந்த தெலுங்கானாப் பத்தி நொம்ப நாளா பேசிக்கிறானுங்கோ, எனிக்கித் தெரிஞ்ச எங்க அப்பாரு காலத்திலேயே இந்தப் பிரச்சினை இருந்துகீதுங்கோ.

அத்தே விடுங்கோ இந்த சந்திர சேகர ராவ் ஏதோ உண்ணாவிரதம் இருந்தாரு சரிங்கோ, அத்தே நிறுத்த குண்டுகட்டா பிடிச்சு உள்ளே போட்டிருந்தா அல்லாம் சரியா பூடுமே, அத்தே வுட்டுட்டு தெலுங்கானா பிரிச்சிடலாம், ஹைதராபாட தலை நகராகிடலாம், நம்ம செட்டியாரு பேச சொல்ல இப்போ ஆந்திர எரியிதுங்கோ.

நடுவால ஒருக் கும்பலு நம்ம சென்னைக்கு வர தண்ணிய நிப்பாட்ட கண்டலேருக்கிட்டே ஆபிஸ அடிச்சிக்ரானுங்கோ. நம்ம ஊருலே ஒரு சொலவடை உண்டுங்கோ, "தென்ன மரத்துலே தேள் கொட்டினா, பனே மரத்துலே நரி கட்டிக்குமாம்". அது போலதான் கீது இவனுக ஊருலே ஏதோ ஒரு கேனயன் பிரச்சினைய ஆரம்பிப்பான், நம்மா ஊரு ஏதாவது சொல்லுவானுங்கோ, அவ்ளவுதான் நமக்கு வர தண்ணிய புடுங்கிடுவானுங்கோ. ஏற்கனவே கர்நாடகாகாரன் எங்களுக்கு அப்போப்போ டார்ச்சர் குடுத்துகின்னு கிரான். நாங்களே இந்த வருஷம் எத்தனை போகம் போடலாம், இன்னா போடலாமுன்னு யோசிக்க நாட்டு நடப்ப தெரிஞ்சுக்க வேண்டியதாயிடுச்சு.

முன்னே எல்லாம் அப்படி கிடையாதுங்கோ, காலைலே எழுந்தோமா, கஞ்சி குடிச்சிட்டு, தொ கிறானே இந்த மருதுப் பையனையும், இன்னும் சில சித்தாளையும் இட்டாந்தோமா, பொழுது சாயர வரைக்கும் வயலிலே வேலைதான்.

இப்போயெல்லாம் அப்படி இல்லைங்க, நாத்து நடனுமா, பயறு போடனும்மான்னு முடிவு பண்ண நாட்டு நடப்ப தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.

எனக்கு ஒரு யோசனை தோனுதுங்கோ, ஆனா நாம சோனா யாரும் கேட்கமாட்டானுங்கோ.

பேசாம அல்லா மாநிலத்தையும், எத்தனை பார்ட்டி இருக்கோ அத்தனை பாகமா பிரிச்சிட்டா, எல்லா பார்ட்டிக்கும் பவர் இருக்கும், சம்பாதிக்கலாம். இப்போ மகாராஷ்டிரா மாநிலத்திலே மூணு பார்ட்டி இருக்குதுன் வச்சிக்கிங்கோ, காங்கிரஸ், சிவசேனா, என்.சி.பி மகாராஷ்டிராவ மூனா பிரிச்சு ஆளுக்கு குடுத்திடலாமே. தமிழ் நாட்டே பிரிச்சு, அ.தி.மு.க, தி.மு.க., காங்கிரஸ், பா.ம. க, தி. தி மு. க ஒரு பத்து கட்சி இருந்தா ஆளுக்கு ரெண்டு ரெண்டு மாவட்டமுன்னு கொடுத்திடலாம்.

இப்படி சொன்னா, நம்ம மருது நக்கலடிக்கிறான், இன்ன நீ கேனத்தனமா பேசுறே, கட்சியிலே கோஷ்டியிருந்தா என்னாப் பன்றதான் அப்படிங்கிறான் அதிகப் பிரசங்கி.

லே மருது போய் வேலையைப் பாருலே.
நான் சொன்னது நடக்கத்தான் போகுதுலே,

நம்மைச் சென்னையே, சைதாபேட்டை, கிரோம்பேட்டை, சிந்தாதிரிப் பேட்டை, தேனாம்பேட்டை, வண்ணாரபேட்டை, கொருக்குபேட்டையுன்னு தனி தனி கட்சி ஆளபோகுதா இல்லையாப் பாருலே.

Follow kummachi on Twitter

Post Comment

Saturday 19 December 2009

பிச்சை


யார் பெற்ற பிள்ளையையோ
வேர்வையுடன் சுமந்து
காரருகில் கைநீட்டும்
கருத்த நிறத்தவளின்
ஓயாத தட்டல்கள்
அய்யா அம்மா என்று
அலுக்காத குரல்கள்
இடுப்பில் இருக்கும் குழந்தை
பசியில் சிணுங்க இரக்கமின்றி
அடிக்கும் இவளுக்கும்
கால் கடுக்க படியேறி
ஓட்டுப் பிச்சை எடுத்தவர்கள்
கால்வயிற்று கஞ்சிக்கு
கால்கடுக்க கடையில்
நின்று கடுப்பானவர்களின்
வாழ்கைத் தரம் உயர்த்துவோம்
என்று சூளுரைத்து வெறும்
ஐம்பது ரூபாயிலே அனைத்தும்
தருவோம், பொன் தருவோம்
பொருள் தருவோம் என்று
உறவினரிடமே ஒப்பந்தப்
புள்ளி கூறி, ஓயாமல்
கொள்ளையடித்து, கொள்கை
கடமை என ஜல்லியடிக்கும்
சில்லரைப் பொறுக்கிகளுக்கும்
வித்யாசம் எத்தனை
என்று வியக்கிறது
விவரம் தெரியா மனது

Follow kummachi on Twitter

Post Comment

Friday 18 December 2009

ரசிகன்


கதிரவன் அன்று விடியற்காலையிலேயே எழுந்து விட்டான். அவன் அப்பா "சூரியனுக்கு சூ----க் காட்டிக்கொண்டு இன்னும் என்ன தூக்கம்" என்று வழக்கமாக பாடும் பல்லவி இன்று இல்லை. அவன் அப்பா வெகு நாட்களாகவே சொல்லிகொண்டிருக்கிறார். கதிரவனை அவருடைய நண்பரின் கடையில் வேலைக்கு சேர்த்து விடுவதாக. இன்று அப்பாவின் நண்பர் கதிரவனையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.
அப்பா மகன் இன்று நேரத்திலேயே எழுந்து விட்ட மகிழ்ச்சியில் பிள்ளைக்கு பொறுப்பு வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு துண்டை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு குளிக்க கிளம்பினார். நேரத்திற்கே போனால் தான் நண்பரை பார்த்து எப்படியாவது தன் பையனுக்கு இன்று வேலை வாங்கிக் கொடுத்து விடவேண்டும். இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் அரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறப்போகிறார். இன்னும் எத்தனை வருடம் தான் பேருந்தின் ஸ்டீரிங்கை பிடித்துக் கொண்டு ஒரே ரூட்டில் ஒட்டிகொண்டிருப்பது. இப்போதெல்லாம் அடிக்கடி நெஞ்சு வலி வேறு படுத்துகிறது. மருத்துவரிடம் காண்பித்தால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்கிறார். அதற்கு உண்டான பணம் இன்னும் சேரவில்லை. மகளின் கல்யாணம் வேறு பயமுறுத்துகிறது.

கிணற்றடிக்கு சென்று குளித்து முடித்து விட்டு, காலை உணவை முடித்து விட்டு கிளம்பத் தயாரானார். மனைவியிடம் கதிரவன் தயாராகிவிட்டானா என்று கேட்டார். மனைவியிடமிருந்து பதிலில்லை. காதில் விழவில்லைப் போலும். கதிரவனை அழைத்தார். ஆளை வீட்டில் காணவில்லை. தன் மகளிடம் கேட்டார், கதிரவன் இன்னுமா தயாராகவில்லை, இன்று நண்பரைப் பார்க்க போகணும் என்று சொல்லியிருந்தேனே என்றார்.
"தெரியலே அப்பா, அண்ணன் இப்பொழுது தான் வாசல் பக்கம் வந்த நண்பனைப் பார்க்க சென்றான், இன்னும் வரவில்லை" என்றாள்.

"நீ கொஞ்சம் வெளியே சென்று பாரம்மா, அவனை கூட்டிக்கொண்டு வா, சீக்கிரம் கிளம்ப வேண்டும்". என்றார்.
அவள் சற்று நேரம் கழித்து “கதிரவன் தெருக் கோடிக் கடயன்டையும் இல்லை” என்றாள்.
“தோட்டப் பக்கம் பாரு” என்றார். அங்கேயும் கதிரவனை காணவில்லை.

கதிரவன் வரவுக்காக அவர் காத்திருந்தார்.

கதிரவன் காலையில் எழுந்தவுடன், பெருசு குளித்து முடித்துவிட்டு வரும் முன்பு எஸ் ஆகிவிடவேண்டும் என்று நினைத்திருந்தான்.
ஆதலால் நண்பன் முருகை காலையிலே வரச் சொல்லியிருந்தான். முருகு வந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்து அம்மா கழற்றி வைத்திருந்த இரண்டு பௌன் வளையலை பாக்கெட்டில் திணித்துக் கொண்டு கிளம்பினான். இப்பொழுது அவனுக்கு குற்ற உணர்வு அடிக்கடி வருவதில்லை. நான் பெரிய ஆளாகி இது போல் நிறைய நகை செய்து அம்மாவிற்கு கொடுத்து என்று நினைத்துக்கொண்டான்.

போகும் வழியில் சேட் கடையில் நகை வித்து பணத்தை பெற்றுக் கொண்டான். சேட் பணத்தை கொடுக்கும் முன்பு ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டான். "ஏய் பேட்டா சோரிக்கா மால் நை அனா" என்றான்.

போகும் முன்பு நண்பனின் கடையில் சொல்லி வைத்து இரவே வாங்கி வைத்திருந்த பீர் பாட்டல்களை சேகரித்துக் கொண்டான். கதிரவனும் முருகும் அந்தத் திரையரங்குக்கு வந்த பொழுது வாட்ச்மேன் கேட்டை திறந்துக் கொண்டிருந்தான். அவனிடம் கட்டவுட் கட்ட வேண்டிய இடத்தை தெரிந்துக் கொண்டு வண்டி வரக்காத்திருந்தார்கள்.

இப்பொழுது இன்னும் இரு நண்பர்களும் சேர்ந்துக் கொண்டார்கள். கட்டவுட் வந்து இறங்கியதும் கட்டிமுடித்தார்கள். கட்டவுட்காரனுக்கு பணத்தைக் கொடுத்தார்கள். இப்பொழுது முதல் காட்சிக்கு கூட்டம் கூடியது. இப்பொழுது கதிரவனும் நண்பர்களும் கட்டவுட்டின் மேல் விறு விறு வென்றி ஏறி கையிலிருந்த பீர் பாட்டிலைத் திறந்து தங்கள் அபிமான நடிகனின் பிம்பத்தின் மேல் ஊற்றினார்கள். கூடியக் கூட்டம் ஆரவாரமாகக் கைதட்டி கோஷமிட்டார்கள்.
“அண்ணன் கூட நடிக்கும் அன்னிக்கும் பீராபிஷேகம்”.

அரைகுறை ஆடையில் இருந்த அவள் பீர் மழையில் கூட்டத்தைக் கிறங்க அடித்தாள்.

கதிரவன் மகிழ்ச்சியுடன் கீழிறங்கினான்.

கதிரவன் பெருசை ஏமாற்றி முருகுடன் கிளம்பியதை மற்ற நண்பர்களுக்கு ஆரவாரமாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 17 December 2009

பாரதி பிறந்த தின நிகழ்ச்சி -பொதிகை தொலைக்காட்சி


“பொதிகை” தொலைக் காட்சியில் டிசம்பர் பத்தாம் தேதி இரவு பாரதி பிறந்த தின நினைவாக ஒரு தொகுப்பு வழங்கினார்கள். முழுக்க முழுக்க நிலய கலைஞர்களை வைத்து பாரதியின் பாடல்களுக்கு விரசமில்லாமல் நடனம் ஆடினார்கள். இதையெல்லாம் சன் டிவி, கலைஞர் டிவி நடன நிகழ்ச்சிகளுக்கு ஒப்பிடமுடியாது. ஜட்ஜ் கிடையாது, எனர்ஜி இல்லை மச்சான்ஸ் என்ற அபத்தம் கிடையாது. தேவையில்லாமல் ஜட்ஜுகளின் அழுகை உணர்ச்சி வசபடுதல் கிடையாது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் பொதிகை தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்பது வருந்தக் கூடிய உண்மை.
சில முத்தான பாரதிக் கவிதைகளை நிலைய வித்வான்களே மெட்டமைத்து பாடினார்கள். முக்கியமாக கேட்பவர்களுக்கு கவியின் வரிகளில் உள்ள அழகை கொண்டு செல்வதிலேயே கவனம் இருந்தது.
இதே நேரத்தில் ஜெயா டிவியிலும் பாரதியின் பாடல்கள் திரைப் படத்தில் வந்ததை ஒளி பரப்பினார்கள்.
நாம் இருவரில் தொடங்கி, ஏழாவது மனிதன், கைக் கொடுத்த தெய்வம், பாரதி, படிக்காத மேதை, வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களில் இருந்து பாடல்கள் ஒளி பரப்பினார்கள்.

இந்த பட பாடல்களில் இசை அமைத்த இசை அமைப்பாளர்களின் திறமை வியக்க வைக்கிறது. கவிதையின் நயம் கெடாமல் வரிகளின் உச்சரிப்பில் கவனம் செலுத்தியது வியக்கத் தக்கது.

பாரதி என்ற ஒரு அற்புதமான கவியை நினைவு கூர்ந்தது வரவேற்க வேண்டிய நிகழ்ச்சி. பாரதியை கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் மறந்துக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது.

இன்றைய இளைஞர் தமிழ் சமுதாயம், பாரதி பற்றிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வை மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சென்றவன்.

“கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்று முழங்கியவன்

“தேடிச் சோறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பம் மிக உழன்று-பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரைக் கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”


என்று வரம் வேண்டுதலில் கேட்கிறான்.

“வெள்ளை நிறத்தொறுப் பூனை
ஏன் வீட்டில் வளருதுக் கண்டீர்
பிள்ளைகள் பெற்றதுப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்
சாந்தின் நிறம் ஒருக் குட்டி
கருஞ்சாம்பல் நிறம் ஒருக் குட்டி
பாம்பின் நிறம் ஒருக் குட்டி
வெள்ளைப் பாலின் நிறம் ஒருக் குட்டி
எந்த நிறம் என்றாலும்
அவை யாவும் ஒருத்தரம் அன்றோ”.

என்று பாமரனுக்கும் புரியும் படி ஜாதி பேதங்களைச் சாடிய
பாரதியை “மகாகவி” என்று அழைப்பது அந்த வார்த்தைக்கு அழகு சேர்க்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 15 December 2009

தொல்லைக்காட்சிகளில் "பொதிகை" தனிவிதம்


மத்தியக் கிழக்கு நாடுகளில் இப்பொழுது மழைக்காலம். ஆனால் நம்ம ஊருபோல பொத்திக்கிட்டு ஊத்தாது. ஓயாமல் தூறிக்கொண்டிருக்கும், அதுகூட ஒரு இரண்டு நாட்களுக்கு. அதற்கே தெருவெல்லாம் தண்ணீர் தேங்கும். வண்டி எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முடியாது. என்போல ஒற்றை ஆட்களுக்கு தொலைக்காட்சிதான் பொழுதுபோக்கு. பிள்ளைகளும் மனைவியும் ஊரில் இருப்பதால் வெளியே போவதிலும் ஒரு மஜா இல்லை.

தொலைக் காட்சியிலும் சன், விஜய் கலைஞர் டிவி எதை திருப்பினாலும், தொப்புள். தொடை, மார்புப்பிளவு என்று சஞ்சலத்தை தூண்டும் அபத்தங்கள். ஒரு நாளைக்கு இரண்டு செய்திகளுக்கு மேல் பார்க்கக் கூடாது என்பது நான் எனக்கே வைத்துக் கொண்ட லோக்கல் ரூல். ஆதலால் பெரும்பாலும், நேஷனல் ஜாகரபி, அனிமல் பிளானெட், போன்ற டாகுமெண்டரி காட்சிகள், அவ்வப்போது பொதிகை என்று பார்ப்பேன்.

அவ்வாறு நான் பார்த்தது, டிசம்பர் பத்தாம் தேதியன்று பொதிகையில் கண்ணதாசன் பற்றிய ஒரு நினைவு நிகழ்ச்சியும், பாரதியார் பிறந்த தின நினைவுகளும்.

கண்ணதாசனை நாம் திரைப் பட பாடலாசிரியர் ஆக வெவ்வேறு பரிமாணத்தில் பார்த்துள்ளோம். ஆனால் திரைப் பட பாடல்களிலும் ஒரு தரத்தை வைத்துக் கொண்டு அறிய தத்துவங்களை புகுத்தியதை கூர்ந்து நோக்கினால் புலப்படும்

"இருப்போம் என்று இருப்பவன் கண்களை
இறந்தவன் தானே திறக்கின்றான்".

நீர்க்குமிழி என்ற திரைப் படப் பாடலில் வரும் வரிகள்.

புறநானூற்று பாடல்களில் வரும் கருத்தை பாமரனுக்கும் புரியும்படி எழுதியவர்.

"தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக்கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
என் உள்ளத்தில் நீ நின்று ஆடுகிறாய்".

ஒரு சிறந்த உதாரணம்.

திரைப்படப் பாடலுக்கும் அப்பால் அவருடைய கவிதையில் எனக்குப் பிடித்தது.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
பிறந்த பார் என இறைவன் பணித்தான்,
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்,
இறந்த பார் என இறைவன் பணித்தான்,
மனையாள் சுகம் என்பது யாதெனக் கேட்டேன்,
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தெரிந்து கொள்வது எனில்,
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்,
அந்த ஆண்டவன் சற்றே அருகினில் வந்து,
அந்த அனுபவமே நான் தான் என்றான்.

இறந்தும் வாழும் கவிஞன்.
“நான் நிரந்தரமானவன் முடிவும் இல்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை".
உண்மை.
அடுத்தப் பதிவில் "பாரதியைப்பற்றி" .

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 10 December 2009

கெட்டாலும் மேன்மக்கள்


நான் அந்த கிளினிக்கில் நுழையும் பொழுதே எனக்கு முன்னால் ஆறு பேர் காத்துக்கொண்டிருந்தார்கள். அதில் என்னுடைய கல்லூரியில் படிக்கும் சீனியர் ஒருவர். ஒரு அம்மா தன் கைக்குழையுடன் காத்துக்கொண்டிருந்தாள். ஒரு வயசானவரும், மற்றும் இரு வயதான பெண்மணிகளும் இருந்தார்கள். வழக்கமாக கொடுக்கப்படும் நம்பர் டோக்கன் கொடுக்கப் படவில்லை. அதைக் கொடுக்கும் சிறுமி இன்று வேலைக்கு வரவில்லை போலும்.

எனக்கு காலையிலிருந்தே நல்ல காய்ச்சல். ஒரு "அடோல்" போட்டுக்கொண்டால் சரியாகிவிடும் என்று ஒரு மாத்திரைப் போட்டுக்கொண்டு நாளைய பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தேன். மாலை ஆக காய்ச்சல் அதிகமாகியது. ஆதலால் தெரு முக்கு மருத்துவரைப் பார்க்க வந்தேன். இவர் பிங்க் சாயத்தில் ஒரு மருந்துக் கொடுப்பார், அடுத்த நாள் உருவி விட்டாற்போல் ஆகிவிடும், பரீட்சை எழுதலாம் என்று வந்தேன். மிகவும் முக்கியமான முழுப் பரீட்சை. என் எதிரே உட்கார்ந்திருந்த சீனியருக்கும் நல்ல காய்ச்சல் போலும், அவருக்கு இரண்டு நாள் கழித்து பரீட்சை ஆரம்பம். கண்ணை மூடிக்கொண்டு பெஞ்சில் சாய்ந்துக் கொண்டிருந்தார்.

உள்ளே மருத்துவர் ஒரு நோயாளியை "ஆ" காட்ட சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நோயாளி வந்தவுடன் வயதானவர் உள்ளே சென்றார். பின்பு இரண்டு பெண்மணிகளும் நுழைந்தனர். இப்பொழுது என்னுடைய கல்லூரி சீனியரின் முறை வரும் நேரம். அப்பொழுது அந்த பெரிய மனிதர் கிளினிக் உள்ளே தன மகனுடன் வந்தார். அவர்களைப் பார்த்தால் யாருக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல முடியவில்லை. இப்பொழுது மருத்துவர் அடுத்து வந்த
பெண்மணியின் குழந்தையைப் பார்த்துவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு அறையின் கதவை திறந்து கல்லூரி சீனியரை அழைக்கும் முன்பு அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தப் பெரியமனிதர் மருத்துவரிடம் மாலை வணக்கம் என்று சொல்லிக் கொண்டு மருத்துவர் அறையினுள் நுழைந்தார். நாங்கள் இதை எதிர் பார்க்கவில்லை. நானும் கல்லூரி சீனியரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
உள்ளே போனவர் அந்தப் பெரியமனிதர் எங்கள் தெருவில் உள்ளவர்தான். அவர் ஒரு தனியார் கம்பெனியில் பொது மேலாளராக இருந்தார். அவர் மருத்துவரிடம் தன் அலுவலக அறையில் புதியதாக குளிர்சாதனம் பொருத்தியிருப்பதாகவும், அது தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லிகொண்டிருந்தார். அவர் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தது எங்களுக்கு துல்லியமாகக் கேட்டது. மேலும் அவர் அலுவலக நிமித்தமாக வெளிநாடு சென்றதும் என்ன என்ன வாங்கிக் கொண்டு வந்தார் என்று கதை அளந்துக் கொண்டிருந்தார். அவர் மருத்துவரிடம் தன் பெருமையை சொல்லிக் கொள்ள வந்ததாகத்தான் தோன்றியது. மருத்துவரும் அவர் பேச்சை நிறுத்தி அவரை வெளியே அனுப்புவதாகத் தெரியவில்லை.

எதிரே இருந்த சீநியரோ காய்ச்சல் வேகத்தில் முனகிக் கொண்டிருந்தார். எனக்கு நாளைய பரீட்சை பயமுறுத்தி கொண்டிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து பெரிய மனிதர் தன் தம்பட்டத்தை முடித்து வெளியே வந்தார்.

அப்பொழுது சீனியர் அவரை நோக்கி கோபத்தில் " நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா" என்றார். அதற்கு அந்தப் பெரியமனிதர் "என்ன மரியாதை இல்லாமல் பேசுகிறாய்" என்று அவரிடம் பாய்ந்தார். மருத்துவர் அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்பு அந்தப் பெரிய மனிதர் தன் மகனிடம் "நீ வாடா இவனுடன் எண்ணப் பேச்சு, நாம் செய்வதை செய்யவேண்டும், விளைவை எதிர் பார்க்கக் கூடாது, பகவான் கீதையில் அதான் சொல்லியிருக்கிறார்" என்று மகனை அழைத்துக் கொண்டு விறு விறுவென்று வெளியே நடந்தார்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday 7 December 2009

மருத்துவர் ஐயாவும், அன்புமணியும் பின்னர் சூப்பர் ஸ்டாரும்.


இடம் தைலாபுரம்.


மருத்துவர் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் இருக்கிறார்.
அன்புமணி குறுக்கும் நெடுக்கும் கோட் சூட்டுடன் அலைந்துக் கொண்டிருக்கிறார்.
மருமகள் இரண்டுபேருக்கும் மோர் கொண்டு வருகிறாள்.

“ஏம்மா இவன் காலையிலேயே எழுந்து கோட் சூட் போட்டுக்கிட்டு உலாத்தின்னு இருக்கான்”.

“அதை ஏன் மாமா கேக்குறிங்க, காலையிலேயே எழுந்து பழைய நியாபகத்துலே கோட் சூட் போட்டுக்கின்னு மீனம்பாக்கம் வரையிலும் போயிட்டு ஏர்போர்ட்ல உள்ளே விடலேன்னு அப்செட்லே இருக்கார்”.

“அன்புமணி குறுக்கிட்டு அதுக்குதான் நான் அப்பவே சொன்னேன் அம்மாகிட்டே போக வேண்டாம்னு கேட்டிங்களா.
இப்போ ஒரு பையன் நம்மளே மதிக்க மாட்டேங்கிறான். தொ இந்த தைலாபுரத்திலியே மதிக்க மாட்டேங்கிறான், இதுலே மீனம்பாகத்திலே இருக்கிறவன் எப்படி மதிப்பான்”.

“பொறுமையா இருடா மவனே நமக்கு காலம் வரும்”.

“எப்போ வரும், எல்லோரையும் பகைச்சின்னுரிக்கிங்க”

“இருடா காடுவெட்டி குரு, மத்த எல்லா கட்சி ஆளையும் கூப்பிட்டு இருக்கேன், எல்லாம் வந்த வுடனே எதான செய்வோம்”.

“அப்பா இத மக்களுக்கு சொல்லுங்கப்பா, ஏற்கனவே எதானா கேனத்தனமா ஒரு முடிவ எடுத்திட்டு அப்புறம் ஏதோ கட்சியோட சேர்ந்த முடிவுமாதிரி நம்மகிட்டயே உங்க வேலையே காட்டுரிங்களே”.

“எனக்கு போர் அடிக்குதுப்பா, நான் பாட்டுக்கு டெல்லிக்கும், தைலாபுரத்துக்கும் ட்ரிப் அடித்து, டிவி யிலே அப்பப்போ என்ன காட்டிகொண்டிருந்தார்கள், எல்லாத்துக்கும் வச்சிட்டியேப்பா ஆப்பு.
அது சரிப்பா திருசெந்தூருக்கும், வந்தவாசிக்கும் என்ன பண்ணப்போறோம்”.

“மருத்துவர் மனதுக்குள் "ஆமாம் என்னத்தே கிழிக்கப் போறோம், எப்பவும் போலே அறிக்கை வுட வேண்டியது தான்".

“அதாடா கண்ணு நம்ம கட்சியாளுங்க 49 ஒ ல போட சொல்லியிருக்கேன்.”.

“ஆமா இது பெரிய முடிவாக்கும், எப்படியிருந்தாலும் நம்ம ஆளுங்க எவனும் வெளியே வரவில்லை”.

“வேறே எதாவது சொல்லுங்கப்பா”

“சரிடா ரஜினி படம் ஏதோ வெளியே வரப்போகுதாமே, அத்த எதிர்த்து ஒரு அறிக்கை விடலாம்”.

“ஏம்பா இத விட உனக்கு கேனத்தனமான் ஐடியா இல்லையா.
ஏற்கனவே ஒரு தபா அந்த ஆளு கூட்டத்தோட மோதி, அப்புறம் என்ன அனுப்பி மன்னிப்பு கேட்க சொன்னே”.

“நம்ம வூட்லே எல்லோரும் அவர் படம் தான் பாக்கிறாங்க. அதுவும் ஒரு தடவ பார்த்தா பரவாயில்லே, இருபது தடவ பாக்கிறாங்க, அதையெல்லாம் அவர்கிட்டே சொன்ன வுடனே தான் அவர் தங்கள் ரசிகர்களை அமைதியா இருக்க சொன்னார், இல்லேன்னா நம்ம கத கந்தல் ஆகியிருக்கும்”.

“சரிடா இப்போ என்னதான் பண்ண சொல்லற அத்த சொல்லு”.
“கம்முன்னு அரசியல் விட்டு விலகிடுங்கப்பா. நான் மீதியே பாத்துகிறேன். ரொம்ப நாளைக்கி நாம வன்னியர், தமிழ், விவசாயின்னு குப்பைகொட்ட முடியாது. கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுப்பா”.
அப்போது கதவு தட்டப் படவே, திபு திபுவென்று கட்சியாட்கள் உள்ளே ஓடி வந்து, “தலை நீ சொன்ன சரி தலை” என்று மருத்துவரிடம் ஓடுகிறார்கள்
அன்புமணி மனைவியிடம், "பேசாம நம்ம தனியா கழண்டுக்க வேண்டியதுதான்".

கிழவனோட லொள்ளு தாங்கமுடியவில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 6 December 2009

மஞ்சள் துண்டு மடாதிபதிக்கு மண்ணாங்கட்டி எழுதும் மடல்


ஐயா தமிழீனத்தலைவரே, நான் மண்ணாங்கட்டி ஒரு தற்குறி, அதால இந்த மடலில் எதாவது எழுத்துபிழை இருந்த மன்னியுங்கள். ஆனா கருத்துப் பிழை இருக்காதுங்கோ.

முதலில் நீங்கப் போடும் மஞ்சள் துண்டின் மர்மம் என்னாங்கோ?. உங்களை பகுத்தறிவாதின்னு வேறே சொல்லிக்கிறீங்கோ. வூட்டுக்கு சாய்பாபா வராரு, வுங்க வூட்டு அம்மா காலிலே விழறாங்கோ இதையெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா?. வூட்ட திருத்தாத நீங்கோ எப்படிங்கோ ஒரு கூட்டத்தே, கண்மணிக்கு கடிதம் மூலமாவே மூளை சலவை செஞ்சு வச்சிகிறீங்க.

உங்கள் உதவியாளர் சண்முகநாதன் கொஞ்ச நாள் காணாமப் போனதற்கு ஏதோ காரணம் சொல்லறாங்களே உண்மையாங்கோ? அவரு நீங்க கூட்டத்தில் பேச சொல்ல உங்களுக்கு கொடுக்க வேண்டியக் குறிப்ப தேட சொல்ல எவ கூ--ல வச்சேன்னு கேட்டத்துனாலதான் அவர் போயிட்டாருன்னு பேசிக்கறாங்களே. அவரு படிச்ச ஆபிசருங்கோ, அதான் கம்முன்னு போயிட்டார். வேறே யாரவதிருந்தா பதில் சொல்லியிருப்பாருங்கோ. கனிமொழிதில் என்று சொன்னால் உங்க நிலைமை மோசமாயிருக்கும்.
நீங்கதான் தமிழ வாழ வைக்கிறா மாதிரியும் மத்தவங்கோ ஏதோ தமிழ குழி தோண்டிப் புதைக்கிரா மாதிரியும் ஒரு மாயை வளர்த்து குப்பை கொட்டுறீங்களே ஏங்க ஒரு நியாயம் வேணாமா? உண்மையிலயே நீங்க தமிழ் பேர்லயும், தமிழினம் பேர்லயும் பற்று இருந்திச்சுன்னா ஈழப்போர் உக்கிர நிலையில் இருந்தப்போ உங்கள் பாராளுமன்ற உறுப்பினரேல்லாம் வெளியே வரச்சொல்லியிருக்கணும். ஏதோ சிங்களவன் குண்டு போட்டத நிறுத்திட்டா மாதிரி சும்மா லெட்டர் வாங்கி வச்சிக்கின்னு அப்பாலே கிழிச்சிட்டிங்க. ஆனா ஒன்னு உண்மைங்கோ உங்களே மாதிரி மவனே நடிகன் உலகத்திலே யாருமே இல்லீங்கோ. கலைமாமணி விருது உங்க அரசு குடுக்குதே அதிலே உங்க பேரையும் போட்டு ஒன்னு வாங்கிக்கோங்க ஆஸ்கார் நாங்க பாத்துகிறோம்.
ஈழத்துக்கு சும்மா தொப்புள்கொடி உறவு, அது இதுன்னு சொல்லி நல்லாத்தான் எமாத்திநிங்க. இப்போ வேறே சொல்லுறிங்கோ வீரம் ஒன்றும் செய்யாது, விவேகம் துணைக்கு வராவிட்டால். நல்லாத்தான் அல்வா கொடுக்கிறிங்க.

உங்களாலே சில பேர் அசாத்திய முன்னேற்றம் அடைஞ்சது உண்மைதாங்கோ. மக்களே லிஸ்ட் வச்சிக்ராங்கோ. ஏன் கூட வயலிலே வேலை செய்யறானே பொடியன் மருது அவனே சொல்லறாங்கோ. நாத்து நட வருதோ இல்லையோ, நாட்டு நடப்ப கரீட்ட சொல்லரானுங்கோ. அழகிரி எவ்வளவு வச்சிக்கிறார், கனிமொழி எவ்வளவு வச்சிகிராருன்னு கணக்கு வச்சிகின்னு அல்லர் கிட்டேயும் சொல்லிகின்னுகிறான். அதே துரை முருகன் அடிச்சா அவரே மெரட்டுரிங்க, பாலு சம்பாதிக்க விடாம ஆப்பு வக்குறீங்கோ, உங்களே மாதிரி ஒரு தகப்பன் இல்லையேன்னு அவன் வாயிலே புகை வுட்டுக்கின்னு இருக்கானுங்கோ.

அது சரி அந்த ஜோசியர் மார்ச் கடைசிக்குள் புது தலமைசெயகலத்துல நீங்க உட்காரணுமாம், அப்போதான் உங்க குடும்பம் செழிக்கும் என்று சொல்லிகிறார், அதாலே அந்த வேலையே முதலிலே கவனிங்கோ, நாடு கிடக்குது விடுங்க.

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" மறந்துராதிங்க.

அப்பாலே அந்த புவனேஸ்வரி மேட்டர் இன்னான்னு உங்க புள்ளைய கேட்டிங்களா?

இப்படிக்கு,

ஏதோ விவசாயம் பாத்துக்கினு, தண்ணி வராத சொல்ல, உங்க டிவியிலே காட்டுறே மானாட மயிலாட பாத்துகின்னுகிற( பிகர் எல்லாம் சூப்பருங்கோ) "மண்ணாங்கட்டி"

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 3 December 2009

ஹாஸ்டல் அட்டூழியம்-------ஜூனியர் விகடன்


கடந்த வார ஜூனியர் விகடனில் ஒரு திடுக்கிடும் தகவல் என்ற பெயரில் கோயமுத்தூர் கல்லூரி விடுதியில் பெண்கள் அறையில் மது பாட்டில்களும், ஆணுறைகளும் கல்லூரி நிர்வாகம் அதிரடி சோதனையில் கண்டுபிடித்து செய்வதறியாது விழிக்கிறனர்.

இதன் உச்சம் ஒரு மாணவி உபயோகித்த ஆணுறைகளை பத்திரப்படுத்தி லேபல் இட்டு வைத்திருந்ததுதான். அவளை விசாரித்தபொழுது பிற்பாடு அவனில் ஒருவன் கணவனாக வந்தால் அவனை அதை வைத்து மிரட்ட என்று கூலாக சொன்னாளாம். நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன் வார்த்தைகள் "கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இது தான்யா பொன்னகரம்" தவறாக உபயோகிக்க வேண்டியுள்ளது.
யோசித்துப் பார்த்தால் தவறு எங்கிருந்து தொடங்குகிறது?.

நம்மை கேட்காமலே நம் வீட்டின் வரவேற்பறையில் நுழையும் தொலைகாட்சி தொடர்கள். நம்ம மொழி தொடர்கள் இன்னும் மாமியார் மருமகள் பழி வாங்கும் படலத்தை தாண்ட வில்லை. ஆனால் வடமொழியிலோ "போல்ட் அண்ட் பியூட்டிபுல்" போன்ற அமெரிக்க சோப் ஒபெரக்களின் தாக்கம் அதிகம். அதில் மச்சினனுடன் அண்ணி உறவு கொள்ளுதல், யாருடன் யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் என்பது சர்வ சாதாரணமாக காட்டப்படுகிறது. இதைப் பார்த்து வளரும் இன்றைய தலைமுறையினர் இது தவறு இல்லை என்று நினைக்கிறார்கள். தவறு தொலைக் காட்சியில் தொடங்குகிறது.

கிட்டத்தட்ட இருபது வருடம் முன்பு பெண்களுடன் பேசினாலே தவறு என்ற நினைத்த சமூகம், உலகமயமாக்குதலுக்கு கொடுத்த விலை.
பெசன்ட் நகர் பீச்சில் இரவு நடந்து செல்லும் பொழுது பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் கையில் சிகரெட்டுடன் மூஞ்சியில் வூதிவிட்டு செல்கின்றனர். கூட வரும் ஆண் கையில் சிகரெட்டே இல்லை. மது சர்வ சாதாரண விஷயம் ஆகிவிட்டது. லண்டனிலும் பாரிசிலும், பார்க்கிலும், தரையடி ரயிலிலும் காணும் முத்தக் காட்சி, இப்பொழுது நம்ம ஊரில், பீச்சிலும் பார்க் மரத்தின் பின்பும் பார்ப்பது சர்வ சாதாரணம்.

பெற்றோர் கண் காணிப்பு இல்லாத பெண்கள் சிலர் ஏமாற்றப்படுகின்றனர், சிலர் வலிய வந்து ஏமாறுகின்றனர். கல்லூரிப் பெண்களின் பேச்சுக்கள் அவர்களுக்கு தெரியாமல் கேட்டுப்பாருங்கள், எத்தனை பாய் பிரிண்டுகள், எத்தனைப் பேரை டம்ப் செய்தாள் என்பதுதான் பிரதானமாக இருக்கும். போதாக்குறைக்கு இப்பொழுது சில காண்வெண்டுகளில் விழா என்ற பெயரில் பள்ளிப் பிள்ளைகளை இரவில் ஸ்கூலில் தங்க அனுமதிக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் கான்வென்ட்டுக்கு அடுத்த வீடுதான் என் வீடு. மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் விடிய விடிய பெண்களும் பையன்களும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். சடுதியில் ஒரு ஜோடி காணாமல் போய் திரும்ப வரும்.
எங்கே போகும் எங்கே முடியும் இதெல்லாம் தெரியவில்லை?.

சுதந்திரம் எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கப்படவேண்டும், எங்கு தவறாகப் பயன் படுத்தப்படுகிறதோ அங்கு முடக்க வேண்டும்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 1 December 2009

படித்ததில் பிடித்தது ---------(1)


1. பேசும்முன் கேளுங்கள்,
எழுதும்முன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய
ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும்,
நான்தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன்
எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்முன்பே
சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே,சிறிய
தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவானதகவல்களை வைத்துக்கொண்டு
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில்ஒருநாள் இழப்பு. அறுவடை
சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில்
வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர்.
ஒருவர்இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு.நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம்தோன்றுவதில்லை.
ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட,
இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதை விட,
எது சரி என்பதே முக்கியம்

17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக
ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன்
பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும்.
பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது
வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடைஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர்
ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்,
இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்தசெயலைக் கவனமாகச் செய்
என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும்என்று
எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை.
சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதற்குப்
பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்துஇலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

Follow kummachi on Twitter

Post Comment